Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கிழக்கு தமிழர்களுக்கான தாயகம் என்பதற்கு ஆதாரம் இல்லை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் தப்பிப்பிழைத்தல் என்பதுதான் தமிழர்களின் தற்போதைய பிரச்சினை.

கொடூர வன்முறைகளைப் பாவித்து மக்களை கிலியடையச் செய்து தேசியப் போராட்டத்தில் இருந்து ஒதுங்கச் செய்யவேண்டும் என்பதுதான் சிங்கள அரசின் உத்தி. இதற்குத் துணையாகப் பல தமிழ்க் கூலிப்படைகள் உள்ளன என்பதும் சாபக்கேடுதான்.

  • Replies 158
  • Views 13.7k
  • Created
  • Last Reply

இஸ்ரோலின் வெற்றிகள் பல விற்கு காரணம் தொழில்நுட்பங்கள் மாத்திரமல்ல, அவர்களால் விலைக்கு வேண்டக்கூடிய பலஸ்தீனர்களும் தான். அதாவது துரோகிகளால் பெறக்கூடிய தகவல்கள் அவர்களது வெற்றிகளில் பாரிய பங்கை வகிக்கின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பொருளாதார நிலமை மற்றும் அறியாமை என்பன ஒட்டுபடைகள் உருவாகுவதை தவர்க்கமுடியாத தாக்கிறது. இவற்றை நிவர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டும். தெரிந்து கொண்டு துரோகி ஆகிறவர்களிற்கு எந்த மன்னிப்பும் இருக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் முகத்தார்! இப்படி இனத் துரோகிகளின் சதிவலைகளால் தான் இன்று தமிழ்மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கறுணா தப்பி ஓடும்போது ஏன் ஓடுகின்றீர் என்று கேட்ட போது அப்போது அந்தத் துரோகி" தான் கிழக்கு மக்கள் யாரும் சாகக் கூடாது என்பதற்காகத் தானாம். புலிகளிடம் 2 நாளில் கிழக்கை விட்டு, ஓடியதாகக் கூறினான்.

இப்போது பார்த்தால், கேவலம், மோட்டர் சைக்கிளுக்காகவோ, அல்லது பணம் கொள்ளையடிப்பதற்காக இனக் கொலை செய்ய வேண்டிய நிலைக்கு அந்தத் துரோகி தள்ளப்பட்டு விட்டான்.

கிழக்கைக் காப்பற்றுகின்றோம் என்று சொல்லிக் கொண்டு வெளிக்கிட்ட, இந்த ஆளால் இந்தப் பிரிவிற்கு பிறகு சுமார் 2000 பேர் அளவில் கொல்லப்பட்டுள்ளனர். இது தான் இந்த நபரின் கிழக்கைக் காப்பாற்றும் விதம் என்பதற்கு அப்பால், ஈபிஆர்எல்எவ் முன்பு எவ்வாறு வழிப்பறி செய்தது என்பதை நினைவு படுத்துகின்றது!

நீங்கள் எழுதிறத்துக்கு முதல்..யோசியுங்கோ... தாறுமாறாத் தட்ட முதல்..என்ன தட்டுறன் என்று பாருங்கோ..!

பரராஜசிங்கம் ஐயா கூட எப்பவுமே புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு தலைவர்தான். அவரின் கருத்துக்கள் சர்வதேசமெங்கும்..அவதானிக்கப்

குருவிகளுக்கு ஆதரவு குடுக்கிறேன் எண்டு நினைக்கவேண்டாம் ஆனால் இன்று வட கிழக்கில் என்ன நடக்கிறது ஒருநாளுக்கு சாராசரி 5க்கு மேல் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் யாரால் எண்டு பாத்தால் சிங்களவனால் அல்ல............. தமிழனுக்கு தழிழனே துப்பாக்கி நீண்ட வேண்டிய நிலை ஏற்பட்டது எங்களுக்கு கிடைத்த பெரிய சாபக்கேடு. போராட்டகாலங்களில் ஏதாவது ஒரு இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் உயிர் எடுக்கப்படும் அளவுக்கு எங்களுக்குள் விரோதங்களை வளர்த்ததில் சிங்களவனின் அறிவை கொஞ்சம் ???????

சாபக்கேடு, துரதிஸ்ரம் எனும் வார்த்தைகளை சொல்லி எங்களின் இயலாமையை கிளராதேங்கோ முகத்தார்....! ஒரு சிலர் தங்களை தலைவர்களாய் சொல்லிக்கொண்டு தங்களின் நலன்களுக்காக சொந்த இனத்தை பாழ்குளியில் தள்ளுவது எல்லா நாடுகளிலும் இருகிறது... அதுதான் மத்தியகிழக்கில் விமர்சியாக நடக்கிறதே...! இங்குமட்டும்தான் நடப்பது அல்ல....!

