Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்டம் சரி, ஆனால் எதற்காக...

Featured Replies

ஈழத் தமிழர் நலனை முன்னிறுத்தி தமிழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் உத்வேகம் அளிக்கிறது. இப்படி ஒரு போராட்டச் சூழலை தமிழகம் சந்தித்து எவ்வளவு காலம் இருக்கும்? அரசியல் ஒரு சாக்கடை; அது நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி, பொத்திப் பொத்தி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறையிடமிருந்து வெளிப்படும் இந்தத் தார்மிகக் கோபமும்  தன்னெழுச்சியும் அது வெளிப்படும் அறவழியும் கொண்டாடப்பட வேண்டியவை.

 

ஆனால், ஒரு போராட்டம் என்பது இவ்வளவு மட்டும்தானா? முக்கியமாக, இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டம் அடையப்போகும் இலக்கு என்ன?

 

நாம் வாழும் காலத்தின் தன்னிகரற்ற போராளியான இரோம் ஷர்மிளா ஒரு போராட்டத்துக்கான தேவையாகக் குறிப்பிடுவது இவை: ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை... தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு.

 

மேலும் ஒரு விஷயத்தையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கள யதார்த்தத்தின் அடிப்படையிலான சித்தாந்தம்!

 

கடந்த இரு ஆண்டுகளில் உலகம் சந்தித்த சில முக்கியமான போராட்டங்களையும் அவற்றின் இன்றைய விளைவுகளையும் எண்ணிப் பாருங்கள்.

 

துனிஷியாவில் ஜைனுல் ஆபிதீன் பென் அலி; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்;   லிபியாவின் மம்மர் கடாபி ஆகியோரை எதிர்த்து நடந்த போராட்டங்களை நாம் எவ்வளவோ உத்வேகத்தோடு பார்த்தோம்.

 

இன்றைக்கு அங்கு நடப்பது என்ன? அண்ணா ஹசாரேவுக்குக் கூடிய கூட்டம் இப்போது எங்கே போனது? ஹியூகோ சாவேஸின் மரணத்துக்குப் பின் வெனிசுலாவின் எதிர்காலம் என்னவாகும்?

 

இவை எல்லாம் உணர்த்தக்கூடிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. எதிர்ப்பும் தன்னெழுச்சியும் தனிநபர் ஆளுமையும் மட்டுமே ஒரு போராட்டத்தின் இலக்கை அடையப் போதுமானவை அல்ல என்பதுதான் அது. போராட்டம் தனது இலக்கை எட்ட சித்தாந்தம் வேண்டும். அதிலும், கள யதார்த்த அடிப்படையிலான சித்தாந்தம் வேண்டும்.

 

 தமிழகத்தில் மாணவர்கள் மகத்தான தன்னெழுச்சியுடன் போராடுகிறார்கள், சரி. இந்தப் போராட்டத்தின் தலையாய கோரிக்கைகள் என்னென்ன?

 

1. இலங்கை நடத்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்ச தண்டிக்கப்பட வேண்டும். இதற்கான சர்வதேச விசாரணை நடத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

2. ஈழத் தமிழ் மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தனித்தமிழீழம் வேண்டும்.

  தமிழகத்துக்குத் தனி வெளியுறவுத் துறை வேண்டும் என்பது உள்பட இன்னும் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் இருக்கின்றன.

 

  இவை எல்லாம் யாரை நோக்கி விடுக்கப்படும் கோரிக்கைகள் தெரியுமா? இந்திய அரசை நோக்கி. அதாவது, எந்த அரசு ஈழப் போரைப் பின்னின்று இயக்கியது என்று இவர்களால்  குற்றம்சாட்டப்படுகிறதோ, அந்த அரசை நோக்கி!

