Jump to content

காதல் ஆத்திசூடி


Recommended Posts

அவளிடம் மதி மயங்கு!

உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள்.

அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!

உன் நண்பர்கள், அவளது வீதியில் தொலைந்துகிடக்கும் உன்னைக் கண்டெடுத்து வந்து உன்னிடம் கொடுப்பார்கள். அது அவர்கள் நட்பின் கடமை. உன் காதலின் கடமை என்ன தெரியுமா?

உன் நண்பர்கள் கொடுத்த உன்னை எடுத்துக்கொண்டு உடனே அவளிடம் ஓட வேண்டும்.

மீண்டும் தொலைப்பதற்காக!

*

ஆயிரம் முறை அவள் கண்ணில் படு!

அவள் திரும்பிப் பார்க்கும் இடத்தில் எல்லாம் நீ அவள் கண்ணில் பட வேண்டும்.

அதிசயமாய் அதிகாலை வாசல் தெளிக்க அவள் வரும் நாளில் பனித் துளி மாதிரி பார்வையில் படு. குடும்பத்தோடு அவள் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டுத் திரும்பும் நள்ளிரவிலும் அவள் கண்ணில் படு. எங்கெங்கும் அவள் உன்னைப் பார்க்க வேண்டும்.

இவன் ஒருத்தனா… இல்லை ஏழு பேரா என அவள் குழம்ப வேண்டும்.

குட்டையைக் குழப்பி மீன் பிடிப் பதைப் போல, அவள் மனதைக் குழப்பி மனதைப் பிடிக்கும் வித்தை இது!

*

இதயத்தை அலங்கரி!

ஒருத்தி நுழையப் போகிறாள் என்பது தெரிந்த நொடியிலேயே, உள்ளங்கை அளவிலிருந்து உலக அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிடும் இதயம்! ஆகவே இதயத்தை அலங்கரி.

இனி அவளுக்கும் உனக்கும் ஏற்படப் போகும் நிகழ்வுகளின் ஆல்பங்களை அடுக்கிவைக்க, அதன் சுவர் முழுவதும் அலமாரிகளை அடி.

அவளை வரவேற்க வளைவுகளும், விளையாட ஊஞ்சலும், நீராடத் தடாகமும், துயில்வதற்கு மெத்தையும், முக்கியமாய் அவள் தன்னை அடிக்கடி அழகு பார்த்துக்கொள்ள அவளுயரக் கண்ணாடியும் அமை. அவள் கேட்க, துடிப்புகளில் இனிய இசையை உண்டாக்கு. சீக்கிரம்… அதோ அவள் வந்துகொண்டு இருக்கிறாள்!

*

ஈர்க்கும் படி நட!

இது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால், அவளை ஈர்ப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம்.

ஏன் என்றால், அவ்வளவு கஷ்டத் துக்கும் பரிசாகக் கிடைக்கப்போவது அவளின் அழகான இதயம்.

முதன்முதலாய் உன் கண்களை அவள் கண்கள் சந்திக்கிறபோதுதான் உன் காதல் பரிபூரணமாய் ஆசீர்வதிக்கப் படுகிறது.

கண்ணியம் என்பது அரசியலில் இருக்கிறதோ இல்லையோ, அவளை ஈர்க்கும் உன் முயற்சியில் அது இருந்தால், வெகு சீக்கிரமே அவள் மனதில் பட்டொளி வீசிப் பறக்கும் உன் கொடி!

*

உறுத்தாமல் பார்!

காதலிப்பதால் கிடைக்கும் சுகத்தில் பாதி சுகம் பார்த்துக் கொண்டு இருப்பதில்தான் இருக்கிறது என்கிறார் வள்ளுவர்.

