Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாஸ்டன் சந்தேகநபர்களில் ஒருவர் சுட்டுக்கொலை; மற்றவரைத் தேடி போலிஸ் வலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

130419084335_boston_304x171_getty_nocred

அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது நடந்த குண்டுத்தாக்குதல் தொடர்பில் அமெரிக்க காவல்துறையினர் சந்தேகநபர் ஒருவரை இலக்குவைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
 
முக்கிய பல்கலைக்கழகம் ஒன்றில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் பெரும் தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
 
தொடர்புடைய விடயங்கள்
 
துஷ்பிரயோகம், மனித உரிமை, தாக்குதல், வன்முறை
பாஸ்டனிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரொன்றை விரட்டிச் சென்று தாக்குதல் நடத்தியதில் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
பாஸ்டன் மராத்தன் குண்டுவெடிப்பு தொடர்பில் வெளியாகியுள்ள படங்களில், வெள்ளைநிற பேஸ்பால் தொப்பியொன்றை அணிந்தவாறு காணப்படும் சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளார்.
 
நேற்று வியாழக்கிழமை மாலை, மஸாச்சூசெட்ஸ் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பட்டிருந்தாக காவல்துறை கூறுகிறது.
 
சந்தேகநபர்கள் துப்பாக்கிமுனையில், காரொன்றை உரிமையாளருடன் சேர்த்து கடத்திச் சென்றிருந்தனர்.
 
பின்னர், அவர்கள் கார் உரிமையாளரை விடுவித்துவிட்டு தப்பிச் சென்றனர்.
வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரை நிறுத்துவதற்கு முன்னதாக அவர்கள் போலிசாருடன் துப்பாக்கிச் சண்டடையில் ஈடுபட்டதுடன், கைக்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.
 
பின்னர், அவர்களைத் துரத்திச் சென்று சுட்டதிலேயே சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
 
அதிகாரி ஒருவர் இந்த துப்பாக்கிச் சண்டையில் மோசமாக காயமடைந்துள்ளார்.
பாஸ்டன் குண்டுவெடிப்பு தொடர்பிலான படங்களில் வெள்ளைத் தொப்பி அணிந்திருந்த, இரண்டாவது முக்கிய சந்தேகநபரையே தேடிவருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130419_bostonbomb.shtml

 

- இருவரும் சகோதரர்கள்

- இவர்கள் உருசியாவின் செச்னிய (முஸ்லீம் பிராந்தியம்) பகுதிகளில் இருந்து வந்தவர்கள்

பாஸ்டன் குண்டுவெடிப்பு: போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் செசன்ய தீவிரவாதி சாவு- சகோதரனுக்கு வலை

 

பாஸ்டன்: அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் நடந்த மாரதான் போட்டியில் குண்டு வைத்தது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஒரு தீவிரவாதி போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானான். இன்னொரு நபரான அவனது தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த இருவரும் செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19). இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள். இருவருக்கும் அல்கொய்தாவுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது.

போலீசுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அண்ணனான தமேர்லான் பலியாகியுள்ளார். ஷோக்கர் தப்பியோடிவிட்டார். அவரைப் பிடிக்க ஆயிரக்கணக்கான போலீசார் களத்தில் இறங்கியுள்ளனர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய இந்த இருவரது படங்களையும் அமெரிக்க விசாரணை அமைப்பான எப்பிஐ வெளியிட்டது. சம்பவம் நடந்த பாயில்ஸ்டன் தெருவில் உள்ள சிசிடிவிக்களில் பதிவாகியுள்ள வீடியோக்களை வைத்து இரண்டு நபர்கள் மீது எப்பிஐக்கு சந்தேகம் ஏற்பட்டது.
 

http://tamil.oneindia.in/news/2013/04/19/world-captured-boston-marathon-bomb-suspect-is-dead-173752.html

 

பின்லாடனை அழித்தாலும், மேற்குலகம் குறிப்பாக அமேரிக்கா இன்றும் தீவிரவாதத்தை எதிர்நோக்கியவண்ணம் உள்ளது. போஸ்டன் நகரம் முழுமையான பிசாசு நகரமாக உள்ளது. பாடசாலைகள், கடைகள் எல்லாம் மூடப்பட்டு நகரம் வெறிச்சோடி உள்ளது.

