Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் மீதான தாக்குதலுக்கு உள் முரண்பாடே காரணமாம்! கண்டுபிடித்தது அரசு! - தடயவியல் நிபுணர்களும் வருகிறார்களாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Run_run_escap_seithy150.jpg

யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை அலுவலகத்தின் அச்சுஇயந்திர பிரிவு தாக்கப்பட்டமை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் உள் விவகாரமே தாக்குதலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது உதயன் அலுவலகத்துக்குள் உள்ளவர்களாலேயே மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷமன் ஹிலுகல்ல தெரிவித்துள்ளார்.

  

தாக்குதல் நடைபெற்ற சிறிது நேரத்திலேயே அரசு காரணம் கண்டுபிடித்துள்ளது.

 

தாக்குதலுக்கு இலக்கான இயந்திரப்பகுதி பொலிஸ் பிரிவினரால் பாதுகாப்பிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து தடயவியல் நிபுணர்கள் வரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டே பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளையே பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். ஏற்கனவே உதயன் பத்திரிகை மீதும் பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் குறித்து இதுவரை சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

 

2006இல் ஆயுததாரிகளால் உதயன் பணிமனை தாக்கப்பட்டு இரு பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அடுத்தடுத்து தாக்குதல்கள் நடைபெற்றபோதும் எவரும் கைது செய்யப்படவும் இல்லை. சம்பவம் குறித்து சீரான விசாரணைகள் நடத்தப்டவும் இல்லை. உதயன் பத்திரிகை ஆசிரியர் குகநாதன் அலுவலகத்துக்கு அருகில் வைத்து ஆயுததாரிகளால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துவருகின்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை உதயன் பத்திரிகை மீது நடைபெற்ற தாக்குதலுக்கு மாத்திரம் அரசு பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=80375&category=TamilNews&language=tamil

செய்தது அச்சகம் தொழில் பட்ட  வெளிச்சத்தில். செய்தவர்களை ஊயருக்கு கட்டயம் தெரிந்திருக்கும். பொலில் போய் யார் என்று சொல்லமாட்டார்கள். தேவைப்பட்டால், காப்புறுதி பெற சரவணபவன்ந்தான் செய்தது என்று  அரசு கூறி முடிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ரீ லெக்சன் மேட்ச் ... ஒரு பலப் பரீட்சையே.

வெற்றி தோல்விய வட மாகான மக்கள் தீர்மானிப்பார்கள். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரனின் அலுவலகத்தில்  என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவர். அதனையே உதயன் அலுவலகத்திலும் சிறிலங்கா அரசு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிதரனின் அலுவலகத்தில்  என்ன நடந்தது என்பதை மக்கள் அறிவர். அதனையே உதயன் அலுவலகத்திலும் சிறிலங்கா அரசு செய்யும் என எதிர்பார்க்கலாம்.

எலாத்துக்கும் ஒரு பொதுவான லிங்க் இருக்கு.... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே சிறந்த புலனாய்வாளர்களைத் தன்னுடன் வைத்திருக்கும்

மகிந்த அரசு  இந்தச் சிறிய விடயத்தைக் கண்டுபிடிக்க அதிக நாட்கள் தேவையில்லைத் தான் :icon_mrgreen:   

 

யாழ் உதயன் பத்திரிகை மீதான தாக்குதலின் எதிரொலி: ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை! 


[saturday, 2013-04-13 18:51:07]

TGTE-seithy-150.jpg

 

 

இலங்கைத்தீவின் தமிழ் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகதுறையினர் மீதான தொடர்சியான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்து உடனடியாக சிறப்புக் கூட்டமொன்றினை கூட்டுமாறு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்கோரிக்கையொன்றினை விடுத்துள்ளது. ஊடகவியலாளர்களின் நிலைமை குறித்து விரைவில் தாம் ஒரு சிறப்பு சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்யப் போவதாக ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் ஏலவே தெரிவித்திருந்த நிலையில், அக்கூற்றினை மீள நினைவுபடுத்தி இக்கோரிக்கையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு விடுத்துள்ளது.