 

சர்வதேச விசாரணை என்று நாம் யாரை மனதில் வைத்துக் கேட்கிறோம்? அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளை. அதாவது, எந்த நாடுகள் எல்லாம் ஈழப் படுகொலையின் பின்னணிச் சதியில் பங்கு வகித்தனவோ, அந்த நாடுகள் விசாரணை நடத்தி, நீதி வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

 

எனில், நம்முடைய கோரிக்கைகள் எந்த அளவுக்குக் கள யதார்த்தத்துடன் பொருந்துபவை?

 

 

இவை எல்லாம் எந்த அளவுக்கு ஈழத்தில் வாழும் தமிழர்களின் இன்றைய பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டவை?

 

போரில் உறவுகளையும் வாழ்வாதாரத்தையும் பறிகொடுத்துவிட்ட நிலையில், மறுவாழ்வுக்கென உருப்படியாக எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்காத சூழலில், வேலைவாய்ப்பின்மையால் சூழும் வறுமைதான் ஈழத் தமிழர்களின் இன்றைய தலையாயப்   பிரச்னை. போருக்குப் பின்னரும் வீதிக்கு வீதி நிற்கும் ராணுவமும், திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய சிங்களமயமாக்கமும்தான் அவர்கள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரும் அரசியல் நெருக்கடிகள். ஈழத் தமிழர்கள் நலனில் நாம் உண்மையாகவே அக்கறை காட்டுகிறோம் என்றால், நாம் பணிகளைத் தொடங்க வேண்டிய இடம் இதுதான்.

 

முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.

 

அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

 

நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்திஜி, நேருஜி, நேதாஜி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அகற்றப்பட்டு, போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?

 

ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.

 

சமகாலத்தில், இதற்குச் சரியான உதாரணம், கூடங்குளம் மக்களின் போரட்டம். கூடங்குளப் போராட்டத்தில் பங்கேற்கும் ஒரு பள்ளிச் சிறுமியிடம் கேட்டுப்பாருங்கள்... தான் எதற்காகப் போராடுகிறாள், தன்னுடைய கோரிக்கைகள் என்ன, அவற்றின் சாத்தியம் என்ன, இந்தப் பிரச்னைக்கான தீர்வு என்ன? தான் செல்ல வேண்டிய தொலைவு எவ்வளவு என்கிற ஒவ்வொரு கேள்விக்கும் பதில் வைத்திருப்பாள்.

 

இந்தியா எல்லா அணு உலைகளையும் மூட வேண்டும். உலகம் அணு சக்திக்கு விடை கொடுக்க வேண்டும். இது கூடங்குளம் மக்கள் போராட்டத்தின் கடைசி வரிசையில் இருக்கக்கூடிய கோரிக்கை. அப்படி என்றால், முதல் வரிசையில் இருக்கும் கோரிக்கைகள்  என்ன? கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும்; மூடும் வரை எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்; தற்காப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் - இதுதான் கள யதார்த்த அடிப்படையிலான போராட்டம். இந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகும் சித்தாந்தமும் நீடித்த தன்மையும் சேரும்போதுதான் காலம் அதற்குத் தக்க பதிலைச் சொல்லும்.

 

 இந்தியாவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் ஈழப் போர் ஒரு பெரும் குற்றவுணர்வை உருவாக்கி இருக்கிறது. இயலாமையும் அரசியல் கையாலாகாத்தன்மையும் சேர்த்து உருவாக்கிய குற்றவுணர்வு அது. வெறுமனே ஒழிக கோஷம் போடுவதால் மட்டும் அந்தக் குற்றவுணர்விலிருந்து நாம் வெளிப்பட்டுவிட முடியாது.

 

இன்னும் ஒருபடி மேலே போய், தமிழகம் வரும் சிங்களர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்கள் சூழலை மேலும் நாசப்படுத்தக் கூடியவை.

 

இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்த நேரம். நாசகார ஆயுதங்கள் சூழ பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்தின் பிடியில் சிக்கியிருந்த சூழலில், கொழும்பில் தங்களுடைய இறுதி வான் தாக்குதலை நடத்தினர் விடுதலைப் புலிகள். அல்-கொய்தாவின் நியூயார்க் வான் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் அது.