 

அதேவேளை தமிழர்களையும் பயங்கரவாதிகள் என அமெரிக்காவும் மேற்குலமும் கூறி இருந்தாலும் என்றுமே அவர்கள் இந்த நாடுகளுக்கு எதிராக செயல்பட்டதில்லை, செயல்படப்போவதும் இல்லை.

படங்களை பார்க்க.

http://usnews.nbcnews.com/_news/2013/04/19/17824010-photos-from-bostonians-locked-down-amid-terror-hunt?lite

 

மத்திய விசாரணை பொலிசின் தளத்தில் உள்ள படங்கள்.

http://www.fbi.gov/news/updates-on-investigation-into-multiple-explosions-in-boston/updates-on-investigation-into-multiple-explosions-in-boston

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்டன் மாரத்தன் குண்டுவெடிப்பு: இரண்டாவது சந்தேக நபர் சுற்றிவளைப்பு

 

அமெரிக்காவில் பாஸ்டன் மராத்தன் போட்டியின்போது குண்டுவைத்ததாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவர் பதுங்கியுள்ளதாக நம்பப்படும் கட்டிடத்தை அமெரிக்க காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

பிடிபடாமல் இருந்துவருபவர் ஸோகார் சர்னயேவ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

 

இவர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

இவர் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிசார் எச்சரித்திருந்தனர்.

சந்தேகநபர்களில் மற்றவர் நேற்றிரவு பொலிசாருடன் நடந்த துப்பாக்கி மோதலில் கொல்லப்பட்டிருந்தார். சர்னயெவ்வின் சகோதரான டமேரியன் இவர் என்று நம்பப்படுகிறது.

130419143033_zhokhaar304.jpg

இரண்டாவது சந்தேகநபர் ஸோகர் சர்னயெவ்

பாஸ்டன் மாரத்தன் போட்டியின் நிறைவுக் கோட்டுக்கு அருகே இருந்த இந்த இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்களை வியாழன் மாலை பொலிசார் வெளியிட்டனர்.

அதனையடுத்து கேம்பிரிஜ் என்ற இடத்தில் ஒரு கடையில் கொள்ளை நடந்தபோது இவர்களில் ஒருவர் அங்கும் காணப்பட்டிருந்தார்.

அங்கு அனுப்பப்பட்ட ஒரு பொலிஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, இருவரையும் பொலிசார் துரத்த ஆரம்பித்திருந்தனர்.

தப்பியோடிய சந்தேக நபர்கள் துப்பாக்கி முனையில், காரொன்றை உரிமையாளருடன் சேர்த்து கடத்திச் சென்றிருந்தனர்.

பின்னர், அவர்கள் கார் உரிமையாளரை விடுவித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

வாட்டர்டவுன் என்ற இடத்தில் காரை நிறுத்துவதற்கு முன்னதாக அவர்கள் போலிசாருடன் துப்பாக்கிச் சண்டடையில் ஈடுபட்டதுடன், கைக்குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.

பின்னர், அவர்களைத் துரத்திச் சென்று சுட்டதிலேயே சந்தேகநபர் ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

அதிகாரி ஒருவர் இந்த துப்பாக்கிச் சண்டையில் மோசமாக காயமடைந்துள்ளார்.

கடந்த திங்களன்று பாஸ்டன் மாரத்தன் போட்டிகளில் நிறைவுக் கோட்டுக்கு அருகே இரண்டு குண்டுகள் வெடித்திருந்தன.

இதில் மூன்று பேர் கொல்லப்பட்டும் நூற்று எழுபதுக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர்.

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130419_bostonbomb.shtml

article-0-1961D594000005DC-907_964x629.j

article-0-1961B2B1000005DC-966_964x635.j

article-0-1961C021000005DC-219_964x618.j

article-2311443-1962A4D3000005DC-986_964

 

Edited by purmaal

பொஸ்டன் சந்தேகநபர் -2 உயிருடன் பிடிக்கபட்டிருப்பதாக கூறப்படுகிறது. பகல் தகப்பன், சகோதரி, மாமன் போன்றொர் சரண் அடைந்து மன்னிப்பு கேட்கும் படி கோரிக்கை விட்டிருந்தார்கள். ஆனால் அவன் TV பார்க்கும் நிலையில் இருக்கவில்லை. நேற்றயை சண்டையில் காயப்பட்டிருக்கலாமாம். படகு ஒன்றில் உணவு மருந்து ஒன்றும் கிடைக்காமல் மறைந்திருந்திருக்க வேண்டும் என்று சந்தேகப்படுகிறார்கள்

 

Edited by மல்லையூரான்

உயிருடன் பிடிபட்டால் சில தகவல்கள் வரும்.

