Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைப்போம் -மாணவர் போராட்டக் குழு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள்.

 

இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்” என்றார்.

 

இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால், மாணவர்கள் தாக்குத நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டது.

 

இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள், வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சி பேனர்களை கழற்றி, அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=3715

  • கருத்துக்கள உறவுகள்

இது நான் சில வாரங்களுக்கு முன் பதிந்தது, 07 March 2013 - 09:12 am இந்தியா ஈழத்தமிழருக்கு எதிரான தனது வக்கிர அணுகுமுறையை மாற்றியமைக்காதபட்சத்தில் எமக்கு ஆயுத போராட்டத்தில் அடுத்தமுறை என்று ஒன்று இருந்தால் அந்தப் பயணம் இந்தியாவில் தான் ஆரம்பமாகும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் போராட்டக்குழு இப்படி கண்டபடி பேசுவதை தவிர்க்க வேண்டும்.....

பலர் கண்கொத்தி பாம்பாக மாணவர்கள் எப்பொழுது இப்பிடி பேசுவார்கள் போராட்டத்தை தவறாக பிரச்சாரம் செய்யலாம் என்று பாத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.....

இல்லது இது மாணவர்களின் போராட்டத்தை கெடுக்க நினைக்கும் சிலரின் பேச்சாக இருக்கலாம்

இப்பிடியான பேச்சுக்களை தவறாக பிரச்சாரம் செய்வதற்கு என்றே பல ஊடகங்களும் பல கட்சிகளும் களத்தில் இருக்கின்றன......

ஆகவே மாணவர்களே உங்கள் உணர்ச்சிக்கு மதிப்பளிக்கும் அதே நேரம் ........ உங்கள் பேச்சுக்கள் ஒட்டுமொத்த மாணவர் போராட்டமும் சிதையாத வண்ணம் பாத்துக்கொளுங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

 

சுண்டல் நீங்கள் நித்தா கொன்டது கானும்  இந்தக் காணொளிய ஒருக்கா பாரு மச்சி...மாணவர்கள் ஆரம்பம் தொட்டு சொல்லிக்கிட்டு வாராங்க...மத்திய அரசு எங்கள் முதுகில் குத்த வெளிகிட்டா..தமிழ் நாடு புள்ளா இந்திய தேசிய கொடியை எரித்து புலிக் கொடியை ஏத்துவோம் என்று.....இந்தியா என்ர நாட்டில் அகிம்சை வழியில் போராடி ஒன்ரையும் அடைய முடியாது....சரி இது மாணவர் காலம்..பொறுத்து இருந்து பாப்போம் என்ன நடக்குது என்று

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்..

அவர்கள் தங்கள் உணர்வின்பால் நின்று செயல்படுகிறவர்கள்.. எந்தக்கட்சியும் உள்ளே வராதீர்கள் என்று அவர்கள் சொன்னதன் காரணமும் இதுதான்.. இல்லாவிட்டால் இன்று சில கட்சிகளுக்கு சங்கடம் ஏற்பட்டிருக்கும்.. அவ்வாறு சங்கடம் ஏற்பட்டால் போராட்டம் முடிவுக்கு வரும்..

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் இயக்கத்த தமிழ் நாட்டில் தொடக்கி என்ற பேச்சுக்கள் எல்லாம் மாநில ஆட்சியாளர்களை சங்கடத்துக்குள்லாக்கும் செயல் இபிடியான பேச்சுக்கள் பலரை இந்த போராட்டத்தில் இருந்து ஒதுங்க வைக்கும் .....

அம்மா ஓரளவுக்கு தான் பொறுமையா இருப்பா ..... இப்பிடியான பேச்சுக்கள் எல்லை மீறி போகின்ற பொழுது அம்மா அடக்க வெளிகிட்டா அம்புட்டு தான்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த போராட்டம் அம்மாவின் மறைமுக ஆசிர்வாதத்தோடு தான் நடை பெறுகின்றது என்பது தமிழ் நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்....

அதே வேலை பாரத பிரமராக அம்மா அவர்கள் கனவு கண்டு கொண்டிருப்பதும் தெரியும்.....

ஆகவே தனது அரசியல் வாழ்வுக்கு .... மாணவர்களின் இப்பிடியான பேச்சுக்கள் தடையாக இருக்கும் என்று அம்மா கருதினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்பதனை மறுப்பதற்கும் இல்லை

ஆகவே தேவை ராஜதந்திரம்.....

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை புலிகள் இயக்கத்த தமிழ் நாட்டில் தொடக்கி என்ற பேச்சுக்கள் எல்லாம் மாநில ஆட்சியாளர்களை சங்கடத்துக்குள்லாக்கும் செயல் இபிடியான பேச்சுக்கள் பலரை இந்த போராட்டத்தில் இருந்து ஒதுங்க வைக்கும் .....

