Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு, திறந்த பல்கலைக் கழக தமிழ் விரிவுரையாளர் தாக்கப்பட்டார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கொழும்பு திறந்த பல்கலைகழக சட்டபீட விரிவுரையாளர் யசோதரா கதிர்காமத்தம்பியினால், கொடுக்கப் பட்ட assignment இணை தாமதமாக கொடுக்க முற்பட்ட மாணவர், அது,  நிராகரிக்கப்பட்டதால் , முன்னரே திட்டத்துடன் கொண்டு வந்த கத்தியினால், பல தடவை குத்தியதனால் உயிர் ஆபத்தான நிலையில் விரிவுரையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.
 
குத்திய மாணவரும், சிவஞானசுந்தரம் சுரேந்திரயித்,  தற்கொலை முயற்சியில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.
 
ஆசிரியர்,
தலைமை ஆசிரியர்
இப்போது விரிவுரையாளர்

சொறி லங்காவில்.... அடுத்தது யார்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியவரும் ஒரு தமிழர் என்பது வெட்கக் கேடான விடயம்..! அதுவும் கல்வி சார்ந்த ஒரு விடயத்திற்காக..!

The suspect -- Shivagnanasundaram Surendrajith -- a doctor and resident of Jaffna is alleged to have brutally stabbed the Open University’s Legal Studies Department Head Yasodara Kathirgamathamby yesterday. The motive for the stabbing is unknown but it is believed to be connected to some academic issue. (LP)

http://www.dailymirror.lk/top-story/31204-lecturer-stable-suspect-still-unconscious.html

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் ஏன் சட்ட விரிவுரையாளரிடம் போனவர்?

ஒரு தமிழரே இவ்வாறு நடந்துகொண்டதால் புலிகள் இன்னும் செயற்படுகிறார்கள் என உலகம் நினைக்கப்போகுது.. :blink: இது எமது போராட்டத்துக்கு ஒரு பெரும் பின்னடைவு ஆகும்..!

ஆசிரியை விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்..

  • தொடங்கியவர்

வாழ்கையில் சிலருக்கு, நியத்தினை சந்திக்க பயம், தயக்கம்.
 
இதன் காரணமாக தொடர்ந்து சம்பந்தா, சம்பந்தம் இல்லாமல் படித்துக் கொண்டே இருப்பார்கள்.
 
புகலிடங்களில் கூட, Bsc முடித்து வேலை தேடுவார்கள். கிடைக்காவிடில், Msc செய்ய கிளம்பி விடுவார்கள். பின்னர் வேலை தேடல். கிடைக்கவில்லையா? பிறகென்ன: Phd. மேலும்  வேலை தேடும் பொது over qulified என்ற பதிலுடன், கடை போடலாமா, காஸ் ஸ்டேஷன் நடத்தலாமா என சிந்திப்பார்கள்.
 
ஒரு Phd காரர், கோவிலுக்கு வருபவர்கள் தோசை விரும்பி சாப்பிடுவார்கள் என ஒரு தோசைக்கடை ஒன்றினை கோவில் பக்கத்தில் திறந்தார். கையினை சுட்டார்.
 
கோவிலில் இலவசமாக பிரசாதம் கொடுக்கும் போது, சனம் எவ்வாறு தோசைக்கு வரும் என சிந்திக்கவில்லை.
 
இந்த கொலைகார டாக்டரும், சட்டத்தில் ஒரு பட்டம் எடுக்க விரும்பி இருப்பார். அவருக்கும் அந்த விரிவுரையாளருக்கும் ego வந்து இந்த நிலைமையில் விட்டிருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முனி ஒரு டாக்டர் சட்டம் படிக்கக் கூடாது..??! முகாமைத்துவக் கல்வி பெறக் கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்க.

சட்டம்.. முகாமைத்துவம்.. நிதி கையாளுகைகள்.. மற்றும் தகவல்தொழில்நுட்பமும் கணணி அறிவும் எல்லாப் பட்டதாரிகளுக்கும் உயர் கல்வித் தரத்திற்கு வழங்கப்படுவது நல்லது. அப்போதுதான் அவர்கள் சுயமாக என்றாலும் சரி நிறுவங்களில் சேர்ந்து என்றாலும் சரி.. வைத்தியசாலைகளில் என்றாலும் சரி.. முதன்மைப் பதவிகளுக்கு வரவும் நிர்வகிக்கவும்.. உதவும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் சறுக்கியிருக்கிறேன்.. :D முகக்குறியை சரியாகப் பாவிக்க உறுதி மேற்கொள்கிறேன்.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முனி ஒரு டாக்டர் சட்டம் படிக்கக் கூடாது..??! முகாமைத்துவக் கல்வி பெறக் கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்க.