அதேவேளை நீதிமன்றத்தில் இவர் கூறும் கருத்துகள் தலையிடியை தரலாம்.

இவன் தமையாரின் உதவியாகத்தான் தொழில்ப்பட்டிருப்பான் போலிருக்கு. இறந்தவன்தான் சூத்திரதாரியாக இருக்குமாப்போலிருக்கு.

ஒரு முக்கிய நகரத்தை சில நாட்கள் முடக்கி விட்டது மட்டுமல்லாமல் எந்த இடத்திலும் ஓட்டப்போட்டிகள் வைப்பது சவாலாகவே இருக்கும்!

பாஸ்டன் குண்டு வெடிப்பு; தேடப்பட்ட குற்றவாளி கைது

 

பாஸ்டன் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இருவர் தேடப்பட்டு வந்தனர். அவர்களில் ஒருவரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். தேடப்பட்டு வந்த மற்றொருவரை எஃப்பிஐ காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்தனர்.

அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த 15ஆம் தேதி மராத்தான் போட்டி நடந்தது. அதில் 27 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதை காண சாலையோரம் இருபுறங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர் இந்த நிலையில் அங்கு சக்திவாய்ந்த 2 குண்டுகள் வெடித்தன. அதில், 3பேர் பலியாகினர். 180க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த நாச வேலை குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ உளவுத் துறையினர் தீவிர விசாரணை செய்து வந்தனர். சம்பவத்தின் போது ரகசிய கேமிராக்களில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதில் சந்தேகத்துக்கு இடமான 2 பேரை அடையாளம் கண்டு பிடித்தனர். அவர்களின் வீடியோ காட்சிகளை வெளியிட்டனர். மேலும் அவர்களை எஃப்பிஐ தீவிரமாக தேடிவந்தது.

இதனிடையே நேற்று தேடப்பட்டு வந்தவர்களில் ஒருவரை காவல்துறையினர் பிடிக்கும் முயற்சியில் சுட்டுக் கொன்றனர். தப்பியோடிய மற்றொருவரை தேடி வந்தனர். மேலும் இரு குற்றவாளிகளும் ரஷ்யாவைச் சேர்ந்த குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது.

காரில் தப்பி ஓடிய மற்றொரு ஷோக்கர் சார்நேவ்(19) என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வாட்டார் டவுன் அருகே ஒரு படகில் பதுங்கி இருந்த ஷோகர் சார்நேவை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஷோகர் சார்நேவை காவல்துறையினர் ஒரு மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். குண்டு வைத்தது ஏன் என்ற விவரம் குறித்து விசாரணை நடைபெறுவதாக காவல்துறை தெரிவிக்கிறது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/20/1130420009_1.htm

 

பாஸ்டன் குண்டுவெடிப்பு: 2வது தீவிரவாதி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம்- கைது

 

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்த இரு செசன்யாவைச் சேர்ந்த சகோதரர்களில் அண்ணன் நேற்று சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று அவரது தம்பி கைது செய்யப்பட்டார்.

செசன்யா அருகே உள்ள ரஷ்ய பகுதியைச் சேர்ந்த தமேர்லான் சர்னயேவ் (26), ஷோக்கர் (19 இருவரும் கல்வி பயில சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தவர்கள்.

இந்த இருவரும் தான் கடந்த திங்கள்கிழமை நடந்த மாராதான் போட்டியில் வெடிகுண்டு வைத்தவர்கள். சிசிடிவில் பதிவான இந்த இருவரின் படங்களையும் எப்பிஐ வெளியிட்டு இருவரையும் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு இருவரும் வாட்டர்டவுன் பகுதியில் காரில் வந்த ஒருவரை துப்பாக்கி முனையில் வழிமறித்து அவரை காருடன் கடத்தினர். பின்னர் காரில் இருந்தவரை இறக்கிவிட்டுச் சென்றனர்.

