Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலஸ்தீனத்தில் சட்ட விரோத யூதக் குடியிருப்புக்களை உடன் நிறுத்த வேண்டும் : அமைச்சர் ஹக்கீம் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பலஸ்தீன பூமியில் சட்ட விரோத யூதக் குடியிருப்புகள் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களுக்கான அனைத்து உரிமைகளும், அங்கீகாரங்களும் வழங்கப்பட வேண்டுமென்றும் இஸ்லாத்தின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா இஸ்ரேலர்களிடமிருந்து மீட்கப்படுவது அவசியமென்றும் நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன வக்ப் மற்றும் சமய விவகார அமைச்சர் கலாநிதி மஹ்மூத் அல் ஹப்பாஷிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன அமைச்சருக்கும், இலங்கையின் நீதியமைச்சருக்கும் இடையிலான உரையாடல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்தார்.

 

இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரும், இங்குள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் அமைப்பின் தலைவருமான அன்வர் அல் அகாவும் இச் சந்திப்பில் பங்கேற்றார்.

 

எதிர்வரும் ஜுன் மாதம் பலஸ்தீனத்தில் நடைபெறவுள்ள இஸ்லாமிய மாநாட்டுக்கான அழைப்பை அமைச்சர் ஹக்கீமுக்கு விடுத்த அந் நாட்டு அமைச்சர் அதில் அமைச்சர் ஹக்கீம் கலந்துகொள்வார் என தமது நாடு எதிர்பார்ப்பதாகவும் கூறினார். அத்துடன் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றியும் அவர் விபரித்தார்.

 

இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் கருத்து தெரிவிக்கும் போது,

 

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இள வயது முதலே பலஸ்தீன மக்களின் தோழராகவும், தீவிர ஆதரவாளராகவும் விளங்குகின்றார்.

 

இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் யூதர்களினதும், இஸ்ரேல் உளவுப் பிரிவான மொஸாடினதும் தலையீடு இருப்பதாக இந் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுகின்றது.

 

தாம் தலைமைத்துவம் வகிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைக் கொண்ட அரசியல் கட்சியென்றும், கட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேர் உள்ளனர். இதேவேளை, 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில் முஸ்லிம் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு அண்டப்புரட்டன், ஆகாயப்புரட்டனைக் காணும் பாக்கியத்தையும் 21ம் நூற்றாண்டு வழங்கியுள்ளது. அதுவும் நீதி அமைச்சராக.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல அமைச்சர் அவர்களே உங்களின் இனத்தவருக்கு சிறிலங்கா சிங்கள அரசினால் இழைக்கப் படும் அநீதிகளை தடுத்து நிறுத்துங்கள் ............... அப்புறம்  பலஸ்தீனத்தில் சட்ட விரோத யூதக் குடியிருப்புக்களை உடன் நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொள்ளலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல்... முள்ளிவளை உட்பட வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் போரால் பாதிக்கப்பட்டுள்ள.. இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளில்.. முஸ்லீம்களின் திட்டமிட்ட குடியேற்றங்கள்.. காணி அபகரிப்புக்களுக்கு ஆதரவளிப்பதை முஸ்லீம் காங்கிரஸ் உடனே நிறுத்த வேண்டும். :icon_idea: :icon_idea:

ஸ்ரேல் வழமையில் எளிதில் முட்டாள் ஆவதில்லை.  உலகின் 200க்கு மேற்பட்ட நாடுகளை தனிய ஐ.நாவில் வைத்து சமாளிப்பது அந்த நாடு.

