Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!

Featured Replies

544622_236500479824224_1347859552_n.jpg

28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை. தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”. அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.

இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.

மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.

அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!

இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள். தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஓட்டுச்சில்லில் “நந்தை கீரன்” என்று எழுதப்பட்டிருக்கிறதாம்! இப்போது நாம் பேசிப்பழகி எழுதி வரும் தமிழ் எழுத்து வடிவில் அல்ல! மிகப் பழங்காலத்தில் தமிழ் எழுதப்பட்ட எழுத்து வடிவில்! அதை வல்லுனர்கள் தமிழ்-பிராமி என்று அழைக்கிறார்கள்.

தமிழ் என்பது சரி. அதென்ன பிராமி? இதில் ஒரு வரலாற்று மோசடி ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஒருவேளை, பிராமி என்பது சமஸ்கிருத எழுத்தா? சமஸ்கிருதம் எப்போதுமே எழுதப்பட்டதே இல்லையே! அதற்குத்தான் எழுத்து வடிவமே கிடையாதே! எல்லாம் வாய்மொழியோடு சரி! அதனால்தானே வடவேதத்திற்குக் கூட எழுதாக்கிளவி என்று கூறினார்கள்.

பழங்காலத்தில் சமஸ்கிருதத்தைப் பேசியவர்கள் அதை ஏன் எழுதவில்லை? சிந்திக்க வேண்டிய விசயம்! உலகிலேயே முதன்முதலில் தான் பேசும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவன் தமிழன்! அதைக் கல்லிலும், ஓட்டிலும், ஓலையிலும் எழுதிப்பார்த்தவன் தமிழன்!

சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவமே கிடையாது. இன்று நாம் சமஸ்கிருதத்தை தேவநாகரி என்றும், கிரந்தம் என்றும் இரண்டு இரவல் வாங்கப்பட்ட எழுத்து வடிவில் எழுதிப்படிக்கிறோம். இது இரவல் வாங்கியது! சமஸ்கிருதத்திற்குச் சொந்தமில்லாதது.

கி.பி.5 ஆம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்திற்குத் தமிழ்நாட்டில் கிரந்தம் என்ற தமிழ் எழுத்துக்கள் உள்ளடக்கிய எழுத்து வடிவம் தமிழ் சிவாச்சாரியார்களால் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அதனால் அதற்கு பல்லவ கிரந்தம் என்றே பெயர்.

அதற்குப்பின் பல நூற்றாண்டுகட்குப்பின் இந்தி மொழி உருவாகிய பின் வடநாட்டினர் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவத்தை இந்தி வடிவில் கொடுத்ததுதான் தேவநாகரி.

அப்படியானால் மிகப் பழங்காலத்தில் சமஸ்கிருதம் உருவான போது ஏன் எழுத்து வடிவம் அதற்கு இல்லை? ஒரு நொண்டிச் சமாதானம் அதற்குச் சொன்னார்கள் – எழுதினால் அதற்கு ஆற்றல் போய்விடுமாம்!

இது இப்படி இருக்க மேற்கண்ட தமிழ் எழுத்துக்கள் கிறித்து பிறப்பதற்கு பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே எழுதப்பட்டு வந்திருக்கிறது என்று ஓமன் நாட்டில் கண்டெடுத்த ஓட்டுச் சில்லுகளைப்போல பல சான்றுகள் கிடைத்துக் கொண்டே வருகின்றன. இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

இவ்வாறு முதன் முதலில் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழில் எழுதி வந்திருக்க அதற்கு ஏன் பிராமி என்று ஒரு சமஸ்கிருதப் பெயர் கொடுக்கப்பட வேண்டும்?

(நலன் கருதி இந்த இடத்தில சில வரிகள் நீக்கப்பட்டுள்ளது., இணையத்தில் படித்து தெரிந்துகொள்ளவும்) உண்மையில் பல சமஸ்கிருத புராண நூல்களிலேயே – மொழிகளின் பட்டியல் ஒன்று வருகிறது. அதாவது கி.மு 3-வது நூற்றாண்டிலேயே எழுந்த ‘சமவயங்ககத்தா’ என்ற பிராகிருதத்தில் எழுதப்பட்ட சமண நூல் 18 வகை எழுத்துக்களைக் குறிப்பிடுகிறது.

அவையாவன.
1.பாம்பி
2.யவனானி
3.தோசபுரியா
4.கரோத்தி
5.புக்கரசரியா
6.போகவையா
7.பகாரியா
8.உயமித்ரகரியா
9.அக்கரபுட்டியா
10.தவனானியா
11.கிணிகையா
12.அங்காலிவி
13.கணிதாவிலி
14.காந்தவ்யவிலி
15.ஆடம்சாலிவி
16.மகாசனி
17.தமிழி
18.பொலிம்னி

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்து வடிவப் பட்டியலில் தமிழி இருப்பது காண்க. தமிழ்தானே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவம்? அப்படியானால் அதுதானே பட்டியலில் முதலில் இடம் பிடித்திருக்க வேண்டும்? ஏன் அது 17 ஆவதாகக் காட்டப்பட்டிருக்கிறது? காரணம், இப்பட்டியலை வடநாட்டினர் தயாரித்தனர். எனவே அவர்கள் தென்னாட்டுத் தமிழை இறுதியில் வைத்துவிட்டனர்.

