Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டியதா?

Featured Replies

தமிழகத்தில் மாணவர்களின் போராட்டத்தை புதிய தலைமுறை தூண்டியதா?

 


சிபிஐ விசாரணை என்று அச்சுறுத்திய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...

 

 


27-03-2013 அன்று நேர்படப்பேசு நிகழ்ச்சியில் நடந்தது என்ன...?


காணொளி:   http://puthiyathalaimurai.tv/evks-elangovan-threats-to-puthiyathalaimurai-tv

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன்.. எல்லாம் மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் தைரியம்தான்..! அதை இல்லாமல் செய்யலாம் என்றால் கலைஞர் வெளியில் நின்று ஆதரவு கொடுப்பாராம்...

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்துக்கான காரணங்களை, ஆராயிறதை விட்டிட்டுச், சம்பலை உலக்கை இடித்ததா, அல்லது அம்மி அரைத்ததா என்று ஆராயிறதே ஹிந்திக் காரனுக்கும், அதுகளின்ர வால்பிடியளுக்கும் வேலையாய்ப் போச்சு! :o

காங்கிரஸ் தனது அடூளியங்களை மறைத்துவிட்டு  தனது பங்கை 2ஜி இல் மறைத்துவிட்டு கருணாநிதி கனி மொழியை அடக்கி வெருட்டிவிட்டு ஈழத்தமிழரை அழித்து, கருணாநிதி கூட்டை முறித்த பின் ஸ்ரலின் வீட்டுக்கு CBI யை அனுப்பி மிரட்டி கருணாநிதியை தொடந்து வெளியே இருந்து ஆதரவு தரவைத்து, அழகிரியை தொடர்ந்து அவரின் அடாவடிகளுக்குகாக மிரட்டி காங்கிரசின் அடிமையாக வைத்துக்கொள்ளும் அதே உத்தியை புதிய தலைமுறை மீதும் காட்டப்பார்க்கிறது.  

 

கங்கிரஸ் பதவி இழந்த பின்னர் இளங்கோவனுக்கும் CBI யிற்கும் இருக்கும் இந்த முறையற்ற தொடர்பு விசாரிக்கப்படவேண்டும். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

இந்தியாவில் சனநாயகம்,சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இளங்கோவனின் இந்த மிரட்டல் ஓர் உதாரணம்.

தமிழ்நாட்டில் ஒரு தொலைக்காட்சி பக்கச்சார்பின்றி மக்கள் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து நடந்துகொண்டால் அவர்கள்

'விடுதலைப்புலி ஆதரவாளர்கள்' என்று பெயர்சூட்டிப் பயமுறுத்தல்; இப்படித்தான் அங்கு எல்லாம்  இருக்கிறது.

 

  CBI என்பது   Central Bureau of Investigationஎன்பதின் சுருக்கம்.  அது இப்போது Congress Bureau of Investigation ஆகிவிட்டது 

என்பது முன்பே கூறப்பட்ட விடயந்தான். அதனை மெய்ப்பிப்பதாக இவரின் வெளிப்படையான மிரட்டல் அமைகிறது; அதனை உறுதி

செய்கிறது.  இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயகநாடு என்று பெருமை வேறு பேசுகிறார்கள்.

 

இந்தியா என்பது பல தேசிய இனங்களை வலுக்கட்டாயமாக அடைத்துவைத்திருக்கும் சிறைக்கூடம். அதற்காகவே அங்கு பல விசேடமான

ஒடுக்குமுறைச்சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன. அதனாலேயே அரவிந்த் வர்மா [ Arvind Verma ] என்ற இந்தியஆய்வாளர், " A staggering number

of laws that sanction the use of coercive powers have been enacted in India " என்கிறார்.

 

நான் இவற்றைக் குறிப்பிடுவதின் காரணம் இந்தியாவின் ஊழல் நிறைந்த காவல்துறை, உளவுத்துறை போன்றவை ஏவி விடப்பட்டால்

புதிய தலைமுறை தொலைக்காட்சி மட்டுமல்லாமல் மாணவர் போராட்டம், அதிகாரவர்க்கத்தை எதிர்ப்போர் எல்லோரும் தாக்கப்படலாம்;

ஒடுக்கப்படலாம். எனவே நாம் எல்லோரும் மிகமிக விழிப்பாக இருக்கவேண்டும்.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=119895&hl=

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் தனது அடூளியங்களை மறைத்துவிட்டு  தனது பங்கை 2ஜி இல் மறைத்துவிட்டு கருணாநிதி கனி மொழியை அடக்கி வெருட்டிவிட்டு ஈழத்தமிழரை அழித்து, கருணாநிதி கூட்டை முறித்த பின் ஸ்ரலின் வீட்டுக்கு CBI யை அனுப்பி மிரட்டி கருணாநிதியை தொடந்து வெளியே இருந்து ஆதரவு தரவைத்து, அழகிரியை தொடர்ந்தி அவரின் அடாவடிகளுக்குகாக மிரட்டி கங்கிரசின் அடிமையாக வைத்துக்கொள்ளும் அதே உத்தியை புதிய தலைமுறை மூதும் காட்டப்பார்க்கிறது.  

