Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த நாடுகளில் கருப்பு யூலை நிகழ்வுகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவுச்திரெலியா நகரங்களில் கருப்பு யூலை நிகழ்வுகள். புலம்பெயர்ந்த நாடுகளில் கருப்பு யூலை நிகழ்வுகள் யூலை 25ல் நடைபெறவுள்ளன. பிரான்சில் நடைபெற்றுவரும் 37 நாள் உண்ணாவிரதம் நிறைவு பெறும் நாள் யூலை 25. யூலை 25ல் சிட்னி மெல்பேர்ணில் உண்ணாவிரதம், ரத்ததானம், கோவில்கள் தேவலாயங்களில் பிரார்த்தனை. வெள்ளைக்காரர்கள் கூடும் பொது இடங்களில் சில நிகழ்ச்சைகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. சிட்னியில் 25ல் மாலை மண்டபம் ஒன்றில் நிகழ்ச்சிகள், அதனைத்தொடர்ந்து மறுனாள் திங்கள் கிழமை பரமற்றாவிலும், செவ்வாய்கிழமை மாட்டின் பிளேசிலும் யூலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. விரைவில் தகவல்கள்....

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் கருப்பு யூலை நிகழ்வுகள்

http://www.nitharsanam.com/?art=18988

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
july5sb.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ணில் கருத்தரங்கு 30/07/2006. தகவல்களுக்கு

http://www.tyoaustralia.org/Images/The%20_...e%20Seminar.pdf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில் http://www.tamilnaatham.com/advert/2006/ju...0712/NEDERLAND/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி நிகழ்வுகளுக்கு http://www.tamilnaatham.com/pdf_files/sydn..._2006_07_15.pdf

தகவலுக்கு மிக்க நன்றி கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ணில் உண்ணாவிரதம், ரத்ததானம், கோவில்கள் தேவலாயங்களில் பிரார்த்தனை

22/07/06 139,Gray Road,Rockbank

23/07/06 சிவா விஸ்ணு கோவில்

30/07/06 வக்கிரதுண்ட வினாயகர் கோவில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோவில் "கறுப்பு யூலை" கண்காட்சி- யூலை 25 இல் கவன ஈர்ப்பு நாள்

சிங்களப் பேரினவாதிகளால் 23 ஆண்டுகளுக்கு முன்னர் யூலை மாதத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை உயிருடன் தீ மூட்டியும் வெட்டியும் சுட்டும் துடி, துடிக்கப் படுகொலை செய்த கோரச் சம்பவங்களை விளக்கும் "கறுப்பு யூலை" கண்காட்சி நோர்வேயின் ஓஸ்லோ நகரில் அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"கறுப்பு யூலை" நினைவாக அடையாள கவன ஈர்ப்பு நாளில் ஒஸ்லோ நகரத்தில் விசேட மையங்கள் அமைக்கப்பட்டு,

- எமது மக்கள் மீதான சிங்களப் பயங்கரவாதத்தின் இன அழிப்பு படுகொலைகளையும், மக்களின் அவலங்களையும் சித்தரிக்கும் ஒளிப்படங்களை உள்ளடக்கிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

- ஒஸ்லோ நகரத்தின் பிரதான மையப் பகுதிகளில் நோர்வேஜிய மக்களை நோக்கிய துண்டுப்பிரசுரங்கள் பெருமளவில் விநியோகிக்கப்படவுள்ளன.

அந்நிகழ்வு இன்றும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அணையாத தீயாக கனன்று கொண்டிருக்கின்றது.

இன்று மீண்டும் சிங்கள அரச பயங்கரவாதம் தமிழ் மக்கள் மீது தனது இன அழிப்பு வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.

