Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநலத்தின் அரூப கரங்கள்

Featured Replies

அண்மையில், கனடாவில் வளர்ந்த ஒரு இளைஞனுடன் பேசிக்கொண்டிருந்தபோது Altruismமும் ஐடியலிசமும் முற்றிலும் வேறானவை என்று ஏதோ ஒரு விடயம் சார்ந்து அவன் கூறினான். வரைவிலக்கணத்திற்கப்பால், ஐடியலிசம் இல்லாது Altruism இல்லை என்று நான் கூறப்போக சற்று எரிச்சலுடன் இல்லை இல்லை அவை வௌ;வேறானவை என்று அடம்பிடித்தான். அடுத்த ஐந்து நிமிடங்கள் எனது நிலைப்பாட்டை நிறுவவேண்டியேற்பட்டபோது:
 
ஒருவரிற்கு உச்சக்கட்டமான நன்மையான நிலையாக ஒரு நிலையினை நான் அடையாளப்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அந்த அதியுச்ச நிலைக்கு குறித்த நபரை உயர்த்துவதற்காக எனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் பிரயோகித்து, எனது நலன்களைக் கிடப்பில் போட்டு அல்லது புறக்கணித்து, எந்தவிதமான பிரதியுபகாரத்தையோ இலாபத்தையோ என்னைச் சார்ந்து எதிர்பார்க்காது நான் முயல்கிறேன் என்றால் அதனை Altruism என வரைவிலக்கணப்படுத்தலாம். ஐடியலிசம் என்பது இலட்சியவாதம். இலட்சியவாதம் என்கையில், ஒரு கொள்கை அல்லது முன்மொழிவு, அல்லது சிந்தனை அல்லது முறைமை போன்ற வரிசையில் ஏதோ ஒன்றினை உயர்வானதாகக் கருதிப் புளகாங்கித்து அந்த உயர்வானதின் ஆதிக்கத்திற்குள் உலகைக் காணத்துடிப்பதனை ஐடியலிசம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.
 
வரைவிலக்கணங்கள் சார்ந்து Altruismமும் ஐடியலிசமும் வௌ;வேறாகத் தான் தெரிகின்றன. இப்போ எனது Altruism உதாரணத்திற்கு மீள்கிறேன். குறித்த ஒரு நபரை ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக நான் என்னைப் புறக்கணித்து அவர்நலமே குறியாக முயல்கிறேன் என்றால், அந்த முயல்தலிற்கான அடிப்படை என்ன? எடுத்த எடுப்பில், குறித்த நபரில் எனக்குக் கரிசனை இருக்கவேண்டும் முதலிய பல விடங்களைப் பட்டியலிடலாம் என்றபோதும் அவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அடிப்படை, அதாவது ஆரம்பப் புள்ளி ஒன்று உண்டு. அதாவது, குறித்த நபரிற்கு நான் அவரை உயர்த்த முயலுகின்ற குறிப்பிட்ட நிலையே அதியுச்சமானது என்ற எனது நம்பிக்கை. அந்த உச்ச நிலைசார்ந்த எனது நம்பிக்கை வலுவாக இல்லாது போயின் அந்நிலைக்கு எனக்குப் பிடித்தவரை உயர்த்துவதற்கு என்னை ஒறுத்து நான் முயல்வது சாத்தியப்படாது. எனது முயற்சியின் தொடக்கத்தில் மட்டுமல்ல, எனது முயற்சி இருக்கும் வரை எனது நம்பிக்கை மாறாது வலுவாக இருக்கவேண்டும். இந்த நம்பிக்கையின் பெயரென்ன? என்னைப் பொறுத்தவரை அது தான் ஐடியலிசம். எனவே தான் ஐடியலிசம் இன்றி Altruism இல்லை என்கிறேன் என்பதாக எனது வாதம் இருந்தது. இளைஞனும் சிரித்தபடியால் அவன் ஏற்றுக்கொண்டான் என்றே கருதுகிறேன்.
 
