Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் ஏன் க்ரோம் உலவிக்கு மாற வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

google-chrome-web-browser-logo.jpgலவிகளில் [browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் “க்ரோம்” தான். கூகுள் ரசிகனான நான் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ம் ஆண்டில் இருந்து இதை பயன்படுத்தி வருகிறவன் என்ற முறையிலும், இதைப் பற்றி கூடுமானவரை அறிந்து இருப்பவன் என்கிற முறையிலும் இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தப்பதிவு நீங்கள் ஏன் (இது வரை பயன்படுத்தவில்லை என்றால்) க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit http://kapiti.seniornet.co.nz

வடிவமைப்பு

க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது. உலவியில் என்ன லைட் என்று நினைக்கிறீர்களா! இதை நீங்கள் பயன்படுத்தினாலே உங்களுக்குப் புரிந்து விடும். மிக வேகமாக திறக்கும் அதோடு, IE போல முக்கிக் கொண்டு இருக்காது. தேவையற்ற பகுதிகள் அனைத்தையும் நீக்கி நாம் படிக்கும் இடத்தின் அளவை ஆக்கிரமிக்காமல் எவ்வளவுக்கெவ்வளவு இடம் தர முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து இருப்பார்கள். நாம் விருப்பப்பட்டால் இன்னும் கூட தேவையற்ற பகுதிகளை நீக்க முடியும்.

நாம் திறந்து வைத்துள்ள TAB ஐ நமக்கு தேவையான வரிசையில் வரிசைப்படுத்த முடியும் அதாவது Drag and Drop முறையில் மாற்றி அமைக்க முடியும். ஒரு TAB ல் உள்ள ஒரு தளம் ஹேங் ஆகி விட்டால் மொத்த உலவியையும் மூடத் தேவையில்லை அந்த ஒன்றை மட்டும் மூடி விட்டு மற்றதை தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

வேகம்

கூகுள் என்றால் வேகம் என்று அனைவருக்கும் தெரியும். உலவி வேகமாக இருக்க வேண்டும், இல்லை என்றால் இணைய இணைப்பு வேகமாக இருந்தாலும் உலவி மொக்கையாக இருந்தால் பயனில்லை. கூகுள் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி க்ரோம் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கூகுள் கொடுக்கும் என்பதை நீங்கள் பல்வேறு தருணங்களில் உணர்ந்து இருக்கலாம். நீங்கள் பார்வையிடும் தளத்தில் “மால்வேர்” இருந்தால் நம்மை எச்சரிக்கைப் படுத்தும். உலவி பாதுகாப்பாக இல்லை என்றால் ஹேக்கர்கள் எளிதாக நம் கணக்கை ஆட்டையப்போட்டு விடுவார்கள்.

கூகுள் இதற்காகவே க்ரோம் உலவியில் ஹேக்கிங் போட்டி வைக்கும் அதாவது, க்ரோம் உலவியில் உள்ள பாதுகாப்பு குறைப்பாடுகளை யார் ஹேக் செய்கிறார்களோ அவர்களுக்கு பரிசு. இது போல போட்டிகள் வைத்து குறைகளை சரி செய்யும்.

கூகுள் SYNC

இருப்பதிலேயே இது தான் அட்டகாசமான வசதி. இந்த வசதி மூலம் நம்முடைய புக் மார்க் மற்றும் Add on களை [க்ரோம் ல் இதன் பெயர் Extension] நம்முடைய வீடு, அலுவலகம், மொபைல், டேப்லெட் என்று அனைத்து இடங்களிலும் கொண்டு வந்து விடலாம். இது மட்டுமல்ல நம்முடைய கடவுச்சொல் [Password] , ஹிஸ்டரி என்று அனைத்துமே SYNC ஆகி விடும். இதன் மூலம் ஒரு இடத்தில் இவற்றை சேமித்தாலும், அந்த தகவல்கள் நம்முடைய அனைத்து சாதனங்களிலும் வந்து விடும். இந்த வசதி எனக்கு தாறுமாறாக உதவி புரிகிறது icon_smile.gif

இதை எப்படி செயல்படுத்துவது?

க்ரோம் நிறுவியவுடனே இதை செயல்படுத்த நமக்கு அறிவிப்பு கொடுக்கும், இல்லை என்றாலும் நாமே Settings பகுதியில் சென்று செய்ய முடியும். இதற்கு நம்முடைய கூகுள் கணக்கை இதில் கொடுத்து விட்டால் நம்முடைய கணக்கில் இந்த விவரங்கள் சேமிக்கப்பட்டு விடும். எடுத்துக்காட்டாக உங்கள் அலுவலக க்ரோம் உலவியில் நீங்கள் புதிதாக ஒரு புக்மார்க் செய்கிறீர்கள் என்றால், இது உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டு, உங்கள் வீட்டில் உள்ள க்ரோமிலும் இவை வந்து விடும். இதனால் ஒரு இடத்தில் சேமிக்கப்பட்டதை எந்த சிக்கலும் இல்லாமல் இன்னொரு இடத்தில் தானியங்கியாகப் பெற முடியும். அடடா! நாம் அங்கே புக்மார்க் செய்தோமே இங்கே எப்படி பெறுவது!! என்ற கவலையே வேண்டாம். இதே வசதியை மைக்ரோசாப்ட் ம் கொண்டு வரப்போவதாக கூறி இருக்கிறார்கள்.

