Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்கும் நோக்கம் அமெரிக்காவிற்கு இல்லை - அமெரிக்க தூதுவர் சிசன் தெரிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sisan-230313-seithy-150.jpg

இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் நோக்கம் அமெரிக்காவுக்கு இல்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் ஜெ.சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சிசன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிரேரணைகளை இலங்கை நிராகரித்துள்ளது. எனினும் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை எனவும் சிசன் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=78802&category=TamilNews&language=tamil

கொழும்புக்கு வந்த ஈரானிய போர்க் கப்பல்களைப் பார்த்து நடுநடுங்கிப் போயிருப்பார்  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்மைக்கேல் ஜெ.சிசன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் இவர்களால் கைவைக்கமுடியாது என்பதே எதார்த்தம்..! :D

பொருளாதார தடை இல்லாமலேயே மகிந்த கூட்டத்தை அனுப்ப அமெரிக்கா விரும்புகின்றது.

 

அமெரிக்கா தான் இலங்கையின் முதன்மை ஏற்றுமதி நாடு. ஐரோப்பிய ஒன்றியம் போன்று ஆடை ஏற்றுமதி வர்த்தக சலுகையை நிறுத்தினாலே சிங்களம் சுருண்டுவிடும். ஆனால் இன்னும் சிங்கள மக்கள் பாதிக்கப்படுவதை (உதாரணத்திற்கு ஈரான் போன்று) இன்னும் விரும்பவில்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவிற்கு தெரியாமல் குழந்தையை தூக்கும் எண்ணம் மட்டும்தான் இருக்கிறதா?
 
ஈடேற வாழ்த்துக்கள் !
அப்போது சீனாவின் கண்ணில் ஒரு வேளை தமிழன் தட்டுபடலாம்.

போரின் முடிவு காலங்களில்(2008-2009) அமெரிக்கா ஒரு சின்னப் பொருளாதாரத் தடையைப் பற்றி தன்னும் பேசி இருந்திருந்தாலும்  இலங்கையின் அரசியல் ய்ன்று வேறுபக்கம் போய் இருக்கும். ஆனால் 2008-2009ல் அமெரிக்க பொருளாதாரம் கண்ட ஈடாட்டத்தால் இதை பற்றி அவர்களுக்கு சிந்தனை வரவில்லை. இன்றைய தடை ஒன்றால் நாடு அவலப் படலாம்; ஆனால் அரசியல் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்வு கூறி அதைச் செய்ய முடியாது.

 

இது இலங்கை சீனாவுடன் மேலதிக பொருளாதாரத் தொடர்புகளை உண்டாக்கி மேற்கு நாடுகளை தேவை இல்லாத நாடுகளாக்கி விடும் என்பதனால் அல்ல. உண்மையில் நாட்டிலிருந்து வெளிவரும் பொருளாதார அறிக்கைகள் சும்மா அலரி மாளிகையில் தட்டச்சு செய்யப்பட்ட வெற்றுக் கடிதங்கள் மட்டுமே. இவைகளில் மிகச்சிலது மட்டும் தொடர்புடைய மத்திய வங்கி, அபிவிருத்தி, கண்காணிப்பு, போன்ற இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டவையாகும். அங்கு அவை தயாரிக்கபட்டிருந்தாலும் கூட அவை அந்தந்த திணைக்களங்களில் காணப்படும் அதீத ஊழலினால் அந்த அறிக்கைகள்தானும் ஒழுங்கான அறிக்கைகளாக இருக்கவும் முடியாது. இதனால் இலங்கையின் பொருளாதாரத்தை நடாத்ததக்க  இலங்கை அரசுக்கும், பொருளாதாரதை கண்காணித்து மட்டிறுத்தும் இணைப்பு நிலையங்களுக்குமான உண்மையான தொடர்பு அறுந்து போய்விட்டது. இந்த நேரத்தில் இந்த அறுந்த தொடர்பை நம்பி பொருளாதார தடையை அமெரிக்கா கொண்டுவந்தால் அந்த செய்தி பொருளாதார கண்காணிப்பு நிலயங்களில் இருந்து அரசுக்குப் போய்ச் சேராது. அரசின் பொருளாதார கொள்கை ரோகிதாவை விண்வெளிக்கு அனுப்பி வைப்பது போன்ற நோக்கமற்ற செயல்பாடுகளில் இருந்து மாற்றம் அடையாது.