 

 இலங்கை ராணுவம் சுதாரித்துக்கொண்ட நிலையில், புலிகளின் இரு விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட பெரிய சேதம் இன்றி தோல்வியில் முடிந்தது அந்தத் தாக்குதல்.

 

ஒருவேளை புலிகள் கணக்குப்படி அந்தத் தாக்குதல் வெற்றி பெற்றிருந்தால், அதிகபட்சம் ஐந்நூறு அறுநூறு சிங்களர்கள் செத்திருக்கலாம். ஆனால், பதிலுக்குத் தமிழர்கள் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும்? புலிகளிடம் அன்று வெளிப்பட்ட அதே தவறான ராஜதந்திரம்தான் இன்றைக்குத் தமிழகம் வரும் சிங்களர்களைக் குறிவைத்துத் தாக்குவோரிடமும் வெளிப்படுகிறது.

 

அன்றைக்குப் புலிகளின் மனதை ஆக்கிரமித்தது சாகச மனோபாவம் என்றால், இன்றைக்கு  வன்முறையில் இறங்கும் ஈழ ஆதரவாளர்களை ஆக்கிரமிப்பது கும்பல் மனோபாவம்.

 

  இனவெறிக்கு எதிராக நாம் களம் இறங்குவதாகச் சொல்கிறோம். ஆனால், அதே இனவெறியைத்தான் நாம் வெளிப்படுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்களிடையே பதற்றத்தை உருவாக்குவதோடு மட்டும் இல்லாமல், போருக்குப் பின் மெல்ல இன அடிப்படைவாதப் போட்டியிலிருந்து விலகி, வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கும் இலங்கை அரசியலை மீண்டும் இன அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளவும் இது வழிவகுக்கும்.

 

  இன்னும் இந்தியாவுக்குள்ளேயே நம்முடைய நிலைப்பாட்டை எதிர்க்கும் ஏனைய மாநிலத்தவர்கள் மீது நாம் வெளிப்படுத்தும் ஆத்திரம் ஈழத் தமிழர்களை அன்னியப்படுத்தவே செய்யும். மேலும், காஷ்மீர் பிரச்னைக்காகவோ, மணிப்பூர் பிரச்னைக்காகவோ நம்மில் எத்தனை பேர் போராடியிருக்கிறோம்... கைமாறு எதிர்பார்க்க?

 

ஈழப் போரின் பின்னணி ஒரு சர்வதேச சதி. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா... எந்த ஓர் நாடும் இனி ஒருபோதும் ஈழ விடுதலைக்கு உதவாது.

 

இன்றைக்கு ஈழத் தமிழர்களின் உடனடித் தேவை பொருளாதார மீட்சியும் ராணுவமயமாக்கலிலிருந்து விடுவிப்பும். இலங்கை அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நாம் உணர்த்த வேண்டிய முதல் உண்மை தமிழர்கள் நலனின்றி இலங்கையில் அமைதி சாத்தியம் இல்லை என்பதை.

 

ஈழத் தமிழர்கள் நலன் சார்ந்த நம்முடைய எந்தப் போராட்டமும் இந்தக் கள யதார்த்தச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொண்டே தொடங்க வேண்டும். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்களின் மன ஆறுதலுக்காகவோ, தமிழக அரசியல் கட்சிகளின் குற்றஉணர்வை மறைப்பதற்காகவோ நாம் போராடுவதால், யாருக்கு என்ன பயன்? ஈழத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரமும், நல்வாழ்வும், எதிர்காலமும், இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் மலர இருக்கும் தமிழ் ஈழமும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்!

 

கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

 

http://dinamani.com/editorial_articles/article1513236.ece
.

  • தொடங்கியவர்

சில  பின்னூட்டங்கள்

====================

 

"இந்த கட்டுரையில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் புலிகளின் வான் தாக்குதல் பற்றிய தகவல் முற்றிலும் தவறானது.

