Jump to content

ஐ.நா அமைதிப்படை வரமுன் தமிழர் தாயகம் மீட்கப்படுமா?


Recommended Posts

பதியப்பட்டது

ஐ.நா. அமைதிப்படையின் பிரசன்னம்

மேற்குலகின் இறுதி ஆயுதமாகுமா?

-இதயச்சந்திரன்-

1990 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள எரித்திய விடுதலை முன்னணிப் போராளிகள் சிலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தான பல தகவல்கள் அவர்களிடம் இருப்பது பற்றி அறிந்ததும் ஆச்சரியமடைந்தேன்.

இந்தியத் தலையீடு பற்றியும், ஈழ தேசிய விடுதலைப் போராட்டப் பாதையில், பல போராளிக் குழுக்கள் அதிகம் இந்தியா சார்ந்து, இருப்பது பற்றியும் அவர்களிடம் சில காத்திரமான விமர்சனங்கள் இருந்தன.

எதியோப்பியாவுடன் அவர்களுக்கும் ஏற்பட்ட போரியல் அனுபவங்களை மிக ஆழமாக விபரித்தனர். அவர்களுடனான கருத்தாடல் குறித்து நினைவு கூற வேண்டிய நம் காலத்தின் தேவை கருதி சிலவற்றை உரசிப்பார்க்கலாம்.

ஆரம்பத்தில் எரித்திரிய தேச விடுதலைக்கு அனுசரணையாகவிருந்த ரஷ்ய தேசம், எதியோப்பியாவில், தம் நலன் சார்பான ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், தமது தேசவிடுதலை ஆதரவுப் போக்கினை மாற்றியமைத்தது.

எரித்திரியா உள்ளடங்கலான முழு எதியோப்பியாவே தனது நீண்டகாலப் பிராந்திய நலனுக்கு அமைவாக இருக்குமென்கிற நோக்கோடு ரஷ்யா செயற்பட்டதன் பின்னணியிலேயே, எதியோப்பியாவிற்கான இராணுவ ரீதியிலான முழுமையான ஆதரவு அமைந்ததெனலாம்.

எரித்திரிய விடுதலைப் போரினைத் து}ண்டிவிடுவதன் ஊடாக எதியோப்பிய அரசினை தமது பிடிக்குள் கொண்டுவர எத்தனித்த ரஷ்ய தந்திரோபாயத்தினை தமிழீழ விடுதலைப் போரில் இந்தியாவின் அணுகுமுறையோடும் ஒப்பிடலாம்.

பல இயக்கங்கள் இந்தியாவின் வலைக்குள் வீழ்ந்தாலும், விடுதலைப் புலிகளைப் பணிய வைக்க இந்தியாவால் முடியவில்லை. புலிகளைப் பொறுத்தவரை, இந்தியாவின் தேசிய நலனுக்காக, ஈழ விடுதலைப் போரை அவர்கள் நடத்தவில்லை.

இதேபோன்று, முன்பு ஆதரித்த சக்திகள் எதிர்மாறான நிலைப்பாட்டினை எடுக்கும்போது, எரித்திரிய போராளிகள் தமது போராட்ட முனைப்பினை தளர விடவில்லை.

அங்கும் கெரில்லாப் போராட்ட வழிமுறைகளினு}டு பிரதேசங்களை மீட்பதும், இழப்பதுவுமான நிகழ்வுகள் நடந்து கொண்டுதானிருந்தன. தலைநகர் அஸ்மாராவிலுள்ள விமானப் படைத்தளங்களை எரித்திரிய விடுதலை அமைப்பினர் தாக்கி அழித்தனர். இந்நிகழ்வானது கட்டுநாயக்க விமானத்தளத் தாக்குதலை எமக்கு நினைவுபடுத்துகின்றது.

91 இல் நடந்த கடுஞ் சமரில் அஸ்மாராவில் நிலைகொண்டிருந்த ஒரு இலட்சம் படையினரும் கனரக வாகனங்களும், ஆட்டிலெறிகளும் போர் விமானங்களும் போராளிகளின் முற்றுகைக்குள்ளானது.

இப்போரியல் நிகழ்வானது யாழ். மாவட்டத்திலும், திருமலை மாவட்டத்திலும் மறுபடியும் உயிர் பெறக்கூடிய நிகழ்வாக அமைய வாய்ப்பு உள்ளது. யாழ். மாவட்டமானது கடல், தரை வழி முற்றுகைக்கு ஆட்படும்போது, 45 ஆயிரம் இராணுவம், பலாலி விமானத்தளமும், காரைநகர் கடற்படைத்தளமும் இவ்வாறான அஸ்மாரா நிலைக்குத் தள்ளப்படலாம்.

எரித்திரிய தேச விடுதலைப் போரில் வல்லரசின் ஆதரவும், அழித்தொழிப்பும் இருந்தது. அமெரிக்க ஆதரவு சக்திகளின் 'காலநீட்சி" பேச்சுவார்த்தைகளும் நடந்தன. இறுதியில் உறுதி தளராத போராளிகளின் முன் எந்தவிதமான அச்சுறுத்தல்களும் தனிமைப்படுத்தல்களும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

'சொந்த படை பலத்திலும், மக்கள் சக்தியிலும் தளராத நம்பிக்கையுடன் இறுதிவரை உறுதியாக இருப்பதுவே போராட்ட இலக்கை நோக்கி உங்களை நகர்த்திச் செல்லுமென்பதே அந்த எரித்திரிய போராளிகள் கூறிய கருத்து.

பதினாறு ஆண்டுகளின் பின்னரும் அவர்கள் பெற்ற அனுபவங்களின் பின்புல நிகழ்வுகள் எம்மண்ணில் நடந்தேறி வருவதனை கடந்தகால, நிகழ்காலச் சம்பவங்களினு}டு பார்க்கலாம்.

தற்போது இந்த தேசிய விடுதலைப் போராட்டம் பாரிய தரநிலை மாற்றத்தினை வேண்டி நிற்கிறது. இவ்வளவு காலமும் தமிழ்ச் சமுதாயத்தினால் உள்வாங்கப்பட்ட சகல புறநிலைச் அழுத்தங்களும் புதியதொரு பாய்ச்சலிற்கான அகம் சார்ந்த தர நிலை மாற்றத்தினை வெளித்தள்ளும் நிலைக்கு வந்துவிட்டது.

சுருங்கிக் கூறினால் தமிழ் மக்களின் வாழ்வாதார உணர்வுத் தளத்தில் வெடிப்பு நிலை தோன்ற ஆரம்பித்து விட்டது. இந்நிலை குறித்த போராட்டத்தை முன்னெடுக்கும் சக்திகள் அக்கறை கொள்ள வேண்டிய காலமும் நெருங்கிவிட்டது.