அம்மா ஓரளவுக்கு தான் பொறுமையா இருப்பா ..... இப்பிடியான பேச்சுக்கள் எல்லை மீறி போகின்ற பொழுது அம்மா அடக்க வெளிகிட்டா அம்புட்டு தான்

புலிக் கொடி பிடிக்க கூடாது தலைவர் படம் வைச்சு இருக்க கூடாது...மாணவர பாத்தியா புலிக் கொடி பிடிச்சாங்கள்...தலைவர் படத்தையும் வைச்சு இருந்தாங்கள்.....எந்த‌ கொம்பன் ஆவது வந்து சொன்னானா மாணவர் புலிக் கொடி பிடிக்கேக நீங்கள் அந்தக் கொடியை பிடிக்க கூடாது என்று.....சுண்டல் இது விஞ்ஞான உலகம்... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போராட்டத்தை பார்த்தபோது

எல்லாத்தமிழர் மனதிலும் ஒன்றே  இருப்பது தெரிந்தது

அது புலி

பிரபாகரன்

தமிழீழம்

 

புலிகளின் தியாகத்தீ  எல்லோரிலும் பரவியுள்ளதை பார்க்கமுடிகிறது

 

இந்த தீ பாதுகாக்கப்படணும்

அதுவே அடுத்த கட்டத்துக்கு படிக்கல்லாக அமையும்

 

எல்லாம் சரியாகவே பயணிப்பது தெரிகிறது

பலமே எதையும் தீர்மானிக்கிறது

மாணவர் பலத்தை உணர்ந்தே எல்லோரும் அடக்கி  வாசிக்கிறார்கள்

ஆனாலும் சுண்டலின் ஆதங்கம் சரியானதே

எவரையும் வம்புக்கிழுக்காதிருப்பதும் ராஐதந்திரமே

சுண்டலுடைய கருத்தில் நானும் உடன் படுகிறேன் .மாணவர்கள் விவேகத்துடன் செயற்படவேண்டும் .காலச்சக்கரம் நீதியின் பக்கம் நிட்ச்சயம் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் விசு அண்ணா எனது ஆதங்கமும் அதுவே.......

பெரிய மனிதர் பெரிய மனிதர் தான்....

பல போராட்டங்களை ஒழுங்கமைத்தவர்..... வாழும் நாட்டில் தமிழர்களால் மதிக்கப்படுகின்ற மிக பெரிய ஒரு அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் உங்களுக்கு இதில் இருக்கும் சிக்கல் புரிந்திருக்கின்றது......

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த போராட்டம் அம்மாவின் மறைமுக ஆசிர்வாதத்தோடு தான் நடை பெறுகின்றது என்பது தமிழ் நாட்டு அரசியலை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும்....

அதே வேலை பாரத பிரமராக அம்மா அவர்கள் கனவு கண்டு கொண்டிருப்பதும் தெரியும்.....

ஆகவே தனது அரசியல் வாழ்வுக்கு .... மாணவர்களின் இப்பிடியான பேச்சுக்கள் தடையாக இருக்கும் என்று அம்மா கருதினால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் என்பதனை மறுப்பதற்கும் இல்லை

ஆகவே தேவை ராஜதந்திரம்.....

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=NxqwcNU-wWE

இந்தக் காணொளியை பார் மச்சி...அந்த மாணவ போராட்டத்தை நடத்தும் திவியா என்ன சொல்லுறா என்று...எனக்கு உன் கருத்துடன் உடன் பாடு இல்லை மச்சி....

  • கருத்துக்கள உறவுகள்

அது உன்னோட சுதந்திரம் மச்சி என்றும் என்னுடைய கருத்தை மற்றவர் மீது திணித்தது இல்லை மச்சி.... அதே நேரம் நீங்கள் என்னுடைய கருத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமும் இல்லை....

ஆனாலும் என்னத்து கருத்தை தெளிவான முறையில் சொல்வதற்கான முழு உரிமையும் சுதந்திரமும் எனக்கு இருக்கு என்பதனையும் மறப்பதற்கு இல்லை....:D

  • கருத்துக்கள உறவுகள்

அது உன்னோட சுதந்திரம் மச்சி என்றும் என்னுடைய கருத்தை மற்றவர் மீது திணித்தது இல்லை மச்சி.... அதே நேரம் நீங்கள் என்னுடைய கருத்தை ஏற்க வேண்டும் என்று அவசியமும் இல்லை....

ஆனாலும் என்னத்து கருத்தை தெளிவான முறையில் சொல்வதற்கான முழு உரிமையும் சுதந்திரமும் எனக்கு இருக்கு என்பதனையும் மறப்பதற்கு இல்லை.... :D

 

கண்டிப்பாய் தோழா...
 
அந்தக் காணொளியை நீ பார்த்து இருந்தா இப்படி எழுத வாய்ப்பு இல்லை...அது தான் சொன்னான் சரி விடு மச்சி.... :D
  • கருத்துக்கள உறவுகள்

பையன்

உங்களது கருத்துத்தான் எனதும் ஏன் சுண்டலினதும்

ஆனால் சுண்டல் சொல்வது  இன்னும் கொஞ்சம்;பலம் பெறும்வரை மௌனித்த ஆயுதங்கள் பற்றி  பேசுவதைத்தவிர்க்கலாமே என்பது தான்.

அதையும் நாம் உள்வாங்கலாமே.

 

பிரான்சுக்கு சீமான் வந்திருந்தபோது சொன்னது

தலைவரை ஏன் சில தமிழகத்தலைவர்கள் வெறுக்கிறார்கள் தெரியுமா?

பிரபாகரனைத்தலைவராக ஏற்றுக்கொண்டால் தாங்கள் செல்லாக்காசாகிவிடுவோம் என்பதால் தான் என்று.

(இதில் கருணாநிதியும்  அம்மாவும் அடக்கம் என்பதை மறந்துவிடக்கூடாது)

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் காலங்காலமாக அடிமையாக இருந்த கருத்தியலின் அடிப்படையில் சிந்திக்கிறோம்.. அவர்கள் அப்படி வளரவில்லைதானே..

காற்றுக்கென்ன வேலி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பலமில்லாமல் எதையும் சாதிப்பது கடினம். ஏன் முடியாது என்றே வைத்துக்கொள்ளலாம். எனவே மாணவர்களின் அடுத்த படி அவர்களுக்கு என்று சொந்தமான ஒரு அரசியல் கட்சி"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.