Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் பார்த்த விவரணங்கள் (Documentaries)

Featured Replies

அண்மையில் Smart TV upgrader இனை வாங்கி நான் பயன்படுத்த தொடங்கிய பின் தான் யூரியூபின் அருமை இன்னும் அதிகமாக புரியத்தொடங்கியது. Youtube இல் நிறைய channels இற்கு subscribe பண்ணுவதன் மூலம் விரும்பிய நிகழ்ச்சிகளை மட்டும் தேர்ந்தெடுத்து பார்க்கும் வசதியும் நேரமும் இதன் மூலம் கிடைப்பதால் பல அரிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

 

இதன் மூலம் அநேகமாக வாரத்தில் 3 முழு நீள விவரணங்களையாவது பார்த்து விடுவது உண்டு. அப்படி பார்த்ததில் எனக்கு பிடித்த மற்றும் ஓரளவு விரிவான விடயங்கள் உள்ள விவரணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

 

YouTube links என்பதால் இணைக்கும் லிங்குகளில் ஒரு சில, குறிப்பிட்ட காலத்தின் பின் வேலை செய்யாமல் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

 

1.  உலகில் அதிகூடிய வலுவுள்ள முதல் 10 விலங்குகள்.

 

http://youtu.be/jmgnSfrlj88

 

  • தொடங்கியவர்

1. இது ஒரு பாரிய வர்த்தக கப்பல்;

  • 300 ஜம்போ ஜெட்களின் நிறையை விட அதிகமானது.
  • 24 அளவுள்ள (முழுமையான பெரிய) கொள்கலங்களில் 8063 இனை காவ வல்லது
  • இதன் எஞ்சின் மட்டும் 4 தட்டுகளில் பரவியுள்ளது
  • 10 தொன் நிறையுள்ள டீசலை ஒரு மணித்தியாலத்தில் குடிக்கவல்லது

  • ஒரு நிமிட தாமதமே பல கோடி இழப்புக்குள்ளாகும்

  • ஒவ்வொரு துறைமுகத்திலும் ஒரு வினாடி இழப்பு பல கோடிகளை இழக்கப் பண்ணிவிடும்

http://youtu.be/au4tcrQdSk8

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 எனக்கும்... இப்படியான விபரணப் படங்களைப் பார்க்க விருப்பம்.
தொடர்ந்து... இணையுங்கள் நிழலி. 

  • தொடங்கியவர்

3. Megastructures North Sea Wall: நெதர்லாந்து

 

(ஹொலன்ட்) கடல் நீர் பெருக்கினாலும் வெள்ளப் பெருக்கினாலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. கடலுடனும் வெள்ளத்துடனும் மல்லுக்கட்டியே அதில் விற்பன்னர்களாக போய்விட்டவர்கள்.

 

இன்றைய உலகில் வெள்ளப்பெருக்குக்கு எதிரான அணைகள் பாலங்கள் கட்டுவதில் இவர்கள் தான் முன்னனி வகிக்கின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் படிப்படியாக கடல் நீர் / வெள்ளத் தடுப்பு முறைமைகளில் தேர்ச்சி பெற்று இன்று அதி உயர் தொழில்நுட்ப வளத்துடன் கூடிய பாதுகாப்பு வசதிகளுடன் தங்கள் நிலத்தினை பாதுகாத்து வருவதுடன், கலடால் சூழப்பட்ட சில பிரதேசங்களை மனிதர் வாழும் இடங்களாகவும் ஆக்கியுள்ளனர்.

 

வியப்பை அளிக்கும் அவர்களின் பாலம் / அணை கட்டும் முறை பற்றிய விரிவான ஒரு விவரணம்.

 

இதனை விசேடமாக இசைக்கலைஞனுக்கு  சமர்பிக்கின்றேன்.

 

http://youtu.be/yAoPphN4TOU

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் விபரணப்படங்கள் ரொம்ப பிடிக்கும்...தொடர்ந்து இணையுங்கள் நிழலி அண்ணா...

  • தொடங்கியவர்

4. Wild Russia

 

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களால் பார்க்கப்பட்ட இந்த விவரணப் படம் கடும் குளிர் பிரதேசமான சைபீரியா பகுதியில் வாழும் வாழ்வில் கேட்டே அறியப்படாத பல விலங்குகள் பற்றியும், கடும் குளிர் காலத்தில் அவை வாழ்கின்ற முறை பற்றியும் விரிவாக எடுத்துச் சொல்கின்றது.  கடும் குளிரிலும் காக்கா இருப்பது அதிசயமாக இருக்கு.

 

சைபீரிய நிலத்தின் விரிந்த பரப்பளவும், பனியுள் உறையும் வித்தியாசமான நிலப்பரப்புகளும் High Densitive (HD) இல் பார்க்கும் போது அற்புதமாக இருக்கின்றது. 

 

http://youtu.be/1a5s6Ouhaf8

 

 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

5. Bermuda Triangle Exposed: பெர்முடா முக்கோண வலயம் பற்றிய வெளிவராத உண்மைகள்.

 

5000 இற்கும் மேற்பட்ட மனிதர்கள், பல கப்பல்கள், பல விமானங்கள் என்பன காணாமல் போன பெர்முடா முக்கோணம் பற்றிய விவரணம் இது. எந்தவிதமான அபாய சமிக்ஞைகளையும் தகவல் தொடர்பு நிலையத்துக்கு அறிவிக்க அவகாசம் இன்றி விமானங்களும் கப்பல்களும் இந்தப் பகுதியில் சடுதியாக காணாமல் போயுள்ளன. இதன் ரகசியத்தினை கண்டு பிடிக்க சென்ற பலருக்கும் என்ன நடந்தது என்றும் பல காலமாக தெரிந்து இருக்கவில்லை. ஒரு சில வினாடிகளுக்கு மூழ்கிப் போன வரிசையில் பெரிய போர்க்கப்பல்களும் அடங்கும்.

 

இன்று இவ்வாறு பல புதிர்கள் நிரம்பிய பெர்முடா முக்கோணம் பற்றிய உண்மைகளை விஞ்ஞான ரீதியில் கண்டு பிடித்துள்ளனர்.  இப் பகுதியில் மூழ்கிக் கிடக்கும் கப்பல்களில் ஆராச்சிகள் மேற்கொண்டுள்ளனர்.  இவை பற்றி விஞ்ஞான ரீதியில் அலசும் ஒரு சுவாரசியமான விவரணம். 

 

http://youtu.be/jZLyfvCSjio

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.