Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருக்கலைப்பு பெண்களின் தார்மீக உரிமை மட்டுமல்ல சமூக கடமையும் கூட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலைப்பு பெண்களின் தார்மீக உரிமை மட்டுமல்ல சமூக கடமையும் கூட
* இக்பால் செல்வன்

 

 

Henry_Morgentaler-210x210.jpg


ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் முழு பொறுப்பு பெற்றோர்களுக்கும், சமூகத்துக்கும் உண்டு என்பதை நாம் அறிவோம். அதே சமயம் ஒரு குழந்தையை பெற்று வளர்க்கும் பெரும் பொறுப்பை இயற்கை வேறு யாரை விடவும் ஒரு தாயின் மீதே அதிகமாக சுமத்தியுள்ளது. இருந்த போதும் குழந்தையை பெற்று வளர்க்கும் சுமையை பெண் மீது திணிக்கப்படுவது என்பது நியாயமற்றவையாகவும் நவீன உலகம் பார்க்கின்றது. 
 
பொதுவாகவே குழந்தையின் முழு வளர்ச்சிக்கும் தாய், தந்தை, சுற்றம் மற்றும் சமூகம் முழுப் பங்களிப்பை செய்ய வேண்டும், அதுவே முழுமையாக வளர்ச்சியுற்ற ஒரு தேசத்தின் அடையாளமாகும். ஆனால் ஏனையோரை விட தாய் என்பவளுக்கே குழந்தையை பெற்றுக் கொள்வதா, வேண்டாமா என்ற உரிமை அதிகம் வழங்கப்பட்டுள்ளது. 
 
கருவுறுதல் என்பதை பல்வேறு பண்டைய சமூகங்கள் உயர்வானதாகவும், மேன்மையானதாகவும் கருதியது. அதனால் தான் தாய்மை அடைந்த பெண்ணையும், தாய்மையடையும் நிலையையும் தெய்வீகமானதாய் கருதினார்கள். பிற்கால மத வளர்ச்சியில் இதன் முக்கியத்துவம் குன்றி விட்ட போதும், அதன் சாராம்சங்களை நமது அன்றாட வாழ்க்கை முறைகளிலும், சமூகப் பண்பாட்டுக் கூறுகளிலும் காணக் கூடியதாய் அமைகின்றது. 
 
ஆனால், அதற்காக பெண் விரும்பம் கொள்ளாமல் அவள் மீது குழந்தைச் சுமையை ஏற்ற முடியுமா சொல்லுங்கள் ? உலகின் எந்தவொரு விடயங்களும் விரும்பமில்லாமல் திணிக்கப்படும் போது, அதனால் அகத்திலும், புறத்திலும் பாதிப்புக்களே விஞ்சுகின்றன. அதிலும் குழந்தையை பெற்று, வளர்ப்பது என்பது என்னவோ இயல்பான விடயங்கள் இல்லை. இயற்கை அனைவருக்கும் இன விருத்தி செய்யும் இயல்பை வழங்கி இருக்கின்ற போதும், நவீன உலகில் இன விருத்திக்கான வழிமுறைகள் என்பவை ஒழுங்கபடுத்தப்பட்டுள்ளது. தாய், சேய் ஆகிய இருவரின் நலன்களையும் அதுக் கருத்தில் கொள்கின்றது.
 
எவ்வாறு ஒரு குழந்தையை பெற்று வளர்க்க சமூகம் எதிர்ப்பார்க்கின்றதோ, அதே சமயம் குழந்தையை பெறவோ, வளர்க்கவோ விருப்பமோ, வசதி வாய்ப்புக்களோ, சூழலோ இல்லாத நிலையில் சிசுவில் அக் குழந்தையை கலைப்பதற்கான முழு உரிமையையும் தாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, குடும்பமாக வாழ முற்படும் முன்னரோ, இளம் பிராயத்தில் ஏற்படும் விபத்துகளாலோ, பாலியல் வன்முறைகளாலோ, குழந்தையை பெற்று வளர்க்க ஏதுவான வாழ்வியல், உளவியல், பொருளாதார சூழல் இல்லாத நிலையில் கற்பத்தில் சிசுவை கலைத்து விடுவதே ஒரு தாய்க்கும், சிசுவுக்கும் உகந்ததாய் இருக்கும் என்பதையே இன்றைய மருத்துவ உலகமும், சமூக அக்கறையாளர்களும் கருதுகின்றனர். 
 
இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் சிசுவை உகந்த காரணங்களுக்காக கலைக்கும் முழு உரிமையையும் ஒரு தாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய உரிமைகளை அவர்கள் எளிதாக பெற்றிருக்கவில்லை, பல்வேறு போராட்டங்கள் மற்றும் கடும் உழைப்பின் பலனாலேயே பெற்றுள்ளனர். இதனால் சமூக இனவிருத்தி என்பது திட்டமிடப்பட்டவையாகவும், பெற்றோர்களுக்கு சுமைகள் குறைவானதாகவும் இருக்கின்றது. 
 
இந்த வகையில் இத்தகைய கருக்கலைப்பு உரிமைகளுக்காக கனடாவில் போராடியவர்களில் ஒருவர் தான் மருத்துவர் கெ:ன்றி மொர்ஜெண்டெலர் ( Henry Morgentaler ) என்பவர் ஆவார். கடந்த புதன்கிழமை டொராண்டோவில் உள்ள அவரது இல்லத்தில் அன்னார் காலமானார், அவருக்கு வயது 90. 
 
1988-யில் கனடாவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை நீக்கியதில் முக்கிய பங்காற்றியவர் மருத்துவர் மொர்ஜென்டெலர் கெ:ன்றி மொர்ஜெண்டெலர். போலாந்து நாட்டில் யூதக் குடும்பத்தில் பிறந்து இட்லரின் வதை முகாம்களில் சிக்கி பாதிக்கப்பட்டு பின்னர் கனடாவுக்கு குடியேறிய இவர். பிற்காலங்களில் மருத்துவத் துறையில் பெரும் புகழடைந்தார். குறிப்பாக பல பெண்களுக்கு சட்டத் தடையையும் மீறிக் கருக்கலைப்பு செய்து வைத்தவர் ஆவார். இறைமறுப்புக் கொள்கையையும், மனிதத்துவத்தையும் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். பெண்கள் நல உரிமைகளுக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்தும் போராடியமைக்காக கனடாவின் உயரிய விருதான கனடாவின் கட்டளை விருதையும் பெற்றவர். 
 
இட்லரின் அவுச்சுவிட்ஸ் வதைமுகாமில் தனது தாயை பறிக் கொடுத்த கெ:ன்றி தனது வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற தாய்மார்களின் நலன்களுக்காகம், உரிமைகளுக்காகவும் போராடியவர் என்பது நெகிழ்ச்சியான ஒன்றாகும். இவரது அயராத போராட்டத்தின் பலனால் 1969-களில் குறிப்பிட்ட சூழல்களில் கருக்கலைப்பு செய்யலாம் என்ற சட்டத் திருத்தத்தை கனடா அரசாங்கம் கொண்டு வந்தது. 
 
இருந்த போதும், தாய்மார்களின் விருபத்துக்கு இணங்கி கருக்கலைப்புக்களை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பல முறை சிறை சென்றும் உள்ளார். பின்னர் 1980-களின் கடைசியில் கருக்கலைப்பு உரிமைக்கு ஆதரவாக பலரும் போராடத் தொடங்கியதன் விளைவாக, மிகுந்த சட்ட வழக்குகளின் இறுதியில் ஜனவரி 28, 1988-யில் கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை நீக்கி உத்தரவிட்டது கனடாவின் உச்ச நீதிமன்றம். இதனை பெண்கள் நலப் போராளிகள் ஒரு மாபெரும் வெற்றியாக கருதினார்கள். இந்த தீர்ப்பினைப் பெற்றுத் தந்தவர்களில் மிக முக்கியப் பங்காற்றியவர் கெ:ன்றி. 
 
1990-களில் அரசாங்கம் மீண்டும் கருக்கலைப்பு தடைச் சட்டத்தை கொண்டு வர முயற்சித்த போதும், அது பாராளமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனைத் தொடர்ந்து மதவாதிகள், பழமைவாதிகளின் கடும் கோபத்துக்கு தொடர்ந்து உள்ளாகி வந்துள்ளார் அவர். 
 
