Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் - அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் - அமெரிக்கா
14 ஏப்ரல் 2013
உதயன் பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமேன அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
 
நம்பகமானதும், சுயாதீனமானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
 
ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கத் தூதரகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
 
நேற்றைய தினம் காலை உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/90743/language/ta-IN/article.aspx

ஐயோ வேண்டாம்... மீண்டும் சுயாதின விசாரணை வைக்கச்சொல்லி இன்னொரு பிறேரினையை கிளப்பவேண்டாம். 

நீங்கள் பிறேரினையை கொண்டுவாறதும் பிறகு இந்தியா வந்து தடுக்கிறதும்.. எல்லாம் பகிடிக்கு என்று நீங்கள் சிங்களவனோட சிரிப்பதும்.. வேண்டாம் இனிமேலும் இந்த நாடகம்.

நடுநிலையான சர்வதேச குழு ஒன்று இவ்விடயத்தை சுதந்திரமாக ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டால் நன்று.

" புலம்பெயர் விசைப்பலகை புலிகளும் தமிழ் தேசியவாதிகளும் மௌனமாக இருந்து சிங்கள அரசின் ஆட்சிக்குள்  வாழும் தமிழர்களை நிம்மதியாக வாழ விடுவதே சிறந்தது "  :wub:  :(

இதில் யாரையும் பிழை சாட்டமுடியாது. அமெரிக்காவின் சென்ற காலம் அமெரிக்காவுக்கு மிகப்பயங்கர தீமையை ஏற்படுத்திவிட்டுத்தான் போயிருக்கு. இதிலிருந்து மீளாமல் அமெரிக்காவால் இலங்கையில் எந்த நடு நிலைமையையும் வகிக்கும் வலு அமெரிக்காவுக்கு இல்லை.இந்த வசனத்தை இலங்கை பகிடியாக மட்டும்தான் எடுக்கும் என்று அமெரிக்கவுக்குத் தெரியும். எனவே இதை இலங்கைக்கு அமெரிக்காவின் ஆலோசநையாக மட்டும் பார்க்கலாமே தவிர கோரிக்கையாக கொள்ள முடியாது.

கெரி அமெரிக்காவுக்கு நல்ல தெரிவு. அநாவசியமாக கொண்டிடிலீசா, கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளை சீண்டி அமெரிக்காவுக்கு எதிரிகளாக மட்டும் மாற்றியிருந்தா. பலமான கிளின்ரன் பிரதானமா செய்தது அமெரிக்க உறவுகள் மேலும் தாழ்வடைந்து அமெரிக்காவை மற்றைய நாடுகள் மலிவாக எடுப்பதை தடுத்து நிறுத்தியமையே. அவ பிரதானமாக சீனா தனது  நிதிகொள்கையை வைத்து மலிவாக விற்று முன்னேறிய நாட்டு பொருளாதாரங்களை சுரண்டுவதை நிறுத்த முயன்றமையே. எனவே கிளின்ரன் காலத்தில் பழைய அரசில் கெடுபட்டுபோயிருந்த அமெரிக்க உறவுகளுக்கு புதிய முடிச்சு போடும் முயற்சி நடை பெறவில்லை. இதனால் கெரி வருவதை ஒபாமா வரவேற்றார். தமிழர் பாகம் அவர்களின் பிரச்சனையில் மிக சிறியது. எனவே தமிழர் சம்பந்தமான கெரியின் கொள்கை கெரி வருவதில் தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் மத்தியவங்கி புதிய இரண்டு லொபி கம்பனிகளை ஒரு மில்லியன் $ வருடத்திற்கு என்ற செலவில் சேவைக்கு அமர்த்தியிருக்கு. கடனாளியான இலங்கை, அமெரிக்காவிடம் பண உதவிக்கு போகாமல், அமெரிக்க கொளகைகளை  மாற்ற வருடம் இத்தகைய பணத்தை செலவு செய்ய முன் வரும் போது அந்த பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி மிகப்பெரியது.

மேலும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் சட்டப்படி அல்லாத காவல் கம்பனியான பொது பல சேனை நியூயோர்க்கில் தனது கிளையை திறந்திருக்கிறது. அதாவது பாதுகாப்பு அமைச்சு தனது கிளையை நியூயோர்க்கில் திறக்க முடியாது. எனவே பொது பல சேனை  இந்த கிளையை திறக்கிறது. இது பாதுகாப்பு அமைச்சு அமெரிக்க நடத்தைகளை மிக நெருக்கமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க இருக்கிறது என்பதைத்தான் காட்டுகிறது. 