நாளாந்தம் எமது உறவுகள் வீடுகளில், வீதிகளில், பொது இடங்களில் சிங்கள இனவெறி இராணுவத்தினரால் கொன்று அழிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த அவலங்களையும் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தின் தார்மீக நியாயங்களையும் நோர்வே மக்களுக்கு எடுத்துச்சொல்லும் நோக்கில் அடையாள கவன ஈர்ப்பு நிகழ்வுகள் ஒஸ்லோவிலும் நோர்வேயின் ஏனைய நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25.07.06) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள "கறுப்பு யூலை" நினைவான அடையாள கவன ஈர்ப்பு நாளில் சிங்களப் பேரினவாதத்தின் தமிழ் மக்களுக்கெதிரான இன ஒடுக்குமுறையின் கோரத்தை நோர்வே மக்களுக்கு எடுத்துச் சொல்ல இளையோர்கள், பெண்கள், ஆண்கள் என ஒஸ்லோ வாழ் உறவுகளே உங்கள் பங்களிப்பினை வழங்க வாருங்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Black July Remembrance

July 1983 was a turning point in Tamil people’s struggle for self-determination. Though a number of Tamils had been victims of Sinhala chauvinism prior to the 1983 genocidal violence, this was the first time the violence was unleashed by, or at least with the support of, the Sri Lankan government.

Over 3,000 Tamils were killed and the property of Tamils living outside the NorthEast was destroyed. 52 Tamil political prisoners in Sri Lankan prisons, including Kuttimani and Thangathurai, were gruesomely killed.

Tamils were made homeless and were forced to seek refuge, initially in the NorthEast and then across the four corners of the world.

Let us reflect on "Black July" and resolve that such atrocities will never again occur. Let us congregate to show our solidarity. Tamils in Sydney have organised remembrance events on Sunday 23rd, Monday 24th and Tuesday 25th at the following venues:

Sunday 23rd

Event

Exhibition on Black July and Public Meeting

Venue

Ukrainian Hall, Lidcombe

Time

From 4:30 p.m to 7:30 p.m.

Monday 24th

Event -Black July Vigil

Venue Outside Parramatta CityHall (Parramatta Town Hall, Cnr of Church and Macquarie Streets)

Time From 2:00 p.m to 5:00 p.m.

Tuesday 25th

Event - Massive Black July Candle Light Vigil

Venue Sydney City (Martin Place) Pitt Street and Castlereagh Street

Time From 2:00 p.m. to 7:00 p.m.

We urge all Tamils in Sydney, along with their friends and families, to participate in these events. We encourage you to bring non-Tamil friends and neighbours as well and speak up against the oppression and violence unleashed against the Tamils.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கறுப்பு யூலை" நாள் கவன ஈர்ப்பு போராட்டங்களில் பங்கேற்க ஐரோப்பிய தமிழர் பேரவை அழைப்பு

கறுப்பு யூலை நினைவெழுச்சி நாளில் நடத்தப்படுகின்ற கவன ஈர்ப்புப் போராட்டங்களில் அனைத்துத் தமிழர்களும் பங்கேற்க ஐரோப்பிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

ஐரோப்பிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை:

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களே!

ஈழத்தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழினத்தின் வரலாற்றிலும் நினைவழியா நாட்களாக உறைந்து போன கறுப்பு யூலையின் நினைவுகளை உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நினைவு கூறுவோம்.

இலங்கைத்தீவின் ஆட்சிப்பீடத்திற்கு மாறி, மாறி வந்த சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டதன் வரலாறு இன்றும் தொடர்கின்றது.

பல ஆண்டு காலமாக தமிழர்கள் கொல்லப்படுவதும், அவர்களின் சொத்துக்கள் அழித்தொழிக்கப்படுவதும், பின்னர் அவர்கள் ஏதுமற்ற ஏதிலிகளாக்கப்படுவதும் சிங்கள தேசத்தின வழமையாகி விட்டது. எனவே இவற்றை உலகெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களாகிய நாங்கள் சர்வதேசத்தின் மனச்சாட்சிகளைத் தொடும் வகையிலும் சிறிலங்காவின் இனவாத அரசுகளால் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு வரும் எம் இனத்தின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் கவனயீர்ப்பு போராட்டமாக கறுப்பு யூலையின் நினைவுகளை கடைப்பிடிப்போம்

பள்ளிக்கூடம் செல்லும் வழியிலும், மருத்துவமனையின் வாசல்களிலும், பல்கலைக்கழக வளாகங்களும், சிறைச்சாலைகளிலும், தெருக்களிலும், கோவில்களிலும், தேவாலயங்களிலும் புதைகுழிகளே சாட்சிகள் எனவாக்கிய சிங்களக் காடையர்களினதும் இனவாத அரசின் முகமூடியினை சர்வதேச சமூகத்தின் முன் தோலுரித்து காட்டுவற்கான சந்தர்ப்பமாக புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் அணிதிரண்டு சர்வதேச சமூகத்தின் முன் குரல் தொடுப்போம்.