சட்டம்.. முகாமைத்துவம்.. நிதி கையாளுகைகள்.. மற்றும் தகவல்தொழில்நுட்பமும் கணணி அறிவும் எல்லாப் பட்டதாரிகளுக்கும் உயர் கல்வித் தரத்திற்கு வழங்கப்படுவது நல்லது. அப்போதுதான் அவர்கள் சுயமாக என்றாலும் சரி நிறுவங்களில் சேர்ந்து என்றாலும் சரி.. வைத்தியசாலைகளில் என்றாலும் சரி.. முதன்மைப் பதவிகளுக்கு வரவும் நிர்வகிக்கவும்.. உதவும்..! :icon_idea:

படிக்கலாம், நெடுக்கர், படிக்கலாம்.

அந்த டாக்டரை, அவர் சார்ந்த நிறுவனம் அனுப்பி இருந்தால், தாராளமாகப் போய் படிக்கலாம்.

ஆனால், டாக்டர் வேலை இல்லாமல், போய் சட்டம் படித்து, உழைப்புக்கு வழி பார்ப்போம் என்பது தான் விரக்தி வர காரணமாகலாம்.

இலங்கையில் கல்வித் துறையில் சில முட்டாள் தனமான செயல் பாடுகள் நிறையவே உண்டு.

சிலர் பண வசதி பந்தா காட்ட, international school களில், சிந்தனை இல்லாமல் பிள்ளைகளை சேர்த்து விடுகின்றார்கள்.

தனியார் மருத்துவ, பல்கலைக் கழகங்களுக்கு இலங்கையில் பெரும் எதிர்ப்பு அதிகம் இருப்பதால், London A/L  செய்பவர்களுக்கு UK visa கிடைக்காவிடில் வேறு வழி இல்லை. பலர் இந்தியா செல்வார்கள்.

உள்ளூர் பல்கலைக் கழகங்களில் இடம் இன்றி வெளி நாட்டு விசா மறுக்கப்பட்டு, செய்வது தெரியாமல், இலங்கை அரச அங்கீகாரம் இல்லா, முன்னைநாள் சோவியத்தில் இருந்து பிரிந்த நாடுகளில்,  அங்கிருந்து மேலை நாடுகளுக்கு போகலாம் என்று கனவுடன் மருத்துவம் படித்து,வழி இன்றி மீண்டும் நாடு திரும்பி வேலை இல்லாமல் இருப்போரில் இவரும் ஒருவராக இருக்கக் கூடும் என்று நினைகின்றேன்.

அவரது விரக்தியின் வெளிபாடு என நினைகின்றேன்.

அவரது வாழ்வில் இனி கொலை முயற்சிக்கான தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்குமே.

இருவருமே பரிதாபத்துக்கு உரியவர்கள் தான்.

Edited by Nathamuni

சுரேந்திரஜித் என்னுடன் பரியோவான் கல்லூரியில் படித்த நண்பர். ஒரே கிளாஸ் மேட் மட்டுமன்றி படிக்கும் காலத்தில் வீட்டை வந்து சாப்பிடும் அளவுக்கு நெருக்கமான நண்பன். பளையை பிறப்பிடமாகக் கொண்டவர். மிகவும் மென்மையான குணமும் புன்னகை முகமுமாக இருந்தவர் ஏன் இப்படி ஒரு வேலை செய்யும் அளவுக்கு மாறினார் என்று தெரியவில்லை. மிகவும் படிக்கும் ஒரு மாணவராக இருந்தமையால் தான் சுரேந்திரஜித் மருத்துவமும் படித்து பின் சட்டமும் படித்தார். Assignment கொடுக்க தாமதமானதால் அதனை விரிவுரையாளர் ஏற்க மறுத்தமையால் தான் கத்தியால் குத்தியிருக்கின்றார்.

களுபோவில மருத்துவமையில் Life support உதவியுடன் ICU வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவரின் உடல் நிலை அபாயக்கட்டத்தினை தாண்டி விட்டதால் Life support இனை எடுத்து விட்டார்கள் என்று அறிய முடிகின்றது.

காலம் எத்தனை பேரை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது. :(

சரிதான்!.