1993-யில் அவரது மருத்துவ கிளினிக் குண்டுத் தாக்குத்தல்களுக்கு உள்ளானது, இருந்த போதும் நற்பயனாய் அவர் உயிர் தப்பினார். 1990-களில் கனடா மற்றும் அமெரிக்காவில் பல கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலின் பின் புலத்தில் கடும் போக்கு கிறித்தவ அமைப்புக்கள் பலவும் இடம் பெற்றிருந்தன. 
 
1963-களில் மன்றியல் மனிதத்துவ பண்டித்துவ இயக்கத்தை நிறுவினார். இவ் இயக்கத்தின் ஊடாக அறிவியல், பகுத்தறிவு, சமூக காருண்யம், சமூகத் தத்துவாத்ம், நிச்சயார்த்த விழுமியங்களை பரப்பினார். காணொலி, தொலைக்காட்சி ஊடாக புதிய சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கொள்கைகளையும், மதம் சாராத பள்ளிக் கல்வி முறைகள், கருக்கலைப்பு உரிமைச் சட்ட சீர்த்திருத்தங்கள் போன்றவற்றை முன்னெடுத்தார். 
 
கத்தோலிக்க மற்றும் இதர கருக்கலைப்பு எதிர்ப்புக் குழுவினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த 2008-ம் ஆண்டு கனடாவின் உயரிய விருதான " கனடாவின் கட்டளை" விருதைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இவரது கடுமையான போராட்டம், மற்றும் உழைப்பினால் இன்று திட்டமிட்ட இனவிருத்தி உரிமைகளை பெண்கள் பெற்றிருக்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் தேவையற்ற பிறப்புக்களையும், தாய்மார்களின் உயிர் வாழும் மற்றும் வாழ்வியல் உரிமைகளும் நிலைநாட்டப்படுகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தையை பெறுவதும், கலைப்பதற்குமான முழு உரிமைகளையும் தாய்மார்கள் பெற்றுள்ளனர் என்பது சிறப்பான ஒரு விடயமாகும். 
 
அன்னாரின் மறைவு பெண்கள் நல உரிமையாளர்களுக்கு பேரிழப்பாக இருக்கின்ற போதும், அவர் ஆற்றிய பணிகளும், வழிக்காட்டல்களும் வருங்காலங்களில் பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட உறுதுணையாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 
 

 


http://www.kodangi.com/2013/05/abortion-rights-crusader-henry-morgentaler-revered-and-hated-dead-at-90.html
 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் பெண்களிடம் இதனைக் கட்டாயமாக்க வேண்டும்..! அல்கா கோவிச்சுக்குவார் என்று சொல்லப்படாது..! :lol::D

இந்தப்பிரச்சனை பற்றி ஆராய்ந்து பைத்தியம் பிடித்து அலைந்து நாதாரியாய் போய்விட நான் விரும்பல சார்................. :rolleyes:  :lol: 

 

.சிசுவை கலைப்பது மட்டும் குற்றமல்ல ..............பாலியலும் ஓர் குற்றமே .......[பாலியலை தடை செய்வோம்]....... :D 

 

அங்கேயும் உயிர்[அரை] கொல்லப்படுகின்றன ................ஐயோ வேண்டாம் என்னை போட்டுத்தாக்கவேண்டாம் :D  :icon_idea: ................நன்றி வணக்கம் 

 

  • கருத்துக்கள உறவுகள்

கருக்கலைப்பிற்கு ஆதரவு  தருபவன் அல்ல நான்

இருந்தும் ஒரு பெண் எந்த நிலையில் கருக்கலைப்பிற்கு முயற்சி செய்கின்றார் என்பது முக்கியம்.

 

சிங்கள ராணுவப்படையினால் வன்புணர்வுக்கு உட்பட்டுக் கருவுற்ற ஒரு பெண் கருக்  கலைப்பதற்கு முயற்சிப்பதும்  தன்  கணவனால்  அல்லது காதலனால்ஒரு விபத்தாகக்  கருவுற்ற பெண் கருக்கலைப்பதற்கு முயற்சிப்பதற்கும் 

நிறையவே வித்தியாசங்கள் உண்டு.

