Jump to content

சிலுவை சுமந்தோர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது.

இடையிடையே விசும்பி விசும்பி அழுகின்ற அம்மாவின் மெல்லிய அழுகையொலியைத் தவிர வேறு சத்தமே இல்லை.

வீட்டின் பெரிய விறாந்தையில் உயரமான ஒரு வாங்கின் மேல் அக்கா கிடத்தப்பட்டிருந்தாள்.

கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி கைகளிரண்டையும் நீட்டிக்கொண்டு தலை இடதுபுறமாகச் சரிந்து போயிருக்க அக்கா கிடந்தாள்.

முழங்கால்களிலிருந்தும் முழங்கைகளிலிருந்தும் இரத்தம் வழிந்து காய்ந்து போயிருந்தது. உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களால் தசை கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூந்தல் இரத்தம் தோய்ந்து சிவப்பு நிறமாய்க் கலைந்திருந்தது. கை, கால் முழுவதும் இரத்தக்கீறல்கள். நான் அக்காவையே வெறித்துப் பார்க்கின்றேன்.

மரண அவஸ்தையை அனுபவித்த வேதனையில் நெற்றி சுருங்கியிருந்தாலும் முகத்தில் அந்தக் குழந்தைத்தனமான மென்மையும் இதழின் ஓரத்தில் மெல்லிய கீற்றாய் துளிர்விட்டிருக்கின்ற புன்னகையும் இன்னமுந்தான் செத்துப்போகவில்லை.

எனக்கு அழவேண்டும்போல இருக்கிறது. கத்திக் குழறி என் துன்பத்தை எல்லாம் கண்ணீராய்க் கொட்டிவிடவேண்டும்போல் துடிப்பு வருகின்றது.

ஆனால் கண்ணீர் வரவில்லை - கண்ணீரும் கூடக் காய்ந்து போயிருக்க வேண்டும்.

ஷஷஎன்ரை பிள்ளை............. என்ரை பிள்ளை............

விசித்து விசித்து அழும் அம்மாவின் ஓலம் மெதுவாகக் கேட்கின்றது.

மின்னாமல் முழங்காமல் இப்படியொரு சாவு அக்காவுக்கு வருமென அம்மா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்கவில்லை.

நேற்று............... வெட்கத்துடன் சிரித்தபடி ஷஷஅவரோடை ரெலிபோன் கதைச்சிட்டு வாறன் || என்று வீட்டைவிட்டுப் போனவள் செத்த பிணமாகத் திரும்பி வருவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் அக்காவிற்கு அந்தச் சம்மந்தம் வந்தது.

வெளிநாட்டில் இருக்கின்ற பக்கத்து வீட்டு வேலுப்பிள்ளையின் மகனிடமிருந்து, தான் அக்காவைத் திருமணம் செய்ய விரும்புவதாயும் விரைவில் அவளைத் தன்னிடம் கூப்பிட இருப்பதாயும் செய்தி வந்த போது வீடே ஒருகணம் பூரித்துக்கொண்டது. அக்கா வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் ஒளித்துக்கொண்டாள். அதற்குப் பிறகு அவளுக்கு வீட்டில் ஆறுதலாக இருக்கப் பொழுதே இருக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து அடிக்கடி அவளுக்குத் தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. உரும்பிராயிலிருந்து எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி யாழ்ப்பாணத்திற்குச் சென்று அவனுடன் கதைத்துக்கொள்வாள்.

ஆரம்பத்தில் அவனுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு அவள் சம்மதிக்கவில்லை.

ஷஷகலியாணம் கட்ட முந்தி அவரோடை என்ன கதை? நான் கதைக்கமாட்டன்|| என வீராய்ப்பு பேசியவள் தொலைபேசியில் அவனது குரலைக் கேட்டவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டாள்.

நேற்றும் அவரோடை ரெலிபோன் கதைச்சிட்டு வாறன் || என்று காலையில் வீட்டைவிட்டு வெளியேறியவள் மதியமாகி மாலையாகி இரவாகிய பின்னும் வீடு திரும்பவில்லை.

அப்பா செய்வதறியாமல் திகைத்துப்போனார். அம்மா ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள்.

ஏதாவது சந்தேகத்திலை ஆமி பிடிச்சிருப்பான். பிரச்சினை இல்லையெண்டால் விடிய விட்டிடுவான். நீங்கள் வீணாய்க் கவலைப்படாதேங்கோ|| எனப் பக்கத்து வீட்டார்கள் ஆறுதல் கூறினார்கள்.

இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை.

விடிய - இருள் முற்றாக விலகுவதற்கு முன்பேயே அப்பா அக்காவைத் தேடிப் போய்விட்டார்.