 

ஆனால் இலங்கையில் மட்டும் இந்த திறமைகள் தவிடுபொடியாவிட்டது. காரணம், 2009 போரில் புஸ்சும், பிளேக்கும் தாங்கள் முட்டாள்கள் ஆகும் போது ஸ்ரேலையும் வலிய இழுத்துவந்து முட்டாள் ஆக்கினார்கள். ஸ்ரேலிய கீபீர் விமானங்களை பாகிஸ்தானிய, ஈரானிய, கிழக்கு ஐரோப்பிய விமானிகள் ஓட்டிப்பழகினார்கள். சீனர்கள் டிவோராபடகுகளில் சுற்றித்திருந்து இந்தியாவை வேவுபார்த்தார்கள்.  இதில் ஸ்ரேலுக்கு பாரிய இழப்பொன்றும் இல்லை.  இந்த உபகரணங்கள் எவ்வளவு முன்னேறியவையாக இருந்தாலும், உள்நாட்டு சண்டைக்குதான் உபயோக்கப்படுத்தக்கூடியவை. ஆனால் ஏமாற்றம்தான் இறுக்கிக் கடித்தது.

 

பிளேக் தாமும் இலங்கையில் ஏமாற்றுப்பட்டுவிட்டத்தாக ஒத்துக் கொண்டிருக்கிறார். மேலும், இன்று ஸ்ரேல் அமெரிக்காவின் சொல்லை அவ்வளவு கேட்பதில்லை. இதனால் ரெல்-அவீவ் போன பீரிசு வீடு திரும்பும் போது முதுகில் ஒரு சாக்கை கட்டிகொண்டு தூங்கப்போட்ட முகத்துடன் தான் கட்டுநாயக்காவில் வந்து இறங்கியிருந்தார். இதில் பீரிசு எப்படியோ தப்பித்தான் விட்டார், ஆனால் பொதுபல சேனாவால் இரவுபகல் மிரட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கக்கீம் அவ்வளவு இலகுவில் தப்ப முடியவில்லை.

 

இதானால் கிழக்கில் தமிழர்களிடமிருந்து பறித்த பிரதேசங்களை சிங்களவருக்கு கொடுத்துவிட்டு,

 

"தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்-திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகின்
நிறையிருளை நீக்குமே னின்று."

 

என்று பாடிக்கொண்டு பரோபகாரத்தில் இறங்கியிருக்கிறார்.

 

இன்று கக்கீம் தான் மிகவும் சமர்த்தாகவும், ராஜதந்திரவாதியாகவும் காட்டிகொள்ள முயல்கிறார். ஆனால் அடித்த கொள்ளைகளும், நடத்திய பாலியல் துர்ப் பிரயோகங்களும் கருணாநிதி -2 ஆக்கியிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

மு.க.வை அழித்து புதிய கட்சி ஒன்று  உருவாக்காவிட்டால் முஸ்லீம்களும் பலன் அடைய முடியாது. கக்கீம் தமிழர்களையும் பல அடைய இடம் கொடுக்க மாட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முஸ்லிம் தொழுகை அறை மீது ஓயில் வீச்சு

 

a8565ece8da5f67468e047b1036ccdcb.jpg

news

யாழ்.பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களின் தொழுகைக்காக கடந்த மாதம் புதிதாக திறந்து வைக்கப்பட்ட தொழுகை அறை நேற்று இரவு விசமிகளின் ஓயில் வீச்சுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாக அனுமதியுடன் கடந்த மாதம் 22 ஆம் திகதி "முஸ்லிம் மாணவர் மன்றம்" என்ற பெயரில் குறித்த தொழுகை அறை திறக்கப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் தொழுகையினை மேற்கொண்டுவந்தனர்.

தொழுகை அறை திறக்கப்பட்டு சில நாட்களுக்கிடையே அறையில் தொங்கவிடப்பட்ட "முஸ்லிம் மாணவர் மன்றம்" என்ற பெயர் பலகை சேதமாக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது.அத்துடன் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்தில் திறக்கப்பட்ட தொழுகை அறை தொடர்பாக அவதூறாக செய்திகள் பரப்பப்பட்டு வந்ததாகவும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவித்தனர்

http://onlineuthayan.com/News_More.php?id=777851961209140090

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.