Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க உளவு ரகசியங்கள் அம்பலமான வழி தெரியவந்தது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க வரலாற்றில் நடந்துள்ள மிகப்பெரிய பாதுகாப்பு விதி மீறல்களில் ஒன்றான, அந்நாட்டின் புலனாய்வு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பொறுப்பான நபர் தாமாக முன்வந்து தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

29- வயதான எட்வர்ட் ஸ்நோவ்டென் என்ற இந்த இளைஞன் அமெரிக்க உளவுத்துறையான சீஐஏ-இன் முன்னாள் கணினி நிபுணர்.அமெரிக்காவின் மிகவும் ரகசியமானதும் வெளியிடப்பட முடியாததுமான மிக நுணுக்கமான உலக கண்காணிப்பு செயற்திட்டத்தை அம்பலப்படுத்தியதை அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

கோடிக்கணக்கான தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஏனைய உலகளாவிய நாளாந்த தொடர்பாடல்களைக் கண்காணிக்கின்ற புலனாய்வு பொறிமுறை செயற்திட்டத்தையே அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

அமெரிக்க உளவுத்துறையினர் அரச அதிகாரத்தை சீர்குலைத்து ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக பிரிட்டனிலிருந்து வெளியாகும் த கார்டியன் நாளிதழின் இணையதளத்துக்கு அனுப்பியுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

மக்களின் அந்தரங்க வாழ்க்கையையும் இணையதள சுதந்திரம் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களையும் அழிப்பதற்கு தான் இடமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் ஒபாமா இவை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்நோவ்டென் விசனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் தன்மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிப்பார்கள் என்றும் தான் தற்போது ஹாங்காங்கில் இருப்பதாகவும் பேச்சு சுதந்திரத்தில் நம்பிக்கை உள்ள எந்தவொரு நாட்டிலும் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அமெரிக்க நீதிவிசாரணைத் துறை அறிவித்துள்ளது.

http://www.bbc.co.uk/tamil/global/2013/06/130610_usrecretmanrevealed.shtml

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் தஞ்சம் கோரி முடிஞ்சு இப்ப வெள்ளைகளும் கேட்கினம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் தஞ்சம் கோரி முடிஞ்சு இப்ப வெள்ளைகளும் கேட்கினம்..

சிங்கம் செய்த வேலை செப்டம்பர் 11 விட மோசமான விளைவிகளை கொண்டு வரும் என ஆளாளுக்கு குதிக்கிறாங்கள் நாங்கள் அப்படியா இசைகலைஞன் ?

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன தகவல்களை வெளிக்கொண்டு வந்தார் என்கிற தகவல் உண்டா பெருமாள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன தகவல்களை வெளிக்கொண்டு வந்தார் என்கிற தகவல் உண்டா பெருமாள்?

தற்போதைக்கு மேம்போக்காய் அமெரிக்க பொதுமக்களின் அடிப்படை சுதந்திரத்துக்குள் ஊடுருவியதை பெரிதாய் சொல்கிறார் அதுதான் அனுதாப பார்வையைக்கொன்டு வரும். ஆனால் பின்வரும் முகவரியில் அடிச்சு துவைக்கிறார்கள்.http://www.washingtonpost.com/politics/intelligence-leaders-push-back-on-leakers-media/2013/06/09/fff80160-d122-11e2-a73e-826d299ff459_story.html

  • கருத்துக்கள உறவுகள்

Who is Edward Snowden?

  • Earned $200,000/year at the NSA's office in Hawaii.
  • Left Hawaii for Hong Kong on May 20 with photocopies of classified documents.
  • Enlisted in U.S. army in 2003 and trained for Special Forces, discharged after breaking legs in training.
  • Worked on IT security for CIA.
  • CIA stationed him in Geneva in 2007 to maintain computer network security.
  • Left CIA in 2009 and works for private contractor. Assigned to NSA facility in Japan.
  • Worked for different companies with contracts with the NSA.