கெரி தனது பொங்கல் பேச்சில் திரும்பவும் பொறுப்பு கூறலை பற்றி பிரஸ்தாபித்திருந்தார். அது ஒன்றும் புதியதல்ல. இது போர் முடிந்தவுடன் பிளேக் கூறிய வசனம். பல புலம் பெயர் அமைப்புகள் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்தும், இன்னமும் போர்குற்றவிசாரணை மீது நம்பிக்கை வைத்திருப்பதன் காரணம் மேற்கு நாடுகள் இந்த பொறுப்பு கூறலை நடு நிலைமையாக கொண்டு வரும் என்று நினைத்தே. இதில் தமிழர் தரப்பும் விசாரிக்கப்பட்ட வேண்டும் என்ற மேற்கு நாடுகளின் வலியுறுத்தலை தமிழர் தரப்பும் ஏற்றுக்கொள்வதால் இதில் சர்வதேசத்திடமிருந்து எதாவது நடை பெறலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். அங்கே நாம் கேட்பது சர்வதேச விசாரணை. ஆனால் இலங்கையில் தொடரும் அட்டூளியங்களுக்கு எதிராக ஒரு விசாரணை வரவேண்டுமாயின் அதற்கு 18ம் திருத்தம் மாற்றப்படவேண்டும். இன்றைய அட்டூளியங்கள் 18ம் திருத்தத்தின் கீழ் நடை பெறுபவை.  போர்க்குற்றம் சர்வதேச சட்டங்களின் கீழ் வருவது.அதுவும்,  இதுவும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை அல்ல. 

மாசியில் வன்னியில் காணாமல் போனோரின் உறவுகளை ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல்  இலங்கை தடுத்தது. அமெரிக்கா அது பற்றி கதைத்தது.  எது இருந்தும் இலங்கையின் போக்கில் எந்த மற்றமும் இருக்கவில்லை. அதை இலங்கை பகிடிக்கதையாக மட்டும்தான் எடுத்தது. அது போன்ற நடத்தை ஒன்றையே இதற்கும் எதிர் பார்க்கலாம். 

இதில் அமெரிக்கா வகிக்கத்தக்க பங்கு அமெரிக்க பொருளாதாரத்தடை ஒன்றை கொண்டுவருவதனால் ஆகும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் ம் ம் ம் ....... அடுத்த தீர்மானத்துக்கும் வழி பிறந்திட்டுது .... :)

" புலம்பெயர் விசைப்பலகை புலிகளும் தமிழ் தேசியவாதிகளும் மௌனமாக இருந்து சிங்கள அரசின் ஆட்சிக்குள்  வாழும் தமிழர்களை நிம்மதியாக வாழ விடுவதே சிறந்தது "  :wub:  :(

அகுதா இந்த வசனத்தை எங்கிருந்து பெற்றர் என்பது தெரியவில்லை. இதை நடைமுறைப்படுத்த தான் உதயனுக்கு தீ வைக்கபட்டத்தாக சுரேஸ் பிரேம சந்திரன் கூறுகிறார்.

இது தாயக தமிழரை மிரட்டும் நோக்கில் செய்யபட்டதல்ல.  அவர்கள் ஏற்கனவே அடக்கப்பட்டுவிட்டார்கள். இது அவர்களுக்காக பேசும் சர்வதேச நாடுகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் மிரட்டல் விட செய்யபட்டதொன்றே.

தட்டச்சு தளபதிகள் .... விசைப்பலகை வீரர்கள் .... ஆய்வு பண்டிதர்களுக்கு வேலை வேண்டாமோ ????????

  :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

அதுதானே இனி எதற்கு உதயன் மாதிரி பத்திகைகள். விசைபலகையில் மலிதிருக்கும் ஒற்றை வரிச் சப்பல் உதயனில் போட முடியாதே.

திரிக்கு திரி தடுமாறும் விதம் நாங்கள் எழுவதும் சிலரை பிசியாகத்தான் வைத்திருக்கிறது என்று காட்டுகிறது. 

வருக்கைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வற்புறுத்தும் சுயாதீன விசாரணைக் குழுவிற்கு

தலைவராக டக்லஸ் அவர்களை  நியமிக்க வேண்டும் எனவும்

அறிவுரை கூறலாம்

உதயன் தாக்குதல்: சர்வதேச சமூகம் கண்டன அறிக்கைகளை விடாது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சுரேஸ்

4b2fc0ec-6ce3-48a6-8d80-b37498ba4fe61.jp

சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளர்களாக இருந்து  கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல் இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வடக்கில் ஜனநாயகத்தைப் பாதுகாக்காமல் காட்டாட்சி நடத்தும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியிலிருந்து விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

'யாழில் உதயன் பத்திரிகை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதான அலுவலகத்திற்குள் புகுந்த குண்டர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அச்சு இயந்திரத்தை தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரச தரப்பே செய்தது. 24 மணி நேரமும் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறன துணிகர வேலையை வேறு யாரினாலும் மேற்கொள்ள முடியாது. எனவே, சிறிலங்கா அரசாங்கமே இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும்

உதயன் பத்திரிகையின் பிரதான அலுவலகம் மீதான இந்தத் தாக்குதல் சம்பவம் தமிழ் மக்களிடம் மிச்சமாக இருந்த ஜனநாயக உரிமையையும் பறிப்பதாக இருக்கின்றது.

யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக ஊடகங்கள் மீது சிறிலங்கா அரச தரப்பு தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான முறையில் தாக்குதல்களை நடத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கி தமிழ் மக்களின் அபிலாசைகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகின்றது.

வடமாகாண சபைத் தேர்தல் நெருங்கும்  நிலையில் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வாளர்கள், ஒட்டுக்குழுவினர் ஆகியோரை உள்ளடக்கிய காடையர்களைக் களமிறக்கி ஊடகங்கள் மீதான தாக்குதலை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வைத்திருக்கிறது. இதனை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

வெறும் பார்வையாளர்களாக இருந்து  கண்டன அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல் இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன், வடக்கில் ஜனநாயகத்தைப் பாதுகாக்காமல் காட்டாட்சி நடத்தும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உடனடியாகப் பதவியிலிருந்து விலகவேண்டும்' என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, கொழும்பில் நான்காம் மாடிக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமாறு சிறிலங்காவின் குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரால் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக குற்றவியல் சட்டகோவையின் பிரகாரம் கோப்பாய் பொலிஸாரின் ஊடாக அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அழைப்புக் கடிதம் கடந்த வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில்தான் அவருக்கு கிடைத்திருந்தது. அவர் அச்சமயம் யாழ்ப்பாணத்தில் நின்றதாலும், வாகனச் சாரதி இல்லாமையினாலும் அவரால் இந்த விசாரணைக்கு செல்ல முடியவில்லை.

இந்நிலையில், விசாரணைக்கு செல்வதற்கான மாற்றுத் திகதி ஒன்றை எடுத்துத் தருமாறு கோப்பாய் பொலிஸாரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துளளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=4b2fc0ec-6ce3-48a6-8d80-b37498ba4fe6

அகுதா இந்த வசனத்தை எங்கிருந்து பெற்றர் என்பது தெரியவில்லை. இதை நடைமுறைப்படுத்த தான் உதயனுக்கு தீ வைக்கபட்டத்தாக சுரேஸ் பிரேம சந்திரன் கூறுகிறார்.

இது தாயக தமிழரை மிரட்டும் நோக்கில் செய்யபட்டதல்ல.  அவர்கள் ஏற்கனவே அடக்கப்பட்டுவிட்டார்கள். இது அவர்களுக்காக பேசும் சர்வதேச நாடுகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் மிரட்டல் விட செய்யபட்டதொன்றே.

உண்மை மல்லையூரான். புலம்பெயர் தமிழர்களை அடக்கிவிட்டால் சிங்களத்தின் மிகுதி வேலைகள் இலகுவாகிவிடும்.

ஆனால், எம்மில் சிலர் தெரிந்தும் பலர் தெரியாமலும் பலவேறு முத்திரைகளை குத்தி பலரையும் 'நமக்கு ஏன் இந்த வேலை' என எண்ண  வைத்து ஒதுக்கி விட வழி சமைத்து விடுகின்றார்கள்.

தவறுகள் செய்தால் முதலில் அதை உறுதிப்படுத்தி அந்த அமைப்பின் வரையறைகளுக்குள் அமைய நடவடிக்கை எடுப்பதே ஆரோக்கியமானது.

இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலை மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரச தரப்பே செய்தது. 24 மணி நேரமும் சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் யாழ்ப்பாணத்தில் இவ்வாறன துணிகர வேலையை வேறு யாரினாலும் மேற்கொள்ள முடியாது. எனவே, சிறிலங்கா அரசாங்கமே இதற்கு முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும்

இந்த தாக்குதல் சிங்கள அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தாக்குதல் என்று தெரியவருகிறது. வேறுவழியின்றி வடக்கு மாகாணசபை தேர்தலை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் போலிப் பிரச்சாரங்கள் மூலம் மக்களை குழப்பி, கள்ள வோட்டுக்கள் மூலம் வெற்றிபெற அரச பயங்கரவாதிகள் மேற்கொண்டுவரும் ஒரு முயற்சியின் ஓரங்கமே உதயன் மீதான தாக்குதல்.

இவ்வாறான ஒரு பயங்கரவாத நடவடிக்கையை எடுக்க, வடக்கில் நிலைகொண்டிருக்கும் பயங்கரவாதிகளான ஹத்துருசிங்க, சந்திரசிறி, டக்லஸ் ஆகிய மூவரும் முடிவெடுத்ததாக தெரியவருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.