மேற்படி விவாதம் முடிந்து, டவுன்ரவுனில் இருந்து வெளிக்கிழம்பிய ஒரு புகையிரதத்துள் விவாதத்தின் சூடு இன்னமும் சமைத்துக்கொண்டிருந்தது. அப்போது தான் இந்தப் பதிவு தோன்றியது.
 
அதாவது, அல்ற்றூஇசத்தினைப் பொதுவாக சுயநலத்தின் எதிர்ச்சொல்லாக நாம் கருதுகின்றோம். எனது சிற்றறிவிற்கெட்டியவரை, சுயநலம் ஒன்றே மனிதனின் அனைத்து முயல்தல்களினதும் அடிப்படை என்றே தோன்றுகின்றது. சுயநலம் தான் அனைத்தினதும் ஆரம்பம், நகர்வு மற்றும் முடிவு என்றே நான் கருதுகிறேன். அப்படியாயின் Altruism, அது ஐடியலிசம் சார்ந்து எழுகிறதா இல்லையா என்பதற்கப்பால், சுயநலத்திற்கெதிரானதாகத் தானே தென்படுகிறது. அல்ற்றூஇசத்தின்; அடிப்படையும் சுயநலம் தான் என்று இருக்கமுடியுமா?
 
வாழ்வில் அத்தியாவசியத் தேவைகள் தொட்டு ஆடம்பரத்தின் உச்சிவரை மனிதனின் தேடல் எதுவாக இருக்கிறது? மகிழ்ச்சியாய் இருத்தல் என்று வைத்துக்கொள்ளலாமா? சரி என்று தான் படுகிறது. இருக்கிறார்கள், சிலர் இருக்கிறார்கள், அவர்களிற்கு இருட்டறையில் தனியே இருந்து சோகப்பாட்டுக் கேட்கத் தான் பிடிக்கும் என்பார்கள். ஆனால் அந்தச் சோக சீனினூடாக அவர்கள் தேடுவது கூட மகிழ்ச்சிதான். மகிழ்ச்சிக்கான தேடல்கள் பல்வேறு வகைப்படினும் மகிழ்ச்சி அனைவராலும் தேடப்படுகின்றது என்பது சரியாகத் தான் படுகிறது. 
 
பொருள்சார்ந்த தேடல்களும் சொகுசும் மகிழ்ச்சியோடு இலகுவில் தொடர்புபடுத்திப் பாhக்கப்படக்கூடியனவாகத் தெரியினும், உண்மையில் எவ்வாறு எம்மால் மகிழ்ச்சியினை அடைய முடிகிறது? அதற்கு முதல் மகிழ்ச்சி என்றால் என்ன? 
 
இந்தவாரம் ஒரு ஆய்வு வெளியாகியுள்ளது, உணவை உண்பதற்கு நாம் பாவிக்கும் முள்ளுக்கரண்டியின் நிறை, அவ்வுணவை எத்தனை சுவையானதாக நாம் உணர்கிறோம் என்பதில் பாரிய செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் ஒன்றாம். கோப்பையின் வடிவம், நிறம், உணவு பரிமாற்றத்தின் ஒழுங்கமைப்பு என்று வேறும் பல காரணிகள் சுவையில் செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆக, ஒரே இறைச்சித்துண்டு, முள்ளுக்கரண்டியின் நிறை சார்ந்து வௌ;வேறு அளவில் ஒரே மனிதரிற்குச் சுவைக்கும். இது போன்றது தான் மகிழ்ச்சியும். அது அகத்தின் ஒரு கற்பிதம். அந்தக்கற்பிதம் நாம் பிறந்த நாள் தொட்டு வடிவமைக்கப்பட்டும் மெருகூட்டப்பட்டும் வளர்ந்துகொண்டிருக்கின்றது. அந்தக்கற்பிதத்திற்குள் ஒப்பிடப்பட்டே மகிழச்சி என்ற உணர்வு பிறக்கிறது. கற்பிதத்தோடு எவ்வளவிற்கெவ்வளவு ஒருவிடயம் ஒத்துப்போகிறதோ அவ்வளவிற்கவ்வளவு அவ்விடயம் மகிழச்சியோடு தொடர்பு படுத்தி எம்மால் உணரப்படும். மகிழ்ச்சி என்பது நம் அகத்தின் கற்பிதம் என்பதும், மகிழச்சியே எமது தேடல்கள் அனைத்தினதும் அடிப்படை என்பதும் எனக்கு உடன்பாடவே இருக்கின்றது. அவ்வகையில் சுயநலத்தின் மாறாத குறி அல்லது இலக்கு மகிழ்ச்சி என்று கூறத்தோன்றுகின்றது.
 
