Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு மாகாண சபைத் தேர்தலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்

Featured Replies

  [ திங்கட்கிழமை, 27 மே 2013, 12:10 GMT ] [ நித்தியபாரதி ]

Douglas-Devananda.jpgவிரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பாக முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார். 

இந்நிலையில், சர்ச்சைக்குரிய காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வடக்கு மாகாணசபைக்கு வழங்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் ஏற்படும் என்பதால் இந்த அதிகாரங்கள் பறிக்கப்படாமல் அப்படியே இருப்பதற்காக வடக்கு மாகாணசபை முதல்வராக தான் போட்டியிட விரும்புவதாக சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாரம் அறிவித்திருந்தார். 

மாகாணசபைகளிடமிருந்து காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்ந்தும் மாகாணசபைகளிடமே இருக்க வேண்டும் என தேவானந்தா வலியுறுத்தியுள்ளதானது விமல் வீரவன்ச மற்றும் சம்பிக்க றணவக்க போன்ற பெரும்பான்மை சமூக கடும்போக்காளர்களின் மனஉணர்வுகளுக்கு மாற்றாக எதிரொலிக்கின்றன. தேவானந்தா இவ்வாறான கருத்தை வலியுறுத்தி மாகாணசபையில் போட்டியிடுவதற்கு முன்னிற்பதானது அவரது சக தமிழ் அரசியல்வாதிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆனால் இது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாது. 

ஏனெனில், தேவானந்தா தன் மீது மேற்கொள்ளப்பட்ட பத்து தீவிர கொலை முயற்சிகளிலிருந்து தப்பியுள்ள ஒருவராவார். குறிப்பாக இவரது செயலகத்தில் வைத்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தேவானந்தாவைக் குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலிலும் இவர் உயிர்தப்பியிருந்தார். இவர் அரசியல் விளையாட்டுக்களை மிகத் திறம்பட நடாத்திவரும் அரசியல்வாதியாவார். 

கதிரவேலு தேவானந்தா யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவராவார். பின்னர் இவர் தனது இளம்பராயத்தில் கொழும்பில் வசித்தார். இவரது தமிழ் ஆயுத அமைப்பானது ஈழப் புரட்சிகர மாணவர் அமைப்பு (ஈரோஸ்) என்ற பெயரில் தோற்றம் பெற்றது. இந்த அமைப்பின் உருவாக்கத்தின் பின்னர் இவரது பெயருடன் 'டக்ளஸ்' என்ற புனைபெயர் இணைக்கப்பட்டது. 

தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் விரிவடைந்த பின்னர், தேவானந்தா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (EPRLF) ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF) போன்ற அமைப்புக்களில் செயற்பட்ட பின்னர் இறுதியாக ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியை (EPDP) உருவாக்கினார். 

டக்ளஸ் தேவானந்தா ஆயுத அமைப்பில் செயற்பட்ட போது ஈவிரக்கமற்று செயற்பட்டுள்ளார். திருக்கோவில் வங்கிக் கொள்ளை, யாழ்ப்பாணத்தில் இரண்டு அமெரிக்கர்களைக் கடத்தியமை, காரைநகர் கடற்படைத் தளம் மீதான தாக்குதல், சென்னையில் இடம்பெற்ற தாக்குதல் எனப் பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டார். சென்னையில் சட்டவாளர் ஒருவரின் கொலை தொடர்பில் தேவானந்தா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவில் யுத்தம் தொடரப்பட்ட காலம் முழுவதும் தேவானந்தா தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்தார். அத்துடன், இந்த அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை கடுமையாக விமர்சித்திருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பானது தேவானந்தாவைக் குறிவைத்து பல்வேறு தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. 