அப்பிடிப்பார்த்தாலும் சிங்களவனால் தான் பரமியும், கதிர்காமரும், பொன்சேகாவும் கொல்லப்படனர்... இன்னும் பலர் இருக்கலாம்....! JVP காறர் எண்டு கிட்டத்தட்ட சூரிய கந்தவிலேயே 60 ஆயிரம்பேரை கொண்றதாக பிறேமதாசா உடுகம்பல மீது குற்றச்சாட்டு உண்டு....!

பாதாளக்குழுக்கள் எண்று பல சிங்களக்குளுக்கள் கொலைகளிலும் கொள்கைகளிலும் ஈடுபடுகிறது.....! அதையே தமிழ்குழுக்கள் இராணுவத்தோடு செய்கின்றன... அவ்வளவுதான்....! இராணுவத்தை அடக்கும் போது அவர்கள் அடங்கிவிடுவார்கள்....! யாழ்ப்பாணத்தில் ஆடியவர்கள் இந்திய இராணுவம் போனதும் அடங்கியதை பாத்திருப்பீர்கள்தானே...??

  • தொடங்கியவர்

புலிகள் பாதுகாப்பாக இருக்கினமோ இல்லையோ..தமிழ் மக்களின் நிலையை ஜனநாயக வழியில் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டியவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை..புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் உண்டு. புலிகளின் கருத்தை சர்வதேசமும் சரி..சிங்களவர்களும் சரி...ஏன் தமிழர்களும் சரி சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கின்றனர். இந்த யதார்த்தம் புரியாமல்..நீங்கள்...ஏதோ எதிர்த்து எழுதனும் என்றதுக்காக எழுதிட்டு இருக்கிறீங்கள்.புலிகளுக்கு தங்களின் நிலை விளங்கித்தான்..தமிழ் தேசிய முன்னணியை உருவாக்க உற்சாகம் வழங்கினர். எனவே அந்த கூட்டமைப்பாளர்கள்..தங்களுக்க

சாபக்கேடு துரதிஸ்ரம் எனும் வார்த்தைகளை சொல்லி எங்களின் இயலாமையை கிளராதேங்கோ முகத்தார்.

இல்லைத்தம்பி வேறு என்னவெண்டு சொல்லுறது முந்தி 1983 கொழும்பிலை அடிபட்டு கப்பலிலை வந்து இறங்கின எங்கடை இளைஞர்கள் இந்த இயக்கத்திலைதான் சேரவேண்டும் எண்டு சேரவில்லை சிங்களவனை அழிப்பதுதான் அவர்களின் குறியாக இருந்தது இதன் பின்தான் இயக்கங்களும் வளர்ந்தது இது பழையகதை ........... பிறகு ஏன் சிங்களவனுடன் சேர்ந்து தமிழனைச் சுடுகிறதும் காட்டிக்குடுக்கிறதும் எண்டுதான் கேக்கிறன் இண்டைக்கு இவங்களின் பெயரை பயன்படுத்தி இராணுவமே எத்தனை கொலைகளை செய்கிறது அண்மையில் திருமலையில் எனது நண்பனின் தம்பி இராணுத்தால் சுடப்பட்டார் (புலிகளுக்கு 10வருடங்களுக்கு முன்னம் ஆதரவாம் இப்ப குடும்ப வாழ்க்கையில் இணைந்து தானும் தன்பாடும்) அவரின் செத்த வீட்டுக்கு போயிருந்தேன் செத்தவீட்டில் ஒரு 10பேர் மட்டும்தான் இருந்தார்கள் அந்த வீட்டுக்கு போறவர்களை இராணுவ ஓட்டுப்படை நோட்டம் விடும் என்ற பயத்தால் எவரும் வரவில்லை........... அட ஒரு மனிதன் இறப்புக்கு செய்யக்கூடிய மரியாதையை கூட செய்ய முடியாமல் இருப்பது எமக்கு கிடைச்ச சாபக்கேடு எண்டு சொல்லாமல் என்ன சொல்வது..................

