Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Featured Replies

482838_632131426813252_293451086_n.jpg

 

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

 

நன்றி முகநூல்

 

 

 

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

 

இந்த கட்டுரை சொல்லும் சில விடயங்கள் உண்மை என்றாலும் சில விடயங்கள் தவறானவை.

 

மைதா என்பதும் கோதுமை மா தான். கோதுமை மா போதுவகள் மஞ்சள் நிறமாக/ பழுப்பு நிறமாக இருக்கும். தீட்டிய , தவிடு நீக்கிய கோதுமை மாவின் பழுப்பு நிறத்தை போக்க, மாவை குளோரின், மற்றும் மேலே கட்டுரையில் சொன்ன சில இராசயன்களும் சேர்த்து வெள்ளை ஆக்குவார்கள்.

 

கோதுமை மாவில் மாச்சத்து அதிகம். நார் சத்து குறைவு. அது உண்மை. :icon_idea:

 

மைதா மா எனும் கோதுமை மாவில் 12.5-14% தொடக்கம் 10-12% புரத சத்து இருக்கிறது.

 

 

ஆனால் மைதா மா (வெள்ளை கோதுமை மா ) மேலே சொன்ன நாடுகளில் விற்க தடை என்பது பொய்.

 

கோமகன் நீங்கள் பிரான்சில் ( ஐரோப்பிய யூனியனில்) தானே இருக்கிறீர்கள். உங்கள் நாட்டில் வெள்ளை கோதுமை மா, வெள்ளை பாண், கேக், குரோசன், எதுவும் வாங்க முடியாதா?   :) வெள்ளை பாண், கேக், குரசன் செய்ய மைதா மா எனும் வெள்ளை கோதுமை மா வேணும்.

 

 

ஒரு முக்கிய விடயம் ஐரோப்பிய யூனியனில் மாவை வெளிர்ப்பக செய்ய பயன்படுத்தும் குளோரின், bromates, peroxides போன்றவை தான் பாவிக்க தடை. வெள்ளை கோதுமை மாவுக்கு அல்ல.

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்

நானும் கவனித்தேன் இந்தக் கூத்தை . ஆனால் மூல இணைப்பை நான் மாற்றுவது பிழையல்லவா குளக்காட்டான் ???

 

 

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

 

Alloxan மாவுக்கு சேர்க்கப்படுவதில்லை. அது மாவை வெளிர்ப்படைய செய்யும் பொது ஏற்படும் இரசாயன தாக்கத்தால் உருவாகிறது. Alloxan, நீரிழிவு நோயை தூண்டலாம் என்பது உண்மை.

 

மேலே சொன்ன நிறம், சீனி, அஜினோமோட்டோ எல்லாம் எந்த நாட்டு கோதுமை மாவில் சேர்க்கிறார்கள்? ........

 

:D இந்த செய்தியை நானும் முன்னர் வசித்து இருந்தேன். ஆனால் இங்கு யாழ் களத்திலா அல்லது வலைப்பதிவில்/தமிழ்மணம்  ஊடக வாசித்தேன என நினைவில் இல்லை. அது தான் பேசாமல் தவறான தகவலை மட்டும் சுட்டி காட்டிவிட்டு விட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவின் நிறத்தை மாற்றப் பயன்படுத்தும் ரசாயனப் பொருட்களினால்

தாக்கங்கள்  ஏற்படலாம் தானே

இணைப்பிற்கு நன்றி கோமகன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
கனடாவில் இருந்து வரும் அரிசி மா இப்போ கபில நிறமாக (புட்டு, இடியப்பம் என்பன அவித்த பின்) உள்ளது. இது இயற்கையானதல்ல.இந்த நிறத்தை பெற இரசாயன கலவை பாவிக்கப்படுகிறது. (யாருக்காவது தெரிந்தால் அக்கலவை பற்றி)இது உடல் நலத்துக்கு நல்லதா என்பதும் தெரியவில்லை.

 

 

கனடாவில் இருந்து வரும் அரிசி மா இப்போ கபில நிறமாக (புட்டு, இடியப்பம் என்பன அவித்த பின்) உள்ளது. இது இயற்கையானதல்ல.இந்த நிறத்தை பெற இரசாயன கலவை பாவிக்கப்படுகிறது. (யாருக்காவது தெரிந்தால் அக்கலவை பற்றி)இது உடல் நலத்துக்கு நல்லதா என்பதும் தெரியவில்லை.

 

 

 

சரியாக தெரியவில்லை. அதை ஆராவது பரிசோதனை செய்து பார்த்தல் தானே தெரியும்.

 

நீங்கள் மாவில் ஏதும் நிற கலவை பாவிக்க பட்டுள்ளது என சந்தேகித்தால்

 

ஒரு கரண்டி மாவை, ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு, நன்கு கலக்கி விட்டு மாவை அடைய விட்டு விட்டு தண்ணீரின் நிறத்தை பாருங்கள். தண்ணீர் மென் ரோஸ்  அல்லது மெல்லிய கலங்கலாக இருந்தால் தண்ணீரில் கரையும் நிறம் எதுவும் சேர்க்க படவில்லை என சொல்லலாம். தண்ணீர் சிவப்பு/ கபில நிறமாக மாறினால் நிறம் கலந்திருக்கிறார்கள் என சொல்லலாம்.

 

அப்படி நிறம் வர இன்னும் ஒரு கரணம் , தீட்டாத அரிசியை அரைக்க முதல், வறுக்கும் பொது பதம் பிழைக்க வறுத்தால், அதிக சூட்டால் ஏற்படும் இரசாயன தாக்கமும் காரணமாக இருக்கலாம்.

 

Edited by KULAKADDAN

நானும் கவனித்தேன் இந்தக் கூத்தை . ஆனால் மூல இணைப்பை நான் மாற்றுவது பிழையல்லவா குளக்காட்டான் ???

 

நீங்கள் சொல்வது சரி கோமகன். எழுதியவர் பரோட்டா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தவறான தகவலை உள்ளடக்கி இருக்க கூடாது. அதனால் தான் சுட்டி கட்டினேன். உங்களில் பிழை சொல்ல அல்ல.  

 

இந்த கட்டுரையை வலை பதிவில் பார்த்த நினைவு. அப்போதே தகவல் பிழையை அவதானித்திருந்தேன். ஆனால் வலைப்பதிவுகளுக்கு பதில் எழுதி நிறைய நாட்கள், பதில் எழுதுவதில் ஆர்வம் போய் விட்டது. . அதானால் அங்கு பதில் எழுத முற்படவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.