தமிழர்களின் போராட்டம் குறித்த புரிதலை சர்வதேச சமூகத்திற்கு ஏற்படுத்தும் முகமாக நாங்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாட்டவர்களுக்கும் எமக்கும் இடையிலான புரிதலின் மொழியாக நிகழ்த்தப்படும் கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், கண்டனப்பேரணி, என்பனவற்றில் கலந்து கொண்டு எமது இந்த கவனஈர்ப்பு போராட்டத்தின் பங்காளிகளாக்கி சர்வதேச மனச்சாட்சிகளிற்கு முன்னால் உண்மையின் குரலாய் ஒலிப்போம்.

எமது போராட்டத்தின் நியாயத்தன்மையையும் அடக்கப்படும் தமிழர்களின் உரிமைக் குரலினை சர்வதேச சமூகத்திற்கு புரியும் முகமாக எடுத்துச் சொல்வதற்கும் அவர்களின் முன் எமது பிரச்சனைகளின் உண்மை நிலைகளை காத்திரமாக முன்வைப்பதற்கான ஓர் சந்தர்ப்பமாக இத்தருணத்தினை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆகிய நாம் பயன்படுத்த வேண்டும்.

காலம் காலமாக ஒடுக்கப்படும் இனமாகிய எமது அபிலாசைகளை உலகம் புரிந்து கொள்ள வேண்டுமாயின் நாங்கள் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும்.

கறுப்பு யூலையினை ஒட்டி ஏற்பாடு செய்கின்ற அனைத்து நிகழ்வுகளிலும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஒருமித்த குரலாய் ஒலித்து சர்வதேச சமூகத்தின் முன் உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்களின் பலத்தை அணிதிரண்டு தெரிவிக்க உங்களை அழைக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தில் http://sankathi.com/content/view/3986/26/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கந்தப்பு உங்களுக்கென்ன அறளை பேந்துவிட்டதா இல்லை சும்மா 83 கலவரம் எண்டதுக்காக 83ஆயிரம்பேர் பிரித்தானியாவில் கலந்து கொள்வார்கள் எண்டு எழுதியிருக்கிறீங்களா? எனக்கு விளங்கவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் கறுப்பு ஜீலை நிகழ்வுகள் எதிர்வரும் ஜீலை 24 ம் திகதி. திங்கள் மாலை 5 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

Ninaivu_nal.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

THOUSANDS OF TAMIL CANADIANS SAY THANK YOU TO CANADA AS THEY REMEMBER "BLACK JULY"

On July 24, 2006, Thousands of Tamil-Canadians will gather in Dundas Square in downtown Toronto to thank Canada for saving their lives. "There is no doubt about it, many of us would not be alive today if we had not been allowed to come to Canada," says David Poopalapillai spokesperson for the Canadian Tamil Congress. David's own brother in law, a journalist, was murdered in Sri Lanka because of his outspoken views. "We hope this event will let all of Canada know just how grateful we are." Similar events are also being held around the world in Switzerland, Norway, Denmark, Germany, France, Great Britain and Australia.

Black July commemorates the events of July, 1983, when Sri Lankan Tamil civilians were savagely attacked in a massive week-long pogrom that left thousands dead and tens of thousands homeless. Although the Sinhalese dominated government claimed that the riots were spontaneous, the well organized rioters systematically used government voting lists to single out Tamil homes and businesses in Colombo, the nation's capital. Government soldiers and police also stood by while thousands of Tamils were beaten to death, burned alive or hacked to pieces.

As a result of this single act of state sponsored terror, hundreds of thousands of Sri Lanka Tamils fled their homeland as refugees. Recognizing that the Tamil plight was real, many countries around the world generously opened their immigration doors. Canada was one of the most welcoming and as a result, today there are more than 300,000 Canadians of Sri Lankan heritage living in Canada.