அப்ப என்ன செய்வம் இந்த தமிழர்களான கருணா டக்கிளசு மற்றது இவயின்ர கூட்டத்தை? எல்லாருமாச் சேர்ந்து உண்ணாவிரதம் இருப்பமா இல்லை வா ராசா வா உன்னோடு ஒண்டு கதைக்க வேணும் எண்டு கூப்பிடுக் கதைப்பமோ

இதுக்கு ஓரே பதில் திருடனாப் பாத்து திருந்தாவிட்டா திருட்டை ஒழிக்க முடியாது அதுபோலைத்தான் தமிழனை வாழவைக்க வேணும் எண்டு இவங்கள் சுயமாக சிந்திக்கவேண்டும் ...........அதை இவங்களிடம் எதிர்பாக்கமுடியாது ஏனெண்டால் சிந்திப்பதுக்கு தலையிலை மூளை எண்டு ஒண்டு இருந்தா தானே...................

இங்க ஒண்டைத் தான் என்னால சொல்லலாம்.இண்டைக்கு இசுரேலியரினால லெபனானில சனத்தை என்ன பாடு படுதுறாங்கள்? எத்தினை அரபு நாடுகள் இருக்கு? உலகின் அதிமுக்கிய வளமான எண்ணெய் வளம் அராபியர்களிடம் உண்டு.இவ்வளவு வளமும் பல்வேறு நாடுகளின் அரசியற் பலமும் இருந்து ஏன் இந்த மக்களைக் காப்பாற்ற முடியவில்லை?

இவர்களால் தங்கள் பக்க நியாயங்களைக் கூற முடியவில்லையா?இவர்களிடம் ஊடகங்கள் இல்லையா?

சர்வதேசத்திடம் இந்த மக்கள் தங்களின் நிலையைக் கூற வில்லயா? இல்லயே எல்லா உலக தொடர்பு சாதனக்களிலும் இவர்களின் நிலை காட்டப் படுகிறது.ஆனால் ஏன் இது இன்னும் தொடர்கிறது.எல்லாத்துக்கும் ஒரே விடை சர்வதேச அரசியல் என்பது நியாயம் சார்ந்ததோ மனித உரிமைகள் சார்ந்ததோ இல்லை .அது நலன் சார்ந்தது.எவர் நலம் சார்ந்தது? எவர் எவர் வலுச் சமனைலையில் பலமுற்று இருகிறார்களோ அவர்களின் நலன் சார்ந்தது. ஈற்றில் வரலாற்றின் போக்கை வலுவுள்ளவர்களே நிர்ணயிகிறார்கள்.பல அரபு நாடுகள் இருந்தும் அவற்றிற்கிடயே முரண்களை வளர்த்து ஒருங்கு படாமல் செய்து அவற்றின் வலுவை இந்த மேற்குலகம் சிதைத்துள்ளது.

அப்படியென்றால் தமிழ் மக்களாகிய நாங்கள் எப்படி எங்களை வலுவுளவர்களாக ஆக்கிக் கொள்ளலாம்? ஒருங்கு பட்டு ஒரு நோக்கத்தின் கீழ் செயற்பட்டு எமது பலத்தைப் பெருக்க வேணும்.அதற்கு அரசியல் ரீதியாக நாம் ஒருங்கு பட்டு இயங்க வேணும்.எமது பலத்தைப் போராட்டங்கள் மூலமும் எமது செயற்பாடுகள் மூலமும் காட்ட வேணும்.இங்க விமர்சிச்சு அது பிழை இது பிழை எண்டு தாங்கள் பெரிய வித்துவான்கள் போல் காட்டுவதால் இது நிகழ்ந்து விடப் போவதில்லை.இதைச் செய்பவர்களின் ஒரே நோக்கம் தம்மை முன் நிறுத்தி தாம் எதோ ஆகாயத்தில் இருந்து குதித்த சூரர்கள் போல் பெரிய அறிவுஜீவிகள் போல் காட்டி தமக்கென ஒரு விம்பத்தை உருவாக்குவது தான்.இவர்களிடம் போராட்டத்தின் மீதான உண்மையான பற்றோ மக்களின் மீதான கரிசனயோ இல்லாமல் தாம் என்னும் விம்பத்தில் இருந்தே எல்லாம் ஆரம்பம் ஆகின்றது. இவ்வாறானவர்கள் போராட்டத்திற்காக ஒரு துரும்பைத் தானும் குடுதிருக்க மாட்டார்கள்.போர்த்தி இருக்கும் போர்வையை அவ்வளவு இறுக்கமாக மூடிக்கொன்டு தான் இத்தனை விமரிசனமும்.ஏனெண்டால் மற்றவனைப் பற்றி இவ்வளவு விமர்சிகிற உன்னைப் பார்த்து , மற்றவன் அப்ப நீ என்ன செய்தனி எண்டு கேக்க ஏலாது. அங்கு இங்கு பொறிக்கி சுய சிந்தனை தெளிவு அற்றுச் சிந்திப்பதுவும் , முன்னுகுப் பின் முரணாக குழப்பமான சிந்தனையில் இருந்து கருத்துக்களை கொட்டுவதும் தான் நடந்து வருகிறது.இதற்கு காழ்புணர்ச்சி, தனி நபர் விரோதம் எல்லாரும் ரகசியமா என்னைப் பற்றிக் கூடிக் கதைகிறாங்கள் என்ற பிரம்மைகள்.இது அடிப்படையில் ஒரு மன வியாதி தான்.