சுயநலம் ஒன்றே மனிதனது அனைத்து முயல்தல்களிற்கும் அடிப்படை என்பதும், அத்தனை முயல்தல்களும் தேடல்களும் மகிழ்ச்சிநோக்கியே விரிகின்றன என்றும் கூறுவது நியாயமாகப் படுகிறது. சுயநலத்தின் ஓயாத குறி மகிழ்ச்சி என்பதாக அனைத்தையும் சுருக்கிப் பார்க்கத்தோன்றுகின்றது. ஆனால் இன்னமும் அந்த அல்ற்றூஇசம் என்பது சுயநலத்தின் எதிர்ச்சொல் என்பதனை மறுதலித்து முடியவில்லை. அடுத்த பந்தியில் அது.
 
ஏற்கனவே ஐடியலிசம் இல்லாது அல்ற்றூஇசம் இல்லை என்று பேசியாகிவிட்டது. இப்போது பேசவேண்டியது அல்ற்றூஇசத்திற்குள் மறைந்திருக்கும் சுயநலம் பற்றியது.
 
நம் அனைவரிற்கும் எமக்குப் பரிட்சயமானவை சார்ந்த இலகு மனநிலையும் பரிட்சயமற்றவை அல்லது புரியாதவை சார்ந்து பயமும் வெறுப்பும் இருக்கவே செய்கின்றன. எமது வாழ்வு எமக்குப் புரிந்த வட்டத்திற்குள் இருப்பது நாம் விரும்பக் கூடியது. சாகசம் நோக்கிய தேடல்கள் கூட புரிந்த கட்டமைப்புக்களிற்குள் நடக்கவேண்டும் என்றே விரும்புகிறோம். கலாச்சாரச் சண்டைகளின் அடிப்படை கூட உலகினை எமக்குப் புரிந்த பாணியில் ஆக்கிவிடத்துடிக்கும் வேட்கைதான். கலாச்சாரம் என்பது, ஒரு விதத்தில் பார்த்தால் எமக்குப் புரிந்தவற்றின் ஆவணப்படுத்தப்பட்ட பட்டியலாகத் தான் இருக்கின்றது. பரிட்சயமான புரிந்த விடயங்கள் மகிழ்ச்சிக்கு அவசியம் என்று தோன்றுகின்றது. புரியாத விடயங்கள் அல்லது அந்நியமான விடயங்கள் சார்ந்து தெரிந்துகொள்ளவேண்டும் என்ற வேட்டை கூட, மகிழ்சிக்கு ஏதுவான விடயங்கள் எமக்குப் புரியாதனவற்றுள் தென்படுகையில் தான் பிறக்கிறது. ஆங்கிலம் வராத இந்திய நடுத்தரவர்கத்தவன் ஒருவன் நக்கல்கள் நளினங்கள் அனைத்தையும் தாண்டி இன்று ஆங்கிலம் கற்கவும் பேசவும் முயல்கிறான் என்றால் அதிகாரத்தின் மொழிக்கும் மகிழ்ச்சிக்கும் அனவனளவில் தொடர்பு தெரிவதனால் தான் அது முடிகிறது. மகிழ்ச்சி இலக்காக இருக்கையில் அதைநோக்கிய பாதையின் கரடுமுரடுகள் சகிக்கப்படுகின்றன. மகிழ்ச்சி நோக்கிய போதை அத்தகை பாரியது.
 
