Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்ப்பனரும் தமிழரே ! _ பேராசிரியர் குணா.

Featured Replies

பார்ப்பனரும் தமிழரே ! _ பேராசிரியர் குணா. 

"தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர் யாவரும் தமிழரே ! தமிழை அல்லாது தெலுங்கு, மராட்டிய, கன்னடம் என பிற தேசிய இன மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவரே பிராமணராவார். பார்ப்பனர் என்பவர் தமிழரே" !

"பார்ப்பனர் எனும் சொல் பிராமணன் என்னும் வடசொல்லின் திரிபு என்றும், துறவு நிலை பிராமணனுக்கே உரியதென்றும் பிதற்றி 
பேதையரை ஏமாற்றுவர். குமரித் தமிழர் காலம் ஆரியர் என்னும் இனம் கருவிலேயே தோன்றாத காலம். பாட்டனைப் பெற்ற பூட்டன் மணமாகாத இளமைக் காலத்தில் கொட்பேரன் (கொள்ளுப்பேரன்) எங்கனம் தோன்றவில்லையோ அங்கனமே குமரி நாட்டுத் தமிழன் காலத்திலும் ஆரியன்தோன்றவில்லை. அதனால் அவன் திரிமொழியும் தோன்றவில்லை."

" அந்தணர் என்போர் அறவோர்மற் றெல்லாவுயிர்க்கும்
செந்தன்மை பூண்டொலுக லான் " 
( குறள் - 30)
எனும் குறளினின்று அந்தணன் எனும் பெயர்காரணத்தைக் கண்டுகொள்க. கல்விச் சிறப்பும் ஒழுக்க உயர்வும் பற்றியே பார்ப்பனரும் சில இடங்களில் அந்தணர் எனப்பட்டனர். 

"அந்தணன், ஐயன் என்னும் பெயர்கள் முதன்முதல் தமிழகத் துறவியரையே குறித்தது போன்று பார்ப்பான் என்னும் பெயரும் முதன்முதல் தமிழ்ப்பூசாரியையே குறித்தது" எனும் பாவாணரின் 
கருத்தை இங்கு நினைவில் கொள்க. 

இனி பேராசிரியர் குணா...

பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டிய ஈ.வெ ராமசாமி நாயக்கரும், பிராமணர்களுக்கு அன்று தலைமை தாங்கி வந்த காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் இனத்தால் கன்னடர்கள். 

இந்நிலையில் தமிழுக்குச் சேவை செய்த தமிழ் பார்ப்பனர்களில் முக்கியமான சிலர், நான்காம் தமிழ்ச்சங்கத்தில் பல ஆய்வுகளை நடத்தி தமிழுக்குச் சிறப்பு செய்தவர்கள் மு.இராகவய்யங்கார், இரா. இராகவய்யங்கார், எசு. கிருட்டிணசாமி ஐயங்கார் தமிழர் தென்னாட்டு பழங்குடி மக்களே என மறுக்கொணாச் சான்று காட்டி மெய்பித்த பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழரின் தென்னாட்டு பழங்குடிமையையும் தமிழின் பெருமையையும் தக்கச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டிய சேச ஐயங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், தமிழும் வடமொழியும் வெவ்வேறெனச் சொல்லிய பரிதிமாற்கலைஞர் எனப்படும் சூரியநாராயண சாத்திரியார்,
தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சாகத (பிராகிருத) மொழியிலானவை என வடக்கத்திய சார்பினர் பிதற்றி வந்த நிலையில், அவற்றில் மிகப்பெரும்பான்மையானவை தமிழ்க் கல்வெட்டுகளே எனும் உண்மையை உலகுக்கு உரைத்த கே.வி. சுப்பிரமணிய ஐயர் கிடைத்தற்கரிய பெருஞ்செல்வமாக இன்று நாம் கருதுகின்ற பண்டைத் தமிழ் நூல்ச்சுவடிகள் பலவற்றை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்த உ.வே. சாமிநாத ஐயர் தமிழ் தேசிய ஓர்மைக்கு பள்ளு பாடிய சி. சுப்பிரமணிய பாரதியார் தமிழைக் காப்பாற்றுங்கள் என தனித் தமிழில் எழுதத் தூண்டி வந்த சுப்பிரமணிய சிவா முதலானவர்களும் தமிழ்ப் பார்ப்பனர்க. 