உப்படி மனவியாதி உள்ளோரின் கருத்துக்கு பதில் எழுதிக் கொன்டிருப்பது வீண் நேர விரயம்.இதை விட உருப்படியா வேற காரியம் செய்யலாம்.

முகத்தார் கொலைகள் கவலை கொள்ளச் செய்வன தான் ஆனால் அவை இல்லாமல் எமது போராட்டத்தை எவ்வாறு நடத்துவது ,துரோக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது?

ஒரு துரோகியை அழிப்பதன் மூலம் பல விடுதலை வீரர்களை, போராட்ட ஆதரவு சக்திகளைப் பாதுகாக்க முடியும் எண்டால் அந்த கொலை நிகழ்ந்து தானே ஆக வேண்டும்.இதை விட்டால் வேறு வழி என்ன?

இதற்குத் தான் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர உள்ளனர்.இதன் பின்னர் நிலமைகள் ஆளணி, வசதிகளைப் பொறுத்து சீராகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எழுதிறத்துக்கு முதல்..யோசியுங்கோ... தாறுமாறாத் தட்ட முதல்..என்ன தட்டுறன் என்று பாருங்கோ..!

பரராஜசிங்கம் ஐயா கூட எப்பவுமே புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கும் ஒரு தலைவர்தான். அவரின் கருத்துக்கள் சர்வதேசமெங்கும்..அவதானிக்கப்

புலிகள் பாதுகாப்பாக இருக்கினமோ இல்லையோ..தமிழ் மக்களின் நிலையை ஜனநாயக வழியில் சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டியவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை..புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் உண்டு. புலிகளின் கருத்தை சர்வதேசமும் சரி..சிங்களவர்களும் சரி...ஏன் தமிழர்களும் சரி சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கின்றனர். இந்த யதார்த்தம் புரியாமல்..நீங்கள்...ஏதோ எதிர்த்து எழுதனும் என்றதுக்காக எழுதிட்டு இருக்கிறீங்கள்

அப்ப சர்வதேசம் கருணாகுழுவைய்யும் இலங்கை அரசையும் நம்பிக்கையோட பாக்குது எண்டுறீரோ....???? நம்ப நட நம்பி நட எனும் ஜதார்த்ததோடு பார்க்கும் போது அவர்கள் எங்களை நம்பவேண்டும் என்பதில்லையே.....!

புலிகளுக்கு தங்களின் நிலை விளங்கித்தான்..தமிழ் தேசிய முன்னணியை உருவாக்க உற்சாகம் வழங்கினர். எனவே அந்த கூட்டமைப்பாளர்கள்..தங்களுக்க

இல்லைத்தம்பி வேறு என்னவெண்டு சொல்லுறது முந்தி 1983 கொழும்பிலை அடிபட்டு கப்பலிலை வந்து இறங்கின எங்கடை இளைஞர்கள் இந்த இயக்கத்திலைதான் சேரவேண்டும் எண்டு சேரவில்லை சிங்களவனை அழிப்பதுதான் அவர்களின் குறியாக இருந்தது இதன் பின்தான் இயக்கங்களும் வளர்ந்தது இது பழையகதை ........... பிறகு ஏன் சிங்களவனுடன் சேர்ந்து தமிழனைச் சுடுகிறதும் காட்டிக்குடுக்கிறதும் எண்டுதான் கேக்கிறன்.......

ஒவ்வொரு போராட்டதையும் அதை நடத்தும் உறுப்பினர்களைவிட அதன் தலைவர்தான் நிர்னயிக்கிறார்....! இதில் எங்களுக்கு நல்ல தலமை கிடைத்தில் நாங்கள் சாபக்கேடானவர்கள் கிடையாது...!

போராடப்புறப்பட்டவர்கள் தலமை சரி இல்லை என்னும் போது அதன் பாதையில் தன்பாட்டுக்கு மாறிவிடுகிறார்கள்...! நாளைடைவில் அதுவே அவர்களுக்கு பழக்கமாகியும் விட்டுகிறது சரியான முறையில் தங்களை வளர்த்துக்கொள்ள தவறும் ஒவ்வொருவருக்கு தலமை செய்யும் தவறால் பாதிக்கப்படுவது நடப்பதுதான்....(ஆனால் புலிகள் அமைப்பில் ஒருவர் விலகிவிட விரும்பினால் தாராளமாக விலகி தன் வாழ்க்கையை தொடரலாம்.)