இந்நிலையில், சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் மீது கரிசனை கொள்ளவில்லையென்று அங்கலாய்ப்பதை ஒருபுறம் ஒதுக்கிவைக்க வேண்டும். இவர்களைப் பொறுத்தவரை, தமிழ் மக்கள் மீதான வன்முறைகள், படுகொலைகள் பற்றி அரசு மீது கண்டனங்களைத் தொடுத்தால், அவ்வாறான கண்டனங்கள் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அரசியல் ரீதியாகப் பலமடையச் செய்யுமென்கிற ஒரு காரணத்திற்காகவே அல்லைப்பிட்டி, வங்காலைக் குரூரங்களை அவை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்திற்கு கொடுத்த பிரசார முக்கியத்துவத்தினை வங்காலைப் படுகொலைக்கு வழங்க சர்வதேசம் விரும்பாது இருப்பினும் தொடர்ச்சியாக இரு நாட்கள் நடந்த வன்னி, மட்டக்களப்பு பிரதேசங்கள் மீதான அரச விமானத் தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை, தமிழ்ச்செல்வனின் இறுதி எச்சரிக்கையால் ஏற்பட்ட பயப்பீதியே அவர்களுக்குக் கொடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கூறியதுபோல் அரசிற்கும், சர்வதேச சமூகத்திற்குமான அதிர்ச்சி வைத்தியத்தினை புலிகளின் காட்டமான அறிக்கைகளே செய்கின்றன. இருநாள் விமானக் குண்டு வீச்சின்போது, தாம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

இப்படியானதொரு தாக்குதல்கள் மீண்டும் தொடர்ந்தால், பதிலடி மிக மோசமாக இருக்குமெனப் புலிகள் விடுத்த எச்சரிக்கையானது அரசிற்கு கொடுக்கப்பட்ட இன்னுமொரு அதிர்ச்சி வைத்தியம்.

மோசமான பதிலடியாக, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பாவிக்கப்படலாமென்கிற அச்சம் காரணமாகவே அரசு தனது தாக்குதலை நிறுத்திக் கொண்டதாக ஒரு சாராரும், புலிகளின் விமான எதிர்ப்பு நிலைகளை அறிந்து கொள்வதற்கான பரீட்சார்த்த தாக்குதல் இதுவென இன்னொரு சாராரும் கருதுவதாகத் தெரிகிறது.

புலிகள் குறிப்பிட்ட மோசமான பின் விளைவுகளானது, இன்னுமொரு கட்டுநாயக்கா பாணியிலான முற்றுகைத் தாக்குதலாகவும் அமையலாம்.

தடைகள் அதிகரிக்கும் போதுதான் பின் விளைவுகளும் பெருக்கமடைகின்றன. மேற்குலகால் விதிக்கப்பட்ட இறுதித்தடையும் எந்தவித மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை. ஐந்து கேள்விப் பொறிக்குள் புலிகளைச் சிக்க வைக்கும் முயற்சியும் தோற்றுப் போகும். நோர்வேக்கு சாதகமான பதிலையே புலிகள் தெரிவிப்பார்கள். இரு சாராரிடமிருந்தும், பதில் கிடைத்தவுடன், மேலும் பல கேள்விகளையும், விளக்கவுரைகளையும் நோர்வே முன்வைக்கலாம். தொடர்பாடல்களின் நீட்சி கருதியும், தமது இருப்பிற்கான தேவை கருதியும் ஏதோவொரு வகையில் பேச்சுவார்த்தையை நோக்கி நோர்வே காய்களை நகர்த்தும்.

நோர்வேக்கு உடன்பாடான பதிலை அளிப்பதன் மூலம், மேலதிக அழுத்தங்களைத் தவிர்த்துக்கொள்ளலாம். அதேவேளை யுத்த நிறுத்த மீறல்கள் பற்றியும் ஒட்டுப்படையின் செயற்பாடுகளை முடக்குவது பற்றியும் நோர்வே மீது அழுத்தங்களை புலிகள் சுமத்தலாம்.

ஆனால், நோர்வே அனுசரணையானது தொடக்கப் புள்ளியிலேயே திரும்பவும் வந்து நிற்கும், தம்மால் முடியாத காரியமென்று தெரிந்திருந்தும் மறுபடியும் முயற்சிக்கும் வேதாள நோர்வேயின் தளரா முயற்சியின் பின்னால் கால நீட்சி என்கிற தந்திரம் மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கிறது.

இவை யாவும் சரிவராத நிலையில் இறுதிப்போர் ஆரம்பித்தால் இது தொடர்பாக மேற்குலக நாடுகள், இந்தியா போன்றவற்றின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையுமென்பது குறித்தே பலர் அக்கறை கொண்டுள்ளார்கள்.

எளியோரைப் பிரித்தாளும், வலியோரின் தந்திரங்கள் பற்றியும், இந்தியாவானது புலிகளின் பரம எதிரி என்கிற தோற்றப்பாட்டை வலிந்து கூறியும், முழு உலகமுமே தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பப்பட்டு விட்டதான ஒரு மாயச் சூழலை உருவாக்கும் முயற்சியினையும் சில அறிவுஜீவிகள் தாம் விரும்பியவாறு கூறுகிறார்கள்.

பேச்சுவார்த்தைத் தளத்தில் தளம்பல் நிலை ஏற்படும்போது, அதிலீடுபடும் பிராந்திய நலன்சார் சக்திகள் தேடும் மாற்று வழிமுறைகளில், ஐ.நா. சபையின் படைப்பிரசன்னமும் ஒரு உத்தியாகப் பல நாடுகளில் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஐ.நா. சபையின் அமைதிப்படைகள் உள்நுழைவதற்கான ஏது நிலையை அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடும் சர்வதேச சமூகம் ஏற்படுத்துமா அல்லது அதற்கான புறச்சுூழலை தாம் விரும்பாமலே அரசு உருவாக்குமாவென்பதை யுத்தத்தின் தீவிரத் தன்மையே தீர்மானிக்கும்.

அரசு புலிகள் மீது மேலதிக அழுத்தங்களைத் திணிக்க, ஐ.நா. அமைதிப்படையென்ற இறுதி அஸ்திரத்தினை மேற்குலகம் பிரயோகிக்கலாம். தடைகளும், வெருட்டல்களும், தனிமைப்படுத்தல்களும் செயலிழந்த நிலையில் அவர்களுக்கு இருக்கும். ஒரே ஆயுதம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

யுத்த நிறுத்தம் என்ற சொல்லைப் பயன்படுத்துவோரை தமிழ்மக்கள் கோமாளிகளாகக் கருதும் நிலையில், மறுபடியும், நோர்வேத் து}துவர் வன்னி வருகிறார், வரும்போது, பதுங்கு குழிகளை இலகுவாக வெட்டக்கூடிய நவீன இயந்திரங்களை கையோடு கொண்டு வந்தால், தமிழ் மக்கள் சற்று ஆறுதலடைவர். இவர்கள் கொண்டு வந்தது சாந்தியுமல்ல, சமாதானமுமல்ல.

இருப்பினும் உறுதியான ஏகப் பிரதிநிதித்துவ தமிழ் தலைமையின் கீழ் அணிதிரள்வதே தமிழ் பேசும் மக்களிற்கான ஒரே வழி. எம்முடன் பேச வருபவர்களும், யுத்தம் புரிபவர்களும், சமாதானக் கானல் நீரை, காட்டாறு வெள்ளமாகக் காட்ட முயற்சிப்பதைக் கண்டு ஏமாறாமல் இருந்தாலே போதும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (25.06.06)

Posted

கொஞ்ச நாளா ஐ.நாபாடை என்று ஒரு பேச்சு அடிக்கடி வருது

Posted

ஐ.நா அமைதிப்படை வரமுன் தமிழர் தாயகம் மீட்கப்படுமா?