 

சர்வதேசம்(சீனா தவிர) அல்லது தனிய அமெரிக்கா எந்த வகையான "பெல்ட் ரைரினிங்" முறைகளையும் இலங்கை மீது திணிக்கலாம். ஆனால் அரசு அவற்றை தனது சறுக்கள் தந்திரங்களால் பொதுமக்கள் மீது மட்டும்தான் போடும். இதனால் நாடு பழைய நிலைமையான கால்நடை விவசாய சமூகமாக மாறும். உயிர் வாழ்தலை கவனிக்கும். முன்னேற்றத்தை கைவிடும். அரசியலில் மட்டும் தாக்கம் ஏற்படாது.  இலங்கையின் சமூதாயங்களில் காணப்படும் இலகுவில் பின்நோக்கு நகர்த்தக்க பண்பு, அரசுகள் மீது விழத்தக்க அதியசயிற்கத்தக்க அழுதம் தாங்கிகளாக காணப்படுகின்றன. மேற்கு நாடுகளில் மக்களிடம் காணப்படும் தமது கஸ்டங்களுக்கு தமது அரசுகள் மீது குற்றம் சுமத்தும் அதிகார இயல்பு இலங்கை மக்களிடம் இல்லை.  மாறாக அரசுடன் இணங்கிப் போவதுதான் இயல்பு. இதைதான் கோத்தபயாவின் இலங்கைக்கு மன்னர் ஆட்சிதான் சரி என்று கூறிய கூற்றுக் காட்டுகிறது.

 

நாடு சமய வீக்கங்கள் காணப்பட்ட பழைய அடிப்படை மதவாத காலங்களுக்கு மீண்டு கொண்டிருக்கிறது. இது தமிழ் நாட்டில் திருநாவுக்கரசர் காலத்தில் துறவு மதங்களால் மக்கள் அனுபவித்த வேதனைகள், சமயச் சுமைகள் ஒன்றுக்கு ஒப்பிடத்தக்க  அளவுக்கும் வளரலாம்.  ஆனால் இது அன்றையை திருநாவுக்கரசின் மத சுதந்திரப் போரின் ஆரம்பமாக எதிர்வு கூறலோ அல்லது அதன் பின் உடனடியாக தோன்றியிருந்த மத விழிப்புணர்வான பக்தி மார்க்க தோற்றத்தை முற்கூறுவதோ அல்ல.(இலங்கையில் காணப்படுவது ஒரு திசையை நோக்கி வளரும் ஒரு மரத்தின் கிளை போன்றது அல்ல. முள்ளு செடி ஒன்றில் காணப்படும் முள்ளுகள் போல நாலா பக்கமும் நீட்டிகொண்டிருக்கும் வீக்கங்கள் மட்டுமே).

 

 ஒப்பீட்டளவில், நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து கண்டிருக்க வேண்டிய பொருளாதார முன்னேற்றத்தை காணவில்லை. (பெரிதாக நாடு பின்னால் போனது என்றும் சொல்ல இயலாது) கணிசமான ஒரு தமிழ்ப் பாகம் தான் இலங்கையில் இழந்த தொழில் துறையை, சொத்தை வெளிநாடுகளில் தேடிக்கொண்டிருக்கிறது. இதை தவிர மற்றைய இரண்டு சமூகங்களும் மாற்றங்களை பெரிதாக உணரவில்லை. புத்தமத பிரச்சார யந்திரம் மட்டும்  புத்த, இந்து, முகமதிய கிறிஸ்தவ சமூதாயங்களை திருகித் திருகி அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. 1930-1940  ஜேர்மனி கண்டிருந்த மதவெறிக்கு இது ஒப்பானது. இன்றைய மேற்குலகின் கிறிஸ்தவ நாகரிகத்தின் சரித்திரத்தில் ஜேர்மனிய கிறிஸ்தவம் ஒரு பள்ளம் மட்டும்தான் என்பதுதான் சரித்திரம். ஆனால் இன்றைய கிறிஸ்த்தவர்களில் உயர்ந்த சமய அறிவு, ஆனிமீகம், மத சுதந்திரம் போன்ற தத்துவங்களின் வளர்ச்சி  ஜேர்மனியில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரும், இத்தாலி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற  நாடுகளிலும் நடந்த அரசியல், சமய புரட்சிகளால் பெறப்பட்டவை. இலங்கை உலக அரங்கில் நடை பெற்ற, நடை பெற்றும் வரும் மத வீக்கத்தால் வரும் சமூக அரசியல் மாற்றங்களில் இருந்து தனது பாடங்கள் படிக்காமல் தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது இன்னொரு அரசு-மதம் இரண்டுக்குமிடையில் இருந்திருக்க வேண்டிய இணைப்பின் துண்டிப்பின் வெளிக்காட்டுகை. (மேலும் ஜேர்மனியில் பிறந்த மத வெறி அண்டை நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி ஜேர்மனி திருந்த தக்க சூழ் நிலை ஒன்றைத் தோற்றுவித்தது. ஆனால் இலங்கையில் காணப்படும் மதவெறி இலங்கையில் மட்டும் சுற்றி சுழல்வதால் அது வெளியில் இருந்து வரத்தக்க தாகங்களை இலகுவில் ஏய்தும் விடுகிறது. சமகாலத்தில் ஈரான்,சிரியா மீது சர்வதேச நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை மீது எடுக்காததன் காரணம் இதுதான். பிரதானமாக இலங்கையில் நடக்கும் எந்த நிறுதூளியும் மேற்கு நாடுகளிந் இயல்பான வாழ்க்கையில் மிக சிறிய நகர்வுகளைத்தன்னும் ஏற்படுத்த தவறுகிறது.)