 

அவர்களின் நோக்கம் சிங்கள மக்களை கொல்வதாக இருந்திருந்தால் அதை அனுராதபுரத்திலேயே செய்திருக்கலாம்.

 

பலப்படுத்தப்பட்ட கொழும்பில் வந்து தாக்கவேண்டிய தேவை இல்லை. அன்று அவர்கள் இருந்த நிலமையில், இருந்த இரண்டு விமானங்களையும் எதிரி அழிக்க முன்னர் உலகறியும் தாக்குதலில் ஒன்றில் இழக்கவே விரும்பினார்கள். புலிகள் எப்போதுமே சிங்கள மக்களின் மேல் கொலை வெறி கொண்டு அலையவில்லை. அதை செய்ய வேண்டுமெனில் இறுதி யுத்தத்தில் பங்குபற்றிய ஆயிரமாயிரம் தற்கொலை போராளிகளை கொழும்பு மாநகரத்தில் தரையிறக்கி இருக்கலாம்.

 

தற்போதைய தேவை ஈழ மக்களுக்கு போராட ஒரு பின்தளம். அது இலங்கையில் உள்ள நிலைமையில் கிடைக்காது. அவர்களின் முழு சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலைமையில் ஒருவேளை சோற்றுக்கே அவதிப்படும் நிலைமையிலும் சுதந்திர தாகம் இன்னும் அழியவில்லை. அவர்களால் செயயமுடியாததையே வெளிநாட்டுத் தமிழர்கள் செய்கிறார்கள். ஈழத் தமிழருக்கு தேவை பொருளாதார மீட்சி இல்லை. சுதந்திரம்!!. "

 

- பதிவுசெய்தவர் shree

 

 

 

சமஸ் அவர்களின் கட்டுரை போராடும் மாணவர்களின் வேகத்தை குறைப்பதற்கான வேலை.

 

அப்படியே ஈழம் பெறுவதற்கான ''அமைதி அரசியல்'' போராட்ட திட்டத்தையும், வழிமுறைகளையும் சொன்னால் தமிழர்கள் பின்பற்ற ஏதுவாக இருக்கும்.

 

ஈழத்தில் ஒரு லட்சத்திற்கு மேல் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஒருவரி செய்தியாக வெளியிட்டுவிட்டு, டில்லியில் ஒரு பெண் வல்லுறவு கொலை செய்யப்பட்டதை பக்கம் பக்கமாக எழதி உணர்வை தூண்டி மாணவர்களை கிளர்ந்தெழச் செய்த ஊடகியலார்கள் நிறைந்த நாடு நம்நாடு ! பச்சிளங் குழந்தைகளை கொன்றிருக்கிறார்கள், பெண்களையும் ஆண்களையும் ஆடைகளை அகற்றி கொன்றிருக்கிறார்கள். உங்களுக்கு புரிகிறதா ........ சிங்களவர்களின் இனப்பகையின், இனவெறியின் ஆழம்.

 

இங்கு என்ன அசம்பாவிதம் நடந்துவிட்டதென அமைதிபடுத்த, அறிவுரை சொல்ல கிளம்பிவிட்டீர்கள் சமஸ் அவர்களே ! உங்கள் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் பாதிப்புக்குள்ளாகிவிட்டதோ, அலுவலகத்திற்கு செல்லும் பாதையில் கொஞ்சம் தடங்கல் ஏற்பட்டுவிட்டதோ !

 

பதிவுசெய்தவர் இகோ

முதலாவது, அவர்கள் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள், இரண்டாவது ராணுவமயமாக்கலை உடைப்பதற்கான நடவடிக்கைகள், மூன்றாவது சிங்களமயமாக்கலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்... இந்த வரிசையின் கடைசி கட்டத்தில்தான் தமிழீழத்துக்கான நடவடிக்கைகள் அமையலாமே தவிர, முதலாவதாக அல்ல.