-இதயச்சந்திரன்-

சென்ற வாரம் ஐ.நா. அமைதிப்படையினை சிறிலங்காவினுள் அனுப்புவதை தமது இறுதி ஆயுதமாக மேற்குலகம் கைக்கொள்ளலாமெனப் பார்த்திருந்தோம். அப்படையை சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அச்சுறுத்தும் ஆயுதமாகவும், பாவிக்கலாம் அல்லது தாம் வெளியேறும் வேளையில் ஏதோவொரு வகையில் அப்படை பிரசன்னத்தினு}டாக தமது இருப்பினை மேலும் தக்க வைத்துக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.

இருப்பினும் இந்தியா என்கிற பிராந்திய சக்தியை மீறி மேற்குலகு விரும்பும் ஐ.நா. அமைதிப்படை சிறிலங்காவினுள் நுழைவதில் பாரிய சிக்கல்கள் உண்டு.

இவ்வளவு காலமும் மேற்குலகின் நேரடித் தலையீட்டினை வெறுப்போடுதான் இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது. தாம் முன்பே எட்டிய நிலைக்கு இவர்கள் இப்போது வந்திருப்பதையிட்டு சற்று ஆறுதலடைந்தாலும், அவர்களது அடுத்தகட்ட நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தும் வருகிறது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஐ.நா. அமைதிப்படையினை தமது ஆளுகைப் பிரதேசத்தினுள் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் வரமாக அளித்த நிலப்பரப்பினை எவருக்காகவும் விட்டுக் கொடுக்க இம்மியளவும் இணங்க மாட்டார்கள். ஒருவேளை சிறிலங்கா அரசானது அமைதிப்படை உள்நுழைவதை ஒரு நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளக்கூடும்.

அதாவது கொங்கோ நாட்டில் நடைபெறுவது போன்று அரச படைகளும் ஐ.நா. அமைதிப் படைகளும் இணைந்து புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்களென்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டால் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கமென்ன யுூ.என். பி.யும் கூட இதற்கு ஒத்துப் போவார்கள்.

தற்போது ஆபிரிக்க நாடான கொங்கோவில் நிலை கொண்டிருக்கும் ஐ.நா. அமைதிப் படை பிரசன்னம் குறித்து ஆராய்வது மேற்கூறப்பட்ட விடயங்களிற்கான சில எதிர்காலத் தரவுகளை தெளிவாக்கும்.

கொங்கோவானது ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கனிய வளங்கள் செறிந்த வறிய நாடாகும்.

தங்க, வைரச் சுரங்கங்களோடு கைத்தொலைபேசியில் பாவிக்கப்படும் இலத்திரனியல் பாகங்களை உருவாக்கப் பயன்படும் ஒருவகை கனியப் பொருள் இங்குதான் செறிந்து காணப்படுகிறது.

இவர்களை முன்பு ஆக்கிரமித்திருந்த ஏகாதிபத்தியங்கள் தங்கத்தையும், வைரத்தையும் மட்டுமே முக்கிய சுரண்டல் கனிமங்களாகக் கொண்டிருந்தார்கள். கைத் தொலைபேசியின் பாவனை உலகினை ஆக்கிரமித்த வேளை கொங்கோவின் கனிய வள முக்கியத்துவம் ஒருபடி மேலோங்கி நின்றது.

தோழர் சிவராம் (தராகி) இது பற்றி தனது கட்டுரையொன்றில் முன்பு குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது. இந்த சர்வ வியாபக சுரண்டல் சமூகத்திற்கு கொங்கோவில் நிலையான ஜனநாயக ஆட்சி அமைவது பிடிக்காது. ஏனெனில் நிலையான ஆட்சியில் அந்நாட்டு இறையாண்மைக் கூறுகளான உள்நாட்டு வரி, சுங்கத்தீர்வு போன்ற விடயங்கள் இக் கனிப் பொருள் அபகரிப்பினால் வரும் வருவாயின் இலாபத்தினைக் குறைத்து விடும்.

அடிக்கடி ஆட்சி மாற்றங்களும் தம்மோடு ஒத்துப் போகாத ஆட்சித் தலைவர்கள் கொல்லப்படுவதும் பொம்மை அரசுகளை உருவாக்குவதும் மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் தலையீட்டினை மேற்கொள்வதுமே சர்வதேச சமூகத்தின் இற்றை வரையான காய் நகர்த்தும் அரசியலாகவுள்ளது.

தற்போது அசாங்கத்திற்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்களை அழித்தொழிக்க ஐ.நா சபையின் அமைதிப்படையினை சர்வவியாபக சமூகம் உள்நுழைய விட்டுள்ளது.

கொங்கோலிய படையுடன் இணைந்து ஐ.நா. அமைதிப் படையினர் கிளர்ச்சியாளர் மீது தொடுத்த போரினால் கிராமங்கள் அழிக்கப்படுவதுடன் கொங்கோ இராணுவத்தால் மக்கள் படுகொலை செய்யப்படுவதனை ஐ.நா. அமைதிப்படை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

கிளர்ச்சியாளர்கள் தமது படகுகள் மூலம் கனிப் பொருட்களை வெளிநாடுகளுக்குக் கடத்தி அதிலிருந்து பெறும் வருவாயில் ஆயுதங்களை வாங்குவதாக சர்வதேச சமூகம் குற்றம் சுமத்துகிறது. தமது நலன்களுக்கு சாதகமான ஆட்சியாளர் கொங்கோவில் அமர்வதனை எல்லா வழிகளிலும் உறுதி செய்யும் மேற்குலகம், வரிக்கு உட்படாத கனியவளச் சுரண்டலினை மேற்கொள்ள நிலையற்ற ஆட்சியினை விரும்புகிறது.

உதாரணமாக லண்டன் பங்குச் சந்தையின் அதிகூடிய பாகத்தினை ஒரு கைத்தொலைபேசி கம்பனி வகிக்கிறது. அந்நாட்டின் அதிகளவிலான அரசு ஓய்வூதிய பணம் இந்தக் கம்பனி பங்குகளிலேயே முதலீடு செய்யப்படும். அதன் பங்கில் வீழ்ச்சி ஏற்படும் போது முழுப் பங்குச் சந்தையே சரியும் நிலை ஏற்படுகிறது.

கொங்கோ மண்ணின் பங்கு லண்டன் பங்கு சந்தையை எவ்வளவு து}ரம் பாதிக்கிறதென்பதை சற்று விரிவாக பார்த்தால் புரியும். கொங்கோவில் இடம்பெறும் அரசியல் ஸ்திரமற்ற நிகழ்வுகள் உலகிலுள்ள கைத்தொலைபேசி உற்பத்தியாளர் மற்றும் அது சார்பான பிற நிறுவனங்களின் பங்குகளில் வீழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

இதேபோன்று எம் ஈழ மண்ணிலிருந்தும் ஒரு வகையான உயிர் செறிவுமிக்க கனிமப் பொருட்கள் சூறையாடப்படுகின்றன. புல்மோட்டையிலிருந்து அகழ்ந்து கொண்டு செல்லப்படும் இல்மனைட் மண் விமான றொக்கட், சற்றலைட்டுக்களின் வெளிப்பாகங்களின் உருவாக்கத்தில் பயன்படும் ஒரு முக்கிய கனிப் பொருளென்பது எம்மில் பலருக்குத் தெரியாது.

