Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பும் மு.காங்கிரஸ் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்;ஹாபீஸ் நஸீர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசியல் வேறுபாடுகளை மறந்து, தமிழ்முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பது அவசியமாகும்.

இவ்வாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்ப தாவது:

வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆரம்ப காலம் தொட்டு அண்ணன் தம்பி உற வையே பேணி வந்துள்ளார்.

இரு சமூகத்தினரும் ஒரே மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். அந்த மொழியிலேயே சிந்தித்து, செயற்படுபவர்கள். தமிழர்களுக்காக முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்காக தமிழர்களும் உதவியும் ஒத்துழைத்தும் வாழ்ந்து வந்துள்ளனர்.

புத்தளம் ஜும்ஆ பள்ளிவாசலில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோது அதற்காகப் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியவர்கள் தமிழ்த் தலைவர்கள்தான்.

இவ்வாறு இரு சமூகத்தவர்களுக்குமிடையிலான நல்லுறவையும், ஒற்றுமையையும் சுட்டிக்காட்டி நிறைய உதாரணங்கள் உள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் ஆயுதமயமானதைத் தொடர்ந்து இரு சமூகத்தினரதும் நல்லுறவையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கக் கூடிய நிழ்ச்சிகளும், சதிகளும் முன்னெடுக்கப்பட்டன. அதனால் சதியாளர்கள் பயனடைந்தார்கள்.

இரு சமூகத்தவர்கள் மத்தியிலும் ஐயங்களும், வீணான சந்தேகங்களும் உருவாகின.

இதன் விளைவாகப் பலர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவை மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மைகள். எனினும் இரு சமூகத்தவர்களும் மீண்டும் பழைய உறவு நிலைக்குத் திரும்ப வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் விலகி இருக்க முடியாது.

ஆகவே இரு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை கூட்டமைப்பும்,முஸ்லிம் காங்கிரஸும் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நின்று ஒன்றுபட்டு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கான கலந்துரையாடல்களை அடிமட்டத்திலிருந்து ஆரம்பிப்பது அவசியம். மொழி, கலை, கலாசாரம், பண்பாடு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பணிகளை ஆரம்பிக்க முடியும்.

இந்த விடயத்தில் இரு சமூகங்களினதும் அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்துவது அவசியம்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=767411950306468650

பொது பல சேனை அடிக்க வரும் போது மட்டும்  கேவலக்கேட்ட தனமாக ஓடி ஒளிக்க முந்தானை ஒன்று தேடாமல் துணிச்சலுடன்  கிழக்கு மாகாண அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து அரசின் ஆட்சியை கிழக்கில் விழுத்தி கிழக்கு மாகாணத்தில் கூட்டமைப்பு, மு.க. அரசை கொண்டுவரட்டும்.

 

அதுதான் கூட்டமைப்பும் மு.க வும் இணைந்து செயல்ப்படும் வழி.

 

மு.கா மந்திரிகளுக்கு "நம்பிக்கை" என்பதின் பொருள் தெரியுமா?

 

கிழக்கு மாகாணத்தில் கூட்டாட்சி ஆரம்பிக்க பேச்சுவார்த்தை நடத்த கூட்டமைப்பு  கோட்டலுக்கு பணம் கட்டிவிட்டு அங்கு போய் காத்திருக்க,  அலரி மாளிகைக்குள் ஒளிந்திருந்துகொண்டு தொலை பேசிகளை நிறுத்தி வைப்பதற்கு பெயர்"நம்பிக்கை"  இல்லை. அதன் பெயர் சுத்த துரோகம். 

Edited by மல்லையூரான்

இலங்கையில் தமிழர்களும் முச்லீம்களும் சிறுபான்மை இனத்தவர்கள்.தமிழர்கள் 12% முஸ்லீம்கள் 8%;

 

 

தனித்தனியாக இரண்டு இனமும் பௌத்த பேரினவாதத்திற்கு முகம் கொடுக்கின்றார்கள். வரலாற்று நிலங்கள்/ ஊர்கள், மத வழிபாட்டு நிலையங்கள்,கல்வி / வர்த்தகம் என பலவற்றையும் சிங்களம் அழித்து வருகின்றது.


இரண்டு இனத்தையும் இணைத்து பலமான  ஒரு அரசியல் நிலையைஉருவாக்கும் வலிமைகொண்ட தலைமைகள் இரண்டுஇனத்திலும் இல்லை.

 

அதற்காக காலம் கடக்க முன்னர் நாம் விழித்துகொள்லாவிட்டால் இரண்டு இனமும் வெற்றிகரமாக அடையாளங்கள் இல்லாத பலமில்லாத இனமாக மாற்றப்படும்.

Idea is good.Who is  going to bell the cat. Please study the past history of the MPP who were elected under the banner of TAK and joined the Govt for Ministry and other benefits. Let the past be past, will the said Minister resign his portfolio. 

  • கருத்துக்கள உறவுகள்

Idea is good.Who is  going to bell the cat. Please study the past history of the MPP who were elected under the banner of TAK and joined the Govt for Ministry and other benefits. Let the past be past, will the said Minister resign his portfolio. 

 

இவருக்கு

தமிழ்

எழுதவும்

வாசிக்கவும் தெரியாது போல......... :( :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ தரம் நிர்வாகம் சொல்லியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை[யாரும் பெரிய ஆளோ :lol: ]...அவரோ தன்னை மாத்திற மாதிரி தெரியவில்லை...தடை செய்ய வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.