Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; உயிருக்கு போராட்டம்!

Featured Replies

டெல்லியில் பாலியல் பலாத்கார நிகழ்வுகள் தொடர் கதையாகி வரும் நிலையில், அண்டை வீட்டு நபரால் 4 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்ட 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருகிறாள்.

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், 4 மாதங்களில் மேலும் பல பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், இந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் மீண்டும் உலுக்கி உள்ளது.

 பாதிக்கப்பட்ட சிறுமி, தான் வசித்து வரும் வீட்டின் தரைதளத்தில் விளையாட சென்றபோது, தரை தளப்பகுதியில் வசித்துவந்த நபர் சிறுமியை வீட்டிற்குள் அடைத்து வைத்து கடந்த 4 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.சம்பவம் நிகழ்ந்த 40 மணி நேரம் கழித்தே அச்சிறுமியின் அழுகுரலை கேட்டு அவளது குடும்பத்தினர் நேற்று மாலை கண்டுபிடித்தனர். படுகாயத்துடன், மயக்கமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அச்சிறுமிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் அடுத்த 48 மணி நேரங்கள் அபாயகரமானது என்று கூறியுள்ளனர்.

மேலும் சிறுமியின் கன்னம், உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருப்பதோடு, கழுத்திலும் கயிற்றை இறுக்கி கொல்ல முயன்றதற்கான வடு காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 
 அதைவிட அதிர்ச்சியளிக்கும் விதமாக அச்சிறுமியின் பிறுப்புறுப்பில் 200 மி.லி. பாட்டில், இரண்டு மூன்று மெழுகுவர்த்தி துண்டுகள் உள்ளே நுழைக்கப்பட்டிருந்ததாகவும், 5 வயது சிறுமி ஒருத்தி இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டிருப்பதை தான் இப்போதுதான் பார்ப்பதாகவும், சிறுமி சிகிச்சை அளிக்கும் சுவாமி தயானந்த் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ஆர்.கே. பன்சால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் இந்நிலையில் சிறுமியின் நிலை மோசமாக இருப்பதால், மேல் சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக ( எய்ம்ஸ் - AIIMS) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை

இதனிடையே சிறுமியை சீரழித்த குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பணம் கொடுத்து குற்றத்தை அமுக்க முயன்ற போலீஸ்

இதனிடையே முதலில் தாங்கள் சிறுமி காணாமல் போனது குறித்து புகார் கொடுக்க முயன்றபோது, அவளை கண்டுபிடிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டியதாக குற்றம் சாட்டியுள்ள சிறுமியின் பெற்றோர், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும், இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று சிறுமியின் தந்தைக்கு போலீஸ்காரர் ஒருவர் 2000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

போராடிய பெண்ணை  கன்னத்தில் அறைந்த போலீஸ் அதிகாரி

இந்நிலையில் இதனிடையே இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இளம் பெண்கள் மருத்துவமனைக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.அப்போது பாதிக்கப்பட்ட சிறுமியை பார்க்க கிழக்கு டெல்லி எம்.பி. சந்தீப் தீட்சித் மற்றும் மாநில சுகாரத்துறை அமைச்சர் ஏ.கே. வாலியா ஆகியோர் வந்தனர்.
போராட்டகாரர்கள் அவர்களை முற்றுகையிட்ட நிலையில்,  போலீஸை கண்டித்து முழக்கம் எழுப்பிய இளம்பெண் ஒருவரை அங்கு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் அகலாவாத் சரமாரியாக கன்னத்தில் அறைந்தார்.
இதனை தொலைக்காட்சிகள் படம்பிடித்து ஒளிபரப்பியதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் இதில் தலையிட்டது. இதனையடுத்து அந்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இச்சம்பத்தை கண்டித்து டெல்லி காவல்துறைக்கு எதிராகவும், முதல்வர் ஷிலா தீட்சித்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=14138:rape-2day&catid=37:india&Itemid=103

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மிருகத்தை மக்கள் அடித்துக் கொன்றிருந்தால் அது ஜனநாயக விரோதமா?

 

ஆம் என்பதே பொதுவான பதில்.. ஆனால் நீதி பிழைக்காத நாடுகளுக்கே இந்தப் பதில் பொருந்தும்.. அரசால் பாதுகாப்பு மற்றும் நீதியை பொதுமக்களுக்கு வழங்கமுடியாத பட்சத்தில் அங்கே ஜனநாயகம் தோற்கும்.

