Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வனு-அற்று (Vanuatu)

Featured Replies

  • தொடங்கியவர்

இக்குடா பசுபிக் சமுத்திரத்துடன் இணைவதினை இப்படத்தில் காணலாம்

p3040028ag1.jpg

  • Replies 290
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மாலை நேரத்தில் எடுக்கப்பட்ட Erakor குடாவின் கரையோரங்களின் படம்

p3070314oz8.jpg

p3070320hw4.jpg

p3070330qc8.jpg

p3070315sy2.jpg

p3070328bp9.jpg

  • தொடங்கியவர்

Le Lagon Resort ல் மாலை நேரங்களில் தண்ணீருக்குள் இருந்து வலைப்பந்தாட்டம் விளையாடலாம்.

untitled4di0.png

  • தொடங்கியவர்

ERAKOR குடாவின் நடுவில் உள்ள சிறு தீவில் ERAKOR ISLAND RESORT அமைந்திருக்கிறது. ஏற்கனவே நான் குறிப்பிட்டது போல இங்கு அருகில் உள்ள தீவுகளுக்கு இலவசப்படகு சேவை உள்ளதினால் மக்கள் இத்தீவிற்கு இலவசப்படகின் மூலம் தான் செல்லமுடியும். இத்தீவின் கடலுக்கு அண்மித்த நிலப்பரப்பில் பச்சை நிறத்தில் உயிருள்ள சோகிகளினக்கண்டேன்.

p3070317fd4.jpg

இத்தீவின் கரையோரங்களில் உள்ள நீர்ப்பரப்பில் சின்னசின்ன மீன்கள் நீந்துவதினையும் கண்டேன்

p3070321ub6.jpg

  • தொடங்கியவர்

சில நிறுவனங்களின் ஊடாகத்தான் பெரும்பாலான சுற்றுலாக்கள் நடாத்தப்படுகின்றன. சில சுற்றுலாக்கள் முழு நாளும், சில அரை நாளும், சில 2 மணித்தியாலங்களும் எடுக்கும். சில சுற்றுலாக்கள் குறிப்பிட்ட கிழமைகளில் மட்டுமே நடைபெறும். அதற்கு ஏற்றமாதிரி நாங்கள் எங்கள் சுற்றுலாவினைத்தெரிவு செய்யவேண்டும். நான் வனு-அற்றுக்குப் போன போது அவுஸ்திரெலியா தாஸ்மேனியா[Tasmania] மானிலத்தின் தலைனகர் கோபாட்டில்[Hobart] இருந்து ஒரு பெரிய கப்பலில் பலர் சுற்றுலாவுக்கு இங்கே வந்திருந்தார்கள். அவர்கள் ஏற்கனவே சில சுற்றுலாக்களினைப்பதிந்ததின

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

போட்விலாவில் இருந்து சில நிமிடங்களில் இரகசியமான தோட்டத்துக்குச்(THE SECRET GARDEN)செல்லலாம். இங்கே வனு-அற்றில் உள்ள ஊர்வன பறவைகளினைப் பார்க்கலாம். வனு-அற்று மக்களின் 100 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மூதாதையர்கள்பற்றிய பலதகவல்களினை அறியலாம்.

secretgardensigncopyqh8.gif

p3070306hk3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இங்கு(THE SECRET GARDEN) வனு-அற்று பறவைகள்,வாத்துக்கள்,கிளிகள்,

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

இந்தத் தோட்டத்தில் 100 வருடங்களுக்கு முன்பிருந்த மூதாதையர்களின் கதைகளினை வாசிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக்காலத்தில் கிராமத்தலைவர் வாழ்ந்த வீட்டினையும்(படத்தில் உள்ள கொட்டில் வீடு) இந்தத்தோட்டத்தில் காணலாம். அந்தக்காலத்தில் கிராமத்தலைவர்களுக்கு 5 மனைவிகள் இருந்தார்கள். திருமணத்தின் போது மனைவியின் முன் மேற்பற்கள் இரண்டும் உடைக்கப்படும்.

untitled4zy1.png

  • தொடங்கியவர்

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் வனு-அற்றில் இருந்த கதைகளினையும் இத்தோட்டத்தில் காணலாம். மிகவும் அருமையாகக் காணக்கூடிய மரங்களினையும் இங்கே காணலாம். காவாத் தோட்டத்தினையும் இங்கே காணலாம். ஏற்கனவே குறிப்பிட்டது போல காவா(Kava),மரத்தின் வேரினைக்காச்சி அதில் வரும் சாற்றினைக்கொண்டு தயாரிக்கப்படுகிறது.

p3070305ub2.jpg

  • தொடங்கியவர்

மேலே இணைத்த படத்தில் உள்ள தேங்காய் நண்டினைத்தூக்கி வைத்திருக்கும் சிறுவனே அப்பொழுது இத்தோட்டத்தினைப்பற்றி பல செய்திகள் சொல்லி விளங்கப்படுத்தினார். இச்சிறுவன் அங்குள்ள மக்கள் வரையும் கோலத்தினை கையினைத்தூக்காமல் தொடர்ந்து வரைந்து காட்டினார்.

p3070307ho6.jpg

வனு-அற்றில் சுற்றுலா இடங்களைக் காண்பிக்கும் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் 5ம் வகுப்பு வரை படித்திருப்பார்கள். ஆங்கில, பிரெஞ்சு மொழியில் படித்த இவர்கள் நன்றாக ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் வாசிக்கவும், பேசவும் தெரிந்துள்ளார்கள்.

