Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாசின் மாலிக்கும் அரசும்! சீமான் இனி என்ன செய்யப் போகிறார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

943274_605650489453205_1617839958_n.jpg

 

 

எவ்வளவு போராட்டம் செய்துவிட்டோம்! எவ்வளவு வாதங்கள் செய்துவிட்டோம்! அட.. அதிமுகவும் திமுகவும் கூட ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்துவிட்டார்கள்! ஆனாலும் ஈழப்பிரச்சினையில் இந்தியா ஏன் சிங்களர்களுக்கு இவ்வளவு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு.

நேரு காலத்தில் இருந்தே இந்திய அரசுக்கு தமிழகம் என்றால் வேண்டாத பிள்ளைதான். "டேய் இத நீ படிச்சே ஆகனும்" என வாத்தியார் கொடுத்த தேவையில்லாத புத்தகத்தை "நான் ஏன் சார் இதப் படிக்கனும்? எனக்கு தேவைனா நான் படிச்சுக்குறேன். நீங்க சொல்றதுக்காக என்னால கட்டாயமா படிக்க முடியாது!" என முகத்தைத் திருப்பிக்கொண்ட ஒரே ஒரு சுயமரியாதையுள்ள மாணவன் தமிழகம் தான்! அதுமட்டுமல்லாமல் விடாப்பிடியாக போராடி அந்தப் புத்தகத்தை வாத்தியாரின் கையாலேயே கிடப்பில் போடவைத்ததும் தமிழகம் தான்! இன்றுவரை வடநாட்டினர் புலம்பித்தள்ளுவது இதைத்தான். (ஆனால் இதன்மூலம், ஆங்கிலத்தை இந்தியாவில் தக்கவைத்து, பன்னாட்டு கம்பனிகளை உள்ளே வரவழைத்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய நன்மையை நாம் செய்திருக்கிறோம் என்பது அந்த 'ஈரவெங்காயங்களுக்கு' புரியவே புரியாது.) ஆக இயல்பாகவே தமிழகம் என்பது இந்தியாவுக்கு எப்போதுமே மாற்றாந்தாய் பிள்ளைதான்.

இரண்டாவதாக வட இந்தியர்களுக்கு சிங்களர்களுடன் இருக்கும் இனத் தொடர்பு! சு.சாமி சொன்னதைப் போல சிங்களர்கள் ஆரிய வம்சத்தினர். வட இந்தியர்களுடன் 'DNA' தொடர்பு கொண்ட நெருக்கமானவர்கள். நம் எஸ்.எம்.கிருஷ்ணா 'வரலாற்று தொடர்பு, வரலாற்று தொடர்பு' என அடிக்கடி நாடாளுமன்றத்தில் சொல்வது இதைத்தான். ஆக அவர்களின் சகோதரர்களுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எப்போதுமே எடுக்க மாட்டார்கள். காங்கிரஸ் கூட வருங்காலத்தில் எடுத்தாலும் எடுக்கும் ஆனால் தீவிர இந்துத்துவ கட்சியான பி.ஜே.பி எடுக்கவே எடுக்காது என தெளிவாய் நம்பலாம்! எதிர்க்கட்சியாய் இருக்கும்போதும் ஒரு பேச்சுக்காக கூட தனி ஈழத்தை பிஜேபி ஆதரிக்காததே இதற்கு சாட்சி!

அடுத்து இந்திய இறையாண்மை! சிங்கள இறையாண்மையின் மேல் இந்தியாவிற்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்கு காரணம் இந்திய இறையாண்மையின் மீதான அக்கறைதான்! ஈழத்தமிழர்கள் தமிழகத் தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான கலாச்சார, பாரம்பரிய தொடர்புடையவர்கள். அது மட்டுமல்லாமல் ஒரே இனம்! வடஇந்தியர்களுடன் மொழி, இன ரீதியாக எந்த தொடர்புமே இல்லாத இந்தியத் தமிழனுக்கு ஈழத்தமிழனுடன் இன, மொழி, கலாச்சார ரீதியாக மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தமிழர்களுக்கென்று தனி நாடு, அதுவும் தமிழகத்திற்கு அருகிலேயே அமையுமாயின், அது வருங்காலத்திலும் இந்தியாவில் இருந்து தமிழகம் பிரிவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும். அதனால் தான் பங்களாதேஷை பாகிஸ்தானில் இருந்து 'பன்'னைப் பிடிங்கிக் கொடுப்பதைப் போல் கொடுத்த இந்தியா சிங்கள இறையாண்மையின் மீது மட்டும் இவ்வளவு அக்கறையாய் இருக்கிறது! இது மிக முக்கியமான காரணம் என்பதோடு, இந்தக் காரணம் எந்தக் காலத்திலுமே காலாவதியாகாத காரணமும் கூட என்பதால் இந்தியா தனி ஈழத்துக்கு ஆதரவளிக்கும் என்பதற்கு எக்காலத்திலும் இடமே இல்லை.