சரி, கி.மு 3-ஆம் நூற்றாண்டிலேயே தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்று கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோம். தமிழின் எழுத்து வடிவம் தமிழி என்பதுதானே சரியாக இருக்கமுடியும்! அதென்ன பிராமி?

மேற்கண்ட அசோகன் காலமான கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் கூறப்பட்ட பட்டியலில் எங்காவது பிராமி என்று ஓர் எழுத்து வடிவம் வந்துள்ளதா?

இல்லையே.!
அப்படியானால் தமிழோடு பிராமி என்று ஒட்டு சேர்த்தவன் வேண்டுமென்றே ஓர் உள்நோக்கத்துடன் ஒட்டு சேர்த்திருக்கிறான்! அந்த உள்நோக்கம் தமிழின் தொன்மையைக் குறைக்க வேண்டும் – மாறாக வடமொழிக்கு முதன்மையை ஏற்ற வேண்டும் என்பதுதான். இது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது..!!

 

நன்றி -
http://arundhtamil.blogspot.ca/2012/12/124.html

(ஆன்மிக மாத இதழ், டிசம்பர் 2012 “தெய்வ முரசு” ஆசிரியர் மேசை பகுதியிலிருந்து)

 

Edited by நிழலி
மூலத்தினை சரியாக இடவும். வெறுமனே முகநூல் என்று இடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அருமையான கட்டுரை.

 

யாழில் சில திரிகளில் இரும்பு 10,000 வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

 

சரித்திர காலங்களூக்கு முன்னர் இரும்பு தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கு. ஆனால் ஏற்றுமதி செயப்பட்டது இரும்பு மட்டுமல்ல.  எனவே தமிழகத்திலிருந்து இரும்பு வெளியே போனத்தால் இரும்பை கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் என்று ஆகிவிடாது. நாகரீக மாக இருந்த இனம் அதை கண்டு பிடித்திருக்கவில்லை, அல்லது கண்டு பிடித்திருந்தது என்பது நிறுவப்படவேண்டும்.

 

அப்படி ஒரு குழப்ப விவாதம் அல்ல இங்கே காட்டப்படுவது. அசோகன் காலத்திற்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுத்து வழக்கு இருந்திருக்கு என்று பல சான்றுகள் கூறுகின்றன.  அசோகன் காலத்தில் தான் வடக்கில் எழுத்துக்கள் காண ஆரம்பித்திருக்கு. ஆனால் பிராமி கீபுறு எழுத்துக்கள் என்றும் அது வடக்கிலிருந்து தெற்கே வந்தது என்றும் சிலர் கூறப்பார்க்கிறார்கள்.

 

மத்திய கிழக்கில், எகிப்தில் தெளிவான எழுத்துக்கள் பாவிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் இவற்றை வாசித்துவிட்டார்கள்.  இதனால் தமிழிலிலும் மத்திய கிழக்கின் அடிதொடிதான் இருக்க முடியும் என்றுதான் விவாதிக்கிறார்கள்.  கலந்து சாம்பாராகிபோய்விட்ட இவற்றில் எதையும் நிறுவ முடியாது. உண்மையில் எதுவும் நிறுவப்பட்டுமில்லை.

 

தமிழ் வருடங்கள் வடமொழியில் இருக்கு. இதனால் உண்மையாகப் தமிழில் பாவிக்கப்பட்ட தமிழ் வருடங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

 

அப்படி ஒரு நிலைமையில்தான் இந்த தமிழ் பிராமியும். ஆனால் கட்டுரை சரியான பாதை ஒன்றை திறந்திருக்கிறது. ஆண்டுகளில் சில முன்னர் பின்னர் ஆக வரலாம். ஆனால் தமிழ் எழுத்து முறைக்கு பெயர் தமிழ் பிராமி அல்ல என்பது இலகுவில் நிறுவப்படப்போகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

                     தமிழ்                     மொழிபெயர்ப்பு                     கிரந்தச்சொல்                     கலைச்சொல்                     இலக்கம்                  தேடு
 
தமிழ் எழுத்துக்கள்
தமிழ் மொழி வரலாறு

தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன. பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:

  • சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
  • சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
  • பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
  • மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
  • இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.

 

சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.

எழுத்துமுறை

தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது. வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.

எழுத்துக்களின் வகை

  • உயிர் எழுத்து
  • மெய் எழுத்து
  • எழுத்தோரன்ன குறியீடுகள் (ஆய்தம், குற்றியல் இகரம், குற்றியல் உகரம்)

எழுத்துக்களின் விரிபு

  • ஒவ்வொரு பிறப்பிடமும் (எழுத்து) அவ்விடத்தைச் சார்ந்த பல்வேறு ஒலியம்களை குறிக்கும்.