The Toronto event will include speeches, poetry and short drama skits commemorating the events of July 1983.

Remembering Black July

Date: July 24, 2006.

Time : 6:00 to 9:00 PM

Dundas Square, Toronto, Canada.

(south-west corner of Yonge and Dundas Street)

For more information, call the Canadian Tamil Congress at 416-240-0078

nitharsanam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில்

blackjulyuv1.png

தகவலுக்கு நன்றிகள் நிதர்சன் மற்றும் கந்தப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சம் கனக்க சிட்னியில் தொடங்கியது "சாவிலும் வாழ்வோம்"

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கறுப்பு யூலையை நினைவு கூரும் வகையில் "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வின் முதல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (23.07.06) லிட்கம் உக்ரேனியன் மண்டபத்தில் நடைபெற்றது.

1983 யூலை கலவரத்தில் பாதிக்கப்பட்ட சுந்தரதாஸ் நிகழ்வின் தொடக்கத்தில் பொதுச்சுடர் ஏற்றினார்.

தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர் ஈர்ந்த மாவீரர்களுக்காகவும் அரச பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட அனைத்து அப்பாவித் தமிழீழ மக்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அவுஸ்திரேலிய தென்துருவ தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அனா பரராஜசிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார்.

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் கொல்லப்பட்ட மக்கள், எரியூட்டப்பட்ட வர்த்தக நிலையங்கள், தமிழர் சொத்துகள், அக்கால கட்டத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளிக்கொணர்ந்த ஊடகங்களின் பிரதிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்த

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்காவில் கறுப்பு யூலையொட்டி "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வு தொடக்கம் தென்னாப்பிரிக்காவில் கறுப்பு யூலையையொட்டி "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் "வாழ்விலும் சாவோம்" என்ற முழக்கத்துடன் 1983 இல் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட "கறுப்பு யூலை" இனப்படுகொலையை நினைவு கூருகின்றனர்.

தென்னாப்பிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கறுப்பு யூலையை நினைவுகூரும் முகமாக நேற்று 22 யூலை 2006 இல் நிகழ்வுகள் தொடங்கியுள்ளன.

ஓவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து போகும் சற்ஸ்வேத் சென்ரரில் முதலாம் நாள் நிகழ்வு நடைபெற்றது.

தமிழீழ வரலாற்றையும், அங்குள்ள தற்போதைய நிலவரங்களையும் தெளிவுபடுத்துகின்ற ஒளிப்படக் காட்சிகள் அகலத்திரையில் காண்பிக்கப்பட்டன.

தென்னாப்பிரிக்கத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் "தமிழ் மிரர்" செய்தி ஏடு இலவசமாக விநியோகிக்கப்பட்டதுடன், தமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் இழைத்துவருகின்ற அட்டூழியங்கள் பற்றி ஈழப்பிரச்சினை தொடர்பாக ஆர்வங்கொண்ட மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. பல மக்கள் இந்த ஓளித்தட்டுப் பிரதிகளைக் கோரியிருந்தனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வு இன்றும் (23.07.2006), செவ்வாய்கிழமையும் (25.07.2006) இக்குழுவினரால் தொடரப்படவுள்ளது.

படங்களினைப்பார்க்க http://www.eelampage.com/?cn=27736

-புதினம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில்

http://www.orupaper.com/issue51/pages_K___Sec4_12.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்விலும் சாவோம் - நெதர்லாந்து

ஜூலைப் படுகொலையின் 23ம் நினைவாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்..

இடம் - Dam, Amsterdam

புகையிரத நிலையத்திலிருந்து 5 நிமிட நடைதூரம்

காலம் - 24.07.2006 செவ்வாய் கிழமை

காலை 9 மணியிருந்து மாலை 7 மணிவரை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி நகரில் இரண்டாம் நாளாக கறுப்பு யூலை நினைவு நிகழ்வு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கறுப்பு யூலையை நினைவு கூரும் வகையில் "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வாக மெழுகுவர்த்தி கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வு சிட்னியின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான பரமற்றாவில் (Paramatta) உள்ள Paramatta Townhall, Corner of Church and Macquarie Street இல் நடைபெற்றது.