அதையும்கூட முன்னெடுப்பது நாமாகவோ, சர்வதேச நாடுகளாகவோ இருக்க முடியாது. ஈழத் தமிழ் மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.

நாம் இப்படி யோசித்துப் பார்ப்போம். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டத்தில் காந்திஜி, நேருஜி, நேதாஜி உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களும் அகற்றப்பட்டு, போராட்டம் முழுமையாக வெள்ளையரால் ஒடுக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அத்தகைய சூழலில், அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ இந்தியச் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இந்தியா சுதந்திரம் அடைவது சாத்தியம்தானா?

ஒரு போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால், எந்த மக்களுக்காக அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதோ, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் அந்தப் போராட்டத்துக்கான நெருக்கடியும் தேவையும் இருக்க வேண்டும். போராட்டத்தின் தேவை - தீர்வு குறித்த தெளிவு அந்த மக்களிடத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். முக்கியமாக, சம்பந்தப்பட்ட மக்களின் கையில் அந்தப் போராட்டம் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அடக்கு முறைகளை கையாண்டுகொண்டு தமிழ் ஈழம் அழிக்கப்பட்டது. இன்று மாணவர்கள் தமிழ் நாட்டில் அடக்குமுறையை மீறி செயல்ப்படுகிறார்கள். இதனால் கவலைப்படும் கட்டுரையாளர், அடக்குமுறை மீறபட்ட தமிழ் நாட்டில் அல்ல, அழிதொழிக்கப்பட்ட முள்ளி வாய்க்காலுக்கு போராட்டம் வரவேண்டும் என்று நாடகமாடுகிறார்.

 

கட்டுரையை எழுதியவரின் நோக்கம் சந்தேகத்திற்கிடமானது. இதை இலங்கையில் எங்காவது பிரசுரித்திருந்தால் வேறு. ஆனால் தமிழ் நாட்டில் நடக்கும் மாணவர் போராட்டத்தை "இந்தியாவில் போராடி தமிழீழம் வந்து சேராது" என்று  தினமணியில் பிரசுரித்திருப்பது சந்தேகத்திற்கிடமானது.

 

மேற்குநாடுகள் தாங்கள் பயங்கரவாததிற்கு எதிராக போராடுகின்றன என்றுதான் நினைத்தன.  ஏன் அப்படி அவர்கள் பிழை விட்டார்கள் என்பதற்கு கதிர்காமர் பொறுப்பு. ஆனால் சந்தர்ப்பத்தை பாவித்து பழிவாங்கல்களை நடத்திமுடித்தது காங்கிரஸ். இதானால் மேற்குநாடுகளின் மனத்தை மாற்றி தமிழர் நீதி கேட்க முடியாது என்பது கட்டுரையின் இட்டுகட்டும் கள்ள நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முகமூடி தான் ..எதற்கோ அடிபோடுகிறர்...மாணவர்களே கவனம் ..500 சிங்களவன்களுக்காக கவலைபட்டு மாண்வர்களின் போராட்ட வேகத்தை குரைக்க முனையும் ஒட்டு அரசியல்வாதி..

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கே  குளப்பம்

 

முதலில் ஒன்றும் வேண்டாம்

அவர்களை  நிம்மதியாக விடுங்கள் என்கிறார்

இறுதியில் என்றொ ஒரு நாள் கிடைக்கஇருக்கும் தமிழீழத்துக்காக உழைப்போம் என்கிறார்

கொஞ்சப்பேர் இப்படி குளப்ப என்றே வெளிக்கட்டிருக்கினம்

பொடியளின் அடியை  எதிர்பார்க்கல போல........

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கே  குளப்பம்

 

முதலில் ஒன்றும் வேண்டாம்

அவர்களை  நிம்மதியாக விடுங்கள் என்கிறார்

இறுதியில் என்றொ ஒரு நாள் கிடைக்கஇருக்கும் தமிழீழத்துக்காக உழைப்போம் என்கிறார்

கொஞ்சப்பேர் இப்படி குளப்ப என்றே வெளிக்கட்டிருக்கினம்

பொடியளின் அடியை  எதிர்பார்க்கல போல........

