Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது.

17 மார்ச் 2013

 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - சுனந்த தேசப்பிரிய


 


ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுளின் மனித உரிமை ஆணைக்குழுவின கூட்டத் தொடர் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பற்றி பார்க்கும் அடிக்கடி விசனம் ஏற்படுகிறது. எந்த அரசியல் நிலைப்பாடுகளில் ஒவ்வாருவரும் உள்ள போதிலும்   இவற்றில் மாற்றங்களும் உள்ளன.

அமைச்சர் மகிந்த சமரசிங்க போன்ற ராஜபக்ஷ நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள், இது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சி எனக் கூறுகின்றனர். 


அத்துடன் ராஜபக்ஷ நிர்வாகத்தின் பிரபல பிரசாரகர்கள், ஜெனிவா மனித உரிமை பேரவையின் யோசனையானது இலங்கைக்கு எதிரானதும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட போருக்கு தலைமை தாங்கிய தேசப்பற்றாளர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் முலோபாயம் என தெரிவிக்கின்றனர்.


 


ராஜபக்ஷ ஆட்சியின் ஜனரஞ்சக பேச்சாளரான அமைச்சர் மேர்வின் சில்வாவின் கூற்றுப்படி ஜெனிவா மனித உரிமை பேரவையில் இருப்பவர்கள் வைராக்கியம் கொண்ட, இருதயம் அற்ற, பொறமை கொண்டவர்கள்.   அத்துடன் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி என நேரடியாக கூறியுள்ளார்.


இலங்கையின் நிலைப்பாடு இதுவாக இருக்குமாயின்,  ஜெனிவா யோசனை என்பது ஜனாதிபதிக்கும் நாடுக்கும் எதிரான சர்வதேச சூழ்ச்சியாக இருக்கக் கூடும். அத்துடன் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீடு தொடர்பில் ஜே.வி.பியும் இவ்வாறான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. அதேபோல், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையை ஸ்தாபிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் வாக்களிக்க போய் வாங்கி கட்டிக் கொண்டது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் வேறு நிலைப்பாடுகளும் உள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பும், மனித உரிமை ஆணைக்குழு ஆகியன மறைமுகமாக ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு உதவியளித்து, இலங்கையின் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யாத மேற்குலக சக்திகளினால் நிர்வாகிக்கப்படும்  கதை பேசும் கடையென்ற நிலைப்பாடும் உள்ளது.


ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற முன்னிலை சோசலிசக் கட்டியின் கருத்துப்படி, மனித உரிமை ஆணைக்குழு என்பது புரட்சியாளர்கள் கால் வைக்கக் கூடாத சேற்றுக் குழி.


இப்படியான நிலைப்பாடுகளை கொண்ட வெளிநாட்டில் வசிப்பவர்களும் உள்ளனர்.  சர்வதேச சமூகம் நாடகம் ஆடுவதாக வெளிநாட்டில் உள்ள இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். போருக்கு உதவிய அமெரிக்கா தனது அரசியல் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கான இதனை செய்கிறது என்பது அவரது நிலைப்பாடு.


தமிழ்நெட் இணையத்தளம் மாத்திரமல்லாது, நடுநிலையான தமிழ் அரசியல் நீரோட்டங்களும் இதற்கு இணையான கதைகளையே கூறுகின்றனர்.  இலங்கையில் தமிழர்களை கொலை செய்ய உதவிய அமரிக்காவோ, மேற்குலக நாடுகளோ, ஐக்கிய நாடுகள் அமைப்போ நிவாரணத்தையோ, தீர்வையோ வழங்காது என அவர்கள் கூறுகின்றனர். 


தென்னிந்தியாவின் ஈழ ஆதரவு மாணவர் அமைப்பொன்று, மனித உரிமை பேரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் தீர்மானத்தை எரித்துள்ளதுடன் அதனை நிறைவேற்றக் கூடாது தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதேவேளை இலங்கையில் தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்கி வரும் நிலைமைக்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை பொறுப்புக் கூறவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதேநேரம் இவர்களில் பலர், தமிழ் மக்களுக்கு தனிநாட்டை பெற்றுக்கொள்ள சர்வதேச சமூகம் உதவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.