யாழ் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் மீதான தொடர்சியான தாக்குதல் சம்பவங்கள், யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர்கள் மீதான வன்செயல்கள் மற்றும் தமிழ் ஊடகவியளாலர்கள் மீதான நேரடியானதும், மறைமுகமானதுமான அச்சுறுத்தல்கள் யாவுமே , தமிழீழத் தாயகத் தமிழ் மக்களுக்கான தமிழ் ஊடகச் சூழலை முடக்கும் செயற்பாடாகவே கருதமுடியுமென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகத்துறை அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வாடிக்கையான விடயமாக மாறிவிட்டது. இதற்காக நாள்தோறும் சர்வதேசத்தினால் கண்டனங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும் அதனை சிறிலங்கா அரசாங்கம் கண்டுக்கொள்வதாக தெரியவில்லை. இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பல்வேறு அமைப்புக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும் சிறிலங்கா அரசாங்கம் அதனை உரியமுறையில் நிறைவேற்றவில்லை என ஏலவே ஐ.நா மனித உரிமைச் சபை ஆணையாளர் கருத்தினை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடக அமைச்சு ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளது. தமிழீழத் தாயகத்தினை முற்றுமுழுதாக சிங்கள அரச படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கு நான்கு பொதுமக்களுக்கு ஓரு சிங்கள படையினர் என்ற காணப்படுகின்றது. இவ்வாறான ஓர் புறச்சுழலில் நடைபெறும் சம்பவங்களின் பின் சிங்கள அரச அதிகாரமையமே உள்ளதென்பது தெட்டத்தெளிவான உண்மை எனவும் ஊடக அமைச்சர் சுதன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=80400&category=TamilNews&language=tamil

Edited by மல்லையூரான்

உதயன் மீதான தாக்குதல் அரச பயங்கரவாதத்தின் உச்சக்கட்ட அராஜகம் - சுதந்திர ஊடகக்குரல் வன்மையாகக் கண்டிப்பு! 

[saturday, 2013-04-13 17:16:26]
Voice-of-freedom-media-150.jpg

உதயன் பத்திரிகையின் தலைமை அலுவலகம் மீது இன்று இனந்தெரியாதோர் மிலேசத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உதயன் மீதான மிலேச்சத்தனமான - காட்டுமிராண்டித்தனமான - கோழைத்தனமான தாக்குதலை சுதந்திர ஊடகக் குரல் வன்மையாகக் கண்டிக்கின்றது. உதயன் மீதான தாக்குதலுடன் யாழ். மாவட்டத்தில் ஊடகங்கள் மீது இந்த வருடத்தில் இடம்பெற்ற ஐந்தாவது தாக்குதல் சம்பவம் இதுவென்பதையும் உதயன் மீது நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவென்பதையும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில், பத்திரிகையாளர்களையும் - ஊடகங்கள் மீதான தாக்குதலையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் ஊடக சுதந்திரத்தின் மீதான தனது கரிசனையையும் வெளிப்படுத்தியிருந்தது.

  

இந்தக் கரிசனை வெளிப்படுத்திய ஒரு மாத காலத்தினுள்ளேயே உதயன் பத்திரிகை மீது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் யாவும் இலங்கை அரசின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியினுள்ளேயே இடம்பெற்றுள்ளன. இருந்தும் எவரும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படாதது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி உதயன் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டார். பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி தினக்குரல் பத்திரிகையின் விநியோக ஊழியர் தாக்கப்பட்டார். வலம்புரிச் செய்தியாளர் மீது கடந்த மார்ச் 8 ஆம் திகதி இனந்தெரியாதவர்களின் கைவரிசை மீண்டும் காட்டப்பட்டது. அத்துடன் தாக்குதலாளிகளின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இதன் பின்னர் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பிராந்திய அலுவலகத்தின் மீது இனந்தெரியாத காட்டுமிராண்டிகள் உள்ளே புகுந்து விக்கெட் பொல்லுகளால் அங்கிருந்த பணியாளர்களையும், அங்கிருந்து உபகரணங்களையும் தாக்கிச் சேதப்படுத்தினர். இந்தச் சம்பவம் இடம்பெற்று அதன் அதிர்ச்சியிலிருந்து ஊடகங்கள் மீள்வதற்குள் பத்து நாள்களில் அடுத்த தாக்குதல் உதயன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் உதயன் அலுவலகத்துக்குள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி தாக்குதல் நடத்தும் அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.