இந்தியாவில் பிரிவினை சத்தமே இல்லாத இடமென்றால் அது தென்னிந்தியாதான்! குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தனித் தமிழ் நாடென்றால் 'கக்கே பெக்கே' எனச் சிரிப்பார்கள். அந்த அளவிலேயே அவர்களுக்கு அதன்மேல் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் காஷ்மீரிலும், கிழக்கு இந்திய மாகாணங்களிலும் வாழும் மக்கள், இந்திய அரசின், இந்திய ராணுவத்தின் கோரப்பிடியில் இருந்து எப்போதடா தப்பிப்போம் என விடுதலை நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். சிறப்பு தகுதி, பாதுகாப்பு சட்டம் என்ற பெயர்களில் சொந்த குடிமக்களையே விலங்குகள் போல் நடத்த ஏராளமான வாய்ப்புகளை இந்திய அரசு ராணுவத்துக்கு வழங்கியுள்ளது. அடக்குமுறைகளுக்கு என்றுமே 'unlimited validity' கிடையாது என்ற இயற்கை நியதியின் படி இந்த மக்கள் விடுதலை பெறப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த விடுதலையை நோக்கமாகக் கொண்ட ஒருவர் தான் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் பங்கெடுக்க அழைக்கப்பட்ட காஷ்மீரின் யாசின் மாலிக்!

காஷ்மீர் பிரிவினை தேவையா தேவையில்லையா, யாசின் மாலிக் நல்லவரா கெட்டவரா, யாசின் மாலிக்கிற்கும் ஈழத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதெல்லாம் தனி விவாதத்திற்குரிய தனி விஷயங்கள். அதுமட்டுமல்லாது காஷ்மீர் பிரிவினைவாதிகளிடையே இரண்டு கோஷ்டிகள் உள்ளன. அதில் ஒன்று யாசின் மாலிக்குடையது. மற்றொரு கோஷ்டி இவர்மேல் சில குற்றச்சாட்டுகளை வைத்தாலும் அது நமக்கு இப்போதைக்கு தேவையில்லாத விசயம். இவரைப் பற்றி நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். 2007ல் இவர் ஆரம்பித்த 'சஃபார்-ஈ-அசாதி', அதாவது 'விடுதலையை நோக்கிய பயணம்' காஷ்மீர் மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியை உண்டு பண்ணியிருக்கிறது. காஷ்மீரின் 4000க்கும் மேற்பட்ட ஊர்களுக்கும், கிராமங்களுக்கும் இவர் பயணப்பட்டு மக்களைச் சந்தித்த்துப் பேசிய பின் காஷ்மீர் மக்களின் ராணுவத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. ஆக மேலே சொன்னதைப் போல நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விசயம் யாசின் மாலிக் ஒரு பிரிவினைவாதி என்பதை மட்டுமே! இப்படியொரு பிரிவினைவாதியைத் தான் தமிழக எல்லைக்குள் வரவழைத்து கூட்டம் நடத்த நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்திருக்கிறது!

ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பிரபாகரன் படத்த வச்சிக்க, தனி ஈழம்னு பேசிக்க, ராஜபக்சேவை திட்டிக்க, என சகல உரிமைகளையும் தமிழக ஈழ அரசியல்வாதிகளுக்கு அள்ளி வழங்கிய ஜெ இன்று அலறியடித்து கூட்டத்திற்கு தடை போடக் காரணம் பிரபாகரன் மீதான வெறுப்பு என்பதை விட யாசின் மாலிக் மீதான பயம்!!!! பிரபாகரன் இருக்கும்வரை பிரபாகரனின் அழிவிற்கும், பிரபாகரனின் கொள்கை அழிவிற்கும்.. என்னவெல்லாம் அரசியல் நகர்வுகள் தேவையோ அதையெல்லாம் செவ்வனே செய்தார் ஜெயலலிதா. புலிகளுக்கு தடை வாங்கிக்கொடுத்ததில் இருந்து இந்தியாவெங்கும் பரவியிருக்கும் 'புலிகள் என்றால் தீவிரவாதிகள்' என்ற முத்திரையை அடி ஆழம் வரை பதித்ததில் ஜெவுக்கு முக்கியப் பங்கு உண்டு. பிரபாகரனின் இறப்பிற்கு பின்பு [
அப்படின்னு ஜெயும் இந்திய ஆளும் வர்க்கமும்.. நம்புவதால் - சேர்க்கை], ஈழத்துக்காக போராட யாருமே இல்லாத நிலை வந்தபின்பு, தன் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறிய பின்பு இப்போது ஈழ ஆதரவு நிலை எடுத்திருக்கிறார்! அதாவது 'முடிந்துபோன விசயத்திற்கு' ஆதரவளிப்பதால் பேருக்கு பேரும் கிடைக்கிறது, அதே நேரத்தில் தன் ஈழ-எதிர்ப்புக்கொள்கைக்கும் எந்த ஆபத்தும் வரப்போவதில்லை என்பதால்! ஆனால் யாசின் மாலிக் அப்படியல்ல! அவர் உயிரோடு இருக்கும் 'லைவ்' பிரச்சினை! டெல்லி அரசியல்வாதிகளுக்கு பிரிவினை என்றாலே வயிற்றைக் கலக்கும்! அந்த வயிற்றுப் பிரச்சினையை உண்டு செய்யும் யாசின் மாலிக் போன்றவர்கள் தமிழக எல்லைக்குள் வந்தார்கள் என்றால் ஜெவுக்கும் பிரச்சினை! அதனால் இப்போது பூனைக்குட்டி வெளிப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் யாசின் மாலிக்கால் ஈழத்துக்கு நன்மை உண்டா எனக் கேட்டால் கண்டிப்பாக நேரடியான நன்மை கிடையாது! ஆனாலும் தொடர்ந்து தமிழர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருந்தால், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தினால் 'எதையும் தாங்கும் மிகவும் நல்லவர்களான' அவர்களும் பிரிவினை பேசத்தொடங்குவார்கள் என்ற அச்சத்தை மத்திய அரசுக்கு யாசின் மாலிக்கின் திடீர் தமிழகத் தொடர்பு ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை! ஏற்கனவே தலையிலும், இடது பக்கத்திலும் பிரிவினை பக்கவாதத்தால் அவதிப்படும் இந்தியா, அந்த வாதம் தமிழகத்திற்கும் பரவ அனுமதிக்காது! தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு கண்டிப்பாக செவிசாய்க்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்றாலும் அதை உறுதியாகவும் சொல்லமுடியாது. தமிழகம் இந்திய அரசின் வெறுப்பு லிஸ்டில் இன்னும் கெட்டியாகச் சேர்க்கப்படவும் கொஞ்சமே கொஞ்சமாய் வாய்ப்புள்ளது! 80:20 ரிஸ்க் தான் என்றாலும் யாசின் மாலிக் ஈழத்துக்கு ஆதரவு அளித்திருப்பது இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வகையில் நாம் தமிழர் கட்சிக் கூட்டத்திற்கு யாசின் மாலிக்கை அழைத்தது சீமானின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காய்நகர்த்தல் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு அவரை கண்டிப்பாக பாராட்டித்தான் ஆகவேண்டும்.