ஆசிவகமென இழிவாகப் பெயரிடப்பட்டும் தூற்றப்பட்டும் வந்த வள்ளுவத்திடமிருந்து வடவர்கள் செய்த அறிவுக் களவாடலின் விளைவாக வந்த சைனம், புத்தம் ஆகிய ஆரியச் சமய நெறிகள் வள்ளுவ மெய்யியலைக் கெடுத்துக் குறைபடுத்தி அழித்ததுடன் அதை தன்வயமாக்கிக் கொள்ளவும் செய்தனவென்பது வரலாறு. 
ஆரிய மதங்களெனச் சொல்லி வந்த சைனமும், புத்தமும் பார்ப்பனியத்தை அவ்வப்போது எதிர்த்தனர் என்பது உண்மை. ஆனால் பார்ப்பனியம் வேறு, ஆரியம் வேறு எனும் வேற்றுமை தெரியாத திராவிடக் 
கொள்கையர் அவ்விரண்டும் ஒன்றே எனக் கருதி மயங்கியது இங்கு பெரும் கேட்டை விளைவித்துள்ளது. சைன, புத்த சமய நெறிகளைக் கண்மூடித்தனமாகப் போற்றுகின்ற நிலைபாட்டில் அவர்களைப் 
புதைத்துள்ளது. ஆரியர் வேறு பார்ப்பனர் வேறென முதன்முதலில் பாடம் படிப்பித்தவர் பாவாணரே ஆவார். 

வள்ளுவமும் அதன் எதிர்மறையாகிய பிராமனியமும் தெற்கில் தோன்றியவை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கிப் பரக்க நெடுகப் பயணம் போன சாதிவெறிக் கொள்கையே பிராமனியம். ஆனால் கலப்பினக் கொள்கையாகிய ஆரியமென்னும் நிறவெறிக் 
கொள்கையோ வடக்கில் தோன்றி தெற்கே வந்தது. 

இத்தகைய நுட்பமான வரலாற்று விளக்கம் இராமசாமி நாயக்கரிடம் இல்லாமல் போனதால் அவர் பார்ப்பனியத்தையும் ஆரியத்தையும் ஒன்றாகப் போட்டுத், தான் குழம்பியதுடன் 
திட்டமிட்டே தமிழர்களையும் குழப்பினர்.

தமிழகத்தின் வந்தேறி ஆண்டைகளாக விளங்கிய கன்னடரும், தெலுங்கரும், மராத்தியரும் பிராமனீயத்தை உச்சிமேல் வைத்து போற்றி வந்தனர். பிராமனர்களின் ஆளுமையிலான கோயில்களை மையமாக வைத்து ஆண்டு வந்த வந்தேறிகள் தமிழ் மொழியும், தமிழ் பண்பாடும் சங்கத மொழியிலிருந்தே தோன்றியதாக கூறி வருகின்றனர். 
இதற்கு நேர் எதிரான நிலையில் ஆழ்வார்களின் மாலியம் (வைணவம்) தமிழுக்கு முதலிடம் கொடுத்தது. ஆழ்வார்களில் பலர் பழந்தமிழராம் பறையர் குடியிலிருந்தும் கள்ளர் குடியிலிருந்தும் தோன்றியவர்களாக இருந்ததே அதற்கான தனிப்பெரும் காரணம். ஆழ்வார்கள் இன்றைய தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகள். 
இந்த நிலை வேதாந்த தேசிகனுக்குப் பிறகு தலைகீழாகியது. சிவனியமும் தமிழுக்கு நல்ல இடத்தை கொடுத்தது. 

சோழரும், சேரரும், பாண்டியரும், பல்லவரும் வடக்கத்திய பிராமணர்கள் பலரை இறக்குமதி செய்து, அவர்களைப் பேணிட
வென்றே பல பிரமதாயங்களையும் சதுர்வேதி மங்களங்களையும் உருவாக்கிய போது, தமிழரல்லா பிராமணரின் எண்ணிக்ளையும் செல்வாக்கும் பெருகின. இதனால் வந்தேறி பிராமணருக்கும் தமிழ்ப் பார்ப்பனருக்கும் இடையிலான முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது. 