இவ்வாறான தாக்குதல்களில் யூலை 2004ல் கொள்ளுப்பிட்டியிலிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் செயலகத்தைக் குறிவைத்து புலிகள் அமைப்பின் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் மேற்கொள்ள முயற்சித்த குண்டுத் தாக்குதல் குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண் தற்கொலைக் குண்டுதாரி தனது உடலை சோதனை செய்வதற்கு மறுத்தபோது, அருகிலுள்ள காவற்துறை நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். தன்னை காவற்துறையினர் சோதனையிடுவதற்கு முன்னர் இந்தப் பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதில் அங்கிருந்த நான்கு காவற்துறையினர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் தேவானந்தா எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார்.

பிரபாகரனுக்கும் தேவானந்தாவுக்கும் இடையில் நிலவிய விரோதத்தை சிறிலங்கா அரசாங்கம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இராணுவப் போரிலும், பரப்புரை யுத்தத்திலும் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் பயன்மிக்க கருவியாக தேவானந்தா காணப்பட்டார். 

10 வயதான சிறுவன் ஒருவனை கடத்தியமை தொடர்பில் இந்தியாவில் தேவானந்தா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை மேற்கொள்வதற்கு முயற்சித்த போது இதிலிருந்து தப்பிப்பதற்காக 1990ல் சிறிலங்காவுக்கு தப்பிவந்த தேவானந்தா அதிலிருந்து அரசியல் நீரோட்டத்துடன் கலந்து கொண்டார். 

இந்தக் காலப்பகுதியில் சிறிலங்காவின் அதிபராக கடமையாற்றிய றணசிங்க பிறேமதாச, தமிழீழ விடுதலைப் புலிகளால் எழுந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக தேவானந்தாவை அரசியலில் உள்வாங்குவதற்கான நடவடிக்கையை எடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் பிறேமதாசாவின் மூலோபாயத்தைக் கைக்கொண்டு தொடர்ந்தும் டக்ளஸ் தேவானந்தாவை முதன்மைப்படுத்தியதால் அவர் சிறிலங்காவில் முன்னணி அரசியல்வாதியாக மாறினார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டில் தேவானந்தாவும் அவரது ஈ.பி.டி.பி உறுப்பினர்களும் தங்கவைக்கப்பட்டதுடன், இவர்களுக்கான உதவிகளையும் அரசாங்கம் செய்துகொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1994ல் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 10,000 வாக்குகளைப் பெற்ற போதிலும், டக்ளஸ் தேவானந்தா மூலம் அரசாங்கம் ஒன்பது ஆசனங்களை தக்கவைக்க முடிந்தது. இதிலிருந்து நாடாளுமன்றில் தேவானந்தா அமைச்சராக பதவியுயர்த்தப்பட்டார். வடக்கு அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட பல்வேறு அமைச்சுப் பதவிகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பாக தான் போட்டியிடப் போவதாகவும், மாகாணசபைகளுக்கான காணி, காவற்துறை அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது எனவும் தேவானந்தா அறிவித்துள்ளார். இந்நிலையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட்டால் இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெல்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில், வடக்கு மாகாண மக்களின் ஆதரவைப் பெற்ற, செல்வாக்கு மிக்க தேவானந்தாவை முதல்வர் பதவிக்காக போட்டியிட வைப்பதானது தனக்குச் சாதகமாக அமையலாம் என சிறிலங்கா அரசாங்கம் கருதுகிறது. 

தேவானந்தாவைப் பொறுத்தளவில் அவர் எதனையும் இழக்க விரும்பமாட்டார். தேவானந்தா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தனது அமைச்சுப் பதவியை தியாகம் செய்ய வேண்டியேற்படலாம். வடக்கு மாகாணசபையில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகம் காணப்படுகின்றன. 

