Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவனது துணையிவர்கள்….

Featured Replies

 

தலைவனது துணையிவர்கள்…
 
 
பெரும் வெடியோடு ஆரம்பம்..
பேரிடியாக ஆனதுவே-நெல்லியடி
மில்லரடி பகைக்கு நெற்றியடி
ஆனதங்கே…!
கந்தக வண்டி நிரப்பி-மில்லர்
காற்றோடு கலந்த சேதி
வீச்சோடு பாய்ந்துவர-சிங்களம்
தோற்றோடிப் போனதங்கே…!
எம் தலைவன் தொடக்கிவைத்த
கந்தகவெடியதுவே..
கயவன் களம் பலவும் வென்றுதர
பாதையொன்றுபுதிதாய்
பிறப்பெடுத்ததன்று..
மில்லர் தடம் தொடர்ந்த
பலவீரர் கதையுண்டு
போர்க்கண்ணாவெடிசுமந்து
புலிக்கொடிநாட்டினான்
மாங்குளத்தில் அன்று
தலைமன்னார் சிலாபத்தில்
டாம்போவெடியாகி
வெற்றியைஎமதாக்க
பலநூறுவீரர்கள்
படைமுகாம்கள் தகர்த்தெறிந்தார்…
தரைதாண்டிகடலேறி
காந்தரூபன் கொலின்சுடன்
வினோத்தும் இணைந்துகொள்ள
அலைமீதுவெடியதிர்வு
எதிரிபடகோடு
தகர்த்தெறிந்தார்….
அலையடித்துஓயவில்லை
அங்கயற்கன்னிஅனலாகி
அதிரடியாய் உடைத்தெறிந்தாள்
கப்பலொன்றை கண்ணெதிரே
களமாடும் வீரத்தில்-மகளிர்
படையணிக்குபெருமை
சேர்த்தபெருமாட்டி….
பெண்ணினத்தின் பேதமைக்கு
வைத்துவிட்டாள் முற்றுஅன்று
அவள் பாதை வழிகாட்ட
அருகிருந்தசோதரிகள்
அடுக்கடுக்காய் வெடிசுமந்தார்
பொறுப்பான நளாயினியே
சாகரவர்த்தனா சடைமீது–பெருநெருப்பாகி
சிங்களத்தைசெங்களத்தில்
சிதைமூட்டிவழிகாட்ட
அடுத்தடுத்துவெடியதிர்வு
தரைதனில் கரும்புலி
தடையுடைப்புதொடர்ந்தது
யாழினிகந்தகம் சுமந்தாள்
தான் பிறந்தமண்ணில் அன்று
தாண்டிக்குளம் எங்களது
வசமானதுபின்பு….
அவளொருகருநெருப்பு
அதனால் ஆகிவிட்டாள்
முதல் கரும்புலிப்பிறப்பு….
இவளோடுஅவள்வீட்டில்
மூன்றுபுலி-மண்மீட்பில் இழப்பு
அவளோடுஅருகிருந்த
ஆசாவும் மங்கையும்
குமுதன் சுபேசனோடு
ஆணையிறவில் ஆட்டிலறி
தகர்த்தபின்பு
சசி,அருளன் ஜெயராணி நெடுங்கேணியை
நடுங்கவைத்தார்…
தலைமைக்குதோள்கொடுத்து
தடைகள் பலஉடைத்தெறிந்தார்….
இவர்களோடுநிலவன்
இவன் ஒருகவிஞன்
கவிதை இவன் கரம் எழுத
கண்களால் கனல் சுமந்துகளமாடி
வெடியானான்….
நல்லமுத்துநடப்பதில்லை….
ஓடுவதுபோலே இவன் நடைவேகம்
மற்றவரைகலாய்ப்பது இவனிற்கு
கைவந்தகலை….
கந்தகம் சுமந்தபின்பு
கருஞ்சிறுத்தையாகிவிட்டான்
செம்பியவளவன் செப்புவதுகுறைவு
செயல்வீரன்
தொடக்கிவைத்தான் திருமலையில்
மூன்றாம் கட்டஈழப்போர்