தங்களை சரியாக வளர்த்துக்கொள்ளாத அமைப்புக்கள் மற்ற இயக்கங்களின்பேரில் கொள்ளைகளில் ஈடுபடும் போது மக்களை துன்புறுத்தும்போது தங்களை நன்கு நிலைப்படுத்தியவர்கள் தட்டிக்கேட்பது தவிர்க்க முடியாததாகிவிடும்....!

உண்மையிலே தமிழர் உரிமக்காக பாடுபட நினைப்பவர்கள் ஏதாவது ஒரு தலைமையை ஏற்க வேண்டியது இல்லை... அவர்களின் வளியில் உதவலாம்... ஆனால் எதிரிக்கு ஒத்துளைப்பு கொடுப்பது சரியான வேலை கிடையாது....!

  • தொடங்கியவர்

அப்ப சர்வதேசம் கருணாகுழுவைய்யும் இலங்கை அரசையும் நம்பிக்கையோட பாக்குது எண்டுறீரோ....???? நம்ப நட நம்பி நட எனும் ஜதார்த்ததோடு பார்க்கும் போது அவர்கள் எங்களை நம்பவேண்டும் என்பதில்லையே.....!

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் என்பதை இன்னும் சர்வதேசம் முற்றாக ஏற்றுக் கொள்ளேல்ல. இலங்கை இனப்பிரச்சனையில்..ஒரு தரப்பாகத்தான் புலிகள் இருக்கிறார்கள்..! அப்படித்தான் ஒப்பந்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேசம் ஏற்றுக்கொள்ள இல்லை என்பது வெறும் பேச்சளவில்த்தான் இருக்கிறதே தவிர முக்கியமாக அவர்கள் புலிகளின் முடிவுகளை மட்டும்தான் எப்போதும் எதிர்பார்த்தும்... அவர்களின் செயற்பாடுகளை முடக்க எண்டு படும்பாடுகளும் வெளிச்சம் போட்டுகாட்டுகிறதே....! யார் தமிழர்களின் பலமான பிரதிநிதிகள் எண்று....! பலர் சேர்ந்தும் அளிக்க முடியாத பகுதியாக இருகிறார்கள் புலிகள் எண்ற உள்ளங்கை நெல்லிக்கனியை தெரியாது என்பது அவர்கள் அரசியல் நலன் சார்ந்து முடிவு எடுகிறார்கள் என்பதாகும்...

புலிகள் முக்கிய ஒரு பகுதி எண்று மட்டும் சொல்லுவதானால் மற்ற பகுதிகளோடு தனித்தனியாக பேசி ஒரு நிலைப்பாட்டை எடுக்க ஏன் சர்வதேசம் முயலவில்லை...??? புலிகள் கோபித்துக்கொள்வார்கள் எண்றா...???

புலிகள் தாங்களே ஏக பிரதிநிதிகள் என்று பல காலமாகச் சொல்லி வந்தும் சிறீலங்கா சொன்னதையே சர்வதேசம் கவனத்தில் எடுத்துச் செயற்படத்தொடங்கவே.. புலிகள்..தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடு..புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று சொல்ல வைச்சு தேர்தலில் நின்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியும் பெற்றது. ஆனால்..இதை இன்னும் சர்வதேச சமூகம் அங்கீகரிச்சதாத் தெரியல்ல..! இந்த நிலையில்...புலிகளின் ஏகபிரதிநிதித்துவத்தை அங்கீகரித்த கட்சிகள்..ஒரு கூட்டமைப்பாகத்தான் இருக்கின்றனவே தவிர..தங்களின் தனிச் கட்சிகளைக் கலைத்து விடவும் துணியவில்லை..! புலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட பின் ஏன் தனிக் கட்சிகளை..இன்னும் பரிகரிக்கிறார்கள்..என்ற கேள்வி..நியாயமானதுதானே...????! இதைத்தான் மாற்றுக் கருத்து ஆயுதக் கும்பல்களும் சுட்டிக்காட்டி..தமது செயற்பாடுகளுக்கு நியாயம் கற்பிக்க முயல்கின்றன...!

முதலில் சர்வதேசம் சிங்களம் சொலுறதை கேட்டு மட்டும் சர்வதேசம் முடிவு எடுக்குது எனும் பத்தாம்பசலித்தனமான கருத்தை நிப்பாட்டும்.... அப்படியானால் புலிகளோடு பேச ஒரு சர்வதேச பிரதிநிதியும் வன்னி செண்று இருக்கமாட்டார்கள்... புலிகளை பொருட்டாக மதிக்காமல் செயற்பட்டு இருப்பார்கள்... வன்னி போகவே பயப்பட்டு இருப்பார்கள்....!