ஊரும்பிராய்ச் சந்தியிலிருந்த முதற் காவலரணில் அக்காவைப்பற்றி விசாரித்தபோது அக்காவலரணைத்தாண்டி அவள் அப்பாலே போகவில்லை என்பது தெரிந்தது.

என்ரை பிள்ளை எங்கை? என்ரை பிள்ளையைக் காட்டுங்கோ|| என அப்பா எத்தனையோ முறை கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பின்பு தான் ஷஷ உங்கடை மகள் புலி. அதுதான் பிடிச்சது|| என இராணுவச்சிப்பாய் ஒருவன் கூறினான்.

என்ரை பிள்ளை புலியில்லை. வெளிநாட்டுக்குப் போக எண்டு இருக்கின்ற பிள்ளையை நீங்கள் தெரியாமல் பிடிச்சுப்போட்டியள். என்ரை பிள்ளையை விடுங்கோ|| என்ற அப்பாவின் சோகமான கதறல் அம் முகாமின் இராணுவ அதிகாரிக்குக் கேட்டிருக்க வேண்டும். அந்த அதிகாரியின் விசாரணைக்குப் பின்னர் அக்காவின் உடல் வெள்ளைத்துணியால் மூடியபடி அப்பாவிற்கு முன்னர் கிடத்தப்பட்டது.

உங்கடை மகள் புலி. அதுதான் சுட்டுக்கொண்டது||. என்றபடி அந்தச் சிப்பாய் வெளியேறினான்.

அக்கா செத்துப்போய்க் கிடந்தாள். துப்பாக்கிச் சன்னங்கள் அவள் உடலைச் சல்லடையாக்கி இருந்தன. கலைந்து போன தலையும் கிழிந்து போன உடையும் உருக்குலைந்து போன உடலும் வெறும் துப்பாக்கிச் சூட்டுக்கு மட்டும் அவள் துடித்து மாண்டதை புலப்படுத்தவில்லை. அவள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படி எத்தனையோ சோகக்கதைகள் எமது மண்ணில் கிருசாந்தி, சாரதம்பாள்,கோணேஸ்வரி..........

Posted

வணக்கம் கந்தப்பு,

இணைப்புக்கு நன்றி,

இதுபோல எங்கள் மண்ணில் அன்னியர் செய்யும் அவலங்களையும். புலம்பெயா மண்ணில் எம்மவர் செய்யும் அநியாயங்களையும் கதைகளாக கவிதைகளாக எழுதப்பட வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

Posted

உண்மைக் கதையை நினைவு படுத்தியிருக்கின்றர் இந்த எழுத்தளார். படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சகோதரிகளுக்குள் ரஐனியும் ஒருவர். கதையை வாசிக்கும்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

Posted

கண்ணீர் சிந்தும் நினைவுகளுடன் எழுதிய உண்மைக்கதை உள்ளத்தை உருக்கிவிட்டது.

இப்படி எத்தனை கொலைகள் :lol:

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைக் கதையை நினைவு படுத்தியிருக்கின்றர் இந்த எழுத்தளார். படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சகோதரிகளுக்குள் ரஐனியும் ஒருவர். கதையை வாசிக்கும்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.  

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

உரும்பிராயில் நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவில் வந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் கந்தப்பு,

இணைப்புக்கு நன்றி,

இதுபோல எங்கள் மண்ணில் அன்னியர் செய்யும் அவலங்களையும். புலம்பெயா மண்ணில் எம்மவர் செய்யும் அநியாயங்களையும் கதைகளாக கவிதைகளாக எழுதப்பட வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

எரிமலையில் வந்த மற்றைய கதைகள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12153

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12155

உண்மைச்சம்பவங்கள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12156

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12157

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12158

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே புலிகளை judge  பண்ணவில்லை (நல்லது, கெட்டது , சரி, பிழை, நீதி, அநீதி, நியாயம், அநியாயம் - அது  தான் சொன்னேன் உணர்ச்சிகளை தள்ளியையுங்கள் என்று). இது ஆய்வு  (புலிகளின் தேவை, காரணம், உந்தியது போன்றவை) மட்டுமே. ஆனால், எங்காவது புலிகளுக்கு சம வாய்ப்பு அளிக்காமல் நான் சொல்லும் ஆய்வில் இருக்கிறதா? நீங்கள் சொல்வது, நீங்கள் சொன்ன விடயங்களுக்காக, ஆய்வை விடும்படி, அல்லது புலிகளுக்கு விட்டுக் கொடுங்கள் என்று.
    • வான்புலிகளின் வான்கலங்களின் அலுவல்சாரல்லாத பறப்புகள்         
    • சுயமாகச் சிந்தித்து, இந்தியாவின் பினாமிகளாகச் செயற்படாத, இலங்கையர்களாக தங்களை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தலைமை தமிழருக்கு அவசியம்.  
    • தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
    • 22 DEC, 2024 | 09:49 PM   இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/201905
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.