அதே நேரத்தில் சீமான் தனது இந்த அரசியலுக்கு ஜெவின் அதிரடி எதிர்வினைகைகளை எதிர்பார்க்கவில்லை. கூட்டத் தடை, படங்கள் அகற்றம், அடுத்தடுத்த வழக்குகள் என சரவெடியாய் பிரச்சினைகளைக் கொடுத்திருக்கும் ஜெவை இதுவரை அவர் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ செஸ் விளையாட்டில் சீமான் முதல்முறையாக ஒரு முக்கியமான காயை நகர்த்தியிருக்கிறார். அந்த நகர்த்தலால் நன்மை விளையுமா, தீமை விளையுமா என்பதை எல்லாம் உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது இந்திய இறையாண்மைக்கு எதிரான முக்கியமான காய்நகர்த்தல். அதில் இருந்து பிரளாமல், சமரசம் ஆகாமல், பயப்படாமல் தனது ஆட்டத்தில் முன்னேறப் போகிறாரா அல்லது 'பேக்' அடித்து சரணடையப் போகிறாரா என்பதற்கான விடை அடுத்தடுத்த நாட்களில் வரப்போகும் சீமானின் அறிக்கைகளும், பேட்டிகளும், நடவடிக்கைகளும் நமக்கு தெரிவித்துவிடும்! காத்திருப்போம்!

 

https://www.facebook.com/tamilaalinaivom

 

 



seeman-2105011111.jpg

 

 

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன.

 

இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் அவர்கள், யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார், அவரை அழைத்து வருவதற்கு உதவி செய்த சக்தி எது? அந்த நிகழ்ச்சி பின்புலமாக இருந்து செயல்பட்ட இயக்கங்கள் எவை என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டிய கடமை நாம் தமிழர் கட்சிக்கு உண்டு என்பது மட்டுமின்றி, இந்தத் தலைவர்களுக்கு சில கேள்விகளையும் நாம் தமிழர் கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது.

காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷமீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது.

 

247451_605670246117896_2109773658_n.jpg

 
காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டை போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்? அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா? இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்?
 
ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களே, அது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? தமிழினத்தை கொன்று குவித்த அந்நிய நாட்டுத் தலைவனை அழைத்து அரசு மரியாதை கொடுப்பதுதான் தேச பக்தியா? தேசப் பக்தியாளர் ஞானதேசிகன் பதில் சொல்லட்டமே. கடந்த 35 ஆண்டுகளாக கச்சத் தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதா? பிரிவினைக்கு வித்திடாதா? ஞானதேசிகன் பதில் சொல்லட்டும்.
 
இந்த நாட்டின் செல்வத்தை அந்நிய பெரு நிறுவனங்களும், நாடுகளும் கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு ஏற்ற வகையில் கொள்கை வகுத்துக்கொடுத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கூறும் தேச பக்தி. காங்கிரஸ் அரசின் அனைத்து பொருளாதார சுரண்டல் கொள்கைக்கும் ஒத்துப்போகும் தேச பக்தியைத்தான் பாரதிய ஜனதா கடைபிடிக்கிறது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள்தான் தேசப்பற்றை பற்றி பேசுகின்றன. நாங்கள் தேசப்பற்றைப் பற்றி பேசவில்லை, இந்த தேச மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம்.
 
தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். ஆனால் அந்த மக்களை இந்தியர்கள் என்றா பார்த்தது இந்திய மத்திய அரசு. துப்பாக்கியால் சுட்டு 104 பேரைக் கொன்றது.
 
அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் இராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய இராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்? இராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பகதர்களின் பதில் என்ன?
 
காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும். நாம் தமிழர் இந்திய அரசமைப்பை ஏற்று ஜனநாயக பாதையில் இயங்கிவரும் கட்சி. இலங்கையில் எம்மினத்தின் விடுதலைக்காகவும், இந்தியாவில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசியல் கட்சி என்பதை தெட்டத் தெளிவாக, ஆவணப்பூர்வமாக விளக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கட்சியை தங்கள் கட்சியாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் தேசியக் கட்சிகள் எங்கள் மீது கூறும் குற்றச்சாற்றுகள் எந்த அடிப்படையும் அற்றது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும்.
 
நாங்கள் தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். இது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இறையாண்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன என்பதை அறியாத, புரியாத தலைவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=99789

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
ஜெயலலிதா பழையபடி மரத்தில் ஏறுவார் என எதிர்பார்க்கலாம்.ஜெயலலிதா பற்றி எழுதப்பட்ட பந்தி 100% உண்மையானது.அவரின் பல்டியை தோலுரித்துள்ளார்.
 
