Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவளிக்க தயார் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Featured Replies

வடமாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு சுயேட்சையாக களமிறங்கினால் ஆதரவளிக்க தயார் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
[Monday, 2013-05-06 08:34:25]
kajenthirakumar_seithy-2-150.jpg

வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அந்த சுயேட்சைக்குழுவுக்கு நாம் ஆதரவளிக்கத் தயார் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக போட்டியிடாமல் சுயேட்சைக்குழுவாக களமிறங்கினால் அதன் சகல செயற்பாடுகளுக்கும் நாம் ஆதரவளிப்பதற்கு தயார் என்றும் அவர் சொன்னார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=82042&category=TamilNews&language=tamil

பொழுது போக்கு அரசியலை நடத்தும் கஜேந்திரகுமார்- சாடுகிறார் கனடா நக்கீரன் தங்கவேலு!

Published on September 19, 2011-8:25 am   ·   2 Comments

kajendra-150x150.jpgகஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொழுது போக்கு அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்.  வேண்டாப் பெண்ணுக்குக் கால்பட்டாலும் குற்றம் கை பட்டாலும் குற்றம் என்பார்கள்.  ததேகூ ப்பு செய்வதில் குற்றம் கண்டுபிடிப்பதே அவரது

முழுநேர வேலையாக இருக்கிறது.

கஜேந்திரகுமாரருக்கு ஒரு கட்சி இருக்கிறது. அதில் அவரே தலைவர், செயலாளர், பொருளாளர் எல்லாம். அந்தக் கட்சி அவரது வீட்டோடு இருக்கிறது. கஜேந்திரகுமார் தேர்தலில் நிற்க மாட்டார். ஏதாவது சாட்டைச் சொல்லி

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஒதுங்கிவிடுவார்.  வாலறுந்த நரிபோல மற்றவர்களையும் தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்வார்.  ததேகூ தேர்தல்களைப் புறக்கணித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

 டக்லஸ் தேவானந்தா நாடாளுமன்றம், உள்ளாட்சி மன்றம் எல்லாவற்றையும் தனது கட்சிக்காரர்களைக் கொண்டு நிரப்பி இருப்பார். அரசியலில் பால பாடம் படித்தவர்களுக்குத் தெரியும். ஒரு சனநாயக நாட்டில் (அது எவ்வளவு மோசமாக இருந்தாலும்) தேர்தலைப் புறக்கணிப்பது அரசியல் தற்கொலைக்கு ஒப்பானது. இதனை டொனமோர் அரசியல் திட்டத்தின் கீழ் நடந்த தேர்தலைப் புறக்கணித்த தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்கள்.

தமிழர்கள் தேர்தலைப் புறக்கணிக்க சட்டசபையில் சிங்களவர்களது எண்ணிக்கை அதிகரித்தது. தனிச் சிங்கள அமைச்சர் அவை அமைக்கும் அளவுக்கு சிங்கள அரசியல்வாதிகள் சென்றார்கள்.

இரண்டாவது புறக்கணிப்பு 1994 இல் வி.புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. விளைவு? அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இபிடிபி 10,744  வாக்குகள் பெற்று 9 இடங்களை (1994 EPDP gets 10744 votes and gets 9 seats)க் கைப் பற்றியது.

கஜேந்திரகுமார் “இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் அரசுக்குத் தொடர் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்த இணங்கியமை தமிழ் மக்களுக்குச் செய்த துரோகம்” எனக் குற்றஞ்சாட்டுகிறார்.   அரசுக்கு அப்படி  என்ன நெருக்கடி? அய்யன்னா வல்லுநர் அறிக்கை இந்த அமர்வில் விவாதத்துக்கு வரப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்டது.  இனி அடுத்த ஆண்டு மார்ச்சு மாதத்தில்தான் அது பற்றிய விவாதம் நடப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது.  

சரி பேச்சுவார்த்தையை ததேகூ தள்ளிப்போட்டதாக வைத்துக் கொள்வோம். இப்போது அய்யன்னா பொதுச் சபை இம்மாதம் 20 ஆம் நாள் தொடங்க இருக்கிறது. அப்போதும் பேச்சுவார்த்தையை தள்ளிப்போட வேண்டுமா?

காங்கிரஸ்கட்சியின் தலைவர், செயலர், பொருளாளர் துரோகத்தைப்பற்றிப் பேசலாமா?

இறுதியாக வரும் மாகாணசபைத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டும் என்கிறார்.   இது அடிமுட்டாள்த்தனமான யோசனை.  சென்ற 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ததேமமு என்ற  காளான் கட்சியை இரவோடு இராவாக உருவாக்கி – தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விலைப்படுத்த முடியாது என்பதால் – தேர்தலில் போட்டி போட்டு கட்டுக்காசை இழந்தது போதாதென்று இரண்டு மேலதிக இடங்களை டக்லஸ் தேவானந்தாவுக்கு

தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தார்.  இப்போது மாகாணசபைத் தேர்தலைப் புறக்கணித்து மாகாண முதலமைச்சர் பதவியை டக்லஸ் தேவானந்தாவுக்கு தாரை வார்க்க கஜேந்திரகுமார் நினைக்கிறாரா?