இவ்வாறு கருதினாலும் கூட, தேவானந்தா வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட பின்னர், அவர் மீண்டும் நாடாளுமன்றுக்குச் சென்று தனது அமைச்சுப் பதவியை மீளப் பெற்றுக்கொள்வதற்கான சிறப்பு 'ஏற்பாட்டை' சிறிலங்கா ஆளும் கட்சி செய்து கொடுக்க முடியும். முதலமைச்சுப் பதவிக்காக போட்டியிடும் முதன்மை வேட்பாளர் காணி, காவற்துறை அதிகாரங்கள் தனது மாகாணத்திற்கு தேவையில்லை எனக் கூறினால், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியானது மீண்டும் தேவானந்தா தனது அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாட்டை நிச்சயம் செய்துகொடுக்கும். 

இந்தவகையில் நோக்கில் தற்போது சிறிலங்காவை ஆளும் கட்சி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. காணி காவற்துறை அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்குவதற்கான உறுதிமொழியை சிறிலங்கா இந்தியாவிற்கு மீண்டும் மீண்டும் வழங்கிவந்துள்ளது. 

இந்நிலையில், சிறிலங்கா இவ்வாறான உறுதிமொழிகளை காப்பாற்றத் தவறியதாலேயே வரும் நவம்பரில் பொதுநலவாய அமைப்பின் அரசாங்கத் தலைவர்கள் ஒன்றுகூடும் உச்சிமாநாட்டை சிறிலங்காவில் மேற்கொள்ளாது வேறு நாடொன்றில் மேற்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறான சூழலில், காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை சிறிலங்கா அரசாங்கம் மாகாணங்களுக்கு வழங்கும்போது பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடாத்த முடியும் என இந்தியா உறுதிப்படுத்த முடியும். 

தேவானந்தா, காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார். இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் காணி காவற்துறை அதிகாரங்கள் சுயாட்சியுடன் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

வடக்கு மாகாண சபைத் தேர்தல் எந்த வகையில் நடந்தாலும், என்ன விதமான பெறுபேறுகள் வெளிவந்தாலும் கூட, தேவானந்தா தேர்தலில் தோற்றாலும் கூட, இந்த அரசியல் சவாலில், அரசியற் போட்டியில் வெற்றி பெற்று, அரசியலில் நிலைத்திருப்பார் என்பது மட்டும் நிச்சயமானதாகும். 

கட்டுரை வழிமூலம் : 'dailymirror.lk' 

மொழியாக்கம் : நித்தியபாரதி

 

puthinappalakai

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் வரப்போகும் வடக்கில், எந்தவொரு தேர்தலிலும் தமிழர் தரப்பு வெற்றிபெறுவதென்பது அரிதே, காரணம் அங்கு நிலமை மிகவும் மாறிவிட்டது.தேர்தலிம் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் இளைஞர்களே முதன்மையாக இருந்தது அந்தக்காலம். தற்போது அப்படி ஏதும் அங்கு இல்லை. பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு சிறு பகுதியினர் கொஞ்சம் மும்மரமாக இருப்பதால் நாம் அங்கு எதோ எல்லாம் சரியாக நடக்கின்றது என நினைக்கிறோம். அங்கு கள்ளுக் கடைகளிலும் சாராய பார்களிலும் ஏனைய களியாட்டங்களிலும்தான் எல்லாம் சரியாக நடக்குது. நூறு மீட்டர் தூரத்தைச் சென்றடைய நடந்து போவதைத் தவிர்த்து, சரி சைக்கிளில் போவதையும் தவிர்த்து, மொபோவிலாவது போவதையே அங்குள்ள இளையோர் விரும்புகிறார்கள். பெண்பிள்ளைகளும்தான். வெளிநாட்டிலிருந்து யாராவது ராஜகுமாரன் கைப்பிடித்துத் தம்மை வெளிநாட்டில் கரை சேர்க்க மாட்டார்களா என பெண்களும், மாமா அணணன் அக்கா யாராவது வெளிநாட்டுக்குக் கூப்பிட லட்சக் கணக்கில் காசுகட்டத் தயாராக மாட்டார்களா என இளைஞர்களும் அங்கு தேவிடு காய்கிறார்கள். இதில் பரிதாபத்திற்க்குரியவர்கள் முன்னால் விடுதலைப் புலிப்போராளிகள் மட்டுமே. அவர்கள் மட்டுமே அங்க அவயங்களை இழந்து நடுத்தெருவில்லீதில் இன்னுமொரு வருத்தம்தரும் செய்தி முள்ளிவாய்காலில் இறுதிவரை சாவுக்குள் வாழ்ந்த போராளிகள் தஞ்சம்கோரிய மேற்குலக நாடுகளில் அவர்களது அகதி விண்ண்ப்பம் எடுத்தஎடுப்பிலேயே அனுமதி மறுக்கப்பட்டு நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் அவல நிலையை நோக்கி, ஒரு முள்ளிவாய்க்கால் வீரன் கடந்த இருவாரத்துக்கு முன்பு நடந்த கவனயீர்ப்பில் தேசியக்கொடியை தன் தோளகளுக்குமேல் உயர்த்திப்பிடித்து கம்பீரமாக முன்வரிசையில் எவ்வித எதிபார்ர்புமில்லாது கொடிபிடிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்திற்காய் சந்தோசமடைந்து நிண்றதைப் பார்க்க எனது கண்களில் கண்ணீர் வந்தது இவ்வளவிற்க்கும் அவ்வீரனால் நீண்டநேரம் நிற்கமுடியாது கால்களில் போரின் வடுக்கள், விதியே விதியே என்ன செய்ய நினைத்தாய் என் தமிழ்ச்சாதியை!