கட்ச்சிகளை கலைப்பது என்பது ஏன்...??? புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொண்டது என்பதுக்காக கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்ச்சிகள் எல்லாம் புலிகளோடு இணைய வேணும் என்று சொல்லி இருந்தால் நியாயமாக இருந்திருக்கும்....! ஆனால் புலிகள் தங்கள் உறுப்பினர்கள் மக்களைவை உறுப்பினர்களாய் இருப்பதை விரும்ப மாட்டார்கள்.... என்பதால் அவர்கள் வெளியில் இருக்கிறார்கள்....! ஆனால் கட்ச்சிகள் எல்லாம் ஒண்று சேர்ந்து சுதந்திரக்கட்ச்சியின் வீட்டுசின்னத்தில் (சின்னம் என்பது அந்த கட்சியின் அடையாளம்) நிண்றார்கள் எண்டால் அது அவர்கள் ஒரேகட்ச்சியாய் (சுதந்திரா காட்சியில்) பாராளுமண்ரம் செல்வார்கள் எண்று அர்த்தம்.... ஆனால் தங்களின் கட்ச்சிகளை கலைக்காமல் அந்த கட்சியையும் வைத்ருக்கிறார்கள் எண்றால் அதுக்கு காரணம் புலிகள் மீது இல்லாத நம்பிக்கை இல்லை...!

அதுக்கு காரனம் ஒருவேளை கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் தங்களின் இடைவெளிகளையும் கொள்கை வேறுபாடுகளையும் விட்டுவிட விரும்பவில்லை என்பதாகும்... அது உலக ஜனநாயகத்துக்கு உட்பட்டதுதான்.... அதயும் தாண்டி உறுப்பினர்கள் கட்சி பேதமாக அடிபட்டார்கள், இல்லை துற்றிக்கொண்டார்கள் எண்றால்த்தான் நீர் சொல்லும் வாக்கியத்துக்கு வியாக்கியானம் தேவைப்படும்....! :idea:

எது எப்படியோ..தமிழ் மக்களின் நியாயமான அரசியல் எதிர்பார்ப்புகளோடு..புலிகள் கொள்கை உறுதியோடு செயற்படுகின்றதை பாராட்ட வேண்டிய அதேவேளை..புலிகளை ஆதரிக்கும்..ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வோரின் மீது...முழுமையான நம்பிக்கை வைக்க முடியாது..! அவர்களின் சில செயற்பாடுகள்..கூட..இதையே சுட்டிக்காட்டுகின்றன..!

அது ஆண்டாண்டு காலமாக புலிகள் காட்டிவரும் தீரத்துக்கும் அடிபணியா நிலையும் சொல்லிவருவதுதான்... இந்தியாவான இந்தியாக்கு பணியாத புலிகள் யாருக்கு பணிந்துவிடப்போகிறார்கள்... அப்பவே மாகானசபையில் நல்ல பதவிவாங்கிக்கொண்டு சந்தோசமாக இருக்க தெரியாமல்தான் தலைவர் இவ்வளவுகாலமும் போராடுறார் எண்டா நினைக்கிறீர்...!

அப்பிடி புலிகளின் ஏக பிரதிநிதியாய் இருப்பதை நம்பிக்கை வைக்காதவர்கள் மக்கள் எழுச்சிகளைப்பார்த்து வியப்பதையும் தங்களின் பதவிகளுக்கு காரணம் புலிகள்தான் என்பதை உணர்ந்துதான் உள்ளார்கள்... அதயும் தாண்டிப்பார்த்தால் அர்சாங்கம் அமைச்சர் 25 உறுப்பினர் உள்ள கட்ச்சிக்கு அரசாங்கத்தில் இணைந்திருந்தால் அமைச்சுப்பொறுப்பிகளில் ஆனந்தமாய் அமர்ந்திருக்கலாமே....! (ஒரு உறுப்பினர் கட்ச்சிக்காறனே அமச்சராய் இருக்கும் போது) ஆனாலும்... உயிர் ஆபத்து இருந்தும் பாராளிமண்ற உறுப்பினர் பதவிகளில் மட்டும் ஒட்டி இருகிறார்கள்... அதற்க்கு முக்கிய காரணம் புலிகள் தமிழீழத்தை கைப்பற்றுவார்கள் எண்று நம்புவது....! அங்கு தங்களுக்கான் இடம் மதிப்பளிக்கும் விதமாய் இருக்கும் என்பதுதான்...!