அல்ற்றூஇசம் என்பது கூட உலகை எமக்குப் புரியும் படியாக மாற்றும் ஒரு வேலை தான். மகிழ்ச்சித் தேடல்தான். அதாவது, குறித்த ஒரு நிலை உயர்வானதாக மகிழ்ச்சிக்குரியதாக எனக்குள் நம்பப்படுகையில் அந்த நம்பிக்கையினை ஏற்றுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு எனக்கு ஏதுவானது. என்னைப் புறக்கணித்துப் பிறிதொருவனின் வாழ்வினை உயர்த்த நான் முயல்வதாகப் படுகையிலும், உண்மையில் அந்த முனைதல் எனக்கானது தான். அதில் பல வடிவங்கள் உண்டு.
 
உயர்வு தாழ்வு என்ற பதங்கள் மகிழ்ச்சி சார்ந்து தான் சாத்தியப்படுகின்றன. உயர்வானவை அனைத்தினோடும் எம்மை இணைத்துக்கொள்வது எம்மை மகிழ்சிக்குரியவர்களாக்கும் என்பது எமது நம்பிக்கை. தியாகிகளிற்குச் சிலை வைக்கிறார்கள் என்பதைப் பார்க்கையில் என்னைத் தியாகிகயாகக் காண்பது உணாந்தோ உணராதோ உள்ளிற்குள் நடக்கிறது. கற்பனையில் அந்த நிலை எனக்கு மகிழ்ச்சி தருகிறது. எவ்வாறு தன்னைப்பாவப்பட்டவானாக, தான் இரக்கத்திற்குரியவனாகத் தன்னைச் சார்ந்து தானே சுயவிரக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து அதன்வழி மகிழ்ச்சி அடைபவர்கள் இருக்கிறார்களோ, அதைப்போன்றே 'மடை திறந்து' பாட்டில் ஓடுகின்ற சந்திரசேகரைப் போல் தன்னை உயர்வான நலைகளில் கற்பனை செய்வதில் அல்லது காண்பதிலும் மகிழ்ச்சி கைப்படுகிறது. அல்ற்றூஇசம் ஒருவனிற்குத் தியாகிநிலையினை ஏற்படுத்திக் கொடுத்து மகிழ்ச்சி கொடுக்கிறது. தியாகம் உயர்வானது என:று கருதுபவன் மட்டும் தான் அல்ற்றூஇசத்தில் இயங்கிக்கொண்டிருப்பான் என்கையில். அல்ற்றூஇசம் அவனை அவனிற்குத் தியாகி ஒளியில் காட்டி மகிழ்வடையச் செய்து சுயநலத்தைத் திருப்த்திப் படுத்தி மகிழ்ச்சி கொடுக்கிறது.
 