-The Guardian

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களின் முக்கிய குறியாக தற்பொது எட்வார்ன் ஸ்னோடன்

அமெரிக்காவின் அரச புலனாய்வுத் துறையான NSA மற்றும் அதன் உப நிறுவனங்கள் இணைந்து அமெரிக்க மக்களின் தொலைபேசி அழைப்புக்கள், மற்றும் அவர்களது சுயவிபரங்களை நீண்டகாலமாக வேவுபார்த்து வந்திருப்பது அண்மையில் அம்பலமானது. PRISM என்ற தொழிநுட்பத்தின் மூலம் இந்த வேவு பார்க்கும் விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் முன்னால் CIA உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோடன் தற்போது அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களின் முக்கிய குறியாக மாறியுள்ளார். இதனால் தற்போது ஹொங்கொங்கில் தஞ்சமைடைந்திருக்கும் இவர் தனது பாதுகாப்புக்காக ஐஸ்லாந்தில் புகலிடம் கோரவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவரிடம் நீங்கள் ஏன் அமெரிக்காவின் இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கையினை அம்பலப் படுத்தினீர்கள் என்று கேள்வி எழுப்பப் பட்ட போது, இவர் அமெரிக்க அரச உளவு நிறுவனமான NSA இனால் எதை வேண்டுமானாலும் குறிப்பாக எந்த ஒரு நபரினதும் தொலைபேசி இலக்கங்கள், அழைப்புக்கள், மின்னஞ்சல்கள்,கடவுச் சொற்கள்,கடன் அட்டைகள் என அனைத்தையும் எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும். இது போன்ற அத்துமீறலை நிகழ்த்தும் சமூகத்தில் நான் வாழ விரும்பவில்லை என்றார்.

போஸ்டன் நகரில் நிகழ்ந்தது போன்ற தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க இவ்வாறு வேவு பார்ப்பது அவசியம் தானே என்று கேட்கப் பட்ட போது, தீவிர வாதம் புதிதாக முளைத்த ஒன்றல்ல. அது எப்போதும் இருக்கின்றது. போஸ்டனில் நடந்தது போன்ற குற்றங்களைத் தடுக்க வேவு பார்ப்பதை விட பாதுகாப்பைப் பலப் படுத்துவது தான் தேவை என்றார். எட்வர்ட் ஸ்னோடனுக்கு அடுத்ததாக நீங்கள் செய்தது குற்றம் என உணர்கிறீர்களா? உங்களுக்கு என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு 'அரசு என் மீது சுமத்தும் குற்றம் போலியானது. அமெரிக்க அரச அமைப்புக்கள் பொதுமக்களின் உரிமைகளை குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்க்கின்றன. எனது இந்த செயற்பாட்டினால் நிச்சயம் நல்லது எதுவும் எனக்கு நடக்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக உணர்கின்றேன்!' என்றார்.

மேலும் ஹொங்கொங்கில் தான் தஞ்சம் புகுந்தமைக்குக் காரணம் அது சுதந்திரத்துக்குப் பெயர் பெற்றதும் வலிமையான பேச்சுரிமை உடையதுமான நாடு என்பதால் ஆகும் என்றார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வேவு பார்ப்பது குறித்துக் கேள்வி எழுப்பப் பட்ட போது NSA தொடர்ந்து பொய்யான தகவல்களைத் தருவதாகவும் ரஷ்யாவை விட அதிகமாக அமெரிக்கா தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்பதாகவும் எந்தெந்த இடங்களில் இருந்து மக்கள் அதிகம் கண்காணிக்கப் படுகின்றார்கள் என்பதைக் குறிக்கும் வரைபடங்கள் தன்னிடம் இருப்பதாகவும் கூட அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இவரிடம் சீனாவால் நடத்தப்படும் சைபர் அட்டாக் குறித்து ஒபாமா அரசு தெரிவிக்கும் கண்டனம் பற்றிக் கேட்கப் பட்ட போது, 'நாம் தான் எல்லோரையும் எல்லா இடத்திலும் தாக்குகின்றோம். ஏறக்குறைய எல்லா நாடுகளின் உள் விவகாரங்களிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறோம்' என்றார்.