பாராளுமன்றில் இப்படி தமிழர் பாரம்பரிய நிலம் பற்றிக் கேள்வி எழுப்பப்படும் போது..அதுக்கொரு தனியான விவாத நாளைப் பெற்று..வரலாற்றுத் திரிபுகளை செய்வதாக சொல்லப்படும் சிங்கள மற்றும் முஸ்லீம் அரசியல் சக்திகளுக்கும்..அதனூடு சர்வதேசத்துக்கும்..தமிழ் மக்களின் நியாயங்களை வெளிக்காட்டக் கூடிய ஒரு சந்தர்ப்பம் இருந்தும்..அது ஏன் தவற விடப்பட்டது..அல்லது படுகிறது...என்ற வினவல் ஒன்றும்..கேலிக்குரிய விடயமல்ல..! :idea:

அன்னார் பாராளுமண்ரத்தில் முழங்கினார் எண்று நீங்கள் மகிழுற மாதிரி அவர்கள் செய்யவில்லைத்தான்.... வெளிநாடுகள் எல்லாம் இதை உன்னிப்பாய் கவனித்து மக்களை அழிவில் இருந்து காப்பாற்றி தனிநாடாக பிரித்து கொடுத்து இருக்கும்..... அந்த நல்ல சந்தர்ப்பத்தை தவறவிட்டவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....! :wink:

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்கள் ஏன் அரசியல் கட்சிகளாக இருக்க முடியாது? அவர்கள் அவற்றைக் கலைத்துவிட்டு புலிகளோடு இணைய புலிகள் என்ன அரசியல் கட்சியா?

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தொழில்படாத எவரும் அரசியல் கட்சிகள் வைத்திருக்க உரிமை இருக்கும். இது மற்ற நாடுகளில் உள்ள நடமுறைதானே.

  • தொடங்கியவர்

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருப்பவர்கள் ஏன் அரசியல் கட்சிகளாக இருக்க முடியாது? அவர்கள் அவற்றைக் கலைத்துவிட்டு புலிகளோடு இணைய புலிகள் என்ன அரசியல் கட்சியா?

தமிழ்த் தேசியத்தை ஏற்றுக் கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராக தொழில்படாத எவரும் அரசியல் கட்சிகள் வைத்திருக்க உரிமை இருக்கும். இது மற்ற நாடுகளில் உள்ள நடமுறைதானே.

தமிழ் தேசியத்துக்காக ஒன்றிணைந்தவர்கள்..ஜனநாயக ரீதியில்..ஒரு கட்சியாக.. தம்மை இணைத்துக் கொள்ளலாமே..ஏன் கூட்டமைப்பாக இருக்க வேணும். அவர்களுக்குள் இன்னும் தனிக் கருத்துக்கள்..தனி நிலைப்பாடுகள்..இருக்கின்றன..எ

தமிழ் தேசியத்துக்காக ஒன்றிணைந்தவர்கள்..ஜனநாயக ரீதியில்..ஒரு கட்சியாக.. தம்மை இணைத்துக் கொள்ளலாமே..ஏன் கூட்டமைப்பாக இருக்க வேணும். அவர்களுக்குள் இன்னும் தனிக் கருத்துக்கள்..தனி நிலைப்பாடுகள்..இருக்கின்றன..எ

இதை தலவைருடனான ஒரு கருத்தாடலில் கூட்டமைப்பில் உள்ள வர்களே முன் மொழிந்தனர் அதற்கு அவர் அழித்த பதில்.டெலோவுக்கு ,கூட்டணிக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதாக நாபகம்.இதை கூட்டமைவில் உள்ள ஒருவரே ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை இயக்கம் அரசியற் கட்சி கிடையாது.தமிழ் ஈழ தேசம் அமைக்க படும் வரையே அவர்களின் பங்களிப்பு அரசியலில் இருக்கும்.அதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்படால் அவற்றில் பங்கு பற்ற வெவ்வேறு கொள்கைகளை உடைய கட்சிகள் இருப்பது அவசியம்.இன்று தேசிய விடுதலைக்கு ஒன்றாக கூட்டமைவாக இருக்கும் கட்சிகள் பின்னால் வருங்கால நலங்களை முன் நிறுத்தி வெவ்வேறு கொள்கைகளோடு போட்டி இடலாம்.இவற்றில் இருந்து தமிழ் ஈழ மக்கள் தங்கள் ஆட்ச்சியாளர்களைத் தேர்வு செய்யலாம்.கூட்டமைவாக ஒன்றி இருப்பது தமிழ் ஈழம்,தேசிய விடுதலை என்ற நோக்கிலயே.

