Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி - இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் அலரி மாளிகையில் சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பதினைந்து இராஜதந்திர தலைவர்கள் இன்று புதன்கிழமை மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

 

பங்களாதேஷ், ஈரான், எகிப்து, இந்தோனேசியா, குவைத், மலேசியா, மாலைதீவு, நைஜீரியா, பலஸ்தீனம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

 

இச் சந்திப்பில் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை மேலும் அதிகளவில் அபிவிருத்தியடைவதை காண விரும்புகின்றோம். மற்றும் வேறொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் அனுமதிப்பதில்லை என தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

 

இதேவேளை, நாட்டில் இன அல்லது மத ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கு எவருக்கும் அரசாங்கம் இடமளிக்காது. அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக எவரிடமாவது நிரூபிப்பதற்கு சாட்சியங்கள் இருப்பின் இத்தகைய தகவல்களை அவர்கள் வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

குறிப்பாக கடந்த மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் போது இஸ்லாமிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4027

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிஞ்ச அளவுக்கு முஸ்லீம் பிரச்சனைய ஊதி பெருப்பிச்சு கூட .... மசிய மாட்டன் எண்டுறாங்கள்......

-------..... நடிக்கிறாங்களோ தெரியாது .....   :)

 

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

ஒருபக்கம் இவர்களுடன் சந்திப்பு

இன்னொரு பக்கம் இவர்களுக்கு எதிராக தாக்குதல்கள்

 

இப்படி கேம் விளையாட  சிங்களவனால் மட்டுமே முடியும் :(

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

 

இச் சந்திப்பில் உரையாற்றிய பலஸ்தீன தூதுவர், இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு அமைதி நிலவுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை மேலும் அதிகளவில் அபிவிருத்தியடைவதை காண விரும்புகின்றோம். மற்றும் வேறொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நாம் அனுமதிப்பதில்லை என தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

 

 

 

பலஸ்தீனப் பிரதிநிதி ரெம்ப ரெண்ஸன் பாட்டி போல..!

 

சொந்த வரலாற்றையும் மறந்து.. தாங்கள் செய்யுறதையும் மறந்து.. கடந்த காலங்களில் தமிழ் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கியதையும் மறந்து.. ஏதோ தமிழர்களின் போராட்டத்தால் பலஸ்தீனம் இஸ்ரேலிடம் மட்டியிட வேண்டி வந்த கணக்கா அளக்கிறார்... ரெம்ப துள்ளாதீங்கப்பு. அப்புறம் இதுவே இஸ்ரேலால் உங்களுக்கு ரிப்பீட்டு ஆகும்..! :lol:

 

 

ஏனோ தெரியல்ல.. நம்மாக்கள் இப்பவும் பலஸ்தீனியர்களின் விடுதலையில் ஒரு அநுதாபத்தைக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களோ..?????!

 

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக இனங்காட்டியது மேற்கு நாடுகள் என்றாலும்.. அவற்றை விட தீவிரமா அதை அழிக்கிறதில் முன்னாள் இன்னாள் கம்னீசிய நாடுகள் உறுதியாக இருப்பதும் கொசாவோ.. பி கே கே தவிர மற்ற போராடும் அமைப்புக்கள் எங்களையே பயங்கரவாதம் என்பதும் நகைப்புக்கிடமாக உள்ளது. என்னே வேடிக்கை மனிதர்கள்..! :(:rolleyes:

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.