இறுதியாக இவர் தான் சிறையில் அடைக்கப் படும் அபாயம் இருப்பதாக ஒத்துக் கொண்டதுடன் தனது இந்தச் செயற்பாடு தன் குடும்பத்தினருக்குத் தெரியாது எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://4tamilmedia.com/newses/world/14636-edward-snodan-became-most-wanted-person-of-us-spy-agencies

  • கருத்துக்கள உறவுகள்

அங்கெங்கெனாதபடி எங்குமாய்   - ஒரு தொடர் பார்வை  

எஸ்.எம்.எம்.பஷீர்

உண்மை  அமெரிக்காவின்  தேச விரோதி!

“யார் எவர் என்ற  வேறுபாடில்லாமல்  மக்கள் உண்மையைக் காண வேண்டும் , ஏனெனில் தகவல்கள் இன்றி  பொதுமக்கள் விபரமறிந்த முடிவுகளை மேற்கொள்ள முடியாது “

- பிராட்லி எட்வர்ட் மான்னிங்  (Bradley Edward Manning)

Brad-mann.jpgஅமெரிக்காவின்  அந்தரங்கங்களை  அகிலத்துக்கு எடுத்துக்காட்டி  உலகம் தழுவிய ஒரு பொது விவாதத்  தளத்தை , கலந்துரையாடலை ஏற்படுத்தப் போவதாக  நம்பியே கேபிள் (கம்பி வடம்) செய்திகளை  வெளிக் கொண்டு வந்தார் பிராட்லி மான்னிங் . அமரிக்காவின் இராணுவ பிரிவில்   ஒரு பனி ஆணையற்ற இராணுவ புலனாய்வு தொகுப்பாளராக கணனித் தகவற்  தொழிநுட்ப பகுதியில் இராக்கில்  பணியாற்றிய பொழுது  பிராட்லி மான்னிங்  அமெரிக்காவின் ஜனநாயகம் , மனிதத்துவம் பற்றிய பொய் முகத்தினை , தனது கைகளையும் கண்களையும் தாண்டிச் செல்லும் செய்திகளை   கண்டு மன உளைச்சலுக்கு மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்டார்.

உண்மைகளை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்; உண்மைகள் என்பவை அமெரிக்காவும் வெளியுலக பிரபல சர்வதேச ஊடகங்களும் சொல்லும் செய்திகள் அல்ல , அவ்வூடகச் செய்திகளால் மக்கள் மனதில் கட்டமைக்கப்பட்ட சிந்தனைகள் , பதியப்பட்ட  கருத்தோட்டங்கள் என்பவற்றின்  அடிப்படையில் அவர்களால்    எடுக்கப்படும் முடிவுகள்  அல்ல என்பதை  ஜூலியன் அசாஞ்சே நடத்தும்  விக்லீக்கிசில் வெளியான கேபிள் செய்திகள் உணரப் பண்ணின. இன்றைய தொழிநுட்ப யுகத்தில் பாரிய சென்றடைவினைக் கொண்ட இணையத்தினூடாக உலகின் பல அரசுகளின் அந்தரங்கங்களை அம்பலத்துக்கு கொண்டு வந்தது விக்கிலீக்ஸ் .

விக்லீக்சில்   வெளியான அமெரிக்காவின் வகைப்படுத்தப்பட்ட கேபிள்  செய்திகளை வெளிப்படுத்தியவர் மன்னிங்தான் என்ற சந்தேகத்தின் பேரில் அமெரிக்க பாதுகாப்பு த்கவல்களை அதிகாரமளிக்கப்படாத  மூலங்களுக்கு வழங்கி  எதிரிகளுக்கு துணை புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் மூன்று வருடங்களுக்கு முன்னர் இராக்கில் பணிபுரிந்து கொண்டிருந்த வேளையில்  அமெரிக்க இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு  அமெரிக்காவில் சிறை வைக்கப்பட்டிருந்தார் பிராட்லி .