தானியங்கி புதுப்பிப்பு [Automatic Update]

க்ரோம் தானியங்கியாகவே தன்னை புதுப்பித்துக்கொள்ளும் அதாவது, புதியதாக ஏதாவது அப்டேட் வந்தால் தானாகவே அப்டேட் செய்து கொள்ளும். குறிப்பிட்ட நாட்கள் நீங்கள் உங்கள் க்ரோம் உலவியை முழுவதுமாக மூடி திறக்கவில்லை என்றால் (Hibernate mode) அதுவே உங்களுக்கு நினைவு படுத்தும்.

தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புது வெளியீட்டில் நீங்கள் லேப்டாப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதன் பேட்டரி திறனை 25 % கூடுதல் படுத்தி இருக்கிறது குறிப்பாக காணொளிகளைக் காணும் போது. Do Not Track என்ற வசதியையும் கொடுத்து இருக்கிறது இதன் மூலம், விளம்பர நிறுவனங்கள் நம் தகவல்களை பின்தொடர்வதை தடை செய்ய முடியும். இந்த வசதி இருந்தாலும் இதையும் மீறி தகவல்களை எடுப்பவர்கள் உண்டு. எப்படி, நாம் மொபைலில் Do Not Disturb Enable செய்து இருந்தாலும் சில விளம்பர நிறுவனங்கள் குறுந்தகவல் [ SMS] அனுப்பவதில்லையா! அது போல.

இந்த வசதியின் மூலம் பெருமளவில் மாற்றம் வந்து விடாது காரணம் பலருக்கு இந்த வசதி இருக்கிறது என்றே தெரியாது. க்ரோம் கூட இந்த புதிய பதிப்பில் தான் இந்த வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது. எத்தனை பேருக்கு இது இருக்கிறது என்று தெரியப்போகிறது, இது போல நீங்கள் படித்தால் தான் உண்டு அதை விட முக்கியம் படித்தாலும் சோம்பேறித்தனம் பார்க்காமல் இதை Settings பகுதியில் சென்று Enable செய்ய வேண்டும். இதை எத்தனை பேர் செய்யப்போகிறார்கள்? icon_smile.gif .

தகவல் சேமிப்பில்லா வசதி [No History]

Private browsing என்பதை கூகுள் Incognito என்ற வசதியின் மூலம் நமக்குத் தருகிறது. இதன் மூலம் நாம் இணையத்தில் பார்க்கும் தகவல்கள் எதுவும் இதில் சேமிக்கப்படாது. வங்கிக்கணக்குகளை, அடல்ட் தளங்களை பார்வையிடுபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்துவது நலம். நீங்கள் பார்க்கும் தளத்தின் தகவல்கள் உலவியில் சேமிக்கப்படுவதை விரும்பவில்லை என்றால் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். இதை ctrl + shift + N ஐ நீங்கள் அழுத்துவதன் மூலம் எளிதாக பயன்படுத்தலாம். தற்போது இந்த வசதி அனைத்து உலவிகளிலும் வந்து விட்டது.

2008 ம் வருடம் அறிமுகமாகி நான்கு வருடத்தில் முதல் இடத்தைப் பிடிப்பது என்றால், க்ரோம் திறமையை புரிந்துகொள்ளுங்கள். சும்மா போங்காட்டம் ஆடி எல்லாம் இந்த இடத்தைப் பிடிக்க முடியாது. சரக்கு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். க்ரோம் சாதித்து இருக்கிறது.

இவ்வளவு சிறப்புள்ள க்ரோம் உலவியை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் ஏராளமான வசதிகளை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இதில் உள்ள குறைகளாக கூறப்படுவது Flash Crash பிரச்சனை, மெமரி அதிகம் எடுத்துக்கொள்வது, நம்மை கூகுள் கண்காணிப்பதாகக் கூறப்படுவது ஆகியவையாகும். இன்னும் சில பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால், அவை என்னைவிட க்ரோம் பிடிக்காதவர்களுக்கு அதிகம் தெரியும் icon_smile.gif . அவர்கள் இதை பகிர்ந்து கொள்ளலாம்.

க்ரோம் உருவாகிய வருடம் 2008 முதல் அதன் நான்கு வருட வளர்ச்சியை கூகுள் அழகாக வடிவமைத்துள்ளது. இதில் சென்று பாருங்கள். Chrome Time Machine. இதில் வரும் படங்களை நீங்கள் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம் அதோடு, இதில் வரும் காணொளிகளையும் இதே முறையில் பார்க்க முடியும்.

நீங்கள் இதுவரை க்ரோம் பயன்படுத்தவில்லை என்றால்https://www.google.com/intl/en/chrome/browser/ சென்று தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

http://www.giriblog.com/2012/11/importance-of-google-chrome-browser.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு  நன்றி

ஏறிய ஏணியை எட்டி உதைப்பது வழமை. Firefox என்ற தன்னார்வ நிறுவனத்து உலாவிக்கு நடந்தது அதுதான். :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி ஊர்விட்டு ஊர் மாறுவது

அல்லது வீடு விட்டு வீடு  மாறுவது எனக்குப் பிடிப்பதில்லை

அதுபோல் என்றும் கூகிள் தான் என் உலாவி :D

 

 

   

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.