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கருத்து மிக சரி..    கிந்தியா குடுக்கிறான் விரால் மீனு. வாங்கி சமைத்து விட்டு பாருங்களேன்...

 

அவுங்க வலிக்கு அவுங்க தான் போராட வேண்டும் தமிழகம் போராடவில்லை

 

அதலெல்லாம் அந்த பக்கம்...  இவுங்க ஏதாவது போட்டோ பார்த்தால் தீக்குளித்து செத்துவிடுவார்கள்... இல்லையென்றால்  ஓட்டு போடுவார்கள்.. (அரசியல் வியாதிகள்  ஈழ தமிழர்களுக்கு இதோ வருது தனி நாடு என்று ஓட்டு கேட்பான்) அவன் பிழைப்புக்கு அவன் செய்கிறான்..அதைதான் 1985 இல் இருந்து பாலோ செய்கிறார்க்ள்

 

 

அவுங்க வலிக்கு அவிங்க தான் அழுகணும்...அதை விட வொர்ஸ்ட் பெலேஸ்... நா கா தா....? உலக தமிழர் பேரவை? கூட்டி கூட்டி அறிக்கை விடுவதா வேலை..?  நாலு குயர் பேப்பர் ஒரு பேனா போதும் ஈழ தமிழர்  விடுதலை சாத்தியம்.....

 

 

என்ன லேட்டஸ்ட் நியுசு சுதந்திர சாசன அறிக்கையாம்.... ! அதை ரைப்படிப்பதற்கு உங்களின்ட (புலம் பெயர் தமிழர்கள்) காசு கேட்பார்கள்..  அதை தயார் பண்னிடால் தனி நாடு உறுதி ஆகி போடுது... பிள்ளையே பிறக்கல.. இவுங்க உங்கள   ....

 

அடுத்தவரிடம் உண்டியல் குலுக்கும் போதே எந்த காரண்ததிற்காக ... என்ற புத்தி இருக்கணும்..  எனக்கு தெரிந்து இவ்வளவு தூரம் புத்தி சிகாமணிகள் சிங்களத்தை வளரவிடபாடாது..

 

 

டிஸ்கி

யாருக்கும் தனிப்பட்ட விரோதம் இந்த எளியவனுக்கு கிடையாது.. செய்ய வேண்டியவர்கள் ..  கம்முனு இருப்பதால் தான் கோபம் வருவது..

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.