பிராட்லிமான்னிங் அனுப்பியதாக சொல்லபப்டும் அமெரிக்க இராணுவ  உலங்கு வானூர்தி இராக்கில் ஊடகவியலாளர்கள்  குழந்தைகள் மீது நடத்திய தாக்குதல் பற்றிய காணொளியை விக்லீக்சில் வெளியிட்டதும் , அதுவரை மேற்குலக் நாடுகளின் அரசியல் ராஜீய , இராணுவ நடைமுறைகளை பற்றி விவாதங்களை அநாமோதய கட்டுரைகள் மூலம் பல இந்நாட்டு இரகசியங்களை வெளிக் கொண்டுவந்த விக்லீக்ஸ், உலகின் கவனத்தை ஈர்த்தது . அமெரிக்கா ராஜீய  கேபிள் தகவல் பரிமாற்றங்கள் , குவாண்டனாமோ தடுப்புக் காவல் பற்றிய செய்திகள் ஆப்கான் , இராக் பற்றிய அமெரிக்க நாட்குறிப்பேடுகள் என்பன உலகில் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அலச வைத்தது. மான்னிங்கின் துனீஷிய  ஜனாதிபதியின் , அவருடனான அமெரிக்க அரசின் அந்தரங்க தொடர்புகள் பற்றிய கேபிள்  செய்திகளே  " அரபு வசந்தம்"  (Arab spring) கால்கொண்டது என்பதும் இங்கு அரசியல் ஆய்வாளர்கள் பலரின் கருத்தாகவும் உள்ளது.

இப்பொழுது பிராட்லி மான்னிங் மீதான குற்றச்சாட்டுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.  தகவல் தொழிநுட்ப யுகத்தின் ஊடாக உலக ஏகாதிபத்தியங்களின் மீது ஒரு புதிய பரிமாணத்தில் யுத்தம் ஒன்று தொடுக்கப்பட்டு வருகிறது,  இந்த தகவல் தொழிற் நுட்பம்   அமெரிக்காவிற்கு எந்தளவு உதவியதோ , அந்தளவு  இப்போது அதற்கு உபத்திரங்களை வழங்க ஆரம்பித்துள்ளது. ஆயினும் வல்லாதிக்க சக்திகளின் வக்கிரங்களை வெளிக் கொணர்ந்ததில் மான்னிங்சின் மனப்போக்குத்தான் காரணமாக அமைந்தது . அதற்கான விலையை மான்னிங் உணர்ந்திருந்தார். தன்னுடன் நட்புறவாடிய நபரே தனக்கு எதிரியாக மாறுவார்  என்று பிராட்லி நம்பியிருக்கவில்லை என்றாலும் அவரிடம் தனக்கு கிடைப்பது தூக்குத் தண்டனையாக இருக்கலாம் என்று தெரிந்தே தனது தகவலகளை வெளியிடத் துணிந்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்படித்தான் விக்லீக்ஸ்  இணையத்தில் அவருடன் சேர்ந்து செயற்பட்ட அசாஞ்ஜேயின்  நண்பிகள் இருவர்  அசாஞ்சே மீது பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் பலர் அசாஞ்சேயைக் கைவிட்டு தலை மறைவாகினர். நிச்சயமாக அமெரிக்க அரசின் பணத்துக்கும் வசதி வாய்ப்புக்களுக்குமாக ஒன்றாக வேலை செய்த பலர் தமது ஒத்துழைப்புக் கொள்கையைக் கைவிட்டனர், துரோகமிழைத்தனர்.

அந்த வகையில் கொள்கை உறுதியும் பணத்தினால் பதவியினால் வாங்கப்படாத தாம் கொண்ட கருத்துக்களில் உறுதியானவர்களாக உலகில் மனிதர்களைக் காண்பது அரிதாகி வரும் ஒரு கால கட்டத்தில் மான்னிங் , ஆசாஞ்சே ஆகியோர் எமது கவனத்துக்கும் மதிப்புக்கும் உரியவர்களாகிறார்கள்.  உண்மையை வெளிக்கொணர உறுதியுடன் செயற்பட்ட மான்னிங்கும்  அசாஞ்சேயும்   செலுத்தும்  விலை மிகவும் அதிகமானது. நெஞ்சுறுதியுடன் விளைவுகளை    துச்சமாக மதித்த அவர்களின் அமெரிக்க அடக்குமுறைக் கெதிரான துணிச்சல் எதிர்கால தலைமுறையின் ஆன்மாக்களை ஆக்கிரமிக்கும் என்பதில் ஐயமில்லை.