ஏதோ கண்ணாடித் தொழிற்சாலையின் தேவைக்காகவே ஜப்பான் இம் மண்ணை ஏற்றுமதி செல்வதாக பலர் கருதுகிறார்கள். கண்ணாடி உற்பத்திக்கு சிலிக்கனே போதும். ஆயினும் இல்மனைட் மண்ணில் சிறியப் பகுதி சிலிக்கன் இருந்தாலும் பெரும்பகுதியாகக் காணப்படும் டைடேனியம் சேர்க்கன், போன்ற தாதுக்கள் அதிக வெப்ப சக்தியை தாங்கும் வன் திறன் கொண்டவை. இதனாலே டைட்டேனியம் விமான மேற்பாகங்களை உருவாக்குவதில் பெரும் பங்கினை வகிக்கிறது.

எம் தலையில் குண்டுகளை வீசும் கிபீர் விமானங்கள், எம்மண்ணால் உருவாக்கப்பட்டதென்பது ஆச்சரியமான விடயமல்லவா? வெறும் பனங்கொட்டையை வைத்துக் கொண்டு தமிழீழ அரசினை எப்படி நடத்துவார்களென்று அங்கலாய்க்கும் அதி மேதாவிகளுக்கு எம் மண்ணின் வளம் பற்றியும், பலம் பற்றியும் தெரியாது.

முன்பு சோவியத் யூனியனின் ஆதரவுடன் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள அகழ்வாராய்ச்சி நடந்தது பலருக்கும் நினைவிருக்கும். சில சோவியத் சார்பு அந்நிய சக்திகளின் தலையீட்டினால் அது இடை நடுவில் கைவிடப்பட்டது. எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டால் சிறிலங்காவைத் தனது பிடிக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு பாதிப்பு ஏற்படலாமென்கிற பிராந்திய நலன்சார் தேவைகளே அப்படியானதொரு மறைமுக தலையீட்டிற்கு வழிவகுத்தது.

இருப்பினும் எண்ணெய் வளம் இருப்பது குறித்து தெளிவான முடிவொன்று அண்மையில் ஆய்வாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது மூலவளங்கள் எல்லா வழிகளிலும் சுரண்டப்படுவதும் மறைக்கப்படுவதும் வரலாறாகி விட்டது.

மன்னார் கருவாடும், திருமலை மீனும், யாழ்ப்பாண புகையிலை, வெங்காயமும், மட்டக்களப்பு அரிசி மட்டுமே வடக்கு கிழக்கிலிருந்து வரும் சிறிலங்காவின் தேசிய வருமானத்திற்கான பங்களிப்பாக சிங்களவர்களும், சில தமிழர்களும் கருதுகிறார்கள். இருப்பினும் மலையக தமிழர்களின் இரத்தமும் வியர்வையும் கலந்து அரசின் அரைப்பங்கு திறைசேரியை நிரப்புகிறது.

ஆயினும் சர்வதேச சமூகத்திற்கான பல தேவைகள் வடக்கு கிழக்கு மண்ணில்தான் அமைந்துள்ளதென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலை துறைமுகமாக, எண்ணெய் வளமாக, எண்ணெய் சேகரிக்கும் குதங்களாக, கனிப் பொருட் தேவைகளாக, கடல் வளமாக எம் தேசம் இயற்கையாக உருப் பெற்றுள்ளது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக அபகரிக்கப்படும் புல்மோட்டை மண்ணிற்காகவும், திருமலையின் இயற்கை துறைமுகத்திற்காகவும், பாரிய வட கிழக்கு கடல் வளச் சுரண்டலுக்காகவும், இதற்கும் மேலாக தென்னாசியாவின் கடல் வழித் தலைவாசலின் முக்கியத்துவத்திற்காகவும், மேற்குலகானது எம் மண்ணிலிருந்து தமது பிடியைத் தளர்த்திக் கொள்ளாது.

மேற்குலகின் முதற் கட்ட நடவடிக்கைகள் முடிவடையும் தறுவாயில் இரண்டாம் கட்ட நகர்வுகளை நோக்கி தமது காய்களை நகர்த்த எத்தனிக்கும் போது இந்தியாவானது உள்நுழைய முயற்சிக்கிறது.

தமிழ் நாட்டில் தமிழ் தேசிய உணர்வெழுச்சியை அனுமதித்திருக்கும் இந்தியா தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட நியாயப்பாட்டினை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவது போல் தென்படுகிறது.

தமது நாட்டினுள் ஈழ அகதிகளின் வருகையும் தமிழ் நாட்டின் எழுச்சியும், தலையீட்டிற்கான சாதகமான தளத்தினை உருவாக்குமென இந்தியா கருதினாலும் விடுதலைப் புலிகள் குறித்த தமது நிலைப்பாட்டினை தெளிவாக கூறாமல் உள்நுழைய முடியாது.

தடை செய்த நாடுகள் கண்காணிப்புக் குழுவில் பங்கு கொள்ள முடியாதென்ற புலிகளின் இறுக்கமான தீர்மானம் இந்தியாவிற்கு சோர்வை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தமிழ் மக்களது நியாயபுூர்வமான தேசிய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரித்தால் இந்தியாவின் பங்களிப்பினை வரவேற்போமென சு.ப.தமிழ்ச்செல்வன் கூறுவது இந்திய முன்னெடுப்பில் சறுக்கலை ஏற்படுத்தும்.

இந்திய புலிகள் உறவு சீரடையாமலும் ஈழம் தொடர்பான தீர்மானகரமான கொள்கையை வகுக்காமலும் இந்தியா காலத்தை இழுத்தடிப்பதுமாக இருந்தால் அதன் பிராந்திய நலன் தொடர்பான அபிலாஷைகள் பின் தள்ளப்படும். மேற்குலக அச்சோடு இணைய முடியாமலும் தமிழீழ விடுதலைக்கு அனுசரணையாக மாறாமலும் தனது வெளியுறவுக் கொள்கையினை இனியும் நீடிக்க முடியாது.

ராஜீவ் காந்தியின் மறைவினைத் தொடர்ந்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் பால் ஏற்பட்டுள்ள இந்தியாவின் வெறுப்பை விட ஆயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டதையிட்டு தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன்னமும் நிலை கொண்டிருக்கும் இந்தியா தொடர்பான கசப்புணர்வினை அவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்திய அமைதிப்படைக் காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள் தொடர்பான சகல ஆவணங்களுடன் சர்வதேச நீதிமன்றின் முன் இந்தியாவை நிறுத்தியிருக்க முடியும். ஆனாலும் தமிழ் மக்கள் அதனைச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் இந்தியாவை தமது நிரந்தர எதிரியாக தமிழ் மக்கள் எப்பொழுதுமே கருதியதில்லை. இரு சாராரின் பரஸ்பர நலன் குறித்த சிக்கலினால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளே இவையெனலாம்.

சென்றவாரம் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு இந்தியப் பிரதமர் மங்களம் பாடியது போல் இராணுவ வழி முறைகள், மூலம் புலிகளை வெல்ல முடியாத நிலையில் இலங்கை இருப்பதை இந்தியா புரிந்திருந்தாலும் விடுதலைப் புலிகள் தொடர்பாக தாமே போட்ட தடைகளை உடைத்துக் கொண்டு வெளிவருதலே இந்திய நலனுக்கு உகந்தது.