இன்று எமது நோக்கம் தேசிய விடுதலை என்ற நோக்கிலயே குவியப்படுதப் பட வேண்டும் அதற்குத் தான் கூட்டமைவு.

வருங்காலத்திற்குத் தேவை என்ற படியால் தான் ஒரு கட்சி என்ற நிலையை தலைவர் ஏற்படுத்த விரும்பவில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து.என்றும் பத்தாண்டுகள் முன் நோக்கி இருப்பது அவர் பார்வை.

  • தொடங்கியவர்
  • தொடங்கியவர்

தலைவரின் தீர்க்க தரிசனம்..ஏன் ஈரோஸ் இயக்கத்தைக் கலைக்க வேண்டிய தேவையை ஒரு காலத்தில் பாலகுமாரன் அண்ணாக்கு வழங்கியது...! உண்மையில் சிறந்த மாணவர்களைக் கொண்டு...யாழ் பல்கலைக் கழத்தில் மட்டுமன்றி..மற்றைய பல்கலைக்கழகங்களிலும்..மாணவர்

அவர்கள் எவரும் தாமே இலங்கைத் தேசத்தின் ஏக பிரதிநிதிகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை. காரணம்..தேர்தலுக்கு தேர்தல்..அவர்களின் பிரதிநிதித்துவத்தை மக்கள் மாற்றி அமைக்கக் கூடிய உரிமை பெற்றிருக்கிறார்கள்..! புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டபின்..இவர்களுக்கு ஏன்..ஒரு தனிக் கட்சி...! எல்லோரும் ஒருங்கிணைத்து.. புலிகளின் ஏகபிரதிநித்துவத்தை...வலியுறத

தலைவரின் தீர்க்க தரிசனம்..ஏன் ஈரோஸ் இயக்கத்தைக் கலைக்க வேண்டிய தேவையை ஒரு காலத்தில் பாலகுமாரன் அண்ணாக்கு வழங்கியது...! உண்மையில் சிறந்த மாணவர்களைக் கொண்டு...யாழ் பல்கலைக் கழத்தில் மட்டுமன்றி..மற்றைய பல்கலைக்கழகங்களிலும்..மாணவர்

  • தொடங்கியவர்

இதில் முட்டாள் தனம் இருக்கோ இல்லையோ..இந்தக் கூட்டமைப்பில் தனிக் கட்சிகளின் இருப்பையும்..அவற்றின் கடந்த கால ஆயுத ஜனநாயக வழிமுறைகளையுமே...இன்றும்..இவற்

  • தொடங்கியவர்

வரலாற்றைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் விவாதம் செய்வதில் பயன் இல்லை.தமது கருத்துக்குக் களுக்கு ஏற்றவறு அதனைத் திருக்க முற்படுவது மோசடியானது.இரோஸாய் பாலகுமாரும் ஏனைய பெரும்பான்மையான மத்திய குழு அங்கத்தவர்களும் சுய முடிவின் அடிப்படையிலயே கலைத்தனர்.அவர்களின் அன்றைய முடிவு மிகச் சரியானதே.ஒரு இனம் அடக்க பட்டுக் கொண்டிருக்கும் போது தேசிய விடுதலையே பிரதான முரணாக முன் தள்ளப் படுகிறது.வர்க விடுதலை என்பது தேசிய விடுதலைப் போரினூடாகவே சாத்தியமானது.அந்தத் தேசிய விடுதலைப் போர் என்பது ஒன்று பட்ட ஒருமித்த தலமையினூடாகவே சாத்தியப் படும் என்ற புரிதலின் அடிப்படயிலயே ,இரோசின் போராளிகள் விடுதலைப் போராட்டதுடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.பலர் போராடி மாவீரர்களாகவும் ,முக்கிய பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

தமிழர்களின் தேசிய விடுதலையைச் சிதைப்பதற்காக பல ஊடுருவல்கள் இந்திய உளவு நிறுவனங்களால் மேற்கொள்ளப் பட்டன.இந்தச் சதி நடவடிக்கையை முறையடிக்கவே சில இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.இன்று அவ்வாறான ஊடுருவல் இல்லாத நிலையிலயே கூட்டமைவில் உள்ள கட்சிகளின் தலமைகளில் ஏற்பட்ட மாற்றமே கூட்டமைப்பை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்தது.

கூட்டமைவுக்கு வெளியால் உள்ள ப்லொட் ஓ அன்றி டக்ளசோ தமிழ் தேசிய விடுதலை என்ற நோக்கத்திற்கு எதிராகவே இன்றும் தமது சுய லாபத்திற்காக இயக்கப் பட்டுக் கொண்டிருகின்றனர்.இவ்வாறனவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.