மூண்டுவிட்டதுபின்பு….!
தரைதனில் பூட்டோ
தனிமையாய் தடையுடைத்தான்
எதிரிஉலங்குவானுர்தியுடைத்து
இவன் பாசறைமீண்டான்
பகைகுகைபுகுந்து
அவன் படுக்கையறைகுசினிவரை
வேவுபார்த்து-பலசமர்கள்
சாதணையில் பங்கெடுத்தபின்பு
யாழ்மண்ணில் விதையானான்….
இவனுமொருகவிஞன் அவனோடு
பலவீரர் படங்களாகி
எமக்கெல்லாம் பாடமா….
இன்றுஅந்தோ
முடிவல்லதொடர்பயணம்
வானேறிபறந்து
வட்டமிட்டவிமானமது
வஞ்சமிட்டசிங்களனின்
மடிமீதுவெடியாகி
புது வடிவம் தந்தவர்கள்ஷ
ரூபனுடன் சிரித்திரனே….
உலகறியாவீரமது
உருத்தெரியாவெடியதிர்வு
அன்றொருநாள் கிளிதனில்
என்னருகில் கேட்டகுரல்
தலைக்கவசம் அணிந்தபடி
‘யார் என்றுசொல்லக்கா’
அவள் குரல் ஒலியும்
அடங்கவில்லை இன்னும்
ஆனாலும் அவளில்லை இன்று
எதிரிக்கு எமனாகி
படைத்தலைமை கலங்கடித்தாள்
என்றசெய்திசிலநாளில் வந்தபின்பு
சிதைவைத்ததமிழச்சி
இவளென்று அறிந்துகொண்டோம்..!
போர்க்களத்தில் களமாடி
பலகாயம் பட்டபின்பு
இனிஎன்னசெய்வதென்று
இவர்கள் என்றும்நினைத்ததில்லை
ஆசாவின் உடல்
ஆகுதியாகுமட்டும்
தழும்புகள் பலசுமந்தாள்
எழுபத்திரண்டென்று எண்ணியவள்
காட்டினாள்.!
அதன்பின்பே வெடியாகி
விதையானாள்..!
தமிழ்மங்கை-இவள்
ஆனையிறவுதடையுடைப்பில்
பலகணைகள் பறக்கவைத்து
எதிரிமுகாம் பற்றவைத்தாள்
அச்சமரில் தன்
ஒருகால் கொடுத்து
மீண்டுவந்தபின்பு
களைப்பென்றுஓயவில்லை
கடல்மீதுவிளையாடி
கரும்புலியாய் பிறப்பெடுத்து
கடலடியில் அலையோடு
கலந்துவிட்டாள்..!
இறுதிவரை பலநூறு
கருவேங்கைவீரர்கள் வெடியானார்..!
அவர் தடம் தொடர்ந்து-அவர்
பாதங்களில் மலர்தூவி
மண்மீட்பில் பங்கெடுப்போம்
ஈழ விடியலிற்காய் பலம் சேர்ப்போம்..!
 
-அருகிருந்ததோழி-
 

 

Edited by nunavilan

எமது மண்மீட்கவென்று தாம் விண் போன வேங்கைகளுக்கு, 

தரணியில் தாம் விதையாகி, தலைவனை தாங்கும் விழுதாகி, வேராகி

போரினில் புறங்காட்டா  களத்தினிலே பலியான கரும்புலிகளுக்கு

கண்கள் குளமாக, நெஞ்சம் கனலாக நீள்கைகள் கூப்பி நெடியதொரு வணக்கம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிர்வு 

  • கருத்துக்கள உறவுகள்
அவர் தடம் தொடர்ந்து-அவர்
பாதங்களில் மலர்தூவி
மண்மீட்பில் பங்கெடுப்போம்
ஈழ விடியலிற்காய் பலம் சேர்ப்போம்..!
 
நன்றி  பகிர்வுக்கு.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.