பார்வைகள் ஒருபோதும் பார்ப்பதால் தீர்வதில்லை. மாறாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

உன் பார்வை அவள் அழகைத் தின்னக் கூடியதாக இருக்கக் கூடாது. அவள் அழகுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்க வேண்டும். உன் பார்வையால் தனது அழகு வளர்வதாக அவள் உணர வேண்டும்.

இப்படி எல்லாம் எப்படிப் பார்ப்பதென்று நீ எங்கேயும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.

மனதில் காதலை மட்டும் வைத்து, ஒரு மலரைப் பார்ப்பதைப் போல் அவளைப்பார்.

உனது கண்களால் உன் உள்ளத்தில் உள்ள காதலுக்கு ஓராயிரம் ஊற்றுக்கண்கள் திறக்கும்!

*

ஊதியமின்றிக் காவல் செய்!

உலகத்திலேயே அழகான வேலை, உன் காதலியைக் காவல் காக்கும் கருப்பண்ணசாமி வேலைதான்.

நீ அவளைப் பின்தொடர்வதை அவள் தெரிந்துகொண்டால், எங்குவேண்டு மானாலும் துணிச்சலுடன் போவாள்.

அவள் அப்பா மாதிரியோ அண்ணன் மாதிரியோ ‘எங்க போற’ என்று நீ கேள்வியும் கேட்க மாட்டாய். அவளுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நீ பொங்குவாய் என்கிற மதர்ப்பே அதற்குக் காரணம்.

என்றாவது ஒரு நாள். குரைக்கும் நாய்க்குப் பயந்தோ, பாய்ந்து வரும் மாட்டைக் கண்டோ அத்தனை பேரையும் விட்டுவிட்டு உன் பின்னால் ஓடி வந்து ஒளிவாள். அதுதான் உன் காவலுக்கும் காதலுக்கும் அவள் தரும் மரியாதை!

*

எதற்கும் வழியாதே!

தவறுதலாய் அவள் கைக்குட்டை கீழே விழுவதைப் பார்த்துவிட்டால் ஓடிப்போய் சிதறு தேங்காய்ப் பொறுக்கு பவனைப் போல் பொறுக்காதே.

செடிக்கு அடியில் கிடக்கும் மலரைப் போல் நிதானமாய் எடு. அதை அவளிடம் தருகையில் ‘உங்க கர்ச்சீப். மிஸ் பண்ணிட்டீங்க’ என்று வழியாதே. “இது உன் கர்ச்சீப்பா’ என்று பந்தாவாகக் கேள்.

இன்னொரு தெய்வாதீனத் தருணத்தில் நீயும் அவளும் அருகருகே நிற்க வேண்டிய வாய்ப்பு கிடைக்கலாம்.

அப்படி அவள் அருகில் நிற்கையில் உனக்குக் கைகால்கள் உதறலாம். அல்லது சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வானத்தைப் பார்த்து ஏகாந்தமாய் நமட்டுச்சிரிப்பு சிரிக்கத் தோன்றலாம்.

இதில் நீ எதைச் செய்தாலும், உனக்கு அவள் போட்டுவைத்திருக்கும் மதிப்பெண் அம்பேல் ஆகிவிடும்.

ஒன்றும் தெரியாத பையனைப் போல அமைதியாய் நில்.

அமைதி ஓர் அற்புதமான வசிய மருந்து!

*

ஏகலைவனாய் இரு!

நீ எத்தனையோ காதல் காவியங் களைப் பார்த்திருக்கலாம். எத்தனையோ காதல் படங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், அவை எதிலிருந்தும் உனக்கான காதலை நீ எடுத்திருக்க முடியாது.

அது அவளிடம் மட்டுமே கொடுத்தனுப்பப்பட்டு இருக்கிறது.

அதை, அவளை நீ பார்த்த நொடியி லேயே உன்னிடம் சேர்த்துவிட்டாள்.ஆகையால், காதலில் அவளே உனக்கு குரு.