ஊடகங்கள் மீது தாக்குதல் தொடர்வதற்கும், அந்தத் தாக்குதலாளிகள் இவ்வளவு சுதந்திரமாகச் செயற்படுவதற்கும் அவர்கள் மீது எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமையே காரணம். நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுபவர்களும் இந்தத் தாக்குதலாளிகளுக்கு உடந்தையாக இருக்கின்றனரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது. அந்தச் சந்தேகங்களை நியாப்படுத்துவம் விதத்திலேயே இலங்கை அரசின் செயற்பாடுகள் இருக்கின்றது.

சர்வதேச சமூகம் இலங்கையின் ஊடகங்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும். ஏனெனில் இலங்கை அரசு தாக்குதலாளிகளை பாதுகாக்கின்ற வகையில் செயற்படுகின்ற சந்தேகம் எங்களுக்கு எழுவதால் சர்வதேச சமூகம் தலையிட்டு ஊடகங்கள் மீதான தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேசம் மனித உரிமைகள் சபையில் மென்போக்கான தீர்மானத்தை கொண்டு வருவதாலும், வெறுமனே அறிக்கைகளை வெளியிட்டு கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டிருப்பதாலும் இந்தத் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட போவதில்லை. இலங்கை அரசை கண்டிக்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்தால் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே இலங்கையின் கருத்துச் சுதந்திரத்தை - ஊடக சுதந்திரத்தை - பாதுகாக்க முடியும். இதற்குரிய நடவடிக்கைகளை சர்வதேசம் விரைந்து எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம்.

செயலாளர்

(கு.டிலீப்அமுதன்)

http://www.seithy.com/breifNews.php?newsID=80382&category=TamilNews&language=tamil

உதயன் மீதான தாக்குதல்' முழு பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷ அரசு ஏற்க வேண்டும்: - ஐக்கிய தேசியக் கட்சி 

[saturday, 2013-04-13 16:20:58]
Tissaatanayake150seithy.jpg

மக்கள் புலிகள் தீவிரவாதத்தை தோற்கடித்தது போன்று அரசாங்க தீவிரவாதத்தை தோற்கடிக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. யாழ். உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

  

சாந்தி, சமாதானம் ஏற்படுத்தும் தமிழ்-சிங்கள புதுவருடம் பிறக்கவுள்ள நிலையில் இன்று (13) அதிகாலை யாழ், உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த சிலர் அதன் அச்சுஇயந்திரத்திற்கு துப்பாக்கிச்சூடு நடாத்தி, கட்டடத்திற்கு தீ வைத்துள்ளனர்.

இது சிறுகுணம் படைத்தவர்கள் செய்த செயல் இது. நாட்டின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலில் முழு பொறுப்பையும் மஹிந்த ராஜபக்ஷ அரசு ஏற்க வேண்டும். குறுகிய காலத்தில் உதயன் பத்திரிகை மீது நடாத்தப்படும் 4வது தாக்குதல் இதுவாகும் என்று திஸ்ஸ அத்தநாயக்கவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=80374&category=TamilNews&language=tamil

யாழ். உதயன் பத்திரிகை அச்சகம் மீது ஆயுததாரிகள் தாக்குதல்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 ஏப்ரல், 2013 - 09:20 ஜிஎம்டி
130413091912_uthayan_attacked_304x171_bb

யாழ். தமிழ்ப் பத்திரிகைகள் மீது கடந்த காலங்களில் தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணத்தில் தமிழ்ப் பத்திரிகையான உதயன் நாளிதழின் அச்சகம் ஆயுததாரிகளால் தாக்கி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

ஆயுததாரிகள் அச்சு இயந்திரங்களை துப்பாக்கியால் சுட்டு சேதப்படுத்தியுள்ளதுடன் பெற்றோல் ஊற்றி எரித்துள்ளதாக உதயன் நாளிதழின் பணியாளர்கள் கூறுகின்றனர்.

யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள உதயன் அலுவலகம் மற்றும் அச்சகத்துக்குள் நுழைந்த முகமூடி அணிந்த ஆயுததாரிகள் அச்சகப் பணியாளர்களையும் பாதுகாப்பு ஊழியர்களையும் ஆயுதமுனையில் அச்சுறுத்திவிட்டே தாக்குதலை நடத்தியுள்ளனர்.
'தம்மைத் தாமே தாக்கிக் கொள்கிறார்கள்': அமைச்சர் டக்ளஸ்
 

சம்பவ நேரம் ஞாயிற்றுக்கிழமை பிரசுரத்துக்காக அச்சாகிக் கொண்டிருந்த பிரதிகள் நாசமாக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமைக்கான பத்திரிகை பிரதிகள் விநியோகத்திற்காகச் சென்றிருந்தனால், அவை சேதப்படுத்தப்படாமல் தப்பிவிட்டன.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் உதயன் பத்திரிகைக்கு ஒன்றரை கோடி ரூபா நட்டமேற்பட்டிருப்பதாக பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.வி.கானமயில்நாதன் யாழ் காவல்துறையிடம் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவித்திருக்கின்றார்.

இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், தாக்குதலுக்கு உள்ளான அச்சகப் பகுதியைப் பார்வையிட்டு புலன் விசாரணைகளை நடத்துவதற்காக கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வாளர்கள் வர வேண்டியிருப்பதாகக் கூறி, அந்தப்பகுதியை மூடி சீல் வைத்துள்ளனர்.

தமிழ்ப் பத்திரிகைகள் மீது தொடர் தாக்குதல்கள்

உதயன் பத்திரிகையின் குரல்வளையை நசுக்கும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பத்திரிகையின் உரிமையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ்க் கூட்டமைப்பு கண்டனம்

வட பகுதியில் ஜனநாயகத்திற்கு மூடுவிழா நடத்தும் நோக்கத்துடனேயே உதயன் உள்ளிட்ட யாழ். தமிழ்ப் பத்திரிகைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மட்டும் தமிழ்ப் பத்திரிகை அலுவலகங்களையும் விநியோகஸ்தர்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஐந்தாவது தாக்குதல் இதுவென்று பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த 3 ஆம் திகதி இந்தப் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதன் முகாமையாளர் உட்பட மூவர் காயமடைந்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உதயன் பத்திரிகையின் மூத்த ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த அலுவலகத்தினுள் புகுந்து ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு பணியாளர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/04/130413_uthayanpress.shtml

Edited by மல்லையூரான்

4441048260%20%2811%29%2826%29.jpg2013-04-12 23:58:44 உதயன் பத்திரிகை மீதான தாக்குதலில் 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேமானந்தன் யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய பொறப்பதிகாரி சமன் சிகேரா இன்று தெரிவித்தார்.

 
யாழ். கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் பத்திரிகை அச்சிடும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கி தாரர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலில், தாக்குதல் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை பதிவு செய்யும் போதே, இத்தாக்குதலினால், தமது நிறுவனத்திற்கு  2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

 

உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது தாக்குதல்: - ஐ.நா. பேரவை தலையிட தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 

[saturday, 2013-04-13 16:01:15]
Thiruma-150-A.jpg

யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழ் அலுவலகத்தின் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தலைக்கவசம் அணிந்து துப்பாக்கிகளோடு அலுவலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியும் அங்கிருந்த ஊழியர்களைத் தாக்கியும் விரட்டியடித்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த அச்சு இயந்திரங்கள் மற்றும் பத்திரிகை அச்சிடுவதற்குரிய காகிதங்கள் போன்றவற்றை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் அந்த நாளேடு செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  

கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் ஊடகத்தினர் மீது தொடுக்கப்படும் ஐந்தாவது தாக்குதல் இது. அரசாங்கத்தின் ஆதரவோடும் இராணுவத்தின் தூண்டுதலோடும் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் ஊடகச் சுதந்திரம் முற்றாகப் பறிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா. பேரவை உடனடியாக இதில் தலையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

இலங்கையிலுள்ள இராஜபக்சே அரசை விமர்சிக்கிற ஊடகங்களின் மீது தொடர்ந்து இவ்வாறு கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, இலங்கையைச் சேர்ந்த 23 ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறி அயல்நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிங்கள இனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும்கூடத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உலகிலேயே ஊடக சுதந்திரம் மிக மோசமாக இருக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. கடந்த மாதத்தில் ஐ.நா. மனிதஉரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமும்கூட அங்கு நடைபெற்றுவரும் வன்செயல்களைக் கட்டுப்படுத்த உதவவில்லை. அந்தத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லையென்றும், ஐ.நா. கூறியபடி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க முடியாது என்றும் இராஜபக்சே அரசு திமிர்த்தனமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் எஞ்சியிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை ஐ.நா. பேரவைக்கு உள்ளது.

அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களும்கூட இலங்கை அரசாங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. இதுவரை, 5 இணையதளங்கள் மூடப்பட்டுள்ளன. 2 இணைய தள அலுவலகங்களில் இராணுவத் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. புகழ்பெற்ற பிபிசி வானொலியும்கூட இலங்கை அரசால் அச்சுறுத்தப்பட்டு சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போதான இனப்படுகொலை வெளிஉலகுக்குத் தெரியாதவண்ணம் எப்படி ஊடகங்களை இலங்கை அரசு கட்டுப்படுத்தியதோ, அதுபோலவே இப்போதும் செய்துகொண்டுள்ளது. இது இலங்கையில் வாழும் அனைத்துத் தரப்பினருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இலங்கையைக் கண்டிக்க வேறு எந்த நாடும் முன்வராத நிலையில் ஐ.நா. பேரவை தலையிடுவதைத் தவிர வேறுவழியில்லை. அங்கு மிச்சம் மீதி இருப்பவர்களும் கொன்றொழிக்கப்பட்ட நிறகு தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே இனியும் காலந்தாழ்த்தாமல் உடனடியாக ஐ.நா. பேரவை தலையிட்டு இலங்கையில் ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பாக ஐ.நா. பேரவைச் செயலாளருக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கும் கடிதங்கள் எழுதப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

தொல். திருமாவளவன்

http://www.seithy.com/breifNews.php?newsID=80371&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திய பார்க்க .....

கன்பர்ம் பண்ண கூடியதா இருக்கு .....

தொடர்பு இருக்கு எண்டு,

மூணாம் தரப்ப வச்சு கூட செய்திருக்கலாம். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்திய பார்க்க .....

கன்பர்ம் பண்ண கூடியதா இருக்கு .....

தொடர்பு இருக்கு எண்டு,

மூணாம் தரப்ப வச்சு கூட செய்திருக்கலாம். :)

 

மூன்றாம் தரப்பெண்டால் டக்ளசோ மதிவதனங்

செய்திய பார்க்க .....

கன்பர்ம் பண்ண கூடியதா இருக்கு .....

தொடர்பு இருக்கு எண்டு,

மூணாம் தரப்ப வச்சு கூட செய்திருக்கலாம். :)

12 மணித்தியாலத்தில் DNA செய்து கன்பர்ம் பண்ணியவர்களாயிற்றே. இதை பார்த்த உடனேயே கன்பார்ம் செய்யிறாங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாம் தரப்பெண்டால் டக்ளசோ மதிவதனங்

 

நீங்கள் அடிக்கடி முனுமுனுககிரதால லிஸ்டில முதலில இருக்குமெண்டு யோசிச்சன் ... கவுத்து போட்டியள்.....  :lol: :lol:

நீங்கள் அடிக்கடி முனுமுனுககிரதால லிஸ்டில முதலில இருக்குமெண்டு யோசிச்சன் ... கவுத்து போட்டியள்.....  :lol: :lol:

லிஸ்டிலை டொப்பு மதிவதனங் தான். அதனால் அவருக்கு மூனாம் தரபாக போகாரு. அவரு முதலாம் தரப்பு.