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான் இன்னமும் அரசியலில் இருப்பதைக் காட்டத்தான் ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு முறை யாழ்ப்பாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை இருப்பது அவருக்குத் தெரியாது) சென்று செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி இப்படிக் குழந்தைப்பிள்ளைத்தனமாகப் பிதற்றுகிறார்.

 

thinakkathir

  • கருத்துக்கள உறவுகள்

காலம்காலமாக கொழும்புத் தமிழர்கள் அறிந்தும் அறியாமலும் ஆடிய நாடகம்தான். நீங்கள் அறியாமல் செய்கிறீங்க. அதிதீவிரவாதம் எதிரிக்கே துணைபோகிறது என்கிற லெனினின் வாசகம் நினைவு வருகிறது. நீங்கள் ஆதரிக்காவிட்டாலும் பறுவாயில்லை கஜேந்திரன்.  திருகோணமலையில் மகிந்த விரும்பிய ஒரு சூழலை உருவாக்க முனைந்ததுபோல மீண்டும் யாழில் செயல்படாமல் இருந்தால் சரி கஜேந்திரன். 

  • தொடங்கியவர்

மகிந்தாவுக்கு

 

1. கிழக்கில் ஆதாயம் தேடிக்கொடுத்தவர்கள்

 அ).  தேர்தலில் மகிந்தாவுக்கு எதிர் மாதிரி நடித்து அதன் பின்னர் தாம் எந்த சந்தர்ப்பத்திலும் அரசை விட்டு விலக மாட்டோம் என்னும் கக்கீம் கட்சியினர்.

 ஆ). கூட்டமைப்பு கிழக்கு மாகணத்தில் தேர்தலில் நின்றால் தோற்கும் என்று எதிர்வு கூறி தடுக்க முயனற்வர்கள்.

2.ஜெனிவாவில் ஆதயம் தேடிக்கொடுத்தவர்கள்

அ).தேவானந்தா,

ஆ). கக்கிம், 

இ). கூட்டமைப்பை ஜெனிவா போனால் புலிகளாக் கருதுவார்கள் என்றவர்கள். சம்பந்தர்வரை  கூட்டமைபிலிருந்து ஜெனிவா சென்று  இவர்கள் சொல்வது ஒன்றும் எதிர்வு கூறல்கள் அல்ல; தமிழ் இனத்துகு எதிரான சதியே என்பதை நிரூப்த்தார்கள்.

3). இந்தியாவில் மகிந்தாவுக்க அதரவு தேடிக்கொடுப்பவர்கள்

அ). 13 ம்திருத்தத்தை கூட்டமைப்பு நிராகரித்த பின்னர் அதை நிறைவேற்ற வேண்டுமென சென்னயில் நின்று கூச்சல் போடுவோர்

ஆ. சுப்பிரமனிய சுவாமி.

இ).கருணாநிதி

ஈ) இந்த மாதிரி இனத்தை விற்றுப்பிழைக்கும் தரத்தில் உள்ள சிதம்பரம், சுதர்சன நாச்சி அப்பன்...........

 

அரசியல் தெரிந்தவர்கள் யாரவது, மேலே கணப்படுவதை தவிர வேறு எங்காவது, கொழும்பு தமிழர்கள் தீவிர வாதிகள் என்று பொருள் பட, முறையான அரசியல்வாதி ஒருவரால் பேசப்பட்ட பேச்சை காட்ட முடியுமா? மேலே உள்ள கருத்து அவ்வள்ளவுக்கு தரக்குறைவான திரிப்பு. கொழும்புத் தமிழரின் இணக்க அரசியலால்தான் தமிழர் எல்லாவற்றையும் இது வரையில் கோட்டை விட்டவர்கள் என்பதுதான் இது வரையில் எங்குமே சொல்லப்பட்ட கருத்துகள்.

 

மகிந்தாவுக்காக சென்னையில் நின்று உழைப்போர் தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் குறை காண்பது நிச்சயமாக ஒரு பகிடி சேட்டை விடையம்.

 

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பு  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் போன்றோரை கட்சியை விட்டு வெளியேற்றியது. பியசேனாவை கட்சியில் சேர்த்து தேர்த்தலில் வென்றது. கூட்டமைப்பின் நாடகத்தை அறிந்து வெளியேறிவிட்டார் அல்லது அவருக்கு வெளியேறுவது என்பது ஏற்கனவே திட்டமாக இருந்திருக்கலாம்.
 
புலிகளின் கொள்கைகளை உடையவர்கள் என்பதால் (தனிதமிழீழம்)கூட்டமைப்பினர் இவர்களை வெளியேற்றினார்கள்.இப்போ ஆதரவு தரவேண்டும் என்பது சுயநலம் இல்லையா???

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.