இதேநிலைப்பாட்டை கொண்டுள்ள தமிழ்நாடு புரட்சிகர மாணவர் அமைப்பு அமெரிக்காவின் யோசனையை தீயிட்டு கொளுத்தியதுடன், இந்த யோசனையின் சாரம் இல்லை எனவும் அதனை நிறைவேற்றக் கூடாது என கூறியுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையின் வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அந்த முடிவுகளின் பிரகாரம் தனிநாட்டை உருவாக்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.  இவர்களின் கூற்றுப்படி ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு என்பது, முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கூறுவது போல் சேற்றுக்குழி. 


மறுபுறம் இந்த இரண்டு நிலைப்பாடுகளும், அரசியலும் ஒன்றை பிரதிபலிக்கின்றன. இந்த யோசனையை எரிக்க வேண்டும் என இரண்டு தரப்பினருமே பரிந்துரைக்கின்றனர்.  


இவர்களில் இரண்டாவதாக கூறிய குழுக்களும், நபர்களும், இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்கக் கூடிய ஒரே தீர்வு சுதந்திரமான தனிநாட்டை பெறவேண்டும் என்றே சிந்திக்கின்றனர்.  அதனை பெற்றுக்கொள்ள முடியுமா இல்லையா என்பதை விட அந்த தரப்பினர் தாம் கொண்டுள்ள கொள்கை ரீதியான நிலைப்பாடு முக்கியமானது என எண்ணுகின்றனர்.  


முதல் குழு அதாவது சிங்கள ஏகாதிபத்தியவாத அரசாங்க தரப்பு இலங்கை, என்பது அடிப்படை ரீதியில் சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமான நாடு எனவும் ஏனைய இனங்கள், இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாக  வாழ வேணடும் எனவும் எண்ணுகிறது. இப்படியான செயற்பாடுகளை இலங்கையில் செயற்படுத்துவதன் மூலம் ஏற்பட போகும் கெடுதியான பாதிப்புகளை இந்த தரப்பு கணக்கில் எடுத்து கொள்வதில்லை.


அதேபோல் இந்த இரண்டு தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் என்பதை காணமுடிகிறது. இரண்டு தரப்பினரும் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதற்கு பதிலாக கொள்கையின் புனிதத்தை மதிக்கின்றனர். 


இந்த இரண்டு தரப்பினரின் கருத்துக்களில் உள்ள சரி, தவறு என்ன என்பதை மனித உரிமை பேரவையில் ஆராய்வதில் பலன் தருமா இல்லையா என்பதற்காக, மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனையின் கோரிக்கைகள் குறித்து நாம் சுருக்கமாக ஆராய முடியும்.


(1) இலங்கையின் சகவாழ்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளிலும் விசேடமான உண்மையை கண்டறியும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை, மனித உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.


(2) இந்த அறிக்கையில் வரும் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்கப்படும்.


(3) கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னேற்றகரமான பரிந்துரைகள் பலன் தரும் வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என கோருகிறது. அத்துடன் சகல இலங்கையர்களுக்கும், நீதி, சம உரிமை, சர்வதேச மனித உரிமை சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வது உள்ளிட்ட பொறுப்புக் கூறுதல், சகவாழ்வை ஏற்படுத்த தேவையான சுயாதீனமான நம்பிக்கையான செயற்பாடுகளை எடுப்பதற்கான சட்டரீதியான தேவைகளை நிறைவேற்றுவதற்கு அத்தியவசியமான சகல மேலதிக சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதற்கு அர்ப்பணிப்பாகுமாறும் கோருகிறது.