 

மற்றும் கருவுற்ற  குழந்தையில் இருக்கும்  குறைபாடுகள், நோய்கள்,

தேக ஆரோக்கியம் போன்ற காரணங்களால் வைத்தியர்களே கருவைக் கலைப்பதற்கு 

அறிவுரை கூறுவார்கள் .

 

குழந்தைகள் தங்கள் சுகபோக வாழ்க்கைக்குத் தடையாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் 

கருக்கலைப்புச் செய்ய முயற்சிப்பவர்களை கண்டிக்க வேண்டும்     

 

அது வாத்தியார் ................அவ்வளவும் உண்மை .......

 

  • கருத்துக்கள உறவுகள்

சிசுவை கலைப்பது மட்டும் குற்றமல்ல ..............பாலியலும் ஓர் குற்றமே .......[பாலியலை தடை செய்வோம்]....... :D 

 

நன்றி வணக்கம் 

 

சூரியன்! அதுவும் தமிழ்சூரியன்!!. உங்களால் முடியாது சூரியன்!. உங்களுக்கு நலமடித்துவிட்டாலும் அதனைத் தடுக்க முடியாது!. பார்வையிலேயே குந்திக்குப் பிள்ளை கொடுத்த ஆளல்லவா நீங்கள்........ :icon_idea: 

"Abortion rights crusader Henry Morgentaler, revered and hated, dead at 90" என்பதற்கேற்ற தமிழ் தலைப்பு போட வேண்டும்.

 

இந்தப்பிரச்சனை பற்றி ஆராய்ந்து பைத்தியம் பிடித்து அலைந்து நாதாரியாய் போய்விட நான் விரும்பல சார்................. :rolleyes:  :lol: 

 

.சிசுவை கலைப்பது மட்டும் குற்றமல்ல ..............பாலியலும் ஓர் குற்றமே .......[பாலியலை தடை செய்வோம்]....... :D 

 

அங்கேயும் உயிர்[அரை] கொல்லப்படுகின்றன ................ஐயோ வேண்டாம் என்னை போட்டுத்தாக்கவேண்டாம் :D  :icon_idea: ................நன்றி வணக்கம் 

அப்ப காந்தியின் சொல் கேட்டு நடந்த(க்கும்) இளைஞர்களும்  குற்றவாளிகாளா? :lol: 

அப்ப காந்தியின் சொல் கேட்டு நடந்த(க்கும்) இளைஞர்களும்  குற்றவாளிகாளா? :lol: 

காளான் வணக்கம் உங்கள் வரவு யாழுக்கு நல்வரவாகுக ................நான் சொல்லவந்த விடயத்தை அப்படியே புரிந்து சொறிந்து கொண்ட ஓர் புலமைப்பித்தன் ............நீங்கள் ............உங்களை வரவேற்பதில் பெருமையும் ,பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன் நண்பரே ............... :D 

காளான் வணக்கம் உங்கள் வரவு யாழுக்கு நல்வரவாகுக ................நான் சொல்லவந்த விடயத்தை அப்படியே புரிந்து சொறிந்து கொண்ட ஓர் புலமைப்பித்தன் ............நீங்கள் ............உங்களை வரவேற்பதில் பெருமையும் ,பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன் நண்பரே ............... :D 

 

நன்றி உங்கள் வரவேற்பிக்கு! 

 

என் புலமையை மெச்சியதற்காக கோடி வந்தனம்  :lol: 

சுய தணிக்கை ..................ஏனனில் ஒரு சாதாரண மனிதனாய் நான் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளது ........என் புரிந்துகொள்ளலின் இடையில் மனித மனங்கள் என்னால் நோக கூடாது என்ற நோக்கத்திற்காக ................புரிதலுக்கு நன்றிகள் ..........

 

Edited by தமிழ்சூரியன்

 

 

h24026.gif

அப்படி தமிழ் சூரியன் என்ன எழுதினார். (என்ரை பதில் கருத்து உங்களை நோகச் செய்திருந்தால் மன்னிக்கவும் நண்பரே)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.