யார், யார் உங்கள் நண்பர்கள் என்று சொல்லி வையுங்கள் நிழலி.

கொஞ்சம் விலத்தி இருக்கத்தான்!! :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஒப்படைக்கு (அசைன்மெண்ட்) கத்தியால குத்திற வைத்தியர் எப்படி நோயாளிகளை பக்குவமாகக் கையாள்வார்..???! இவர் வைத்தியராக இருக்கத் தகுதியானவரா என்ற கேள்வியும் எழுகிறது..??!

வெறும் புத்தப்படிப்பு மட்டும் ஒருவரை வைத்தியராக்க முடியாது. உள்ளத்தால் ஒருவர் மற்றவர்களுக்கு தீங்கு விளையாது உதவனும் என்ற மனநிலையில் இருந்தாலே அது சாத்தியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இருவருமே நல்லவர்கள் . என்ன நடந்ததோ தெரியவில்லை.
மிகவும் கவலை 
  • 3 weeks later...

சுரேந்திரஜித் என்னுடன் பரியோவான் கல்லூரியில் படித்த நண்பர். ஒரே கிளாஸ் மேட் மட்டுமன்றி படிக்கும் காலத்தில் வீட்டை வந்து சாப்பிடும் அளவுக்கு நெருக்கமான நண்பன். பளையை பிறப்பிடமாகக் கொண்டவர். மிகவும் மென்மையான குணமும் புன்னகை முகமுமாக இருந்தவர் ஏன் இப்படி ஒரு வேலை செய்யும் அளவுக்கு மாறினார் என்று தெரியவில்லை. மிகவும் படிக்கும் ஒரு மாணவராக இருந்தமையால் தான் சுரேந்திரஜித் மருத்துவமும் படித்து பின் சட்டமும் படித்தார். Assignment கொடுக்க தாமதமானதால் அதனை விரிவுரையாளர் ஏற்க மறுத்தமையால் தான் கத்தியால் குத்தியிருக்கின்றார்.

களுபோவில மருத்துவமையில் Life support உதவியுடன் ICU வில் அனுமதிக்கப்பட்டு இருந்தவரின் உடல் நிலை அபாயக்கட்டத்தினை தாண்டி விட்டதால் Life support இனை எடுத்து விட்டார்கள் என்று அறிய முடிகின்றது.

காலம் எத்தனை பேரை எப்படியெல்லாம் மாற்றி விடுகின்றது. :(

உங்கள் ஆருயிர் நண்பர் ஒரு சிங்கள பேராசிரியரின் மீதான கோபத்தை அங்கு காட்ட துணிவில்லாமல் துறைத் தலைவியாக இருந்த தமிழ் பெண் பேராசிரியரிடம் காட்டியது ஏன் என்று கேட்டுச் சொல்லுங்கள்!

அந்தப் பெண் பேராசிரியர் (துறைத்தலைவர்) விதிமுறைகளுக்கு அமைவாக காலதாமதமாக சமர்ப்பிக்கும் ஒப்படையை சம்பந்தப்பட்ட பாடத்துக்கு பொறுப்பான சிங்கள பேராசிரியர்  ஏற்க மறுத்ததை, தான் துறைத்தலைவர் என்ற முறையில் ஏற்குமாறு வற்புறுத்த முடியாது என்று சுட்டிக்காடிய போது உங்கள் ஆருயிர் நண்பர்  பிரதேசவாதம் கதைத்துத்தான் அவருடன் முரண்பட்டு, ஆவேசம் அடைந்து, பின்னர் திட்டமிட்டு கத்தியை கொண்டு சென்று சராமாரியாக வெட்டியுள்ளார். இதன் மூலம் அவர் தனது "வீரத்தை" ஒரு தமிழரிடம் காட்டியுள்ளார். இதுவும் ஏன் என்றும் அறிந்து சொல்லுங்கள்!

உங்கள் நண்பரின் நடவடிக்கைகள் சரியில்லாததால் அவரின் மனைவி முரண்பட்டு, பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றுவிட்டா என்று அறியக்கூடியதாக உள்ளது.

இந்தப் பின்னணியில் உங்கள் நண்பர் சிறுவயதில் கோளாறுகள் இல்லாமல் நல்லவராக இருந்திருப்பார் என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? காலம் ஒருவனை இவ்வளவு தலைகீழாக மாற்றிவிடுமா? தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று சொல்வார்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.