(4) ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரங்களை கொண்டு பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்புடன் செயற்படுமாறும், இலங்கைக்கு வந்து தகவல்களை தேடியறிய அவர்களுக்கு இடமளிக்குமாறு ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு உத்தியோகபூர்மான பதிலளிக்குமாறும் கோரப்படுகிறது. முக்கியமாக சட்டவாதிகள், நீதிபதிகளின் சுதந்திரம், மனித உரிமை பாதுகாவலர்கள்,  கருத்துச் சுதந்திரம், ஒன்றுக் கூடும் சுதந்திரம்,  சட்டத்திற்கு புறம்பான ஒருதலைப்பட்சமான கொலைகள்,  சிறுபான்மை மக்களின் உரிமைகள்,  பலவந்தமாக  காணாமல் போக செய்தல்,  பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற துறைச்சார்ந்த ஐ.நா பிரதிநிதிகள் தடையின்றி தமது பணிகளை மேற்கொள்ள  தேவையான வழிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கடுமையான கோரிக்கைளுக்கு உரிய முறையில் பதிலளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கோருகிறது.


(5) மேற்படி நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ரீதியான இணக்கப்பாட்டுடன், சம்பந்தப்பட்ட பணிகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட அதிகாரியுடன் கூடிய பிரதிநிதிகளின் சேவையும், தேவையான ஆலோசனை மற்றும் தொழிற்நுட்ப உதவிகளை இலங்கைக்கு அரசாங்கத்திற்கு மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் வழங்க வேண்டும். 


(6) அதேபோல் பொருத்தமான வகையில் அதிகாரியுடன் கூடிய ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகளுடன் கூடிய இந்த யோசனை செயற்படுத்துவது தொடர்பாக வாய்மூலமான அறிக்கை ஒன்றை 24 மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட வேண்டும். முழுமையான அறிக்கை 25வது மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் 25 வது மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அந்த அறிக்கை தொடர்பாக விவாதம் ஒன்று நடத்தப்பட வேண்டும் எனவும் கோருகிறது.


மேற்கூறிய இரண்டு சமூக அரசியல் கொள்கைகளுக்கும் வேறுப்பாடான யோசனைகளுடன் கூடிய மனித உரிமை பற்றி அழுத்தங்களை, சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு முன்வைக்கும் என்பதால், இலங்கைக்குள் செயற்பட தமக்கு சந்தர்ப்பம் திறக்கப்படும் எனக் கூறிய, மனித உரிமை சமூகம், தேசிய அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் இம்முறை மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக ஜெனிவா வந்திருந்தனர்.


2012 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையும் இம்முறை பேரவையில் இம்முறை முன்வைக்கப்படும் யோசனையும் இலங்கையில் உள்ள சகல மக்களுக்கும், ஜனநாயகத்தை ஏற்படுத்தி கொடுக்கும் நடவடிக்கை என இவர்கள் கருதினர். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு மனித உரிமை தொடரில் முனைப்புகளை மேற்கொள்ள குறுகிய கால மற்றும் இடைகால ரீதியாக ஜனநாயகத்தை முன்னெடுக்க கிடைக்கும் சந்தர்ப்பமாகும்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை  கேந்திரமாக கொண்டு 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல், இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விவாதங்கள் ஏற்பாடது போயிருந்தால் தற்போது என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும்?.   இலங்கைக்குள் தற்போது காணக் கூடிய மக்களின் எழுச்சிக்கான சந்தர்ப்பத்தை உருவாக்க, சர்வதேச சமூகம் முன்னெடுத்த மனித உரிமை முனைப்புகள் பங்களிப்பாக அமைந்தன.  வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் புரட்சிகரமான ஆயிரம் உரைகளுக்கு பதிலாக உள்நாட்டில் நடத்தப்படும் ஒரு மக்கள் போராட்டம் பெறுமதியானது.


நாம் புரிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு விடயம் உள்ளது. அதுதான் சுதந்திரமான தமிழ் ஈழநாடு இலங்கையில் உருவாக சர்வதேச சமூகத்தின் தலையீடு ஏற்பட்டு விடப் போவதில்லை. அதேபோல் அதற்காக தலையிடுமாறு கோருவதும், அவ்வாறு செய்வதில்லை என குற்றச்சாட்டுகளை சுமத்துவதும் தீர்வாகது. 