 

அது தான் எனக்கும் புரியல....
இதுங்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்..இதுங்களுக்கு ஈழ வரலாறு என்றால் என்ன என்று  தெரியாது :rolleyes: ...அவர் கட்டுர எழுத ஆரம்பிச்சு முடிச்சுவைச்ச விதத்தை பார்த்தாலே தெரியும்....அவர் எதர்க்காக இந்த கட்டுரையை இப்ப எழுதினார் என்று....... :D  எல்லாம் மாணவர் போராட்டம்..மாணவர் போராட்டத்தால் மக்கள் தெளிவடைஞ்சிட்டினம் ...ஏதாவது சொல்லி மக்களை குழப்பினா தானே எங்களுக்கு வர வேண்டிய ஊதியம் வந்து சேரும் கோழை அரடியல் கூட்டத்திடம் இருந்து  :wub:  :rolleyes:

மாணவர் போராட்டம் தேவை இல்லாதது போல காட்ட இந்த கட்டுரை...

மாணவர் நல்ல தெளிவாய் தான் இருக்கினம்...இனி இவை இது என்ன இன்னும் எழுதலாம்..ஆனால் மாணவர்களிடம் இப்படியான கட்டுரை எடுபடாது

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் எனக்கும் புரியல....
இதுங்கள் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்..இதுங்களுக்கு ஈழ வரலாறு என்றால் என்ன என்று  தெரியாது :rolleyes: ...அவர் கட்டுர எழுத ஆரம்பிச்சு முடிச்சுவைச்ச விதத்தை பார்த்தாலே தெரியும்....அவர் எதர்க்காக இந்த கட்டுரையை இப்ப எழுதினார் என்று....... :D  எல்லாம் மாணவர் போராட்டம்..மாணவர் போராட்டத்தால் மக்கள் தெளிவடைஞ்சிட்டினம் ...ஏதாவது சொல்லி மக்களை குழப்பினா தானே எங்களுக்கு வர வேண்டிய ஊதியம் வந்து சேரும் கோழை அரடியல் கூட்டத்திடம் இருந்து  :wub:  :rolleyes:

மாணவர் போராட்டம் தேவை இல்லாதது போல காட்ட இந்த கட்டுரை...

மாணவர் நல்ல தெளிவாய் தான் இருக்கினம்...இனி இவை இது என்ன இன்னும் எழுதலாம்..ஆனால் மாணவர்களிடம் இப்படியான கட்டுரை எடுபடாது

 

கொஞ்ச நாளாக படுத்த இடத்திலேயே அசையாமல் நல்ல நித்திரை கொள்கிறீர்களப்பா

என எனது மனைவி  கேட்டாள்

 

யோசித்துப்பார்த்தேன்

எனது கன நாளைய கனவு ஒன்று (தமிழகம் எம்மொடு இருக்கணும்) பலித்தது போல்

எங்களுக்கு ஒரு பெரும் பக்கபலம் கிடைத்தது போல்

அதிலும் பார்த்த படங்களில் பெரியவர்கள் மாணவர்கள் சிறு குழந்தைகள் என்று எல்லோருமே  அணிவகுத்து நிற்பதை பார்த்ததிலிருந்து துன்பங்கள் விலகும் காலம்  வெகுதூரமில்லை என்று எனது மனது சொல்கிறது.

(அத்தனை உறவுகளுக்கும் சிறுவர்களிலிருந்து பெரியவர்கள் வரை  எமது வரலாற்றை ஊட்டிய  தம்பிகளுக்கு என்னவென்று நன்றி  சொல்வேன்)

  • கருத்துக்கள உறவுகள்

தினமணி பத்திரிக்கை நடாத்தப்படுவது Indian express குழுமத்தால் இவர்களிடம் இருந்து வேற என்னத்த எதிர் பாக்க முடியும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.