இந்த விவரம் அறிந்த போலீசார் அந்தக் காரை விரட்டிச் சென்றபோது, இருவரும் காரில் இருந்து வெடிகுண்டுகளை வெளியே வீசினர். இதையடுத்து எப்பிஐயும் போலீசாரும் அந்தக் காரை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் காரில் இருந்த தமேர்லான் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனால், ஷோக்கர் தப்பிவிட்டார். இதையடுத்து இவரைத் தேடி வாட்டர்டவுன் பகுதியில் வீடுவீடாக சோதனை நடந்தது. நேற்றிரவு வாட்டர்டவுனின் பிராங்ளின் தெருவில் உள்ள ஒரு வீட்டின் பின் பகுதியில் ஆற்றுப் பகுதியில் ஒரு படகில் இவர் பதுங்கியிருந்தார்.

அவரை போலீசார் சுற்றி வளைத்தபோது அவர் துப்பாகியால் சுட்டார். இதையடுத்து போலீசார் திருப்பிச் சுட்டதில் காயமடைந்த அவர் பிடிபட்டார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடத்தினால் தான் இந்தத் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்த விவரங்கள் வெளியே வரும்.
 

http://tamil.oneindia.in/news/2013/04/20/tamilnadu-boston-marathon-bombings-dzhokhar-tsarnaev-custody-173803.html

 

பாஸ்டன் மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரை அமெரிக்கப் பொலிசார் உயிருடன் பிடித்துள்ளனர்.
அமெரிக்க சரித்திரத்தின் மிகப் பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைகளில் ஒன்றாக 19 வயது சந்தேகநபர் ஸூகார் சர்னயெவ்வை தேடும் நடவடிக்கை அமைந்திருந்தது.130420100633__67126224_suspect.png

 

ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகில் பதுங்கியிருந்த சரனயெவ்வை பொலிசார் பிடித்துள்ளனர்.
கொல்லையில் ரத்தம் சிந்தியிருந்த வழியாக வீட்டின் உரிமையாளர் சென்று படகின் மீது போர்த்தியிருந்த தார்ப்பாலின் விரிப்பை தூக்கிப்பார்த்தபோது காயங்களுடன் உள்ளே ஸூகார் இருந்திருக்கிறார்.
குண்டுப் பரிமாற்றத்துக்குப் பின்னர்தான் ஸூகாரைப் பொலிசார் பிடிக்க முடிந்துள்ளது.
செச்சென்ய பூர்வீகம் கொண்ட கொண்ட ஸூகாருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பொலிசார் அவரைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.மாரத்தன் குண்டுவெடிப்பின் மற்றுமொரு சந்தேகநபராகிய ஸூகாரின் அண்ணன் தமெர்லன், பொலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டிருந்தார்.
மாரத்தன் போட்டிகளின் நிறைவுக் கோட்டுக்கு அருகில் சந்தேகநபர்களான இவர்கள் நிற்பது போன்ற படங்களை மத்திய புலனாய்வுப் பொலிசார் வெளியிட்டதிலிருந்து கிடுகிடுவென பல சம்பவங்கள் நடந்துள்ளன.
பல சரக்குக் கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது அந்த இடத்திலே சந்தேகநபர்களில் ஒருவர் இருந்ததை பொலிசார் பார்த்தனர்.
அந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட பொலிஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.சந்தேகநபர்களாகிய சகோதரர்கள் இருவரும் கார் ஒன்றை திருடிச் சென்று தப்பிக்க முயன்றனர்.
அவர்களுக்கும் விரட்டிச் சென்ற பொலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்தான் தமர்லென் அடிபட்டு, அகப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

 

குண்டுவைத்தவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது தெளிவாகிவிட்டது என அதிபர் ஒபாமா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

 

 

._67128125_boston_map_624_4.jpg

மாரத்தன் போட்டிகளின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டும் நூற்றியெழுபது பேர் காயமடைந்தும் இருந்தனர்.