அடுத்து, மில்லியனராக இருப்பது உயர்வானது என்றோ அல்லது பி.எச்.டி வைத்திருப்பது உயர்வானது என்றோ கருதி அந்த மகிழ்வை அடைவதற்காக உழைக்கும் ஒருவன், உழைப்பின் கடுமையில் ஒரு கணம் நின்று தன்னைச் சுற்றிப் பார்க்கையில் 'பணம் அன்றைய தேவைகளிற்குப் போதுமாக இருந்தால் போதும்', 'படிப்பு அங்கீகாரத்தேடலாக இருக்கக்கூடாது' என்று கூறுபவர்களைக் காணுவானேயாயின், அது அவனைப் பல முனைகளில் கடுப்பேற்றும். மாறாக, தன்னைச் சுற்றி எல்லோருமே மில்லியனராவதற்கும் பி.எச்.டி எடுப்பதற்கும் ஓடிக்கொண்டிருக்கிறாhகள், குறிப்பாகப் பலர் அந்த முயற்சியில் தோற்றுக்கொண்டும் தளராது முயல்கிறார்கள் என்று காணநேரின் மகிழ்ச்சி பலமடங்கு அதிகரிக்கும். அந்தவகையில் ஒருவனை மில்லியனராக்க அல்லது பி.எச்.டி ஆக்க, தன்னை ஒறுத்து அவன் முயன்றால் அம்முயற்சியில் கூட தனது பெறுமதிகளை உலகின் பெறுமதியாக மாற்ற விரும்பும் அவனது ஆழ்மனதின் இச்சை அடையாளங்காணப்படக்கூடியது. எனவே அல்ற்றூஇசத்திற்குள் தனது பெறுமதிகளை உலகின் பெறுமதியாக மாற்றும் விடயம் சுயநலத்தைத் திருப்த்திப் படுத்தி மகிழ்ச்சி கொடுகிறது. 
 
இன்னுமொரு கோணத்தில் பார்த்தால், வாழ்வு என்பதே வாழ்வதற்கான முயல்தல் என்ற நிலையில், தனக்கான முனைதல்கள் பல சமயங்களில் மனவழுத்தம் தருவனவாகப், பயப்படுத்துவனவாக தோன்றும். பிறர் என்பது தனக்கு நேரெதிரானது என்பது மூளையில் பதிவாகி இருக்கிறது. பிறரிக்காக முனைகையில் தனக்கான முனைதல்கள் காட்டுகின்ற பல அயர்ச்சிகள் பயங்கள் உளவியலில் காணாது போகின்றன. உதாரணத்திற்கு, தான் ஒரு மில்லியன் வெல்வதற்காக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விளையாடிக்கொண்டிருப்பவனோடு ஏதோ ஒரு தர்மத்தின் பெயரில் அந்நிகழ்ச்சியில் இருப்பவனை நோக்கின் இவ்வித்தியாசம் இலகுவில் புலப்படும். பிறரிக்கான முனைகதல்கள் புதிய பலங்களை அடையாளம் காட்டும். பசித்தால் ஒரு நிமிடம் பொறுக்கமுடியாத பலரால் கொள்கை சார்ந்து உண்ணாவிரதம் இருக்கமுடியும் என்பது மட்டுமன்றி அந்த உண்ணாவிரதத்தில் மகிழ்வடையவும் முடியும். பயம் மனவழுத்தம் முதலிய பல விடயங்களின் அடிப்படை தோல்வி பற்றிய சிந்தனையே. தன்னை விடுத்து பிறரிக்காக முனைகையில், அவ்வாறான தனது முனைதலே உயர்வானதாக உள்ளுர உணரப்பட்டு விட்டுவதால், தோல்வி என்ற விடயம் பலதூரம் மனதில் பின்னிற்குப் போய்விடும். இதனால் தனக்காக உழைக்கும் போது தடக்கி விழுத்திய பல தழைகள் பிறரிக்கான தளத்தில் வழிவிட்டு விலத்திவிடும். மேலும், தனக்காக உழைக்கையில் தனியனாக உணாந்;தவன் பிறரிக்காக உழைக்கையில் ஒரு கூட்டத்தையே தன்னோடு அல்லது தனக்குப் பின்னால் காண்கிறான். இது குடும்ப அளவிலும் இருக்கலாம், இரண்டு பேராகவும் இருக்கலாம் நாடுகளின் அல்லது பூமியின் அளவிலும் இருக்கலாம். தனது பெறுமதிகளை உலகின் பெறுமதியாகக் காண்பது மகிழ்ச்சிக்கு ஏதுவானது என்ற நிலையில் ஒரு கூட்டத்தைத் தன்னோடு காண்பது மகிழ்வானது. பிறரிற்கான உழைத்தலில் இத்தகைய பல காரணிகள் சுயலநத்தைப் பலத்த அளவில் திருப்த்திப் படுத்தி மகிழ்ச்சி அளிக்கும்.
 