 வியட்நாம் யுத்தத்தின் பொது பண்டகொன் ஆவணங்களை 1971ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைகளுக்கு வழங்கி அமெரிக்க அரசின் அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்திய டேனியல் எல்ச்பெர்க் (Daniel Elsberg) என்பவர் தான் அனுபவித்த சிறைவாசமும் துன்பங்களும் மன்னிங் அனுபவிக்கும் துயரத்துடன்  ஒப்பிடுகையில் மிக மிகக் குறைந்ததே என்று குறிப்படுகிறார். ஆக மொத்தத்தில் 25 வயது இளைஞனான மான்னிங் மிகப் பெரிய இடரை அறிந்தே கேபிள் இரகசியங்களை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் அவர் தேசத்தின் எதிரிகளுக்கு (அல் கைதா ) தகவல்கள் வழங்கி உதவி புரிந்துள்ளார் என்று அமெரிக்க இராணுவ நீதிமன்றம் இரகசிய வழக்கு விசாரணையை ஆரம்பித்துள்ளது.

 சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கப் போகும் இந்த வழக்கில் இதுவரை வழங்கப்பட்ட சாட்சிகள் ,ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பொழுது கைப்பற்றிய கணனியில் உள்ள தகவல்கள் என்பன முன்வைக்கப்பட்ட நிலையிலும் , ஒசாமா பின் லாடனைக்  கொன்றவரின் சான்றளிக்கப்படும்  நிலையிலும் இந்த வழக்கில் தேச விரோதிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டை குற்றவியல் சட்ட கோட்பாடுகளுக்கு அமைவாக நிரூபிப்பது என்பது சாத்தியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆயினும் அவர் ஏற்றுக் கொண்ட குற்றச்சாட்டுக்களில் விக்லீக்சுக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அமைந்த குற்றங்களுக்காக சுமார் இருபது வருடங்கள் நன்னம்பிக்கையில்  வெளிச் சென்று திரும்பும் சந்தர்ப்பம் இன்றி  (Parole)  தண்டனை பெரும் வாய்ப்பே அதிகம் காணப்படுகிறது.  எதுவாயினும் மான்னிங் வரலாற்றில் உலகமெங்கும் உண்மையைத்  தேடும் சிறுபான்மை மக்களின் மனங்களில் நிச்சயம் நினைவு கொள்ளப்படுவார்.   

அமெரிக்காவின் (அ) நீதி

இராக்கிய உலங்கு ஊர்தித் தாக்குதல் அமெரிக்காவின் அயோக்கியத்தனத்தை அடையாளப்படுத்தும் ஒரு வரலாற்றுப் பதிவாகும். அந்த கொலைகள் தொடர்பில் மேற்கொள்ள விசாரனையின் முடிவில் தரையிலே காணப்பட்டவர்கள் ஆயுதம்  தூக்கிய எதிரிகள் , அவர்களை யாரென்று வேறுபடுத்திக் காண வாய்ப்பில்லை என்ற அடிப்படையில் , அக்கொலைகளில்   ஈடுபட்ட அமெரிக்க சிப்பாய்கள்  நிரபராதிகள் ஆக  காணப்பட்டனர். எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் கூட  அவர்கள் மீது எடுக்கப்படவில்லை. அந்த கொலைகளில்  இறந்து போன ரொய்ட்டர்  ஊடகவியலார்கள் சார்பில் சுதந்திர தகவல் சட்டத்தின்படி  (Freedom of Information Act )  அந்த காணொளிப பிரதியைத்  தருமாறு   கேட்டபொழுதும் அதனை  அமெரிக்க தகவல் சட்டம்  ரொய்ட்டரின்  தகவல் சுதந்திரத்தை மறுத்தது. ஒரு உலகப் புகழ்பெற்ற ரொய்ட்டர்  ஊடககத்துக்கே இந்தக் கதி என்றால் அமரிக்காவில் சட்ட ஆட்சி எப்படி இருக்கிறது.

