Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கோடி பெறுமதியான கஜ முத்துக்களுடன் மூவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6(4).JPG
-எம்.இஸட்.சாஜஹான்

ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான உடையதென மதிப்பிடப்பட்டுள்ள 30 கஜமுத்துக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் இருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு, குரணை பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகில் வீதியில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 30 கஜமுத்துக்களையும் இராணுவ கேணல் ஒருவர் பயன்படுத்தும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 30 கஜமுத்துக்களையும் 35 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இராணுவ வாகனத்தில் வந்த போதே பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ், நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவவின் உத்தரவின் பேரில், நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் நுவன் தாரக்க தலைமையிலான குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்ததுடன் கஜமுத்துக்களையும் வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-46-55/62118-2013-03-29-15-22-56.html

  • கருத்துக்கள உறவுகள்

கஜ முத்து என்றால் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜ முத்து என்றால் என்ன?

நான் நினைக்கின்றேன்  யானை தந்தத்தில் இருந்து கிடைக்கும் முத்து என்று ...

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் யானை தந்தத்தில் இருந்து கிடைக்கும் முத்து என்று ...

தந்தத்திலிருந்து முத்தின் வடிவில் செய்யப்பட்ட ஒன்றா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தந்தத்திலிருந்து முத்தின் வடிவில் செய்யப்பட்ட ஒன்றா?

அதுபற்றிய மேலதிக விபரம் தெரியாது இசைக்கலைஞன்  :)

  • கருத்துக்கள உறவுகள்

கஜ முத்து எனப்படுவது கால்சியம் அதிகமாவதால் உருவாகும் தந்தத்தின் பகுதி ஆனால் அதை வைத்து பன்ற அழும்பு சொல்லி மாளாது.

கஜ முத்து என்றால் என்ன?

அது ஒரு சிங்கள முத்தாக்கும்..  :D

 

அது தெரிஞ்சு என்னதான் செய்யப்போறியள்?  :lol:

கஜமுத்து என்பது யானையின் தந்தத்டில் இருந்து கிடைக்கும் முத்து.. ஆயிரம் யானையில் ஒரு யானையில் தான் முத்துக் கிடைக்கும்.. இம் முத்தில் 3-4 வகையுண்டு... இவற்றில் மென்சிவப்பு நிறமுடையதே மதிப்பு மிக்கது.. இம் முத்தை பாலில் போட்டு சிறிது நேர்ம் 30 நிமிடம் மாதிரி பின் குடித்தால் ..அந்த விசயத்துக்கு நல்லம் என அரேபியர்கள் நம்புகின்றனர்... அத்துடன் இன்னும் மட்டக்களப்பு , திருக்கோயில் பகுதிகளில் மக்கள் பலரின் சாமி அறைக்குள் இதை வைத்துள்ளனர்.. இதை அவர்கள் அதிஸ்டமான ஒரு பொருளாக கருதுகின்றனர்..

 

கொசுறு : என்னட்டயும் இருக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

நாகமாணிக்கம் கதை போல இதுவும் எல்லாமே முட்டாள்தனமாணவை.

  • கருத்துக்கள உறவுகள்

நாகமாணிக்கம் கதை போல இதுவும் எல்லாமே முட்டாள்தனமாணவை.

 

புர்மால், இப்படி ஒருவிதமான முத்துவகை ஒன்று உள்ளது தான்,

 

படங்கள் இணைத்துள்ளேன்.

 

இந்தப் படத்தில் உள்ளவை, தீட்டப்படுவதற்கு முன்னர் எடுத்த படம்!

 

elephant_tusk_u.JPG

 

இந்தப் படத்தில் உள்ளவை, தீட்டப்பட்ட பின்னர்!

 

l_pearl-yellow-jade-elephant-pendant-nec

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.