இப்படியே இம்மை மறுமை என்ற தளங்களில் கூட அல்ற்றூஇசத்தினை இயக்குவிக்கும் சுயநலம் பாவபுண்ணியம் சார்ந்து அடையாளப்படுத்தப்படக்கூடியது. 
 
என்னைப் பொறுத்தவரை அல்ற்றூஇசம் என்பது சுயநலத்தின் பரப்புரைச் செயலாளர் போன்றது தான். பல்தேசிய நிறுவனம் தண்ணீரின் அவசியம் பற்றி ஒருவாரம் சைக்கிள் ஓட்டுவது போன்றது தான். தொடக்கம் முதல் முடிவு வரை உணர்ந்தோ உணராதோ, தெரிந்தோ தெரியாமலோ சுயநலமே அலற்ற்றூஇசத்தினை இயக்கிக்கொண்டிருக்கிறது.
 
மாவோ சேதுங், ஸ்டாலின், சேகுவாரா, காந்தி என்று உலகின் ஏகப்பட்ட பெயர்போன அல்ற்றூஇஸ்ற்றுக்கள் அல்லது அவ்வாறு ஆரம்பித்தவர்கள், தமது நகர்ச்சியில் தாம் எந்த மக்களின் பெயரில் அலற்றூஇஸ்ற் என்று ஆனார்களோ அந்த மக்களிற்கே கெடுதல்களைச் செய்தார்கள். மக்கள் மாறவிரும்பினும் மாற்றத்தை அனுமதிக்க மறுத்தார்கள். ஒரே தடத்தில் பணித்தாhர்கள். ஒரு காரணத்திற்காகச் சேர்ந்த கூட்டம் கலைந்துபொவதை அவர்கள் அனுமதித்ததில்லை. தலைவர்கள் மட்டும் தான் என்றில்லை, குழந்தை வளர்ப்பில் வெளிப்படும் பெற்றோர்களின் பல செயல்கள் கூட இவ்விதத்தில் அவதானிக்கப்படக்கூடியன.
 
என்னைப் பொறுத்தவரை அல்ற்றூஇசம் என்பது சுயநலத்தின் அரூப கரம் என்றே தோன்றுகின்றது. இல்லை அப்படி இல்லை என்று தோன்றின் நிச்சயமாக உங்கள் கருத்தைக் கூறுங்கள். தெரிந்துகொள்ள ஆவலோடிருக்கிறேன்.

நன்றி.  இதுக்கு கருத்து சொல்லும் அளவுக்கு எனக்கு அறிவு இல்லை. ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை பொருத்தி பார்க்கும் போது இது சரியாகவே படுகிறது. :) 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது உண்மைதான் இன்னுமொருவன்.கட்டாயமாக பிறர் நலம் பேணும் கொள்கை, தன்னலம் சார்ந்த எதோ ஒரு புள்ளியின் அடிப்படையாகவே இருக்கும். மனித மனங்களுள் சென்று பார்க்க முடியாததால் நாம் ஒருவர் தன்னலம் கருதாது சேவை செய்கிறார் என்கிறோம். எமக்குத் தெரியாத தன்னலம் சார்ந்த எதிர்பார்ப்பின் ஒன்றாகவே பொதுநலம் என்பதும் இருக்க முடியும். ஆனாலும் உலகம் தொடர்பான அச்சத்தின் முன் அவற்றை நேரே கூறவோ, சுட்டிக்காட்டவோ அன்றி உரியவர்களிடம் கேட்கவோ, வாதிடவோகூட முடியாத ஒரு எல்லைக்கோட்டின் வெளியே நின்றுதான் நாம் இதைப் பார்க்கிறோம்.