 

கங்கிரஸ் பதவி இழந்த பின்னர் இளங்கோவனுக்கும் CBI யிற்கும் இருக்கும் இந்த முறையற்ற தொடர்பு விசாரிக்கப்படவேண்டும். 

 

ம‌ல்லையூரான்.... உங்க‌ள் க‌ருத்து, ச‌ரியாக‌..... இருந்தாலும், எழுத்தில் க‌ன‌ பிழை உள்ள‌து.

என்ன‌... ந‌ட‌ந்த‌து?

 

ஒரு நியாயமான ஊடகத்துறை என்பது பக்கம் சாராமல் யதார்த்தங்களை சகல மக்களுக்கும் கொண்டுசெல்வது.

 

தமிழகத்தில் இதுவரை அவ்வாறு ஒரு ஊடகம் இருந்தததில்லை - புதிய தலைமுறை வரும் வரை.

  • தொடங்கியவர்
ஈ.வி.கே.எஸ் மிரட்டலுக்கும் எஸ்.ஆர்.எம் பாரிவேந்தரிடம் சிபிஐ விசாரணைக்கும் என்ன தொடர்பு?
Posted by: Mayura Akilan  / Updated: Thursday, April 4, 2013, 13:56 [iST]
 
 
சென்னை: இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எஸ்.ஆர்.எம். கல்வி
நிறுவனங்களின் நிறுவனருமான பாரிவேந்தர், மருத்துவ படிப்பிற்காக
லட்சக்கணக்கில் நன்கொடை வாங்கினார் என்று குற்றம் சாட்டப்பட்டு சிபிஐ
விசாரணையில் சிக்கியுள்ளார்.

ஈழப் பிரச்சனை பற்றியும், மாணவர்கள் போராட்டம் பற்றியும் புதிய தலைமுறை
நிகழ்ச்சியில் கடந்த மார்ச் 27ம் தேதி 'நேர்பட' நிகழ்ச்சியில்
விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாணவர் போராட்டத்தை புதிய தலைமுறை தொலைக்காட்சி
தூண்டுவதாக குற்றம் சாட்டினார்.

ஈழம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள
வேண்டியிருக்கும் என்றும் அந்த நிகழ்ச்சியிலேயே தெரிவித்துவிட்டு
நிகழ்ச்சியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.


இந்த சம்பவம் நடந்து மறுநாளே சிபிஐ வளையத்திற்குள் வந்தார் புதிய தலைமுறை
குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர். அவருக்கும், அவரது மகன் ரவி
பச்சமுத்துவிற்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. மருத்துவ கல்லூரி படிப்பிற்கு
நன்கொடை வாங்கிய வழக்கு தொடர்பாக இந்த விசாரணையாம்.

சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற
ஜம்பாலா என்பவரின் வீட்டில் சில நாட்களுக்கு முன்னர் சிபிஐ ரெய்டு
நடத்தியது. அந்த சோதனையில் ஜம்பாலாவின் வரவு செலவு டைரியில், தனது மகள்
மானஷாவை மருத்துவப் படிப்பில் சேர்ப்பதற்கு நன்கொடை கொடுத்த வகையில் 40
லட்சம் என்று ஒரு துண்டுச் சீட்டில் குறிப்பிட்டிருந்தாராம்.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்துள்ளார் மானஷா.
இதையடுத்து, பாரிவேந்தரும் எஸ்.ஆர்.எம். கல்லூரியின் நிர்வாகப் பொறுப்பில்
இருக்கும் அவருடைய மகன் ரவி பச்சமுத்துவும் சிபிஐ வளையத்திற்குள் வந்தனர்.
இதையடுத்து முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவையும்
தாக்கல் செய்தனர்.

பாரிவேந்தரின் மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கும் அவரது மகனுக்கும்
முன்ஜாமின் வழங்கியது. அதே நேரத்தில் சிபிஐ விசாரணைக்குக் கண்டிப்பாக
நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டது.

இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ
அலுவலகத்துக்கு பாரிவேந்தரும் அவரது மகன் ரவி பச்சமுத்துவும் காலை 9.20
மணிக்கு வந்தனர். மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணை நடைபெற்றது. மாணவர்
சேர்க்கையின் போது வசூலிக்கும் நன்கொடைகள் பற்றிதான் கேள்விகள்
கேட்கப்பட்டதாம்.

ஆனால், ஒரு டைரியில் எழுதி வைக்கப்பட்ட ஒரு வெறும் குறிப்பை வைத்துக்
கொண்டு சிபிஐ விசாரணைக்கு வந்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறிய மறுநாளே திமுகவினர் சி.பி.ஐ
சோதனையை சந்தித்தனர். அதேபோல் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசிவிட்டுச் சென்ற
மறுநாளே சி.பி.ஐ சம்மன் அனுப்பியதால்தான் இதனை அரசியல் கண்ணோட்டத்தோடு
பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/04/tamilnadu-is-evks-elangovan-behind-cbi-probe-into-srm-172812.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.