 

இந்த அறுந்த போன அரச-பொருளாதார, அரச-மதத் தொடர்பு  புதிய மத-ரொருளாதார தொடர்பாக பரிணிமிக்க ஆரம்பித்திருக்கிறது. இது நாளைடவில் சரியா சட்ட நாடுகளில் காணப்படுவது போல எதை மக்கள் சமய சடடங்களுக்கு அமைய உற்பத்திசெய்யலாம், உபயோகிக்காலாம் என்ற புதிய சட்டங்கள் வர இடமளிக்கலாம்.

 

அப்படி ஒன்று வருமானால் அது புத்த தம்ம போதகங்களில் இருந்துதானே வரும் என்று கேட்களாம். ஆனால் அது நடை பெற வேண்டிய தேவை இல்லை. உண்மையில் மத அடிப்படை வாதங்களுக்கு திரும்பிய நாடுகாளில் தோன்றியிருப்பது புதிய அடிப்படை வாதங்கள்தான். அவை பழைய நீதி நூல்கலின் பால் பட்ட அடிப்படை வாதங்களாக வளராமல் ஆட்சியில் இருக்கும் அரசியல் வாதிகளின் நலங்களுக்கான புதிய அடிப்படை வாதங்களாகத்தான் வளர்கின்றன.(நீதி நூல்களுக்கு அவற்றை எழுதியவர்களின் கனவுகளில் தன்னும் கண்டிருக்காத வகைகளில் திரித்ஹு அவை மீது விவரணங்ககள் எழுதப்படுகின்றன.) இவற்றில் பல இன்று மேற்கு நாடுகளில் வளர்ந்திருக்கும் சுதந்திர, ஜனநாயக சம்பிரதாயங்களுக்கு மாற்றீடாக, பாரம் பரிய இலகுவான சம்பிரதயங்களாக மக்களை ஏமாற்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டவையே.  ஜனநாயக நாடுகளில் காணப்படும் சிறிய பிரச்சனைகளை ஊதிப்பெருப்பித்துக்காட்டி, வரும் சமூதாயங்களில் அத்தகைய வழுக்குகள் தன்னும் இல்லாத லட்சிய நீதிமத சமுதாயம் ஒன்றை ஆக்க போவத்தாகத்தான் இந்த கொள்கை வகுப்பாளர்கள் பிரசாரம் செய்வதுண்டு. அண்மையில்  கோபத்தபயாவின் பேச்சான "மேற்கு நாடுகளின் ஜனநாயக திணிப்புக்கள் கிழக்கு நாடுகளுக்கு உகந்தவை அல்ல" போன்ற பிரசாரங்கள் மத்திய கிழக்கின் அடிப்படை வாத நாடுகளிலும், இந்தியாவின் சமய ஆர்வம் கூடிய பாகங்களிலும் காணப்படுகிறது.

 

இந்த நிலையில் வேறு இறுக்கமான அழுத்தங்கள்   இணைக்கப்படாத பொருளாதாரத்தடை நாட்டை உறங்கு நிலையில் போட முடியுமே அல்லாமல் நாட்டின் அரசியல் பீடம்வரை துளைத்துச்சென்று அரசியல் இயந்திரங்களை தாக்க முடியாது. அங்கு அதற்கு தேவையான பொருளாதார-அரச தொடர்புகள் அறுந்துவிட்டது

 

1960 களில் தமிழ் நாட்டில் தோன்றிய அரசியல் விழிப்புக்கள் புதிய அதிகார வர்க்கங்களை மட்டும்தான் வளர்த்தது. ஆனால் இன்று மற்றைய முன்னேற்றங்களுடன் இணைந்து (பிரதானமான கல்வி) வளரும் அரசியல் வளர்ச்சி மாநிலத்தை திடமான பாதைகளில் இட்டு செல்கிறது. மானிலம் மறைமலை அடிகள், பெரியார், அண்ணாத்துரை காலங்க்ளில் சாதிக்க முடியாத புதுமைகளை சத்தம் சாவடி இல்லாமல் சமுதாயத்துக்குள் ஏற்றுக்கொண்டு வளர்கிறது. 

 

இதனால்த்தான் இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரவோ அல்லது சமுகங்களுக்கிடையிலான பிரச்சனைகளை தீர்த்துவைக்கவோ ஏற்புடைய ஆயுதம் பொருளாதாரம் போலத்தென்படவில்லை. நீதியான சட்டப்புரட்சியாக நடத்தபடத்தக்க போர்குற்ற விசாரணை இலங்கை மக்களுக்கு தற்போதுதேவைப்படும் சமுக நீதிகளின் ஆசானாக இருக்கப் போகிறது என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.  . இதன் மூலம் முதலில் குற்றவாளிகளை தண்டித்து, சமூதாயங்கள் வேண்டி நிற்கும் தீர்வைக்கொண்டு வந்த்து, அதன் பின் அவர்களுக்கு தேவையான அரசியல் மாற்றங்களை வளரவிட்டு இந்த அறுந்து போன தொடர்புகளை திரும்ப இயற்கையாக வளரவிட்டு பொருளாதார முன்னேற்றம் காணப்படவேண்டும். அதுதான் நாட்டை சுதந்திரத்தின்சுவையை ரசிக்க வைக்கும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.