மகிழ்ச்சி என்பதன்  அளவுகோல் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவது. ஆனால் தன்னைப் புறக்கணித்து ஒருவன் மற்றவனை உயர்த்த முற்படுவது என்பது எதிர்மறையானது. புறக்கணிப்பு என நாம் எண்ணுவதற்குமப்பால் எமக்குத் தெரியாத எதோ ஒன்று அல்லது புரியாத சுயநலம் சார்ந்த காரணம் அல்லது மகிழ்வு அவற்கு நிட்சமாய்க் கிடைக்கும். அதை நாம் இனம் காண முடியாததாய் இருக்கும்.

  • தொடங்கியவர்

நன்றி காளான், ஜீவா, சுமேரியர் மற்றும் புங்கையூரான், உங்கள் வரவிற்கும் கருத்திற்கும்.

பொதுப்படையாக இந்தக் கருத்து சரியானதே. ஆனால் இன்னுமொருவன், இதற்கு விதிவிலக்குகளைப் பற்றிச் சிந்திக்கும் போது தற்கொடைப் போராளிகளைப் பற்றி ஏன் யோசிக்கவில்லை ?
 
முடிவடையப் போகும் வாழ்க்கையில் எப்படி மகிழ்ச்சி நோக்கம் இருக்க முடியும் ? ( இவர்கள் சாதாரண தற்கொலை செய்யும் கோழைகள் அல்ல) அனுபவிக்க  முடியாத (இறப்பதினால்) மகிழ்ச்சியை மையப்படுத்திய சுயநலம் எங்கே ?
 
 
100 % சுய நலமற்றவர்களுக்கு இவர்கள் தான் உதாரணமாக இருப்பார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

அன்னை திரேசாவுக்கு என்ன சுயநலம் இருந்து போலந்தை விட்டு இந்தியாவுக்கு சென்று சேவை செய்தார் ?

  • தொடங்கியவர்
சுபேஸ், ஈசன் மற்றும் நுணாவிலான் உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.
 
ஈசன். 
 
மாவோ, ஸ்டாலின், சேகுவாரா, காந்தி என்று வந்த பட்டியல் ஈழத்திற்குள் நுழையாது நின்றது, எங்களைப் பற்றி நான் சிந்திக்காததால் அல்ல. ஒரு ஈழத் தமிழன் இந்தக் கட்டுரை எழுதும் போது அந்தச் சிந்தனை எதிர்கொள்ளாது போவது சாத்தியமில்லை. உண்மையினைச் சொன்னால் அந்தச் சிந்தனைகள் எல்லாம் முடிந்துதான் இது போன்ற பொதுமைகள் பிறந்தன. ஆனால், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின்னர், நாங்கள் அனைவரும் ஆதரித்து நின்ற அந்த மார்க்கத்தில் இறந்தவர்கள் பற்றி அனலெற்றிகலாகப் பொதுவெளியில் பேசுவது ஏற்படுத்தக்கூடிய வலிக்கு மேலான பயனை அப்பேச்சுக் கொடுக்கும் என்று தோன்றவில்லை. பேசுவது பேசப்படமுன்னரே அது கொச்சையாக உணரப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம். அதனால் தான் பேசவில்லை. அந்த விசாரணையினை அவரவர் மட்டத்தில் உங்கள் கேள்வி இக்கட்டுரை சார்ந்து எழுப்பியிருக்கும் என்பதோடு நிறுத்திக்கொள்வோம். 
 
ஆனால் பொது வெளியில் எங்களைச் சாhந்து நாங்கள் தடையின்றிப் பேசலாம். எங்களது விசாரணைகள் எங்களைச் சார்ந்து விரிகையில், எங்களைப் பற்றி எங்களிற்கு முதலில் கேள்விகளும் தேடல்களும் அப்பப்போ ஏதேனும் தெளிவுகளும் பிறக்கையில் ஒரு சமுகமாக நாங்கள் முற்செல்வோம் என்பது எனது அபிப்பிராயம்.
 