அதற்கான குருதட்சணையாக, அவள் உன் உயிரைக் கேட்டாலும், ஏகலைவன் போல் யோசிக்காமல் கொய்து தரத் தயராய் இருக்க வேண்டும் நீ.

ஆனால், அப்படிக் கேட்க அவள் ஒன்றும் துரோணர் இல்லை. என்றாலும் அவள் எப்போது எது கேட்டாலும் தருவதற்குத் தயராய் நீ ஏகலைவனாகவே இரு!

*

ஐம்புலனிலும் அவளை வை!

கண்டும் கேட்டும் உண்டும் நுகர்ந்தும் தொட்டும் இன்புறும் ஐம்புலன்களின் இன்பமும் ஒன்றாய் இருப்பது பெண்ணிடம் மட்டுமே என்று அடித்துச் சொல்கிறது திருக்குறள்.

உன் காதலியும் இப்படித்தான் உன் ஐம்புலன்களையும் சொக்கவைக்கப் போகிறாள்.

ஆனால், அதற்கு முன்… உன் ஐம்புல னாலும் அவளை நீ காதலி.

கண்களில் அவள் உருவத்தை வை

காதுகளில் அவள் குரலை வை

சுவாசத்தில் அவள் வாசம் வை

உதடுகளில் அவள் பெயரை வை

உணர்வில் அவள் உயிரை வை!

*

ஒரு நாள் காதலைச் சொல்!

அவள் மகிழ்வாய் இருக்கும் நேரம் பார்த்து, “நான் ரொம்ப நாளாய் ஒருத்தியைக் காதலிக்கிறேன் அவள் நீயா?’ என்று கேள்.

புன்னகையை அடக்கிக்கொண்டு ‘ஏன்… அவள் யாரென்று உனக்குத் தெரியாதா?’ என்பாள்.

‘அவளை நினைக்க ஆரம்பித்த பிறகு என்னையே நான் மறந்துவிட்ட தால், அவள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது’ என்று சொல்.

‘உன்னை ஞாபகப்படுத்திக்கொள். அவள் யாரென்பது தெரிந்துவிடும்’ என்பாள்.

‘அவளை நான் மறந்தால்தானே என் ஞாபகம் எனக்கு வரும்’ என்று கேள்.

‘அவளை மறந்துவிட வேண்டியது தானே’ என்பாள்.

‘என் ஆயுள் காலம் வரை அவளை ஞாபகம் வைத்திருப்பேன்’ என்பது நிஜமில்லைதான்.

ஆனால், அவளை நான் ஞாபகம் வைத்திருக்கும்வரைதான்…

‘நான் உயிரோடு இருப்பேன் என்பது மட்டும் கண்டிப்பாய் நிஜம்’ என்று சொல்.

‘அப்படியானால் நீ காதலிக்கும் பெண் நான்தான்’ என்பாள் தலையைக் குனிந்து.

‘எனக்குத் தெரியும்’ என்று சொல்.

செல்லமாய் கோபிப்பாள். பிறகு கண்டிப்பாய் கிடைக்கும் அழகான பிகு முத்தம்!

*

ஓர் உலகம் செய்!

அந்த உலகம் அற்புதமானது.

அங்கே கடற்கரை, திரையரங்குகள் எல்லாம் உண்டு. ஆனால் உங்களைத் தவிர வேற யாருமே இல்லை. அங்கே சில்லென சூரியன் உதிக்கும்… கதகதப்பாய் மழை பெய்யும்.

அந்த உலகம் எங்கே இருக்கிறது என்று கத்தாதே.

நீ உன் காதலியோடு எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் அந்த உலகம் இருக்கும்.

ஆனால், நீங்கள் போகும் இடமெல்லாம் உங்கள் பின்னாலேயே வரும் ஒரு ஆப்பிள் மரம்.

அவசரப்பட்டு அந்த மரக்கனியைத் தின்றுவிடாதீர்கள்.

அதற்கின்னும் காலமும் கனிய வில்லை. ஆப்பிளும் கனியவில்லை!