மாற்றம் உள்ளேயே ஏற்படும். வெளியில் உள்ள சாதகங்கள் இரண்டு பட்டது. கிடைக்கும் முக்கியமான நிலைமையில் மாத்திரமே வெளியில் உள்ள சாதகமான நிலைமை முன்னிலைக்கு வரமுடியும். இலங்கையில் அப்படியான நிலைமை இல்லை. இதனால் வெளியுலக முனைப்புகளை உள்நாட்டு மக்கள் போராட்டத்திற்கு எவ்வாறு பங்களிப்புக்காக பெற்றுக்கொள்ள முடியும் என்பதை ஆராய்து பார்ப்பதையே அன்றி, அதனை சேற்றுக்குழி எனவும், போலியான நடிப்பு எனவும் எரியூட்டப்படும் காகிதம் எனவும் புறந்தள்ளி விடுவதை நாம் செய்யக் கூடாது. 


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக  - சுனந்த தேசப்பிரிய

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89737/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கம் தீர்மானத்தை கொண்டு வா எண்டிறாங்கள்  மற்றப் பக்கம்  தீர்மானத்தை  போட்டு கொழுத்துறாங்கள்.. வேண்டாம் எண்டு லண்டனிலையும்   இளையோர் அமைப்பு கொழுத்தினவங்களாம்.   அமெரிக்கனே குழம்பியிருப்பான். எதுக்கடா இப்பிடி ஒரு தீர்மானம் எண்டு ?? அடுத்த கூட்டத்தெடரிலை  தனக்கேன்  தேவையில்லாத வேலையெண்டு  சும்மா இருக்கப் போறான்.   ஆனா  ஜெனிவாவிலை  நம்ம சீமான்  நிக்கிறாரில்லை.. ஜ.நா சபையே ஆட போகுது.  தன்னை அரை மணி நேரம் கதைக்க விட்டால் தமிழீழம்  வாங்கித் தருவன் என்று சவால் விட்டவர்.  அவருக்கு  கதைக்க  நேரம்  ஒதுக்கினால்  தமிழீழம் தான்  அதனாலை பான்கி மூன்  பின் கதவாலை   ஓட வேண்டியதுதான். அடுத்தாய்  இலண்டனுக்கு பாரதிராஜா  வரப் போறாராம். ஏனென்டால்   தமிழர் பிரச்சனையை  பிரித்தானிய அரசிற்கு எடுத்து சொல்லி பரப்புரை செய்வதற்காக .. பாரதி ராஜாவேடை படம் எடுக்கிற ஆக்கள்  முன் பதிவு செய்து கொள்ளவும்.

Edited by sathiri

ஒரு பக்கம் தீர்மானத்தை கொண்டு வா எண்டிறாங்கள்  மற்றப் பக்கம்  தீர்மானத்தை  போட்டு கொழுத்துறாங்கள்.. வேண்டாம் எண்டு லண்டனிலையும்   இளையோர் அமைப்பு கொழுத்தினவங்களாம்.   அமெரிக்கனே குழம்பியிருப்பான். எதுக்கடா இப்பிடி ஒரு தீர்மானம் எண்டு ?? அடுத்த கூட்டத்தெடரிலை  தனக்கேன்  தேவையில்லாத வேலையெண்டு  சும்மா இருக்கப் போறான்.   ஆனா  ஜெனிவாவிலை  நம்ம சீமான்  நிக்கிறாரில்லை.. ஜ.நா சபையே ஆட போகுது.  தன்னை அரை மணி நேரம் கதைக்க விட்டால் தமிழீழம்  வாங்கித் தருவன் என்று சவால் விட்டவர்.  அவருக்கு  கதைக்க  நேரம்  ஒதுக்கினால்  தமிழீழம் தான்  அதனாலை பான்கி மூன்  பின் கதவாலை   ஓட வேண்டியதுதான். அடுத்தாய்  இலண்டனுக்கு பாரதிராஜா  வரப் போறாராம். ஏனென்டால்   தமிழர் பிரச்சனையை  பிரித்தானிய அரசிற்கு எடுத்து சொல்லி பரப்புரை செய்வதற்காக .. பாரதி ராஜாவேடை படம் எடுக்கிற ஆக்கள்  முன் பதிவு செய்து கொள்ளவும்.