அத்துடன் இந்தியாவானது தமிழ் மக்கள் தொடர்பான தனது இரட்டைப் போக்கினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒருபுறம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் மறுபுறமாக 'றோ" (இந்திய வெளியுறவு உளவு ஸ்தாபனம்) வினு}டாக துணைப்படைக் குழுக்களின் பலத்தை அதிகரிக்கும் நரித்தனமான வேலைகளிலும் ஈடுபடுகிறது.

83 களிலிருந்து விட்ட தவறுகளையே 'றோ" (சுயுறு) திரும்பத் திரும்பச் செய்கிறது.

போராட்டத்தில் இணையும் ஆட்பலத்தினைச் சிதைக்கவும், தம்மால் உருவான குழுக்களின் மூலம் விடுதலைப் போராட்டத்தில் தமது மறைமுக பங்கினை நிலை நிறுத்த எடுக்கும் முயற்சிகளையும் 'றோ" முடிவிற்கு கொண்டு வருதல் அவசியம்.

80 களின் பிற்பகுதிகளில் போராட்ட இயக்கங்களில் ஏற்பட்ட மோதல்கள், அமைதிப்படை வெளியேறும் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவ கட்டாய ஆட்சேர்ப்பு எல்லாவற்றிலும் 'றோ" வின் தந்திரோபாயமானது ஆட்பலத்தை சிதைக்கும் நோக்கினை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச வளர்ச்சித் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் 83 ஆம் ஆண்டு கால நிலைக்கான வழிமுறைகளையே 'றோ" கையாள்கிறது.

அதாவது '20" வருடங்களுக்கு முன் கையாண்ட மூல தந்திரோபாயங்களை இன்னமும் கடைப்பிடிப்பது சமகால கள யதார்த்தம் பற்றிய புரிதல் இவர்களுக்கு இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

எனவே மேற்குலகமும், இந்தியாவும் தமது அடுத்த கட்டப் பாதைகளைத் தெரிவு செய்து புதிய போக்கினை முன்னெடுக்கு முன் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் அதிகரிக்கப்படலாம். ஏனெனில் பாரிய யுத்தம் ஆரம்பிக்கப்பட்டால் ஐ.நா. அமைதி படை உள்நுழையலாமென ஆசியாவின் மேற்குலகப் பிரதிநிதி ஜப்பான் கூறியதை நினைவிற் கொள்ள வேண்டும்.

நன்றி: வீரகேசரி வார வெளியீடு (02.07.06)

Posted

ஓ ஜநா எண்டு கொண்டு படை வந்தலும் அவையை பாடையிலான் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும்.

Posted

ஓ ஜநா எண்டு கொண்டு படை வந்தலும் அவையை பாடையிலான் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும்.

என்ன இது?

எந்த பிராந்திய கட்டளை தளபதியாய் - உங்க கருத்து - இது? :? 8)

Posted

அப்ப நீங்கள் என்ன செய்ய வேணும் என்றீங்கள்? இந்தியப்படை மாதிரி வீதி வீதியா நிண்டு மாலை போட்டு வரவேற்பமா?

இந்தியா ஈழம்பிடிச்சு தரும் எண்ட விளக்குமாத்து அறிவாளிகள் மாதிரிதான் சர்வதேசமும் ஜநாவும் ஈழம் பிடிச்சு தரும் எண்டு படிஅளக்க கொஞ்சப்பேர் இருப்பினம். அவைக்கு இன்னமும் உத்தரவு வரவில்லைபோலும் வந்தவுடன் அவையும் சனத்தை குளப்ப வெளிக்கிடுவினம்.

இந்தியா (அமைதிகாக்கும்) படைகளோடு வந்து தீரவை திணிக்க முயன்று முடியாத கட்டங்களில் இறுதியில் அவர்களோடு யுத்தம் மூண்டது.

சர்வதேசம் அங்கீகாரம், இராஜதந்திரம், அபிவிருத்தி உதவி என்பவற்றோடு வந்து தீர்வை திணிக்க முயன்று முடியாது போக இறுதியில் தடைபோட்டாயிற்று. அடுத்து என்ன? :roll:

Posted

அந்த வகைல அர்த்தப்படுத்தல்ல ......

அவசரம் ஏன் - கருத்தில -என்னு சொல்ல நினைச்சன் - அவ்ளோதான் !

மத்தும்படி -கோவம் எல்லாம் இல்ல - மன்னிக்கவும்! 8)

Posted

ஓ ஜநா எண்டு கொண்டு படை வந்தலும் அவையை பாடையிலான் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும்.

அமைதிப்படையா ஐநா சார்பாய் மாலை தீவு இராணுவத்தினர் "நூறு பேரும்தான்" வரப்போகினமாம்...! அவைக்கு பாடை கட்டவேணும்தானோ...???

இல்லை கேக்கிறன் ஐநா வர சிறீலங்கன்கள் விடுவாங்களே...??? அதால அவங்களுக்கு லாபம் இருக்கும் எண்டே நினைக்கிரீயள்....???

Posted

சிறீலங்காவிற்கு ஏலாது போக இறங்கிவரும், அதைத்தானே ஜேஆர் செய்தவர். பிறகு எங்கடை மண்ணின் மைந்தன் பிரபாகரன் அடிச்சு கலைக்கிறான் எண்ணுவினம். மலைதீவு பிரசைகள் அங்கு உல்லாச பிரயாணம் செல்லுறதை தடை செய்வினம். மாசிக்கருவாடு விக்கிறவை வேண்டுறவை கொழுத்துவினம்.

ஓ முதல் மாலைதீவு வந்தாலும் அது ஜநா படை என்று தானே வரும். பிறகு வந்த ஜநா படைக்கு உதவி செய்ய பலப்படுத்த விரிவாக்க என்று மேலதிக ஜநா (இன்னொரு நாட்டு) படை வரும்.

அதுக்கு முதல் உவை கண்காணிப்பு குழு தங்கடை சொந்த கடற்கலன்களில் கடல்கண்காணிப்பு செய்யவது பற்றி சிந்திக்கினமாம்.

Posted

சர்வதேச அங்கீகாரமில்லாம தமிழீழத்தை வைச்சு என்ன சுண்டக்காய் வத்தல் போடப்போறீங்களோ..??! :wink: :lol: :idea:

Posted

சர்வதேச அங்கீகாரமில்லாம தமிழீழத்தை வைச்சு என்ன சுண்டக்காய் வத்தல் போடப்போறீங்களோ..??! :wink: :lol: :idea:

சர்வதேச் ஆதரவு கிடைச்ச பலஸ்தினமும்.தாய்வனும், தீபத்தும் க்கு என்ன சொல்ல போறிங்கள் சும்ம எழுதோனும் என்றதுக்காக எழுதிகொண்டு இருக்காம நல்ல படியாக யோசிக்கவும்

Posted

சர்வதேச் ஆதரவு கிடைச்ச பலஸ்தினமும்.தாய்வனும், தீபத்தும் க்கு என்ன சொல்ல போறிங்கள் சும்ம எழுதோனும் என்றதுக்காக எழுதிகொண்டு இருக்காம நல்ல படியாக யோசிக்கவும்