 

உங்களுக்கு சொன்னால் என்ன. நாம இப்போ பேசுகிறது மூன்னாம் தரப்பு வைச்சு செய்கிற மாட்டேஸ் பற்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

1000449571tblarasiyalnews_95481073857.jp

ஒரு எம்பியின் பத்திரிகை நிறுவனத்திற்கே பாதுகாப்பு இல்லை பின் தமிழ் மக்களுக்கு எப்படி..?

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 

’’இன்று (ஏப்ரல் 13ஆம் திகதி) அதிகாலை 4 மணி அளவில், யாழ்ப்பாணத்தில் கஸ்தூரியா தெருவில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஏ.கே.47 உள்ளிட்ட ஆயுதம் தாங்கிய குண்டர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி, அங்கு பணியாற்றியவர்களை அடித்து விரட்டி விட்டு, அங்குள்ள அச்சு இயந்திரங்களை உடைத்து நொறுக்கி தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். 

2006 ஆம் ஆண்டு மே 3ஆம் திகதி, இதே உதயன் பத்திரிகை அலுவலகத்துக்குள் சிங்கள இராணுவத்தினர் நுழைந்து, துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். 

இந்த யாழ்ப் பகுதி சிங்கள இராணுவத்தின் ஜெனரல் ஹத்துருசிங்க கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவர் தனிக் கூலிப்படை வைத்து அக்கிரமம் செய்வதாக முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில்தான் குற்றம் சாட்டினார். 

நேற்று இலங்கை பாராளுமன்றத்திலும் இதுபற்றி குற்றம் சாட்டியுள்ளார். உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரான சரவணபவன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்று நடந்த தாக்குதலை சிங்கள இராணுவத்தினரே செய்துள்ளனர். 

அண்மையில்தான் கிளிநொச்சியில் உள்ள உதயன் பத்திரிகை அலுவலகம் சிங்களவர்களால் தாக்கப்பட்டது. அதுவும் இராணுவத்தினரின் வன்முறையாகவே தெரிகிறது. கிளிநொச்சி அலுவலகத்துக்கு இலங்கை அரசிடம் பாதுகாப்புக் கேட்டும் இதுவரை கொடுக்கப்படவில்லை. 

தமிழர்களின் பத்திரிகை அலுவலகங்களை தீயிட்டுக் கொளுத்துவதும், இயந்திரத் துப்பாக்கிகளால் சுடுவதும் சிங்கள இராணுவத்தினுடைய கொடுஞ்செயலே ஆகும். 

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பத்திரிகை அலுவலகத்துக்கே இந்த நிலைமை என்றால், தமிழ் ஈழத்தில் வாழும் தமிழர்கள் உயிருக்கும் உடமைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை என்பதும், சிங்கள இராணுவத்தின் அராஜகம் தமிழ் ஈழத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து சிங்கள இராணுவமும் பொலிஸும் முற்றாக வெளியேற்றப்பட்டாக வேண்டும். ஐ.நா. மன்றமும், அனைத்துலக நாடுகளும் அந்த நிலைமையை ஏற்படுத்த முன்வர வேண்டும். 

இலங்கைத் தீவில், தமிழ் ஈழத்தில் உள்நாட்டுப் பத்திரிகைகளோ, தொண்டு நிறுவனங்களோ சுதந்திரமாக செயல்படவே முடியாது. மனித உரிமைகள் சிங்களவரால் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன என்பதை அனைத்துலக சமுதயாம் எண்ணிப் பார்த்து, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்தும் சிங்கள அரசின் இக்கொடுமை இன்னும் தொடர்வதை தடுத்து நிறுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.