போராடும் எந்த குழுவோடும் போராடும் இனம் நட்பு கொண்டாடுவதில் தப்பில்லை. இதனை சேகுவரா கூட சொல்லியுள்ளார்.
 
மாலிக்கை  சீமான் அழைத்தது காசடிக்க தான் என எம்மவர் கூறாமல் விட்டாலே பெரிய புண்ணியம்.
 
இணைப்புக்கு நன்றி நெடுக்ஸ்.

திராவிடக் கட்சிகள் திராவிடத்தை தமக்கு திரவியம் தேட(ஜெயலலிதாவை  சொத்துக்குவிப்பு வழக்கில் காங்கிரசால் இன்னமும் மாட்ட வைக்க முடியவில்லை என்றாலும்) என்று ஒதுக்கியபின்னர் தமிழகத்தின் நலங்களை கவனிக்க ஒரு கட்சி தேவை. இதை சீமான் செய்ய, சில அவதானங்களை கையாளவேண்டும்.

 

1. காங்கிரஸ் இந்த தேர்தலோடு தமிழ் நாட்டை விட்டுப் போக வேண்டும். பா.ஜ.க வும் ஒரு தொகுதியும் எடுக்காவிட்டால். நல்லது. ஆனாலும் அது தமிழ் நாட்டில் அதிகாரம் செலுத்தாது.

 

2. கருணாநிதி மண்கவ்வ வேண்டும்.

 

இந்த இரண்டும் நடந்தால்த்தான் தமிழ் நாட்டை இனிமேலைய காலங்களில் வாய் உள்ள பிராணியாக மத்திய அரசு கவனிக்க வேண்டி வரும்.  இல்லையேல் நாயிலும் கீழாகத்தான் நடத்தப்படுவார்கள்.

 

எனவே சீமான் வரும் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்படுவது திண்ணமானால் ஜெயலலிதாவுக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ போகலாம்.(என்றோ ஒரு நாள் எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாது).  இல்லையேல் சில மெத்ததனத்தை காட்டி அ.தி.மு.க வுடன் நட்புக்களை வைத்துக்கொள்ள வேண்டும்.

 

ஜெயலலிதாவுக்கு யாசின் மாலிக் பிரிவினைவாதி என்பதால் மட்டும் அல்ல பிடிக்காது. அவர் கஸ்மீரியன் என்ற உண்மையும் பிடிக்காது. இது ஜெயலலிதா திராவிடகட்சிக்காரராக இருந்தாலும்  அவர் மேட்டுக்குடித்தனக்காறி (நமது கள உறவு சண்டமாருதன், இறுக்கி வெடிக்கஅரசியலாக ஒன்றும் கையில் அகப்படாவிட்டால், எப்போதும் அவிட்டு விடும் அவிட்டு வாணம்)  என்ற உண்மையால் வருவது.  எனவே அந்த உண்மையை ஜெயலலிதா சீமானுடன் இணைத்து சீமான் மீதும் தனது வெறுப்பைக் காட்ட ஆரம்பித்துவிடுவார்.

 

முளையிலேயே கிள்ளி எறிய இடம் கொடுக்காத தந்திரங்கள் வேண்டும்.  காங்கிரசை, பா.ஜ.க வை தமிழ்நாட்டால் துரத்தாவிட்டால் தமிழர் என்ற உணர்வை சீமானல் தமிழ் நாட்டில் விதைக்க முடியாது போகும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக, அதிமுகவுக்கு இது கடைசிக் காலம்: சீமான்

 

  •  
  • seeman1.jpg

திமுக., அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே இது கடைசிக் காலம் என்று கூறினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

கடலூரில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து,சிறிய அளவுக் கூட்டமாக உள்ளரங்கில் ஒரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது. இதனால், பொதுக்கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடைகளை கட்சியினர் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தனர். மேடை கலைக்கப்பட்டு பேனர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன,

இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,

சென்ற தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?

திமுக., அதிமுக., இரண்டுக்குமே இது கடைசித் தருணம். நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம்... - என்றார்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://dinamani.com/latest_news/2013/05/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A/article1595725.ece

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழையபடி ஜே எண்ட வேதாளம் முருங்கைமரத்திலை ஏறுது போலை கிடக்கு

 

253261_585013888198033_2087982843_n.jpg
அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்?

-சீமான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.