இப்படியான கோரமான குற்றங்கள் இருப்பதால் தான் நான் என்றும் மரண தண்டனையை ஆதரிப்பது. இவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த பட்ச தண்டனையே சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையாக உலகெங்கும் கொண்டு வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கோரமான குற்றங்கள் இருப்பதால் தான் நான் என்றும் மரண தண்டனையை ஆதரிப்பது. இவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த பட்ச தண்டனையே சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையாக உலகெங்கும் கொண்டு வர வேண்டும்.

மரண தண்டனை  என்பது ஒருவரை விடுவித்தலாகும்.

அவரை  இந்த உலகில் நடமாட விடணும்

ஆனால் குற்றத்துக்கான சாட்சியாக.......

உடலோடு ஏதாவதை ஒட்டி எழுதி  எல்லோருக்கும் தெரியும்படி வெளியில் விடணும்

சிறுமி பலாத்காரம்… பொதுமக்கள் போராட்டத்தால் டெல்லியில் மீண்டும் 144 தடை உத்தரவு

 

April 20, 2013
 

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பாதுகாப்பு வழங்கத் தவறிய காவல்துறை ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரியும் பொதுமக்கள் போராடத் தொடங்கியுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி, கடந்த 15-ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போனார். பின்னர் கடந்த 17-ஆம் தேதி, அந்த சிறுமியின் வீட்டிற்கு கீழ் இருந்த மற்றொரு வீட்டில், உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடலின் பல பாகங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசில் புகார் கொடுத்த பெற்றோர்கள், சிறுமியை சிகிச்சைக்காக தயானந்த் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததை அடுத்து சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமி மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை சீரழித்த குற்றவாளி மனோஜ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை சம்பவத்தில் உரிய நேரத்தில் கடமையை செய்யத் தவறிய டெல்லி போலீஸ் கமிஷனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மக்கள் டெல்லி போலீஸ் தலைமையகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, டெல்லியில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.oneindia.in/news/2013/04/20/india-144-imposed-across-new-delhi-amid-protests-173817.html

 

Edited by துளசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு 5 வயது சிறுமியில எது இவனை இப்படி கொடூரம் செய்ய தூண்டியது. மனித இனத்தில் இப்படி அற்ப புழுக்களும் உள்ளது வேதனை

 

5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - பிரதமர் கண்டனம்.

 

April 20, 2013
 

20-manmohan-singh-300.jpg

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமி காட்டுமிராண்டித்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் விடுத்துள்ள அறிக்கையில், '5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிகரமானதும், அவமானகரமானதும் ஆகும். இதைப் போன்ற கொடுமைகளை நம்மிடையிலிருந்து களைய ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் உழைக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 'குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்ட பிறகு கடுமையான தண்டனை வழங்கப்படும்,' என்று கூறினார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை இன்று காலை நேரில் சென்று சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ஆசாத் குலாம் நபி ஆசாத், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் மருத்துமனைக்குச் சென்று சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
 

http://tamil.oneindia.in/news/2013/04/20/india-manmohan-singh-deeply-disturbed-over-five-year-old-girl-173823.html

 

Edited by துளசி

டெல்லி சிறுமிக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் 2 பேர் 2 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.

 

டெல்லி: டெல்லியில் 5 வயது சிறுமியை ஒருவர் அல்ல இரண்டு பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமியை அவர் குடியிருக்கும் வீட்டின் தரைதளத்தில் குடியிருக்கும் மனோஜ் குமார்(22) என்ற வாலிபர் கடத்தி தனது வீட்டில் அடைத்து வைத்து 2 நாட்களாக உணவு, தண்ணீர் கொடுக்காமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து சிறுமியின் உடலுக்குள் பாட்டில், மெழுகுவர்த்தி ஆகியவற்றை திணித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமி தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

இதற்கிடையே போலீசார் மனோஜ் குமாரை பீகாரில் வைத்து நேற்று கைது செய்தனர். விசாரணையில் மனோஜ் குமாருடன் சேர்ந்து பிரதீப் குமார் என்பவரும் சேர்ந்து சிறுமியை சீரழித்தது தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து பிரதீப்பை கைது செய்ய தனிப்படை பீகார் விரைந்துள்ளது. சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்து நேற்று டெல்லியில் போராட்டங்கள் நடந்தன.

 

http://tamil.oneindia.in/news/2013/04/21/india-delhi-shame-two-people-gang-raped-gudiya-say-reports-173827.html

 

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.