Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கிரிகெட் வீரர்களுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் [படங்கள்]

Featured Replies

பிரித்தானியாவில் Cardiff எனும் இடத்தில் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை  அணிக்கும் இடையில் துடுப்பாட்டம் நடைபெற்றது இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டத்தில் குறிப்பிட்ட சில இளையோர்களே கலங்கு கொண்டு தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிதனர்.

கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த  இலங்கை அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர் ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த  இலங்கை  அணி ஆதரவாளர்கள் எதிர்ப்பும் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்வந்து ராயபக்சாவை புகழ்ந்தும் மிரட்டல் விடுத்தும்   நாகரிகமற்ற சில செயல்களையும் செய்தனர் இதற்கு மேலாக இலங்கை அணிஆதரவாளர்களுடன் வந்த சில தமிழர்கள் இன்னும் இதற்குமேல் கேவலமான சில நடவடிக்கையில் இறங்கியிருந்தனர் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் போராட்டத்தை இறுதிவரை நடாத்தி அங்குவந்தவர்களுக்கு துண்டுப்பிரசுர விநியோகமும் நடத்தப்பட்து.

எதிர் வரும் வியாழன் 13-06-13 லண்டனில் ஓவல் எனுமிடத்தில் காலை 11மணிக்கு  இலங்கை  அணிக்கும் இங்கிலாந்திற்கும் இடையில் போட்டி நடைபெறஉள்ளது அந் நிகழ்வு தினத்திலும் போராட்டம் நடைபெறவுள்ளது.

55.jpeg56.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கக்கொடியோடு நின்று படம் எடுத்திருக்கிறார்கள் :)  அதையும் இணையத்தில் போட்டு இருக்கினம் என்னத்தை சொல்ல

  • கருத்துக்கள உறவுகள்

சில சனம் செய்திகளை.. உள்ளடக்கங்களை வாசிக்காமலே பின்னூட்டம் இட்டு வருகுதுங்க..!

கடந்த முறை நடைபெற்ற இது மாதிரி போராட்டங்களில் பல தமிழர்கள் கலந்துகொண்டு எதிர்ப்பினைத் தெரிவித்த பொழுது அங்கு வந்த  இலங்கை அணிக்கு ஆதரவானவர்கள் பயத்துடன் எதுவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மைதானத்திற்கு சென்றனர் ஆனால் இம்முறை குறைந்த அளவு எண்ணிக்கை இளையோர்களே கலந்து கொண்டமையால் அங்கு வந்த  இலங்கை  அணி ஆதரவாளர்கள் எதிர்ப்பும் போராட்டம் செய்த எம் இளையோர்களின் முகத்திற்கு முன்வந்து ராயபக்சாவை புகழ்ந்தும் மிரட்டல் விடுத்தும்   நாகரிகமற்ற சில செயல்களையும் செய்தனர் இதற்கு மேலாக இலங்கை அணிஆதரவாளர்களுடன் வந்த சில தமிழர்கள் இன்னும் இதற்குமேல் கேவலமான சில நடவடிக்கையில் இறங்கியிருந்தனர் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் போராட்டத்தை இறுதிவரை நடாத்தி அங்குவந்தவர்களுக்கு துண்டுப்பிரசுர விநியோகமும் நடத்தப்பட்து.

சிங்கக் கொடியோடு படமெடுத்தவர்கள்.. உண்மையான தமிழர்கள் அல்ல. லண்டனில் வாழ்ந்தாலும் தமிழனைப் போல் சிங்களவன் நல்லவன் என்று சொல்லாமல்.. தமிழன் கெட்டவன்னுன்னு சொல்லுற சிங்களவர்கள் மற்றும் அவனை நல்லவன்னு சொல்லிட்டு திரியுற நம்மட கூட்டத்தில் சிலதுகள். யாழிலும் அந்தக் கூட்டம் இருக்குது..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சில சனம் செய்திகளை.. உள்ளடக்கங்களை வாசிக்காமலே பின்னூட்டம் இட்டு வருகுதுங்க..!

சிங்கக் கொடியோடு படமெடுத்தவர்கள்.. உண்மையான தமிழர்கள் அல்ல. லண்டனில் வாழ்ந்தாலும் தமிழனைப் போல் சிங்களவன் நல்லவன் என்று சொல்லாமல்.. தமிழன் கெட்டவன்னுன்னு சொல்லுற சிங்களவர்கள் மற்றும் அவனை நல்லவன்னு சொல்லிட்டு திரியுற நம்மட கூட்டத்தில் சிலதுகள். யாழிலும் அந்தக் கூட்டம் இருக்குது..! :lol:

சிங்களவர்கள் தான் அதில் நின்று படமெடுத்தார்கள் என்று தெரியாத அளவிற்கு முட்டாள் இல்லை நான் :icon_mrgreen: நான் சொல்ல வந்தது அப்படி அவர்கள் எடுத்த படத்தை இணையத்தில் போட்டு உலாவ விட்டு இருக்கும் எங்கட இணையக்காரரை.முதலில் நீங்கள் மற்றவர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என வாசியுங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு என்ன... புலிக்கொடியோடு சிறீலங்காவை வெளியேற்று.. சிறீலங்காவைப் புறக்கணி... என்ற செய்திகளோடு.. சிங்கக் கொடியை பிடிக்க ஆசைப்படுறதை.. பறக்க விடுறதை.. படம் எடுத்திருக்கிறாங்க. போட்டிருக்காங்க.. என்ற சின்ன விளக்கம் கூட இல்லாமல்...............! செய்தியையும் முழுசா வாசிக்காமல்....!  :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள துடுப்பாட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் அவுஸ்திரெலியாவில் நடைபெறும் போது அவுஸ்திரெலியாவின் காவல் துறையின் அனுமதி பெற்று கவனயீர்ப்பு நடாத்திவருகிறார்கள். அத்துடன் அவுஸ்திரெலியா தொழிற்கட்சி உறுப்பினர்கள், மனித உரிமைக்காகப் போராடும் அவுஸ்திரெலியர்கள், அகதிகளுக்கான அவுஸ்திரெலியர்கள் கலந்து கொள்வதினால் சிங்களத்து ஆதரவாளர்கள் தமிழர்களை பூச்சாண்டி செய்வதில்லை. சிங்கள தேசத்தினை தோற்கடித்த நியூசிலாந்து அணிக்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.