ஏன் தாய்வானுக்கு என்ன குறை.. அமெரிக்க பாதுகாப்பில..நல்லாத்தானே இருக்குது. நல்ல பொருளாதார வளர்ச்சி கூட பெற்று வருகிறது. தீபத் இன்னும் தனிநாடாக அங்கீகரிக்கப்படல்ல..! பலஸ்தீனம்..சர்வதேச அங்கீகாரத்தால் தான் பகுதியாக என்றாலும் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. பலஸ்தீனப் போராளிகளிடம் தங்கள் தேசத்தை இராணுவரீதியில் விடுவிக்கக் கூடிய படைப்பலம் கிடையாது. எனவேதான் அரபாத் அமைதி வழியில் ஒரு தற்காலிகத் தீர்வை என்றாலும் காண முற்பட்டார். இன்றேல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு இன்றும் இருந்து கொண்டே இருந்திருக்கும்..! தமிழர்கள் நாங்கள் ஒருவேளை இராணுவ ரீதியில் தனிநாட்டை நோக்கிப் போயின்...அதன் போது இராணுவத் தலையீடுகளுக்கு வழி வகுப்பதாகவே முடியும் என்பதை..யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்ற முனைந்தபோது நிகழந்த சர்வதேச அரசியல் இராணுவ நகர்வுகள் சொல்லி நிற்கின்றன..! இதன் பிறகும்..தமிழர்கள் தாந்தோன்றித்தனமாக இராணுவ ரீதியில் தனிநாடு நோக்கி போவது மிகவும் ஆபத்தான சூழலையே ஏற்படுத்தும். அதுதான் புலிகளும் பொறுமை காத்து வருகின்றனர்..! ஆனால் புலிகள் இழந்த ஒன்று..தமிழ் மக்களை இராஜதந்திர ரீதியில் பாதுகாக்க முடியாமையே..! அதுதான் இன்று சிங்களம் தினம் தினம்..தமிழர்களை கொன்றுகுவிக்க ஏதுவாகியுள்ளது..! :idea:

Posted

தமிழ் ஈழத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வேண்டுமா இல்லையா என்பதற்கு முதல் ,சர்வதேசம் தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதுவே பிரச்சினை.

சர்வதேசம் சர்வதேச நியதிகளுக்கு அமைவாக இந்தப் பிரச்சினையில் தனது நிலைப்பாடுகளை மாற்றாத வரை ,தேசிய இனங்களின் சுய நிர்ணயம் என்கின்ற அடிப்படயில் எமது போராட்டத்தை அணுகாத வரையில் அதன் தலை ஈடும் எமது போராட்டத்திற்கு எதிர் மாறானதாகவே இருக்கும்.புலிகளும் தமிழரும் வேண்டுவது அந்த அடிப்படை மாற்றத்தையே.அதை ஒட்டியே இது நாள்வரை காய் நகர்த்தல்கள் இடம் பெற்றன.அவ்வாறான மாற்றம் சர்வதேச நடைமுறைகளால் ஏற்படுத்த முடியாது போகின் நாம் எமது சொந்த வழியைப் பார்ப்பதைத்தவிர வேறு வழியில்லை.

இங்கே சர்வதேசம் சொல்கிறது என்பதற்காக நாம் எமது போராட்டத்தையோ தமிழரின் சுய நிர்ணயத்தையோ விட்டுக் குடுக்க முடியாது.அப்படி என்றால் போரடியதற்கு ஒரு அர்த்தமும் கிடையாது.

அடிப்படைகள் புரியாமல் தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பும் வண்ணம் சீண்டல் பாணியிலான சுண்டைக்காய், வெண்டைக்காய் என கருத்தெழுதுவதைத் தவிர்த்துக் கொள்வதே ஆரோக்கியமான கருத்தாடலுக்கு வழி வகுக்கும்.

சிங்களம் இன்று மட்டும் அல்ல நேற்றும் கொன்று குவித்தது தான்,அதற்காகத் தான் போராட்டம் நடக்கிறது.அதில் நாம் இன்னும் வெற்றி பெறவில்லை. கத்தி இன்றி குருதி இன்றி வெற்றி பெறும் வழி ஒன்று இருக்கு எண்டால் அதனைச் சொல்வதை விடுத்து, எதோ மாயாவித்தையால் தாம் இதற்கெல்லாம் விடை கண்டு வைத்திருப்பதாக எழுதுவது பேய்க்காட்டல் அல்லது போலியான கருத்தாடல்.

ஆரோக்கியமான கருத்தாடல் என்பது தீர்வை நோக்கியதாக இருக்க வேண்டும்.போராட்டத்தை விமர்சிப்பவர்கள் அதற்கான தீர்வையும் முன் வைக்க வேண்டும்.

குறிப்பாக நாம் விமர்சிப்பது பல ஆயிரம் பேரின் தியாகத்தின் மீது நின்று கொண்டு என்னும் போது.

Posted

இன்றைய காலக்கட்டத்தில் கறுப்புச் சந்தையில்..அல்லது மறைமுகமாக ஆயுதங்களைப் பெற்று ஆயுதப் போராட்டம் நடுத்துவது போன்றதல்ல..தனிநாட்டை உருவாக்கி இயக்குவது என்பது. தனிநாட்டின் இயக்கம் என்பதில் பல விடயங்கள் உள்ளடங்கியுள்ளன. அதில் முக்கியமானது..மற்றைய தேசங்களுடனான இராஜதந்திரத் தொடர்புகளும் உதவிகளும். இலங்கை அரசு பேணி வருவது போன்று புலிகளுக்கு அரசுகளுடனான இராஜதந்திர உறவுகள் பலமானதாக தென்படவில்லை. போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் புலிகள் வைத்திருந்தி இந்திய மற்றும் சர்வதேச இராஜதந்திரத் தொடர்புகள்..இன்றைய தேவைகளுக்கு ஏற்ப வலுப்பெற்றிருக்கவில்லை. ஒரு தேசத்தின் இருப்பை நேரடியாக ஏற்காவிடினும்..மறைமுகமாக இராஜதந்திர ரீதியில் அங்கீகரிக்க வைத்தாலும் கூட அது அந்தத் தேசத்தின் இருப்புக்கு உதவியளிக்கும். குறிப்பாக அண்டை நாட்டுகளுடனான..இராஜ தந்திர உறவுகள் தமிழர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். ஆனால் அப்படியான புறச்சூழல் அமைக்கப்படாத சூழலில்..சர்வதேச அரசியல் இராணுவ போக்கிலாவது எமது தேசத்தின் இருப்பை முதன்மைப்படுத்த இராஜசந்திர முயற்சிகளைச் செய்ய வேண்டும். இலங்கை அரசு தமிழர் போராட்டுத்துக்கு எதிராக கதிர்காமரைப் பாவித்து செய்த இராஜதந்திர நகர்வுகளே இன்று அதற்கு பலவழிகளிலும் உதவி நிற்கிறது. இப்போ தமிழர் தரப்பு தமிழர்களைப் பலபப்டுத்துவதையே செய்ய வேண்டி இருக்கிறது. சர்வதேசத் தடைகள் என்ற பிரமைக்குள் தமிழர் தரப்பைச் சிக்க வைத்து போராட்ட சக்திகளுடனான இராஜதந்திர நெருக்கங்களைக் களைய சில வல்லாதிக்க சக்திகள் இயங்கி வரும் நிலையில்..தமிழர்கள் ஆயுத ரீதியில்..தமிழீழம் அமைப்பது என்பது..இந்தியா போன்ற அண்டைநாடுகள் இலங்கையின் ஒருமைப்பாடு இறைமை என்ற வகைக்குள் இராணுவ ரீதியில் தமிழர் போராட்டத்தை நசுக்கத் தலைப்படும் என்பதில் எவருக்கும் சந்தேக இருக்க முடியாது. அப்படியான நகர்வுகளைத் தடுக்கக் கூடிய என்ன இராஜதந்திர நகர்வுகள்..அல்லது தொடர்புகள் தமிழர் தரப்பிடம் பலமாக இருக்கிறது என்பதும்..பலவீனமாகவே இருக்கிறது..! இதுவே இன்னும் சிங்கள தேசமே தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலையிலும் வைத்திருக்கிறது..! எனவே தமிழர்களுக்கு ஒரு பலமான பலமான இராஜதந்திர உறவு..தொடர்பு உதவிகள் அவசியம்..ஈழம் அமைப்பதற்கு.. முதலில்..! :idea:

Posted

ராஜதந்திரம் என்பது வெறுமையில் எழுப்பப் படுவது அல்ல.