போதாமைக்கு ஆழ்வார்களின் நெறியை பிராமிணிய மயமாக்கிய இராமானுசர் பல கீழ்சாதியினருக்கு பூணூல் போட்டு அவர்களைப் பார்ப்பனர் ஆக்கினார். அவர்களே தென்கலை ஐயங்காராயினர். 

ஆயினும் தமிழகத்தில் பூசைச் சடங்குகளை செய்து வருகின்ற பார்ப்பனர்களில் பெரும்பாலோர் தெலுங்குப் பார்ப்பனரே. தமிழ்நாட்டில் உள்ள காஞ்சி மடத்திற்கு ஒரு கன்னடப் பிராமணணோ தெலுங்குப் பிராமணணோ தான் தலைவனாக முடியுமேயன்றி ஒரு தமிழ்ப் பார்ப்பானால் தலைவனாக வர முடியாது. 

கர்ணல் எச். எசு. ஆல்காட், பிளாவாட்சுக்கி அம்மையார் ஆகிய 
அமெரிக்கர்களால் 1875 ஆம் ஆண்டில் நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்ட இறைநெறிக் கழகம் ஆரியக் கூத்தாடிக் கொண்டு வந்த ஆரியக் கழகமும் (ஆரிய சமாசமும், பிரம சமாசமும்) தமிழகத்திற்குள் புகுந்த பின்னர் தமிழ்ப் பார்ப்பனர்களிடத்தில் இருந்த நாம் தமிழரென்னும் மனநிலை கெட்டு அத்தமிழ்ப் பார்ப்பனரெல்லாம் தங்களை ஆரியரென்றே நம்பிக் கெட்டனர். வழியும் தெரியாது, வரலாறும் தெரியாது, தமிழ் இனத்திடமிருந்தே அயன்மையாகி வேறற்று நிற்கின்றனர். அத்துடன் இராமசாமி நாயக்கரின் திராவிடக் கொள்கையும் பார்ப்பனர் எதிர்ப்பும் சேர்ந்து அவர்களை மீள முடியாத படுகுழியில் தள்ளியுள்ளன.

தமிழ்ப் பார்ப்பனர்களில் பலர் இன்று யாதொரு தமிழ்ப் பற்றுமின்றி, தமிழ் மண்ணின் மீதும் பற்றின்றி, தமிழினத்தின் எதிரிகளாகவே நின்று பேசியும். எழுதியும் மென்மேலும் கெட்டு வருகின்றனர். 

தொடக்கத்தில் தமிழ்ப்பார்ப்பனர்களில் சிலரே தமிழ்தேசியத்திற்கு வித்திட்டனரென்பதால், தமிழ்தேசியமே பார்ப்பனியச் சார்புடையதென்றாகாது.
உள்ளீட்டில் பிராமனியமென்னும் சாதி ஒதுக்க நெறிகளுக்கு முரணாணது. அத்தமிழ்த் தேசியம், பிராமனியத்துடன் எள்ளளவும் ஒத்துப்போகாத பழந்தமிழராய் இருப்பதே வரலாறு. வரட்டுத்தனமான பார்ப்பனப் பூச்சாண்டிக் காட்டி அதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. 

("பார்ப்பனர் வேறு, ஆரியர் (பிராமனர்) வேறு என்பதை நினைவில் கொள்வதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றே என்பதை நினைவில் கொள்க. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனர் யாவரும் தமிழரே. _பாவாணர்")

நன்றி பேராசிரியர் குணா. 

தமிழ், தமிழர், தமிழ்நாடு வெல்க! 

தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ்நாடு.