நுணாவிலான்,
 
அன்னை திரேசா சார்ந்து அவர் மதம் மாற்றினாரா இல்லையா என்பது போன்ற சில்லறைத்தனமான விவாதங்கள் நிறைய உள்ளன. அந்த முனையினை முற்றாக விட்டுவிடுவோம். மேலும் அல்பேனியரின் வறுமைநிலையோடு கல்கத்தாவினை ஒப்பிட்டு ஏன் கல்கத்தா தெரிவானது என்பது போன்ற வேறும் பல சில்லறைத்தனமான முனைகள் உண்டு. அவற்றையும் முற்றாக அடியோடு விட்டுவிடுவோம். ஆனால் அன்னை திரேசா அடிக்கடி சொல்வதாக அவர்பற்றிப்பேசுவோர் விவாதமின்றி ஒப்பிக்கும் ஒன்று 'இயேசு அவரது இன்ஸ்பிறேஷன். இயேசு மீதான அவரது நம்பிக்கையே அவரைத் தக்க வைத்தது என்பது அவரே அடிக்கடி சொல்வது' என்பது. அதாவது அன்னை திரேசா அன்னை திரேசாவாக தொடர்வதற்கு இயேசு மீதான அவரது நம்பிக்கை, அவரிற்கு அவசியமாகியது. இனி மீண்டும் ஒருமுறை பதிவை வாசிக்க நேரங்கிடைப்பின் வாசியுங்கள். பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
 
ஆனால், மனிதனின் அனைத்து நடவடிக்ககைகளிற்கும் காரணம் சுயநலம் என்று கூறுவதால், சுயநலம் என்பதனைக் கொச்சையாக மட்டும் பார்க்கத் தேவையில்லை. உலகில் மனிதனை விட்டு மற்றவற்றைப் பார்த்தால் அனைத்துமே சுயநலம் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு இயங்குகின்றன. ஆனால் இயற்கையின் வடிவமைப்பானது, ஒரு உயிரினத்தின் சுயநலம் சார்ந்த நடவடிக்கையில் பிறிதொரு இனத்திற்கான நன்மைகளைப் பக்கவிளைவாகப் புதைத்தே வைத்திருக்கிறது. அதுபோல் மனிதனின் சுயநலங்களும் மற்றைய மனதர்களிற்குச் சாதகமாக அமைவதற்கான சந்தர்ப்பங்கள் ஏராளம் இருக்கின்றன.
 
அல்ற்றூஇசம் போன்ற பெரிய வார்த்தைகளின் பிரச்சினை என்னவெனில் அவை விடயங்களை குறித்த ஒரு ஒளியில் மட்டும் பார்க்கப் பணிப்பன. இப்போ உங்கள் அன்னை திரேசா கேள்வியினைக் கூட முற்றாக அணுகுவதற்கு அன்னையினை விட்டுத் திரேசாவைப் பார்ப்பது அவசியம். ஆனால் அன்னை சேர்ந்தபின்னர் அதை நீக்கிப் பார்க்க விளைவதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.
 
என்னைப்பொறுத்தவரை சுயநலம் சார்ந்தே அனைத்தும் இயங்குகின்றன என்ற புரிதல் இப்போதைக்குச் சரியாகவே தெரிகிறது. மேலும் அத்தகைய புரிதல் உணர்ச்சிவசப்படல்களைக் கணிசமாகக் குறைக்கும். தேவையற்ற எதிர்பார்ப்புக்களையும், சாத்தியமற்ற விண்ணப்பங்களையும் கட்டுப்படுத்தும். இந்தப் பதிவின் நோக்கம் அவ்வளவு தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.