 

http://www.vivasaayi.com/2013/04/blog-post_8507.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் கண் எனி வரும் நாட்களில் செச்சனியா மீது பதியப் போகின்றது. ரசியாவில் 2004-2005 இல் 150 வரையிலான குழந்தைகள் உற்பட 300 பேர் கொல்லப்பட்ட சம்பவங்களாகட்டும், சில வருடங்களுக்கு முன்னர் டென்மார்க்கில் நடந்த குண்டுவெடிப்பாக இருந்தாலும் சரி, அமெரிக்க மரதன் போட்டில் நடந்த குண்டுவெடிப்பும் குறித்த நாட்டில் இருந்து வந்தவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

அமெரிக்காவில் பிறந்தவர்கள்,மற்றும் சிறு வயதில் வந்தவர்கள் இவ்வாறு தீவிரவாதத்தை பின்பற்றுவது அமெரிக்காவால் வெல்ல முடியாத பிரச்சனை.

 

 

இந்த இறந்த  மூத்த சகோதரர் ஒரு நல்ல விளையாட்டு வீரர். இரண்டு வயது குழந்தையின் தகப்பன். தம்பியோ படிப்பில் மிகவும் சிறந்த ஒருவன்.


எனவே இவ்வாறானவர்கள் தீவிரவாதத்தை கையில் எடுப்பது என்பது ஏன்? என்ற கேள்வி நீண்டகாலமாக அமெரிக்காவை உலுக்குகின்றது.

 

எனது பார்வையில் உலகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள், முதியோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்படுவதே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பிறந்தவர்கள்,மற்றும் சிறு வயதில் வந்தவர்கள் இவ்வாறு தீவிரவாதத்தை பின்பற்றுவது அமெரிக்காவால் வெல்ல முடியாத பிரச்சனை.

 

 

இந்த இறந்த  மூத்த சகோதரர் ஒரு நல்ல விளையாட்டு வீரர். இரண்டு வயது குழந்தையின் தகப்பன். தம்பியோ படிப்பில் மிகவும் சிறந்த ஒருவன்.

எனவே இவ்வாறானவர்கள் தீவிரவாதத்தை கையில் எடுப்பது என்பது ஏன்? என்ற கேள்வி நீண்டகாலமாக அமெரிக்காவை உலுக்குகின்றது.

 

எனது பார்வையில் உலகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள், முதியோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொல்லப்படுவதே காரணம்.

 

உலக நாடுகளின் வஞ்சக நாசகாரா படுகொலைகள்

மற்றும் அழிப்புக்கள் தொடரும்போது இது போன்றவை மேலும் வளரக்கூடும் :(  

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் குண்டு வெடிப்புக்குக் காரணமானவரும் விளையாட்டுவீரர் தான்

  • கருத்துக்கள உறவுகள்

இது மூத்தவரின் யுரியுப் இணைப்பு. அவர் காணோளிகள் யாவும், இஸ்லாம் பற்றியே இருக்கின்றது. தவிரவும் பயங்கரவாதம் என்று 2 காணோளிகள் இணைக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. அல்லது பார்வையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கின்றது http://www.youtube.com/user/muazseyfullah/videos?view=0

ஆம், தூயவன் அண்ணா, அதை விட இரண்டாமவர் பற்றியும் சில தகவல்கள் கூறப்பட்டுள்ளன. :rolleyes:

 

இது இரண்டாம் நபர் பிடிபட முன்னரான செய்தி. :rolleyes:

 

பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

 

பாஸ்டன் குண்டுவெடிப்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் செச்சென்யா நாட்டை சேர்ந்தவர் எனவும், செச்சன் விடுதலைக்காக போராடி வரும் ஜிகாத்களில் ஒருவர் எனவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பாஸ்டன் மரதன் ஓட்டப்போட்டியில் இடம்பெற்ற இரு தொடர் குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், 170 பேர் காயமடைந்திருந்தனர்.

இக்குண்டுவெடிப்புடன் தொடர்புடைய நபர்கள் என இருவரின் புகைப்படத்தை நேற்று  அமெரிக்க புலனாய்வு துறையினர் வெளியிட்டிருந்தனர். அவ்விருவரும் சகோதரர்களாக இருக்கலாம் எனவும், செச்சென்யா நாட்டவர்கள் எனவும் பெயர் விபரங்களுடன் இணங்காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாஸ்டலனின் வாட்டர்டவுன் பிரதேசத்தில் சந்தேக நபர்கள் தப்ப முயன்ற போது காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். கடுமையான துப்பாக்கிச்சூட்டுக்கு பிறகு ஒரு சந்தேக நபர் கொல்லப்பட்டார். மற்றையவர் தப்பிவிட்டார்.