பலத்தின் அடிப்படயிலயே ராஜதந்திர நகர்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன.சர்வதேச உறவுகள் நாடுகளுக்கிடயில் கூட அவற்றின் பலத்தின் அடிப்படையிலயே தீர்மானிக்கப் படுகின்றன.இந்தியாவிற்கு ராஜதந்திர ரீதியாக இருக்கும் பலம் இலங்கைக்கு இருப்பதில்லை.இந்தப் பலத்தின் அடிப்படை ஈற்றில் அந்த அந்த நாடுகளின் இராணுவ படை வலிமையிலயே தங்கி இருக்கிறது. வெறும் சொற்களால் எழுதுவதால் ,உரக்க அழைப்பதால் எம்மோடு எவரும் வந்து கதைக்கப் போவதில்லை.

புலிகள் இராணுவ ரீதியாக ஈட்டிய வெற்றியின் அடிப்படயிலயே சர்வதேச ரீதியான அங்கீ காரத்தைப் பெற்றனர்.புலிகள் அவ்வாறான ஒரு இராணுவ வெற்றியை ஈட்டி இராவிடின் இன்று எமது குரல்கள் ஜெனிவாவிலோ,ஒஸ்லோவிலோ ஒலித்திருக்காது.

ஆகவே இராணுவ வலிமையின் அடிப்படயில் தான் ராஜ தந்திர நகர்வுகள் ,வலிமை பெறப்படுகிறது ஒழிய அவை ஒரு வெற்றிடத்தில் ஏற்படுவதில்லை.இது தான் அடிப்படை.

Posted

குருவிகள் 2001...2002 ஆண்டின் சிந்தனையில் இருந்து கொண்டு தானும் குளம்பி மற்றவயையும் குளப்பிறார் போலுள்ளது. இது 2006 என்பதையும் 2002 இல் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டாப்பிறகு நடைபெற்ற தமிழீழத்திற்கும் சர்வதேசத்திற்குமிடையிலான இராஜதந்திர உறவாடல்கள், அதன் ஏற்றங்கள் தாழ்வுகள் அனைத்தையும் அறியாதவர் போல் எழுதுறாரே?

4 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவங்களை அர்பணிப்புகளை புறந்தள்ளி இந்த அரசியல் வெறுமையில் நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்ட இராஜதந்திர உறவுகள் என்ற கானல்நீரை தேடச் சொல்லுகிறாரா?

சர்வதேச அரசியல் இராணுவ போக்கில் எப்படி எமது தேசத்தின் இருப்பை முதன்மைப்படுத்துவது? அதை எப்படி இராஜதந்திர வழிகளில் செய்வது? கொஞ்சம் விளக்கமாக எழுத முடியுமா?

Posted

அரசியல் இராஜதந்திர நகர்வுகள் என்பது வெறும் இராணுவ பலத்தால் தீர்மானிக்கப்படுவது என்பது முற்றும் சரியான பார்வையன்று...! இராணுவ பலத்தின் அடிப்படை என்பது...அதன் இருப்பு...வலு..இயக்கம்.. தொடர்ச்சி.. மக்கள் ஆதரவு..தாக்கு வலு...அதன் உள்ளூர் பிராந்திய சர்வதேச தாக்கங்கள் என்று பலதும் நோக்கப்பட்டே அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. புலிகளின் இராணுவ பலம் மட்டும்.. புலிகளைப் பேச்சுக்கு அழைக்கவில்லை.. புலிகளின் உள்ளூர் அரசிய இராஜதந்திர நகர்வுகளும் அதற்கு உதவின. அந்த வகையில் புலிகளின் சர்வதேச இராஜ தந்திர நகர்வுகள்..நாடுகளுடனான உறவுகள்... தமிழீழத் தாயகம் அமைவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது இன்னும் தெளிவின்மையாகவே இருக்கிறது..! குறிப்பாக வியட்நாம் யுத்ததின் போது வியட்நாமியர்களுக்கு அமெரிக்க- ரஷ்சிய கோல் வோர் அரசியல் இராணுவ நிலைப்பாடு தங்கள் இராஜதந்திர உறவுகளைப் பேண உதவியது..! அதுபோன்று...எமது போராட்டத்தின் தனிநாட்டுக்கு அங்கீகாரம் தேட இந்தியாவை இராஜதந்திர ரீதியில் எமது இலக்கு நோக்கி அங்கீகரிக்க வைக்க வேண்டும். அதற்கான இராஜ தந்திர நகர்வுகளைப் புலிகள் செய்யக் கூடிய பலத்துடந்தான் தற்போதும் இருக்கின்றனர்..! அவர்கள் அதற்கு முயற்சி செய்தாலும்..பதில் இராஜதந்திரம் மூலம் சிங்கள அரசு அதைத் தனக்கு சாதகமாக்கி வருகிறது..! குறிப்பாக இலங்கை அரசின் இராஜதந்திர நகர்வுகளுக்கு ஏற்றவகையில் புலிகளின் இராஜதந்திர நகர்வுகள் விரிவாக்கப்பட வேண்டும். தமிழீழ தனியரிசின் உதயமும்...அதன்பின்னான இந்திய உபகண்டத்தின் இராணுவ அரசியல் மாற்றங்களும் இந்தியாவை..அதன் ஒருமைப்பாட்டை...எந்த வகையில் மாற்றக் கூடும்..அல்லது இந்திய பிராந்திய வல்லாதிக்கத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் என்பதை இராஜதந்திர நகர்வுகள் மூலம் சுட்டிக்காட்ட வேண்டும். குறிப்பாக கதிர்காமர் இந்தியத் தலையீட்டுக்காக மேற்கொண்ட இராஜதந்திர நகர்வுகளில் அமெரிக்கா சீனா போன்ற நாடுகளின் இலங்கை அரசின் இராஜதந்திர உறவுகள் பிராந்திய இராணுவ அரசியல் சார்ந்து மேற்கொள்ளப்பட்டதை உதாரணமாகக் காட்டலாம்..! அப்படியான நகர்வுகள் மூலமே புலிகளும் தங்களின் செல்வாக்கை..கோரிக்கையின் நியாயங்களை தக்க வைத்துக் கொள்ள முடியும்...! சரி...எனி புலிகளுக்கு அவ்வாறு செல்வாக்குச் செய்யக் கூடிய நிலை இருக்கா என்றால்..! நிச்சயம் இருக்கிறது..! ஆனால் அது பாவிக்கப்படும் வேகம் தமிழீழத் தனியரிசு நோக்கிய நகர்வுகளுக்கு ஏற்ப முடுக்கி விடப்படும் போது..தமிழ் மக்கள் மீதான் அரசின் அட்டூழியங்களைக் கூட தடுக்க வாய்ப்பு உருவாகலாம்...!