 

www.pavaanar.blogspot.com

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

பார்ப்பனரோ, அன்றிப் பிராமணரோ இருவருமே மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே தரகர்களாக தொழில் செய்யும் பூசாரிகளே. இவர்கள்பற்றி இந்தப் பதிவை ஆராயும் அறிவோ, திறமையோ எனக்கில்லை. ஆனாலும் சில அனுபவங்களை தெரிவிப்பதில் தவறில்லை என்று எண்ணுகிறேன். பிறர்பொருளை அபகரிப்பதில் ஆரியர்களே சூரர்களாக இருப்பதாக அவர்களின் அரசர்கள் பற்றியும் சரித்திரக் கதைகள் பலவும் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம் அதிகமாகவும், இலங்கையில் பார்ப்பணர் ஆதிக்கம் அதிகமாகவும் இருப்பதாகவே என்னால் உணரமுடிகிறது. பார்ப்பணர்கள் தமிழர்கள் என்பதனை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாட்டுக் கோவில் பூசாரிகளின் செயற்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில், கோலில்களுக்கு செல்லும் மக்களிடம் எவ்வளவு பொருளைக் கறந்துவிட முடியுமோ அத்தனை பொருளையும் பெரும்பாலும் அங்குள்ள பூசாரிகள் கறந்து விடுகிறார்கள். இலங்கையில் மக்கள் கொடுப்பதையே பூசாரிகள் பெற்றுக்கொள்வதைக் காணமுடிகிறது. ஆகவே தமிழ்நாட்டில் பிராமணரும், இலங்கையில் பார்ப்பனருமே அதிகளவில் பூசாரிகளாக உள்ளமையை அனுபவ வாயிலாகவும் அனேகர் உணர்ந்திருப்பர் என நம்புகிறேன். ஆகவே பார்ப்பனர்கள் தமிழரென்பதை செரிவிக்கும் இந்தப்பதிவில் உண்மை உறைந்துள்ளதாகவே அனுபவங்கள் நம்பிக்கை கொள்ள வைக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வுக் கட்டுரை! ஆனால் எங்கேயோ உதைக்கிறதே?

 

பார்ப்பனர்கள் தமிழர்களாயின், ஏன் தமிழனின் அழிவுக்கு, எப்போதும் துணை போகின்றார்கள்?

 

வேத காலத்திலிருந்து,முள்ளிவாய்க்கால் நடந்தது மட்டுமன்றி,இன்றும் தொடர்வது தான், புரியாத புதிர்! :o

அழிவிற்கே துணை நிற்கும் படி எமன் இவர்களிடம் கட்டளை இட்டிருக்கலாம். புலம்பெயர் நாட்டில் பிராமணர் அல்லாதவர்கள் பூ சை  செய்யும் ஆலயமாக சுவிஸ் பேர்ன் சிவன்கோவில் உள்ளது இங்கு தேர் கூட இழுக்குறார்கள் அதன் தொடர்ச்சியாக லண்டனில் ஒரு சிவாலயம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. மற்ற ஆலயகளில் தமிழ் பூசைய வலியுறுத்த யாரும் முன் வரவில்லை. முதலில் நிர்வாகம் இதைச் செய்தால் அர்ச்சகர்கள் கீழ்ப் படிவார்கள். பூ னைக்கு  முதலில் மணி கட்டுவது யார்? கத்தோலிக்கர்களுக்கு புதிய மதம் மாற்றும் அலலூய,பெந்திகொஸ்,யோகோவா போன்ற சபைகளால் கெட்டபெயர் என்றால் சைவர்களுக்கு இந்த சாய்பாவா ,மருவதூர் பூசாரிகள் ,பணம் பறிக்கும் சாத்திரிகளால் இழிவு. ஆனால் எந்த மொழியில் பூசை செய்தாலும் எந்த மதமாக இருந்தாலும் எங்கள் தமிழின விடுதலைக்கு உதவப் போறதில்லை. 

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஆய்வுக் கட்டுரை! ஆனால் எங்கேயோ உதைக்கிறதே?

 

பார்ப்பனர்கள் தமிழர்களாயின், ஏன் தமிழனின் அழிவுக்கு, எப்போதும் துணை போகின்றார்கள்?

 

வேத காலத்திலிருந்து,முள்ளிவாய்க்கால் நடந்தது மட்டுமன்றி,இன்றும் தொடர்வது தான், புரியாத புதிர்! :o

 

பார்ப்பனர் தமிழரா இல்லையா என்பதற்கப்பால், இராவணன் காலத்திலிருந்தே , ஏன் தமிழன், தன் இனத்தின் அழிவுக்கு, எப்போதும் துணை போகிறான் என்பதும், அது இன்றும் தொடர்வதும் கூடவே, புரியாத புதிராகவுள்ளது!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.