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

போட்விலாவில் இருந்து 20,30 நிமிடங்களுக்கு MELE என்ற கிராமத்துக்குச் செல்லலாம். அங்கே உள்ள நீர்வீழ்ச்சிக்கு[MELE CASCADES]வனு-அற்றுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விரும்பிச் செல்வார்கள். வழிகாட்டியின் உதவியுடன், மரவள்ளித்தோட்டம், தென்னைகள் ,குரோட்டன் செடிகளுக்கிடையிலே நடந்து(கிட்டத்தட்ட 15,20 நிமிடங்கள்) நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். பல நீர்வீழ்ச்சிகள் உள்ளது. நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம். சில இடங்களில் பெரிய வழுக்கக்கூடிய கற்களின் மேல் அவதானமாகச் சென்று நீர்வீழ்ச்சிக்கு செல்லவேண்டும். அச்சமயத்தில் கூட வரும் வழிகாட்டி கற்களின் மேலே ஏற உதவி செய்வார்.

p3040032jf1.jpg

p3040033it8.jpg

p3040034nv6.jpg

p3040036dt8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

மேலதிகப்படங்கள்

p3040043rw6.jpg

p3040044fk9.jpg

p3040046pu8.jpg

p3040047gz6.jpg

இந்தத் தோட்டத்தில் 100 வருடங்களுக்கு முன்பிருந்த மூதாதையர்களின் கதைகளினை வாசிக்கக்கூடியதாக இருந்தது. அந்தக்காலத்தில் கிராமத்தலைவர் வாழ்ந்த வீட்டினையும்(படத்தில் உள்ள கொட்டில் வீடு) இந்தத்தோட்டத்தில் காணலாம். அந்தக்காலத்தில் கிராமத்தலைவர்களுக்கு 5 மனைவிகள் இருந்தார்கள். திருமணத்தின் போது மனைவியின் முன் மேற்பற்கள் இரண்டும் உடைக்கப்படும்.

அரவிந்தன் உந்த பல்லுடைக்கிறதுக்கு என்ன காரணமாம்? முகத்தாருக்கு மிகவும் உபயோகமான தகவல்.

படங்கள் மற்றும் தகவல்களுக்கு நன்றி.

அந்தக்காலத்தில் கிராமத்தலைவர்களுக்கு 5 மனைவிகள் இருந்தார்கள். திருமணத்தின் போது மனைவியின் முன் மேற்பற்கள் இரண்டும் உடைக்கப்படும்.

:shock: :shock: :shock: :shock: :shock:

அப்ப கணவன்மாருக்கு முழுப்பல்லும் உடைக்கிறதோ :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :wink: :P

அது கலியாணத்திற்குப் பிறகல்லோ உடைக்கப்படுறது.... :wink: :lol::lol:

அப்ப கணவன்மாருக்கு முழுப்பல்லும் உடைக்கிறதோ :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :wink: :P

அதை காலப்போக்கில மனிசிமார் செய்வினம்தானே...! கட்டினாப்பிறகு மனிசிக்கு செய்ய ஏலது அதுதான் முன்னமே செய்யினம். :wink: ..... ஒண்டைகட்டியே மனிசன் படுகிறார் இதுக்கை ஐஞ்சாம்...! பல்லுடைப்பாம்... :evil: :evil: :evil:

அது கலியாணத்திற்குப் பிறகல்லோ உடைக்கப்படுறது.... :wink: :lol::lol:

அப்ப இப்ப எப்படி சாப்பிடுறியள்?? உரலில இடிச்சா?? :P :P :wink: :evil: :evil:

தை காலப்போக்கில மனிசிமார் செய்வினம்தானே...! கட்டினாப்பிறகு மனிசிக்கு செய்ய ஏலது அதுதான் முன்னமே செய்யினம். :wink: ..... ஒண்டைகட்டியே மனிசன் படுகிறார் இதுக்கை ஐஞ்சாம்...! பல்லுடைப்பாம்... :evil: :evil: :evil:

என்ன எல்லாக் கணவன்மாரும் மனுசிமாரை வில்லி ரேஞ்சுக்கு வர்ணிக்கிறியள். உப்பிடி வர்ணிச்சு பாவம் கட்ட இருக்கிற பெடியளை பயப்படுத்தாதேங்கோ :|ஆனால் ஒரு நாள் மனுசிமார் இல்லாமல் ஒரு வேலையை உங்களால உருப்படியா செய்ய ஏலுமா????? :oops:

என்ன எல்லாக் கணவன்மாரும் மனுசிமாரை வில்லி ரேஞ்சுக்கு வர்ணிக்கிறியள். உப்பிடி வர்ணிச்சு பாவம் கட்ட இருக்கிற பெடியளை பயப்படுத்தாதேங்கோ :|ஆனால் ஒரு நாள் மனுசிமார் இல்லாமல் ஒரு வேலையை உங்களால உருப்படியா செய்ய ஏலுமா

மனுசிமார் இருந்தால்தான் ஒண்டும் உருப்படியாக செய்ய முடியாது( இதுக்காக தான் வாஜ்பாய்யும் கலாமும் திருமனம் செய்யவில்லை ஏன் விவேகானந்தர் கூடதான்) :oops:

அப்ப இப்ப எப்படி சாப்பிடுறியள்?? உரலில இடிச்சா?

உங்கள் சமையலை வேற உரல்ல இடிச்சு சாபிடனுமா? :twisted: :twisted: களி கிண்டு என்று சொன்னா கூழ் காச்சி இருப்பிர்கள் ஆனா அதுக்கு பெயர் களியாம் சரி கூழ் காச்சுங்கோ எண்டா புக்கை பொங்கி வைச்சு இருபிங்கள் கேட்டா இதுதான் கூழ் அம்மா இப்படிதான் சொல்லி தந்தவா எண்டு ஒரு இடக்கு முடக்கு பதில் :twisted: :twisted:

அப்ப இப்ப எப்படி சாப்பிடுறியள்?? உரலில இடிச்சா?? :P :P :wink: :evil: :evil:

மனிசி சாப்பிட்டு சப்பித் துப்பி வச்ச மிச்சத்தை :lol::lol:

ஆனால் ஒரு நாள் மனுசிமார் இல்லாமல் ஒரு வேலையை உங்களால உருப்படியா செய்ய ஏலுமா????? :oops:

மனிசியும் உப்படித் தான் கேக்கிறா, நீங்க இப்பவே கேக்குறியள் பிறகு நான் , கட்டப் போற பெடியளைப் பயப்பிடுத்திறன் எண்டுறியள் , நீங்களே பயப்பிடித்திக் கொண்டு. :cry:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லாக் கணவன்மாரும் மனுசிமாரை வில்லி ரேஞ்சுக்கு வர்ணிக்கிறியள். உப்பிடி வர்ணிச்சு பாவம் கட்ட இருக்கிற பெடியளை பயப்படுத்தாதேங்கோ :|ஆனால் ஒரு நாள் மனுசிமார் இல்லாமல் ஒரு வேலையை உங்களால உருப்படியா செய்ய ஏலுமா????? :oops:

அது தானே! வில்லி என்று வர்ணித்துக் கொண்டு, ஏன் கலியாணம் கட்டுகின்றியள்? அதுவும் தங்களுக்கு கலியாணம் ஆகி, குழந்தை பிறந்த பிறகு இப்படிக் கதையை வட்டு, எம்மை ஒண்டிக்கட்டையாகவே வாழவைக்கப் பார்க்கின்றீர்களா? :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

மனுசிமார் இருந்தால்தான் ஒண்டும் உருப்படியாக செய்ய முடியாது( இதுக்காக தான் வாஜ்பாய்யும் கலாமும் திருமனம் செய்யவில்லை ஏன் விவேகானந்தர் கூடதான்) :oops:

திருமணம் செய்யத உப்படி, ஒன்று இரண்டு பேரைத் தான் உங்களால் காட்டமுடியும். திருமணம் செய்து சாதிச்சவையைப் பட்டியல் போட்டு காட்டவா? :wink:

வாஜ்பாய் இருக்கட்டும். அப்ப நீங்கள் ஏன் கலியாணம் கட்டினீங்கள்!! :roll:

மனிசி சாப்பிட்டு சப்பித் துப்பி வச்ச மிச்சத்தை :lol::lol:

அடப் பாவத்தை உங்கட நிலமை படுமோசமாத் தான் கிடக்கு :cry:

மனிசியும் உப்படித் தான் கேக்கிறா, நீங்க இப்பவே கேக்குறியள் பிறகு நான் , கட்டப் போற பெடியளைப் பயப்பிடுத்திறன் எண்டுறியள் , நீங்களே பயப்பிடித்திக் கொண்டு. :cry:

அவ சரியாத்தான் சொல்லி இருக்கிறா :wink:

நான் நீங்கள் சொன்னதைத்தான் கேட்டன். :oops:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.