முதல் நிகழ்வாக பிற்பகல் 2 மணிக்கு தெருக்கூத்து தொடங்கியது.

மகிந்த அரசு பதவியேற்ற பின்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாக சிட்னி கலை பண்பாட்டுக் கலைஞர்களால் "தெருக்கூத்து" தயாரித்து வழங்கப்பட்டது.

தெருக்கூத்து நிகழ்வினை சிட்னியில் வாழும் ஈழத் தமிழ் முதியவர்கள், ஈழத் தமிழர்கள் உட்பட அவுஸ்திரேலியா வாழ் பல்லின மக்களும் அரைவட்ட வடிவில் அணிதிரண்டு பார்வையிட்டனர்.

அல்லைப்பிட்டி சம்பவத்தை தொடர்ந்து கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய "குருதியில் குளிப்பதுதான் எங்கள் விதியா?" என்ற கவிதையை கலைஞர்கள் இசையமைத்து பறை முழக்கத்துடன் பாடலாக தெருக்கூத்து தொடங்கிய போது அந்த வழியாக சென்ற அனைத்து இன மக்களும் பார்வையிட்டனர். தமிழிலும் ஆங்கிலத்திலும் முழுமையாக இந்நிகழ்வு வழங்கப்பட்டது.

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அல்லைப்பிட்டி படுகொலையின் கோரப் படத்தினை பார்வையிட்ட பலரும் அதிர்ச்சியுற்று எவ்வாறு இச்சம்பவம் நடைபெற்றது என்பதனையும் இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதனையும் அங்கிருந்த சிட்னி வாழ் தமிழர்களிடனம் ஆவலுடன் கேட்டறிந்து தமது அனுதாபத்தினை தெரிவித்தனர்.

1983 ஆம் ஆண்டிலிருந்து தற்போதைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த பதவியேற்ற பின்னர் வரை ஈழத்தில் நடைபெற்று வரும் படுகொலைகள் தொடர்பான துண்டுப்பிரசுரங்களை அந்த வழியால் சென்று கொண்டிருந்த அவுஸ்திரேலியர்களுக்கு விநியோகித்தனர்.

பெருமளவில் திரண்டிருந்த சிட்னி வாழ் ஈழத் தமிழர்கள் மாலை 4.15 மணியளவில் தமது கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி கவனயீர்ப்பு போராட்டத்தை தொடங்கினர். சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் மெழுகுவர்த்திகளை தாங்கி நின்றனர்.

இந்நிழ்வில் பரமற்றா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யூலி ஒவன்ஸ் அம்மையார் கலந்து கொண்டு திரண்டிருந்த மக்களிடத்தில் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில், சிட்னி வாழ் ஈழத் தமிழர்கள் அண்மைக்காலமாக தீவிரமாக பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய அரசுடன் தொடர்பு கொண்டு உரியமுறையில் முன்னெடுத்து வருவதனை தான் அவதானித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறாத வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பரமற்றா மேயரான டேவிட் போய்யர் தனது சிறப்புரையில், தெருக்கூத்து நாடகத்தினை முழுமையாக பார்வையிட்டதாகவும் நிகழ்வின் தாக்கத்தினை தன்னால் உணர முடிந்ததாகவும், சிட்னி வாழ் ஈழத் தமிழர்கள் அவுஸ்திரேலிய சமூகத்திற்கு பாரிய பங்களிப்புக்களை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

வேலை நாட்களாக இருந்த போதும் பலர் தாம் பணிபுரியும் அலுவலகங்களிலிருந்து வந்து இக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர். சிட்னியில் தற்போது குளிர்காலம் ஆகையால் குளிருடன் கூடிய மழை பெய்த போதிலும் முதியவர்கள் உட்பட அனைவரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

முக்கிய நிகழ்வாக சிட்னி நகரின் மத்தியில் நாளை செவ்வாய்க்கிழமை (25.07.06) Pitt Street and Castlereag Street -க்கும் இடையில் உள்ள Martin Place இல் பிற்பகல் 2 மணி முதல் 7 மணிவரை நடைபெறவுள்ளது.