 

வாங்கிதருகின்றாரோ இல்லையோ, தன் இனத்திற்காக போராடுகின்றார் & குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றார்,  உங்களை மாதிரி நக்கல் நையாண்டி செய்து இனத்தையும் & இருந்த அமைப்பையும் காட்டிக்கொடுக்கவில்லை அல்லது குப்பை கொட்டவில்லை, கொச்சைப்படுத்தும் கட்டுரைகள் எழுதவில்லை, உங்களைப்போல சிலர் போதும் எம்மின அழிவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானைக் கூப்பிட்டவர்கள் சாத்திரி அண்ணாவைக் கூப்பிட்டிருக்கலாம்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கிதருகின்றாரோ இல்லையோ, தன் இனத்திற்காக போராடுகின்றார் & குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றார்,  உங்களை மாதிரி நக்கல் நையாண்டி செய்து இனத்தையும் & இருந்த அமைப்பையும் காட்டிக்கொடுக்கவில்லை அல்லது குப்பை கொட்டவில்லை, கொச்சைப்படுத்தும் கட்டுரைகள் எழுதவில்லை, உங்களைப்போல சிலர் போதும் எம்மின அழிவுக்கு.

உண்மையில் கிட்டதட்ட இப்படிதான் நான் எழுத நினைத்தேன்.

வேறு ஒரு திரியில் சாத்ரியாருடன் முட்டி மோதுவதால்.... இது தனிபட்ட குரோதம் போன்ற ஒரு மையை உருவாக்கிவிடும் என்று எதையும் எழுதவில்லை.
 
எங்கோ பிறந்த சீமான் விழுந்த புலிக்கொடியை மீண்டும் எதோ ஒரு வடிவில் உயர்த்தி பிடித்திருக்கிறான்.
அதே கொடியின்  கீழ் அணிவகுத்தவர்கள்............. மித்திக்கும் அளவிற்கு அயோக்கியத்தனம் மட்டுமே தெரிந்த சிங்களவனே மிதிக்கவில்லை.

ஒரு வருடமாக அமெரிக்கா பிரேரணை கொண்டுவருகின்றது என்று எல்லோரும் இனி ராஜபக்சா கோஸ்டி சரி என சொல்லிக்கொண்டே இருந்தார்கள் .அமெரிக்காவும் பிரேரணையை கொண்டுவருகின்றது .அது எமக்கான தீர்வாக இல்லாவிட்டாலும் சிங்கள அரசிற்கு எதிரானதுதான் .அதற்கிடையில் என்ன நடந்தது என தெரியவில்லை அமெரிக்க பிரேரணையை கொழுத்து என்கின்றார்கள் .அமெரிக்காவை விட பெரிய கையை பிடித்துவிட்டார்கள் போலிருக்கு .

 

உந்த கோஸ்டி திருமாவளவனையும் ,சுபவீரபாண்டியனையும் எல்லாம் முன்னர் கூப்பிட்ட்டு  அவனன் வந்து வெளிநாட்டை பார்த்துவிட்டு திரும்பி போய் தனது அரசியலை தொடங்கிவிட்டார்கள் .இப்போ அவர்கள் துரோகிகள் பட்டியலில் .

யாரும் சும்மா தங்களை புழுகி சவுண்டுவிட்டால் காணும் இறக்கிவிடுவார்கள் .அவர்கள் மேடையில் பேச முன்வரிசையில் இருந்து விசில் சேர்ந்து நின்று ஒரு படம் .அடுத்தமாதம் தமிழிழம் என்று அவர்கள் பேச அடுத்து ஒரு வருடத்திற்கு கனவு காண அதுகாணும் .

கனடாவிலும் இரண்டு பேரை இப்ப இறக்கிவிட்டிருக்கின்றார்கள் .பாபு வீட்டு பேஸ்மெண்டில் பாட்டி வேறு .திண்டது சேமிக்க பேசிவிட்டு அவங்கள் போய்விடுவார்கள் ,(ஒருவர் நடிகை ரோஜாவின் கணவர் .ரோஜா வந்திருந்தாலும் பரவாயில்லை ஆளையாவது பார்த்திருக்கலாம் )

அடுத்து கவுண்டர் செந்தில் வந்தாலும் வரலாம் .

Edited by arjun

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.