குறிப்பாக இப்படியான விவகாரங்கள் சர்வதேச நாடுகளின் பிராந்திய அக்கறைகளோடு சேர்ந்து முன்னகர வேண்டும். இதில் நுணுக்கமாக ஆராயப் பல விடயங்கள் இருக்கின்றன..! அதற்கு புலிகளிடம் ஆட்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் செயற்பாட்டின் வெற்றியை மக்கள் பெறக்கூடிய சூழல் இன்னும் தோன்றவில்லை...அதைப் புலிகள் தான் துரிதப்படுத்த வேண்டும்..! :idea:

Posted

ஓகோ கதிர்காமர் மற்றும் சிங்களத்தரப்பு எப்படி சீனாவையும் பாக்கிஸ்தானையும் துருப்பு அட்டையாக பயன்படுத்தி இந்தியாவை தனக்குச்சார்பாக வைத்திருக்க முயற்சிக்கிறதோ அப்படி புலிகளும் இந்தியாவின் அங்கீகாரத்தை பெற இந்தியாவின் எதிரிகளோடு உறவுகளை ஏற்படுத்திகொள்வோம் போன்ற சமிக்கைகளை அனுப்பும் அதி புத்திசாலித்தனமான இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும். இது தான் இன்று புலிகள் செய்ய வேண்டி இராஜதந்திர நகர்வுகளின் விரிவாக்கல். :oops:

Posted

தேவைகளுக்கும் பலத்துக்கும் பலவீனத்துக்கும் அமைய அவை எவை என்று தீர்மானிக்கப்படும். நாமல்ல இராஜதந்திர கொள்கை வகுப்பாளர்கள். நாம் முன்வைப்பது விமர்சனங்கள் மட்டுமே..! :idea:

Posted

சர்வதேச அங்கீகாரமில்லாம தமிழீழத்தை வைச்சு என்ன சுண்டக்காய் வத்தல் போடப்போறீங்களோ..??! :wink: :lol: :idea:

அங்க சர்வதேச அங்கீகாரம் கிடைச்ச பாலஸ்தீனத்தைத் தான் இஸ்ரேல் வத்தல் போட்டுக் கொண்டு இருக்கிறான்.

அங்கீகரிச்ச நாடுகள் என்ன வெட்டிப்புடுங்கீனமாம்.

எல்லாத்துக்கும் பலம்தான் காரணம்.

பலமிருந்தால் அங்கீகாரம் தானா வரும்.

Posted

அங்க சர்வதேச அங்கீகாரம் கிடைச்ச பாலஸ்தீனத்தைத் தான் இஸ்ரேல் வத்தல் போட்டுக் கொண்டு இருக்கிறான்.

அங்கீகரிச்ச நாடுகள் என்ன வெட்டிப்புடுங்கீனமாம்.

எல்லாத்துக்கும் பலம்தான் காரணம்.

பலமிருந்தால் அங்கீகாரம் தானா வரும்.

அந்தப் பலத்தை நசுக்கக் கூடிய பலமும் சர்வதேசத்திடம் உண்டு. அதற்கு ஏற்ற வகையில் தான் செயற்பட வேண்டும்..! திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். போராட்டம் எனியும் வீணடிக்கப்பட முடியாது. உயிர்ப்பலிகளும் சொத்திழப்புகளும் துன்பங்களும் எனியும் மக்களால் தாக்கிக் கொள்ளப்பட முடியுமோ..??! :idea:

Posted

அந்தப் பலத்தை நசுக்கக் கூடிய பலமும் சர்வதேசத்திடம் உண்டு. அதற்கு ஏற்ற வகையில் தான் செயற்பட வேண்டும்..! திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். போராட்டம் எனியும் வீணடிக்கப்பட முடியாது. உயிர்ப்பலிகளும் சொத்திழப்புகளும் துன்பங்களும் எனியும் மக்களால் தாக்கிக் கொள்ளப்பட முடியுமோ..??! :idea:

அப்ப இப்ப புலிகள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுறீர் ? உதை எதினை தரம் கேட்டாச்சு ? பதிலைத் தான் காணன்?

Posted

புலிகளுக்கு ஆலோசனை வழங்க ஆக்கள் இருக்கினம். மக்கள் பக்கம் அவைட நிலையைப் பேசுங்கோ..பயனா இருக்கும்..!

இப்ப ஐ.நாப் படை வாறது நல்லமோ கூடாதோ தமிழ் மக்களுக்கு. அது மக்களைப் பாதுகாக்குமோ.. அவர்களின் அரசியல் அபிலாசைக்களைப் பெற உதவுமோ..! கடந்த கால உலக அனுபவங்கள் கற்றுத் தருவதென்ன...அதைப் பற்றிக் கதையுங்கோ...நல்லம்..மக்களுக்கு

.! :idea: :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலிகளுக்கு ஆலோசனை வழங்க ஆக்கள் இருக்கினம். மக்கள் பக்கம் அவைட நிலையைப் பேசுங்கோ..பயனா இருக்கும்..!

இப்ப ஐ.நாப் படை வாறது நல்லமோ கூடாதோ தமிழ் மக்களுக்கு. அது மக்களைப் பாதுகாக்குமோ.. அவர்களின் அரசியல் அபிலாசைக்களைப் பெற உதவுமோ..! கடந்த கால உலக அனுபவங்கள் கற்றுத் தருவதென்ன...அதைப் பற்றிக் கதையுங்கோ...நல்லம்..மக்களுக்கு

.! :idea: :P

புலிகள் என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கொடுத்தது நீர் தானே! சில திருத்தங்களைப் புலிகள் செய்யவேண்டும் என்று சொல்லும்போது தனக்கு அத் தகுதி இருக்கின்றது என்று தானே சொல்லியிருக்க வேண்டும். இப்போது மற்றவர்கள் தான் செய்யவேண்டும் என்று சொன்னால் என்னவாம்? :roll: :roll:

Posted

தலைக்க பதில் இருந்தாத் தானே வெளியால வர,

இது பிழை அது பிழை எண்டு சொல்ல எந்த மடையனாலையும் முடியும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்வது தான் கடினமான விடயம்.சும்மா திண்டு போட்டு வேலை வெட்டி இல்லாம இப்படி இருந்து இங்க பிழை அங்க பிழை எண்டுறது முன்னர் தெருவில சந்தியில இருந்து கொண்டு வேலை வெட்டி இல்லாததுகள் செய்தது இப்ப இணயத்தில நடக்குது.ஆனா தோரணையோ எதோ வெட்டிப் புடுங்கிற ஆக்கள் மாதிரி புலிகளுக்கே விமர்சனம், எங்க போய் தலய மோதுறது.உருப்படியா நேரத்தைப்பயன் படுத்துவம் எண்டா இப்படி கண்ணில குத்திறமாதிரி கன்றாவியழப் பாத்துக்கொண்டு சும்மா இருக்க முடியேல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.