*

ஒளவியும் ஒளவாமலும் பழகு!

இது என்ன வார்த்தை என்று முழிக்காதே.

தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், அணைத்தும் அணைக்காமலும் என்ற வார்த்தைகள் எல்லாம் கலந்தெடுத்த, காதலுக்கென்றே கண்டுபிடிக்கப்பட்ட அழகான வார்த்தை இது.

தொடுவானம் எப்போதும் பூமியைத் தொட்டுக்கொண்டு இருப்பது மாதிரித்தான் தெரியும். ஆனால் தொடாது.

அதற்காக வானமும் பூமியும் தொட்டுக்கொள்வதே இல்லை என்று அர்த்தம் அல்ல.

மாபெரும் வானத்துக்குள்தான் இருக்கிறது இந்த பூமி. அப்படித்தான் நீயும் அவளும் பழக வேண்டும். அவள் வானமாய்… நீ பூமியாய்!

காதல் காலம் என்பது, பார்ப்பதற்கும் பேசுவதற்குமே போதாது.

ஆகையால் இப்போதைக்கு அவளைப் பார்த்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இரு.

தொடுதலையும் படுதலையும் அவ்வப்போது அனிச்சையாய் காதலே அரங்கேற்றிக்கொள்ளும்!

* – தபூ சங்கர், ஆனந்த விகடன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் நாசமாய்ப்போ 
என்கிறார் எழுத்தாளர் ....... :D  :D  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது அட்சிய திருதி நாள் அதிஷ்டம் வரும் என்று யாழ்பாணத்தில் தங்க நகைகள் வாங்குகின்றனராம்.முன்பு இந்த பழக்கம் இலங்கையில் இருக்கவில்லையாம்.
    • ஆனாலும் சவுக்குக்கு மாவு கட்டு போட்டது கொஞ்சம் ஓவர்தான். அதே போல் அவராக அவதூறாக பேசினால் அன்றி நேர்காண்பவரை எல்லாம் தூக்கி உள்ளே வைப்பது பேச்சுரிமை மீறல். பேட்டி கொடுப்பவர் உளறுவதற்கு அவர் மட்டுமே பொறுப்பு. 
    • எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன். அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.
    • நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி, தலா 6 போட்டிகளில் வெற்றியையும், ஆறில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டெல்லி அணியினர், ஐபிஎல் விதிகளை மீறியதாகவும், அவர்களுக்கு அபராதம் விதிப்பதாகவும் ஐபிஎல் நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.   இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், பந்துவீசுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது போன்ற ஐபிஎல் விதிகளை டெல்லி அணி மீறுவது இது மூன்றாவது முறையாகும். அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணி உடனான போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பந்துவீச்சுக்கு நீண்ட நேரம் எடுத்துக்கொண்டனர். ஐபிஎல் விதிகளை மீறியதற்காக ரிஷப் பண்டிற்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், நாளைய போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்படுகிறது. அதேபோல், அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களுக்கு தலா 12 லட்சம் ரூபாய் அல்லது அந்த போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 50 சதவீதம் பிடித்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை டெல்லி அணியினர் ஐபிஎல் விதிகளை மீறியுள்ளதால், மூன்றாவது முறையாக மீறியதற்காக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. https://www.puthiyathalaimurai.com/sports/cricket/rishabh-pant-suspended-for-a-match-and-fined-30-lakhs-for-maintaining-slow-overrate
    • 🤣 சொன்னேன் என நினைத்தேன் 🤣 நியாயமான ஒப்பீடு. ஆனால் ரஸ்யாவில் இருப்பது போல் தாய்லாந்தில் தனி மனித சுதந்திரத்தில் அதிகம் இறுக்கம் இல்லை. அப்ப போகாமல்தானா அங்கே பாலும் தேனும் ஓடுவதாக எழுதினீர்கள்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.