அமெரிக்காவில் ஒரு இராணுவ ஆட்சி மக்கள் ஜனநாயகத்தின் பெயரில் அரங்கேறி  வருகிறது. போலும் . அந்த வகையில் தான் குவாண்டனாமோ கைதிகள் விசாரனையற்று  பல வருடங்களாக சித்திரவதை  செய்யப்பட்டு வருகிறார்கள். அண்மையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பொழுது , அவர்களுக்கு உணவை மூக்கு வழியாத குழாய் மூலம் செலுத்தியுள்ளார்கள் என்பதும் ஜெனீவா மரபுகளுக்கு முரணானது என்றும் கூக்குரல்கள் கிளம்பி உள்ளன. ஆளில்லா விமானத் தாக்குதல்(Drone) மூலம் சுமார் ஐயாயிரம் பேர் அமெரிக்காவினால் பிற தேச ஆட்புல அதிகாரத்தினை மீறி கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்றும் கொல்லப்படுகிறார்கள். சொந்த நாட்டு மக்களையே அமெரிக்கா காசுக்காக சுதேசிய ஜூடாஸ்கள் பலியிட்டு வருகிறார்கள் .

ஆனால ஒரு கறுப்பின ஜனாதிபதியை வைத்து அமெரிக்கா நிர்வாக  அதிகார ஆலோசன  இயந்திரம் மிகக் கேவலமாகவே தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிறது. ஒபாமா அந்த நிர்வாககத்தின் கைதியாக தலையாட்டும் பொம்மையாகவே செயற்படுகிறார். இதனையே புஷ்ஷும் செய்தார். ஆக புதிய முகங்கள் எதுவும் அமெரிக்காவில் ஐரோப்பாவில் மாற்றங்களைக்  கொண்டு வந்துவிடப் போவதில்லை. வெறும் முகமூடி மாற்றங்களைத்  தவிர.

மான்னிங் மட்டும் அந்த காணொளியை வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் அமெரிக்காவின்  அடாவடித்தனம் , அப்பாவி உயிர்களை வேடிக்கையாக காவு கொள்ளும் அயோக்கியத்தனம் உலகுக்கு தெரிந்திருக்காது. ஆப்கானில் அமெரிக்கா அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட  மக்களில் பற்றிய காணொளி , அசாஞ்சேயிடமிருந்து  , அவரின் முன்னாள் நண்பரால் எடுத்தச் செல்லப்பட்டு விட்டாலும் , அது அமெரிக்காவின் மீது யுத்தக் குற்றம் சுமத்தப் போதுமானது என்கிறார் அசாஞ்சே. அசான்ஜெயும் மான்னிங்கும் நேரில் பரஸ்பரமாக அறிமுகமானவர்கள் அல்ல. கணனித் தொழிநுட்ப உலகின் இணையத்தள கருத்து பரிமாற்ற யுகத்தில்  கருத்து உடன்பாடு கண்டு  ஓரணியில்  செயற்பட்டவர்கள். 

அசாஞ்சே அமெரிக்காவிற்கு  கைது செய்யப்பட்டு சுவீடனுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார் என்று திட்டவட்டமாக நம்பியதால் ஐக்கிய இராச்சியத்திலுள்ள எக்குவடோர் தூதுவராலயத்தில் அரசியல் தஞ்சம் புகுந்து அங்கு அகதி அந்தஸ்து பெற்று  ஒரு வீட்டுக்காவல் கைதிபோல் வாழ்கிறார் . இந்த நிலையில் அவரை கொண்டு வந்து விசாரணை செய்யலாம் என்ற கனவில் அமெரிக்காவிற்கு அசாஞ்சேயின் தற்போதைய நிலை வாய்ப்பபளிக்கப் போவதில்லை  எனவேதான்  மான்னிங்கின் வழக்கை இப்போது விசாரணைக்கு எடுத்திருக்கிறார்கள் . 

