Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா ஆயுதக் குழுவொன்றை இயக்கவில்லை என்றார் கோதபாய – விக்கிலீக்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தலைவரும், தற்போதைய பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் ஆயுதக் குழுவொன்றை இயக்கவில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 'கருணா தரப்பினர் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்வதில் எனக்கு பிரச்சினையில்லை'

'கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியேறியமை எமக்கு சாதகமானதே எனினும், கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் சகல நடவடிக்கைகளையும் இராணுவத்தினரே மேற்கொள்கின்றனர்.' என கோதபாய குறிப்பிட்டதாக குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வன்னிப் யுத்த முனையிலும் அரசாங்கப் படையினர் வெற்றியீட்டுவார்கள் என பாதுகாப்பு தரப்பினர் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அப்போதைய அமெரிக்கத் தூதுவர் n;ராபர்ட் ஓ பிளக் தமது குறிப்பில் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருணா தரப்பினர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குறித்து சகோதரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தம்மைத் திட்டியதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதுவரிடம் குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தொப்பிகல பிரதேசத்தை படையினர் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் மட்டக்களப்பின் நிர்வாக நடவடிக்கைகளை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்றுக்கொள்ளும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

'விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரிடம் பாதுகாப்பு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்.' 'தமிழ் முஸ்லிம் காவல்துறை உத்தியோகத்தர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்' என அவர் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91790/language/ta-IN/article.aspx

பிளேக் இலங்கையில் இருந்த போது அமெரிக்காவின் நலன்களை கவனியாமல், கோத்தாவின் அமெரிக்க தூதுவராக கடமை ஆற்றி பின்னர் அமெரிக்கா போய் அமெரிக்காவை இலங்கை ஏமாற்றிவிட்டது என்று காங்கிரசில் கூறியது  மனவருத்ததிற்கான சரித்திரம். அமெரிக்காவின் நலன் கவனிகப்பட்டிருந்தால் இலங்கை சர்வாதிகாரத்தில் விழுவதை அமெரிக்கா பார்த்துக்கொண்டிருந்திருக்காது. ரசாபக்ஷா தேர்தலில் வென்றதற்காக தமிழரை பழிவாங்கிக்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர் ராஜபஷா வெல்லட்டும் என்று பார்த்து மகிழ்ந்தமை தனது படுக்கையில் முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தமைக்கு சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது நியாயம் தான். கோத்தா சார்பில் கருணா இயக்குகிறாரே தவிர.. கருணா தனக்காக இயக்கவில்லை என்பது சரி தானே..! :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.