Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களில் இளையோர் காலவரையறையற்ற போராட்டம் நடத்த முன்வரவேண்டும். எஸ். ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30025708.jpg
 
புலம்பெயர் தேசங்களில் இளையோர் காலவரையறையற்ற போராட்டம் நடத்த முன்வரவேண்டும். எஸ். ஜெயானந்தமூர்த்தி

தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அமைவாக புலம் பெயர்

தேசங்களில் இளையோர் காலவரையறையற்ற போராட்டங்களை நடத்த முன்வர வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற

உறுப்பினரும் தமிழின உணர்வாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘இன்று தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை

அடைந்து பெரும் கொந்தளிப்பு நிலைக்குச் சென்றுள்ளது. அமெரிக்கத் தீர்மானத்தினால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.

அத்தீர்மானத்தினால் சிறிலங்கா அரசுக்கே நன்மை ஏற்பட வாய்ப்புண்டு. சிறிலங்காவுக்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மன்றும்

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அமுல் படுத்துவதற்கு மேலும் ஒராண்டு அவகாசம் கொடுத்து தமிழினத்தை

கருவறுக்கும் ஒரு ஏற்பாடாகவே அமெரிக்கத் தீர்மானம் அமையவுள்ளது. எனவே எமக்குத் தேவை இந்த நல்லிணக்க

ஆணைக்குழு அறிக்கையோ அதன் அமுலாக்கமோ அல்ல.

தமிழினத்திற்கு அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான பக்கச்சார்பற்ற

சாவதேச விசாரணை நடத்தப்படும் அதேவேளை தமி;ழீழத்திற்கான வாக்கெடுப்பை ஐ.நா நடத்தி தனித் தமிழீழத்தை அமைக்க

சர்வதேசம் முன்வர வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். இதே நிலைப்பாட்டுகளை முன்வைத்தே தமிழக மாணவர்கள்

தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் தங்கள் நாடுகளில் காலவரையறையற்ற தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ் இளையோர் மேற்கொள்ள வேண்டும். இதன் மூலமே நாம் சர்வதேசத்திற்கு பலமான

அழுத்தத்தைக் கொடுக்க முடியும். அத்துடன் அது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும்

தமிழின மாணவர்களின் போராட்டமாகவும் சர்வதேச ரீதியில் மாற்றமும் பலமும் அடையும்.

புலம் பெயர் மக்கள் எமது விடுதலைக்காக கடந்த காலங்களில் பல உணர்வு பூர்வமான போராட்டங்களையும் எழுச்சியையும்

அந்தந்த நாடுகளில் காட்டியிருந்தனர். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் இரவு பகல் பாராது இப்போராட்டம் மாதக்கணக்கில்

நடந்தன. குறிப்பாக பிரித்தானியாவில் இப்போராட்டம் பெரும் மக்கள் தொகையுடனும் எழுச்சியுடனும் நடத்தப்பட்டது.

அதை எமது மக்கள் மறந்துவிடமாட்டார்கள்.

அவ்வாறான ஒரு காலவரையறையற்ற போராட்டத்தை இன்றைய காலகட்டத்தில் பிரித்தானியாவில் மீண்டும் நடத்த வேண்டியது

மிகவும் முக்கியமானதாகவே பார்க்கப்படுகின்றது.

இதற்கான வியூகத்தை எமது இளையோரே ஏற்பாடு செய்ய முடியும். அவ்வாறு போராட்டத்தை ஒழுங்கு செய்யும் பட்சத்தில்

எமது மக்கள் நிட்சயமாக பெரும் தொகையில் ஒன்று திரள்வார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

எனவே இதைவிடுத்து அடையாள போராட்டமாக இரண்டு மணித்தியாலங்கள் செய்வதன் மூலம் ஒரு எழுச்சியையோ

அல்லது கடுமையான அழுத்தத்தையோ பிரித்தானியா உட்பட சர்வதேசத்திற்குக் கொடுக்க முடியாது என்பதையும்

இளையோர் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்தடன் எமது விடுதலைக்காக தமிழக மாணவர்கள் தமது கல்வியை

நிறுத்தி உயிரைக் கொடுத்து தொடர் போராட்டங்களை நடத்தும் நிலையில் தமிழ் இளையோர் சாட்டுக்கு இரண்டு

மணித்தியாலங்கள் அடையாள போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயமாகும் என்றும் கேள்ளி எழுப்பியுள்ள

nஐயானந்தமூர்த்தி

இந்த வாரத்தில் ஐ.நாவில் அமெரிக்காவினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் தமிழக மாணவர்கள்

