Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டையில போனாலும் திருந்தாத மகிந்தவின் ஆலோசகர் ஆனந்தசங்கரி- -

Featured Replies

ananthasankari-150x150.jpgஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஞாபகார்த்த நிகழ்வு இன்று காலை வவுனியா நகரசபை உள்ளக மைதானத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் உரையாற்றிய தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, விடுதலைப்புலிகள் தொடர்பிலும், இறுதி யுத்தம் தொடர்பிலும் தான் தெரிவித்த கருத்துகள் சரியானவையென்றும், அதே நிலைப்பாட்டிலேயே தான் இப்போதும் இருப்பதாகவும் தெரிவித்ததோடு, அக்கருத்துகள் தொடர்பில் தனக்கு எதிராக வெளிவந்த விமர்சனங்களை மறுதளித்து நியாயப்படுத்தி உரையாற்றினார்.

இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், ‘இந்த மனுசன் கட்டையில போனாலும் தேராது’ என்று முணுமுணுத்தவாறு, சபையை விட்டு பலர் அதிருப்தியுடன் வெளியேறியதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் ‘பகலில் செல் அடித்தால் சாகும் மக்களின் தொகை வெளியுலகுக்கு தெரிந்துவிடும். இரவில் அடித்தால், கூட்டாக அங்குள்ள எல்லோருடைய கதையையும் முடித்து விடலாம்.’ எனும் தொனிப்பட சிறீலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்ததோடு, அக்கருத்தை பகிரங்கமாகவே ஊடகங்களுக்கும் தெரிவித்திருந்தார். சிறீலங்கா அரசுக்கு இறுதி யுத்தத்துக்கு தேவையான இந்திய அரசின் அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுக்கும் இணைப்பாளராகவும் ஆனந்தசங்கரி செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.thinakkathir.com/?p=51042#sthash.CUWwaLoN.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சிவசக்தி ஆனந்தனுக்கு ஏனிந்தத் தேவையில்லாத வேலை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புலிகள் மக்களுக்காக வகுத்த குதிரை மீதேறி.. ஒட்டுக்குழு சோனகிரிகளே இப்போது சவாரி செய்கின்றன. கூட்டமைப்பை எல்லோரும் கூத்தமைப்பாக்கி மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

 

புலிகள் இது தெரிந்துதான் இவர்களை எல்லாம் வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார்கள். சங்கரியை கூட்டமைப்புக்குள் உள்வாங்கியவர்களே இவற்றிற்குப் பொறுப்பு..! மேலும் சிவசக்தி ஆனந்தன்.. போன்றோர் துரோகிகளுக்கு தியாகிப்பட்டம் வழங்குவதில் நேரத்தை செலவு செய்யாது.. வன்னியில் உள்ள மக்களோடு அந்த நேரத்தைச் செலவு செய்தாலாவது அடுத்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்குப் போடுங்கோ என்று கேட்கக் கூடிய நிலையாவது இருக்கும். இன்றேல்..

கூட்டமைப்பு படுபாதாளத்துக்குள் தள்ளப்பட்டு சிங்கள இனவாதக் கட்சிகளும் அவர் தம் ஒட்டுக்குழு கூத்தாடிகளுமே மக்கள் பிரதிநிதிகளாகும் கொடுமை நடக்கப் போகிறது..!

 

மக்கள் இவர்களை பல தேர்தல்களில்.. துரோகிகள் என்று.. தூக்கி எறிந்து காட்டிய பின்னும் இவர்களை எதற்காக முன்னிறுத்துகிறார்களோ தெரியவில்லை..??! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இந்த விடயத்தில் கிழக்கு மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள் பழைய ஒட்டுக் குழுக்கள் எதுவும் பெரிதாக அங்கு இல்லை 

இப்பவாவது சிலருக்கு விளங்கட்டும் ,ஏன் தமிழரசுக் கட்சியை முதன்மைப்படுத்துகின்றோம் என்று .அதிலும் திருமலை மக்கள் சிறந்தவர்கள் ஏனெனில் எந்தவொரு சிங்கள இனவாதக்கட்சியில் இருந்தும் பாராளுமன்றத்திற்கு தமிழர் எவரையும்  தெரிவுசெய்யவில்லை .

 

இந்த செய்தியின் உண்மை பற்றி தெரியாது.  ஆனால் கூட்டமைப்பு மீதான யுத்தம் மிக பெரிய அளவில் நடை பெறுகிறது என்பது உண்மை.

 

கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்தவை சந்தித்தார்! இணக்க அரசியலுக்கு சம்மதித்தாராம்!!

Jun 30, 2013
 
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனித்துப்போய் மஹிந்தவை சந்தித்து திரும்பியிருக்கின்றமை ஏனைய அனைத்து தரப்புக்களிடையே பரபரப்பினையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
mikntha.jpg

அவரை முன்னணி இலத்திரனியல் ஊடகமொன்றின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவரே அழைத்து சென்றிருந்ததாக தெரியவருகின்றது.தற்போது குறித்த முன்னாள் ஊடகவியலாளரும் நாடாளுமன்ற  உறுப்பினராக இருந்து வருகின்றார்.

குறிப்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரது பத்திரிகைக்கு எதிராக அரச அமைச்சர் மற்றும் இராணுவத்தளபதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள வழக்குகள் கழுத்தை இறுக்கும் கட்டத்தை அடைந்துள்ளன.இந்நிலையினில் அரச அமைச்சரிடம் மன்னிப்பு கோருமாறு நீதிமன்று தற்போது ஆலோசனை வழங்கியுள்ளது.தவறினால் கோடிக்கணக்கான பணத்தை மான நஸ்ட ஈடாக கட்டியழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அரச ஊடகங்களும் அண்மைக்காலமாக குறித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரது நாளிதழ்களை இலக்கு வைத்து கடுமையான தாக்குதல்களை நடத்திவருகின்றன.இத்தகைய சூழலினில் சமரச போக்கினில் செயற்பட முடிவெடுத்துள்ள குறித்த நாடாளுமன்ற அங்கத்தவர் அதற்கேதுவாக இச்சந்திப்பிற்கு முற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்த தன்சானியாவிற்கு பயணிப்பதற்கு முன்னதாக முதல் நாளன்று அலரிமாளிகையினில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.எதிர்வரும் நாட்களினில் அரசிற்கு எதிராகவோ படைத்தரப்பிற்கு எதிராகவோ எதனையும் வெளியிடுவதில்லையென்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.அபிவிருத்தி மற்றும் இணக்க அரசியல் பற்றி செய்தி அறிக்கையிடுதல்களை செய்ய அப்போது மஹிந்த ஆலோசனை வழங்கியதாக தெரியவருகின்றது. அதற்கு சன்மானமாக குறித்த நாடாளுமன்ற அங்கத்தவரது பத்திரிகைகளிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்குவதென மஹிந்தவினால் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே கொழும்பு ஊடகங்களை மடக்கி வைத்துள்ள மஹிந்த தற்போது தமிழ் பிரதேசங்களினில் வெளிவரும் ஊடகங்களை இலக்கு வைத்து காய் நகர்த்தி வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.முன்னதாக கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற அங்கத்தவரொருவர் பஸிலினை சந்தித்து தனது தொகுதி அபிவிருத்தி பற்றி பேசிய சர்ச்சை ஓயுமுன்னதாக இச்சந்திப்பு நடந்துள்ளது.

http://www.pathivu.com/news/25573/57//d,article_full.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பில ஏது நல்லது கெட்டது ....... அதிலும் இது புளியம்பொக்கணை பிடையன் பாம்பாச்சே .... :blink:  :o    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.