இந்த வழக்கு பற்றி  பத்தி எழுத்தாளர் கரி யாங் " மான்னிங் தேசத்தின் விரோதியானால் , உண்மையும் கூட தேசத்தின் விரோதியாகும் "என்று குறிப்பிடுவதே  உண்மைக்கும் அமெரிக்க தேசத்துக்கும் இடையிலான ஒரு எதிர் நிலை போக்கினை கோடிட்டுக் காட்டுவதாகும்.

bazeerlanka.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலத்திரனியல் கண்காணிப்பு முறையின் ஊடாக, சாதாரணப் பிரஜைகளின் தொலைபேசி மற்றும் இணையத் தரவுகள் உளவு பார்க்கப்படுவதாக வொஷிங்டன் போஸ்ட், கார்டியன் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் மிகப்பெரிய இணையத்தள நிறுவனங்களில் இருந்து ஒலி, ஒளி வடிவங்கள், புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள் போன்றவற்றைப் பிரித்தெடுப்பதற்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அந்தப் பத்திரிகை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இத்தகைய ரீதியில் பெறப்படும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒரு நபரின் நடவடிக்கைகளை அறியலாம்.

prism-slide-5.jpg

இந்த ரகசிய திட்டத்திற்கு PRISM என்ற சங்கேதப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு தெரிந்தே பங்களிப்பு நல்கிய நிறுவனங்களில் மைக்ரோசொப்ட், யாஹூ, கூகிள், பேஸ்புக், ஸ்கைப், யூ-ரியூப், அப்பிள் போன்றவையும் உள்ளடங்குவதாகத் தெரிகிறது. எனினும், இவற்றில் பல நிறுவனங்கள், இந்தத் திட்டத்துடன் தமக்கு தொடர்புகள் ஏதும் இல்லையென நிராகரித்துள்ளன. PRISM என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய உளவு பார்க்கும் நடவடிக்கையாக வர்ணிக்கப்படுகிறது.

prismshotslide0.png

ஆனால், இந்த செய்திகளை அமெரிக்காவின் புலனாய்வுத்துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் நிராகரித்தார். இவற்றில் பல தவறுகள் உள்ளதாக திரு.ஜேம்ஸ் கூறினார். அமெரிக்காவின் சட்டம், அந்நாட்டு இணையக் கம்பனிகள் மூலம் அமெரிக்காவிற்கு வெளியேயுள்ள அமெரிக்கர்கள்-அல்லாத நபர்களின் தொடர்பாடல்களை இலக்கு வைத்து, அவை பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு மாத்திரமே அனுமதியளிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

prismshotslide1.png

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் கண்காணிப்பில் அவுஸ்திரேலிய பிரஜைகளும் சிக்கியிருக்கக்கூடுமென Electronic Frontiers Australia என்ற நிறுவனத்தின் பேச்சாளர் ஜொன் லோரன்ஸ் தெரிவித்தார். பெரும்பாலான அவுஸ்திரேலிய பிரஜைகள் ஒன்லைன் கணக்குகளைப் பேணுவதற்காக அமெரிக்காவை மையமாகக் கொண்ட சேர்வர்களையே நாடுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

prismshotslide2-580x438.png

தமது தகவல்கள் கண்காணிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்கு தனிநபர்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், அமெரிக்க நிறுவனங்களில் முற்றுமுழுதாக தங்கியிருந்து தமது தனிப்பட்ட தகவல்களை அனுப்பாமல் இருப்பது தானென தொழில்நுட்பத்திற்கான குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பீற்றர் பிளாக் தெரிவித்தார்.

-செய்தி ஆசிரியர்

-படங்கள் நன்றி: ஜிஸ்மோடோ, கார்டியன்

http://www.tamilaustralian.com.au/web/2013/06/09/secretive-us-data-trawl/

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.