தொடர்ந்து போராடவுள்ளனர். தமிழீழம் அமையும் வரை அவர்களின் போராட்டம் தொடரும். இதனால் நிட்சயமாக இந்தியா

ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். எனவே இந்த விடயத்தையும் மனதில் கொண்டு எமது புலம்பெயர் தமிழ்

இளையோர் போராட்டங்களை காலவரையறையற்று நடத்துவது காலத்தின் தேவையாகும்.’ எனவும் ஜெயானந்தமூர்த்தி தமது

அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 
fb
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தை போன்று அரசியல் அமைப்புக்களை பறக்கணித்து தமிழ் மாணவர்கள் மட்டும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் அதை விடுத்து இளையோர் என்ற போர்வையில் 30 40 ஏன் 50 வயதினர்  போராட்டங்களை நடாத்துவதால் தான் எமது போராட்டங்கள் பிசுபிசுத்துபோவது.

 

ஜெயானந்தமுர்த்தி போன்ற வர்களையும் அவரது காசு பறிக்கும் குழுக்களையும் பலம்பெயர் மாணவர்கள் பறக்கணித்து போராட்டங்களை நடாத்தவேண்டும் எந்த அரசியல்வாதிகளுக்கும் மாணவர்கள் மேடைகளில் அனுமதிகொடுக்கக்கூடாது.

Edited by onmai

இவரது அறிக்கையில் என்ன பிழை கண்டீங்க? இந்த நேரத்திலும் உங்கள் குதர்க்கம் குறையவில்லை பிழை பிடிக்கில் உங்க அமைப்புகளில் பெரும் பிழைகளை எங்களால் பிடிக்க முடியும் தேசியத்திற்கு ஓரணியில் வேலை செய்ய பழகவும்

  • கருத்துக்கள உறவுகள்

 திரு ஜெயானந்த மூர்த்தி சாகும் வரை உண்ணா விரதத்ததை அறிவிக்கவேண்டும்  அவர் பின்னால்  நாங்கள் அலையென திரளுவோம் அவர் அடுத்த கட்ட போராட்டத்தை அவரே வழிநடாத்த வேண்டும்.  தலைவா...வா.. உன் பின்னால்  அணி திரழ்வோம்.  உனது உண்ணா விரத போராட்டத்தை தொடங்கு உன் பின்னால் நாங்கள்.  வா...தலைவா...வா...வழிநடத்து  பின்னால் நாங்கள்.

 திரு ஜெயானந்த மூர்த்தி சாகும் வரை உண்ணா விரதத்ததை அறிவிக்கவேண்டும்  அவர் பின்னால்  நாங்கள் அலையென திரளுவோம் அவர் அடுத்த கட்ட போராட்டத்தை அவரே வழிநடாத்த வேண்டும்.  தலைவா...வா.. உன் பின்னால்  அணி திரழ்வோம்.  உனது உண்ணா விரத போராட்டத்தை தொடங்கு உன் பின்னால் நாங்கள்.  வா...தலைவா...வா...வழிநடத்து  பின்னால் நாங்கள்.

 

முதுகில் குத்துவதற்கு

இளையோர் போராட்டமும் ,மேலும் உணர்வுள்ள அத்தனை தமிழர்களினதும் போராட்டம் தொடரட்டும் ...........தமிழக மாணவர்களின் போராட்டங்களிற்கு மேலும் உரம் சேர்க்கும் வகையில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் அனைவரினதும் போராட்டம் வெடிக்கட்டும் ............வெற்றி முரசு ஒலிக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

முதுகில் குத்துவதற்கு

 

அப்போ முன்னாலை போங்கள் நாங்கள் பின்னலை வாறம் என்ற வழியனுப்பியது  எல்லாம்  முதுகில் குத்தவா??

புலம்பெயர் மக்கள் சென்னை சரவணன் போன்று ஆகக்குறைந்தது சிங்கள பொருட்களை சேவைகளை புறக்கணிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமையாக இருப்பது எப்படி..?

புக்கு எழுதியிருக்கன் நான்.. நர்மதா பதிப்பகம்.. எல்லாம் வாங்கி படிச்சு தெளிவாயிடுகப்பூ.. விலை 20 ரூபா..

டிஸ்கி

எல்லாம் புரோட்டா சாப்பிட்டு தூங்குங்கப்பா .. நான் வருகிறான்

சில திருத்த முடியாத பேர்வழிகள் இப்படி  தான் தோழர்  தாங்களும் செய்யாது தள்ளியும் படுக்காது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.