இதையடுத்து வாட்டர்டவுமன்  மாத்திரமல்லாது, பாஸ்டன் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் களமிறங்கியுள்ளனர். வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டாம் எனவும், கதவை யார் தட்டினாலும் திறக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாட்டர்டவுனிலிருந்து எந்தவொரு வாகனங்களும் நகரின் வெளிப்பகுதிக்கு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களில் ஒருவரான ஷோகர் சர்னாவ் என்பவர் செச்சென் விடுதலையுடன் தொடர்புடையதாக ரஷ்ய மொழியில் இயங்கும் சமூக வலைத்த்தளம் ஒன்றில் தனது நோக்கங்களை எழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

19 வயதான இந்த இளைஞர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு பட்டதாரியாகியிருந்தார். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்துள்ளார். சிறுவயதில் ரஷ்யா எல்லையில் செச்சென்யாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆரம்ப கல்வி பயின்றுள்ளார். ஆங்கிலம், ரஷ்ய மொழி, செச்சென் என மூன்று மொழிகளிலும் புலமை பெற்றுள்ளார்.

மேலும் தனது சமயம் இஸ்லாம் எனவும், அல்லாவை தவிர வேறு கடவுள் இல்லை எனவும் இஸ்லாமுடன் தொடர்புடையதாக பல்வேறு கருத்துக்களை குறித்த இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு குறிப்பில், தனக்கு எந்தவித அமெரிக்க நண்பர்களும் இல்லை எனவும், தான் ஒருவரையும் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மச்சாசுவெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நேற்றிரவு கடமையிலிருந்த காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, கார் ஒன்றை அதன் ஓட்டுனருடன் ஆயுத முனையில் கடத்தி குறித்த இரு சந்தேக நபர்களும் தப்ப முயன்றுள்ளனர்.

இதையடுத்தே காவல்துறை வேட்டுதல் தொடங்கியது. இதன் போது குறித்த சந்தேக நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கைக்குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் மற்றுமொரு காவல்துறை அதிகாரி காயமடைந்திருந்தார்.

இதேவேளை சோன்கர் சார்னாவ் எனும் சந்தேக நபரின் தந்தை என ஒருவர் அசோசியெட் பிரஸ் ஊடகத்திற்கு தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். தனது மகன் அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவன் எனவும், மிகவும் புத்திசாலி எனவும் இம்முறை விடுமுறைக்கு செச்சென்யாவுக்கு வருவார் என எதிர்பார்த்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjY0MzExMzg4.htm#.UXKLUUqC9S0

 

Edited by துளசி

செச்னியாவில் ரஸ்சியா செய்த படுமோசமான மனித உரிமை மீறள்களை மேற்கு நாடுகள் "கண்டித்திருந்தார்கள்". 
 
அப்படி இருக்க உண்மையில் செச்னியர்கள் தான் இதைச் செய்திருப்பார்கள் ?
 
செச்னிய இணையத்தளம் தரும் தகவல்கள். ( ரஸ்சிய உளவாளிகளே செச்னியர்கள் போல் குண்டுவைத்திருக்கிறார்கள்!!)
 
 

பாஸ்டன் குண்டுத் தாக்குதல் சந்தேகநபர் உயிருடன் பிடிபட்டார்

 

130420100633__67126224_suspect.png

 

130420100631__67125532_un0wh5uf.jpg

 

 

பாஸ்டன் மாரத்தன் ஓட்டப் பந்தயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரில் ஒருவரை அமெரிக்கப் பொலிசார் உயிருடன் பிடித்துள்ளனர்.

 

அமெரிக்க சரித்திரத்தின் மிகப் பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைகளில் ஒன்றாக 19 வயது சந்தேகநபர் ஸூகார் சர்னயெவ்வை தேடும் நடவடிக்கை அமைந்திருந்தது. ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகில் பதுங்கியிருந்த ஸூகார் சரனயெவ்வை பொலிசார் பிடித்துள்ளனர்.