எழுத்துக்களின் பெருகல்

  • உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்துக்கள்
ஆய்தம் - ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.

ஆய்தம் உயிரின் தன்மைகளையும், மெய்யின் தன்மைகளையும் தேவையெனின் ஏற்க வல்லது.

இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். 

எ.கா:

  • அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
  • இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
ஆய்தம் விசர்க (visarga) எனும் வடமொழி இலக்கணத்தில் இருந்து வேறுபட்டது.

ஒலியம் "F" பிறப்பிடம் "வ்" கொண்டது. தவறாக சிலர் ஒலியம் "F" பிறப்பிடம் "ப்" கொண்டது என்றும், மேலும் மிக மிக தவறாக ஆய்தம் பாவிக்கக் கூடாத இடத்தில் ஆய்தத்தைப் பாவித்து "F=ஃப்" எனும் வழமையை ஓரளவிற்க்கு நிலைநாட்டி விட்டனர். எனவே தவறெனினும் ஃப்=F என்று சமகால பாவனையில் உண்டு. அத்துடன் F=வ், F=ஃவ், F=ஃப் எனும் மூன்று வேறுபட்ட சமகால பாவனைகள் காணப்படுகின்றன.

ஆய்தம் ஓர் சொல்லின் முதல் எழுத்தாக வரும். உ+ம்: ஃகான்

(எனவே ஆய்தம் உயிர் எழுத்துக்களுடனும் மெயெழுத்துக்களுடனும் சேரவல்லது என்பதும் உறுதி.)

(எனவே சில பாவனைகளில் ஆய்தம் அகரமெய்யுடன் சேர்ந்து வருகின்றதா அல்லது மெய்யுடன் சேர்ந்து வருகின்றதா எனும் ஊகம் வரூஉம் இடத்தைக்கொண்டு நிர்ணயிக்கப்படவேண்டும்.) 

ஆய்தம் ஓர் சொல்லின் முற்று எழுத்தாக வரும், உ+ம்: முப்பஃ ¸கியசஃ, போந்துகஃ 

ஆய்தம் ஓர் சொல்லின் இடையிலே ஓர் எழுத்தாக வரும், உ+ம்: அஃறிணை, மிஃதே, சஃது

ஆய்தம் ஈர் எழுத்தாக நீட்ட இசைவது. உ+ம்: க்ஃ, க்ஃஃ, ஃக், ஃஃக், அஃ, ஃஇ, அஃஃ, ஃஃஇ. [ஆயுதத்திற்கு முப்பாற் புள்ளி என்ற பெயரும் உண்டு. தவிரத் தனிநிலை, புள்ளி, நலிபு என்றும் ஆய்தத்தை அழைத்திருக்கிறார்கள்.]

 

மெய்யெழுத்துகள்

தமிழ் அரிச்சுவடியில் க் தொடக்கம் ன் வரையுள்ள 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாக உள்ளன. வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துக்கள் வல்லினத்தையும், மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.

க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

 

உயிர் + மெய் எழுத்துக்களின் இணைவு அட்டவணை + க் கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ ங் ஙா ஙி ஙீ ஙு ஙூ ஙெ ஙே ஙை ஙொ ஙோ ஙௌ ச் சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஞ் ஞா ஞி ஞீ ஞு ஞூ ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞௌ ட் டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டௌ ண் ணா ணி ணீ ணு ணூ ணெ ணே ணை ணொ ணோ ணௌ த் தா தி தீ து தூ தெ தே தை தொ தோ தௌ ந் நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நௌ ப் பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பௌ ம் மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மௌ ய் யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யௌ ர் ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரௌ ல் லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லௌ வ் வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வௌ ழ் ழா ழி ழீ ழு ழூ ழெ ழே ழை ழொ ழோ ழௌ ள் ளா ளி ளீ ளு ளூ ளெ ளே ளை ளொ ளோ ளௌ ற் றா றி றீ று றூ றெ றே றை றொ றோ றௌ ன் னா னி னீ னு னூ னெ னே னை னொ னோ னௌ
தமிழ் இலக்கங்கள்

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.

வேறு குறியீடுகள்

 

http://www.xn--vkc6a6bybjo5gn.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் ப‌ழைய‌ மொழி என்ப‌து ச‌ரி. ஆனால் த‌மிழில் தான் முத‌ன் முத‌ல் எழுத்து வ‌டிவ‌ம் தோன்றிய‌து என்ப‌தை நாங்க‌ள் ஒரு ஆதார‌மும் இல்லாம‌ல் சொல்லிக் கொண்டிருக்க‌ முடியுமோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்று, சொன்னாலே....
ஹிந்திக்காரானுக்கும், அவனது அப்பன் சிங்களவனுக்கும், சிங்களவனின் வால் பிடி ஒட்டுக்குழுக்களுக்களும், வயித்தாலை போகும் போது....
புலிக‌ளைத் த‌விர‌, த‌மிழுக்கு உய‌ரிய‌ இட‌ம் கிடைக்க‌ வாய்ப்பில்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.