படங்களினைப்பார்க்க

http://www.eelampage.com/?cn=27772

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு யூலை: அவுஸ்திரேலியா, மெல்பேர்ணில் 24 மணிநேர உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியது

அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் கறுப்பு யூலையையொட்டிய "சாவிலும் வாழ்வோம்" நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று திங்கட்கிழமை 24 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்புப் போராட்டம் தொடங்கியது.

ஐம்பதுக்கும் மேற்பட்டோர் 24 மணிநேர உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு நூற்றுக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மெல்பேர்ணில் பிரசித்தி பெற்ற Federation Square Cnr. of Swanston & Flinders Streets Melbourne இல் இன்று இரவு 8 மணிக்கு தமிழ் கிறிஸ்தவ பாதிரியார் பிரேமராஜா அவர்களின் பிரார்த்தனையுடன் தொடங்கியுள்ள இப்போராட்டம் நாளை செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு நிறைவடையும்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் வொலண்டியர் இன்டர்நசனல் முகவராக இருந்த டேவிட் பெய்த் பேசியதாவது:

இலங்கையில் 83 ஆம் ஆண்டு கலவரம் நடைபெற்ற போது இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்தேன்.

இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்ட செய்தியையும் அவர்கள் வாழ்விடங்கள் நொருக்கப்பட்டதனையும் அறிந்து, மிகவும் வேதனையுற்றேன்.

இந்த இன அழிவின் அடிப்படைக்காரணங்களை அறிய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு ஈழப்பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தினேன்.

தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அறிந்து அதற்கு நல்ல ஒரு முடிவு வரவேண்டும் என்பதை உலக நாடுகள் கருத்தில் எடுக்க வேண்டும் என்றார் அவர்.

கிறீன்ஸ் பீஸ் கட்சியின் கிறீன்ஸ் வீக்லி சஞ்சிகையின் ஆசிரியர் கிறிஸ்லி:

உலகத் தொடர்பு சாதனங்களும் பேரரசுகளும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சனைகளை மேலெழுந்த வாரியாக நோக்குவதால் அதனை தீர்ப்பதற்கு சரியான முறையில் செயற்படவில்லை.

இத்தகைய போராட்டங்கள் மூலம் ஏனைய உலக மக்களின் கருத்துக்களை தமிழ் மக்கள் மாற்றலாம். அதனை மாற்றுவதன் மூலம் உலக அரசியல் சக்திகளிடையே தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

கிழக்குத் திமோர் பிரச்சனையை 25 வருடங்களாக எந்த வகையிலும் தீர்த்து வைக்காத அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலிய மக்களின் எழுச்சியால் அதில் தலையிட நிர்ப்பந்திக்கப்பட்டது. அவ்வாறே ஈழத் தமிழ் மக்கள் பிரச்சனையில் பொதுமக்களின் அபிப்பிராய மாற்றங்களினால் அரசியல் அழுத்தங்களை கொண்டுவரலாம் என்றார்.

83 கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலியா நாட்டிலும் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகள் புகலிடம் தந்ததற்கு நன்றி கூறி தொடர்ந்தும் அங்கே நடக்கும் இன அழிப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இந்த நாடுகள் முன்வர வேண்டும் என்று விக்டோரிய தமிழ்ச் சம்மேளனப் பிரதிநிதி வேண்டுகோள் விடுத்தார்.

கோல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அன்டனி பேர்ண் 24 மணிநேர உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்டோருடன் கலந்துரையாடினார்.

அவர்களுடன் கலந்துரையாடுகையில் நிரந்தரமானதும், நீதியானதுமான ஒரு நல்ல தீர்வு இலங்கையில் வரவேண்டும் என்பதற்காக அவர்களின் இந்த சாத்வீகப் போராட்டத்திற்கு தனது ஆதரவை நல்கினார்.

அடம் சமுராய்க் என்ற யுமராங்க் மாகாணத்தின் பிரதிநிதி உண்ணாநிலை நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து வாழ்த்தினார்.

மெல்பேர்ண் வாழ் தமிழ்ப்பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.

யூலை 83 இல் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் தாங்கள் அறிந்த வேதனைகளையும் பலர் தெரிவித்தனர்.

படங்களினைப்பார்க்க

http://www.eelampage.com/?cn=27781

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.