 

கொல்லையில் ரத்தம் சிந்தியிருந்த வழியாக வீட்டின் உரிமையாளர் சென்று படகின் மீது போர்த்தியிருந்த தார்ப்பாலின் விரிப்பை தூக்கிப்பார்த்தபோது காயங்களுடன் உள்ளே ஸூகார் இருந்திருக்கிறார். குண்டுப் பரிமாற்றத்துக்குப் பின்னர்தான் ஸூகாரைப் பொலிசார் பிடிக்க முடிந்துள்ளது. செச்சென்ய பூர்வீகம் கொண்ட கொண்ட ஸூகாருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 

பொலிசார் அவரைப் பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றபோது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். மாரத்தன் குண்டுவெடிப்பின் மற்றுமொரு சந்தேகநபராகிய ஸூகாரின் அண்ணன் தமெர்லன், பொலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டிருந்தார்.

 

மாரத்தன் போட்டிகளின் நிறைவுக் கோட்டுக்கு அருகில் சந்தேகநபர்களான இவர்கள் நிற்பது போன்ற படங்களை மத்திய புலனாய்வுப் பொலிசார் வெளியிட்டதிலிருந்து கிடுகிடுவென பல சம்பவங்கள் நடந்துள்ளன. பலசரக்குக் கடை ஒன்றில் கொள்ளைச் சம்பவம் நடந்தபோது அந்த இடத்திலே சந்தேகநபர்களில் ஒருவர் இருந்ததை பொலிசார் பார்த்தனர். அந்த சம்பவத்தை விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட பொலிஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். சந்தேகநபர்களாகிய சகோதரர்கள் இருவரும் கார் ஒன்றை திருடிச் சென்று தப்பிக்க முயன்றனர். அவர்களுக்கும் விரட்டிச் சென்ற பொலிசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில்தான் தமர்லென் அடிபட்டு, அகப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

 

குண்டுவைத்தவர்கள் தோற்றுவிட்டார்கள் என்பது தெளிவாகிவிட்டது என அதிபர் ஒபாமா அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

 

மாரத்தன் போட்டிகளின்போது இரண்டு குண்டுகள் வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டும் நூற்றியெழுபது பேர் காயமடைந்தும் இருந்தனர்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2013/04/130420_bostonsuspectcaptured.shtml

 

கொல்லப்பட்ட அண்ணன் - மனம் செய்தது ஒரு அமெரிக்க வெள்ளை இன பெண்ணை.
அவர் ஒரு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் - தகப்பன் ஒரு சத்திர சிகிச்சை நிபுணர்.
மனைவி இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார்.

நியூயார்க்கை நாசம் செய்ய திட்டமிட்டிருந்தோம்

 

27 ஏப்ரல் 2013

 

பாஸ்டான் போல குக்கர் குண்டுகளை வைத்து நியூயார்க்கை தகர்க்க நானும் என் அண்ணனும் திட்டமிட்டிருந்தோம் என்று கைது செய்யப்பட்டுள்ள சோகர் சர்னேவ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இரண்டு சக்தி வாய்ந்த குக்கர் குண்டுகள் வெடித்தன.

இத்தாக்குதலில் 3 பேர் பலியானதுடன் சுமார் 180 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் கை, கால்களை அகற்றிய பின்னரே உயிருடன் காப்பாற்ற முடிந்தது.

குண்டு வெடித்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகத்திற்குரிய இரு நபர்களை பொலிசார் தேடி வந்தனர். இவர்களில் ஒருவர் போலீசார் தேடுதல் வேட்டையின் போது பலியானார். அவரது தம்பி சோகர் சர்னேவ் என்பவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் மருத்துவமனையில் பொலிசாரிடம் எழுத்து மூலமாக வாக்குமூலம் அளித்த அவர், வீட்டில் இருந்த மேலும் சில குக்கர் வெடிகுண்டுகளை வைத்து நியூயார்க் நகரை தகர்க்க நானும் எனது அண்ணனும் திட்டமிட்டிருந்தோம் என்று கூறியுள்ளார்.

நியூயார்க்கின் பரபரப்பு மிக்க டைம்ஸ் சதுக்க பகுதியில் சோகர் சர்னேவ் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/27/1130427003_1.htm

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.