Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்குடன் சேர்த்து தேர்தல் – இரு மாகாணசபைகள் நள்ளிரவில் கலைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குடன் சேர்த்து தேர்தல் – இரு மாகாணசபைகள் நள்ளிரவில் கலைப்பு
[ சனிக்கிழமை, 06 யூலை 2013, 00:57 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

 

வடக்கு மாகாணசபைக்கு நடத்தவுள்ள தேர்தலுடன் சேர்த்து, ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வசதியாக, மத்திய, வடமேல் மாகாணசபைகள் நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இரண்டு மாகாணசபைகளினதும் ஆளுனர்கள் வெளியிட்டுள்ளனர்.

கலைக்கப்பட்ட இரண்டு மாகாணசபைகளினதும் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ள நிலையிலேயே, முன்கூட்டியே அவை கலைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வரும் செப்ரெம்பரில், வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைகளுக்கு வரும் செப்ரெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

வடமேல் மாகாணசபைக்கு புத்தளம், குருநாகல மாவட்டங்களில் இருந்து 50 உறுப்பினர்களும், கண்டி, மாத்தளை, நுவரெலிய மாவட்டங்களில் இருந்து மத்திய மாகாணசபைக்கு 56 உறுப்பினர்களும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து 36 உறுப்பினர்கள் வடக்கு மாகாணசபைக்கும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதற்கான தேர்தல் வரும் செப்ரெம்பர் 21இற்கும் 28இற்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படவுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20130706108613

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த மாகான சபைகளில தமிழரும் போட்டியிட வேணும்.

ரெண்டு பேர ரேக்கமேண்டேசனுக்கு அனுப்புறன்.

ஒண்டு தமிழினி மற்றது நகுலன்.

ஏற்கிறதும்  ஏற்காததும் உங்கட பிரச்சன.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த மாகான சபைகளில தமிழரும் போட்டியிட வேணும்.

ரெண்டு பேர ரேக்கமேண்டேசனுக்கு அனுப்புறன்.

ஒண்டு தமிழினி மற்றது நகுலன்.

ஏற்கிறதும்  ஏற்காததும் உங்கட பிரச்சன.

 

 

நீங்கள் உண்மையில் மனிதருக்குத்தான்  பி....................???

இவர்கள் பெயர்களை எதுக்காக இங்கு உச்சரிக்கின்றீர்கள்???

:(  :(  :(  :(

உந்த மாகான சபைகளில தமிழரும் போட்டியிட வேணும்.

ரெண்டு பேர ரேக்கமேண்டேசனுக்கு அனுப்புறன்.

ஒண்டு தமிழினி மற்றது நகுலன்.

ஏற்கிறதும்  ஏற்காததும் உங்கட பிரச்சன.

ஜோ.... ஏற்கிறதும் ஏற்காததும் எங்க பிரச்சனையாய்  இருக்கட்டும் ................முதல்ல உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க நல்ல வைத்தியரின் உதவியை நாடுங்க ............... :icon_mrgreen:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு சின்ன விடையத்தில் கூட தங்களைவிட ஒருபடி மேலே போகக் கூடாது.

என்ற விடயத்தில் சிங்களம் கண்ணும்கருத்துமாக இருக்கின்றது.

 

வட மாகாண சபைத் தேர்தலில் சிங்களத்திற்கு வெற்றி இல்லை என்பதை 

பொறுக்க முடியாமல் சிங்களவர்களுக்கு வெற்றிச் செய்தியை இப்படியும் கொடுக்கலாம்.

 

வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் வெற்றியில் சிங்களவர்களை திசை திருப்ப மகிந்த கூட்டம் முயற்சி செய்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.