Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை

Featured Replies

அரும்பொருள் ஆன பிரபாகரன்! - வாலியின் ஒரு கண்ணீர் கவிதை

19-vali-prabakaran-300.jpg

தமிழ் உணர்வில் எப்போதும் முனைப்புடன் இருந்தவர் கவிஞர் வாலி. தமிழ் மேடைகளைத் தேடி ஓடி வரும் அவரது தமிழ்.

ஈழத் தமிழர்கள் பால் இயல்பான நேச உணர்வுடன் செயல்பட்ட வாலியின் பேனா எழுதிய இந்தக் கவிதை, படிப்போர் விழி நனைக்கும்...

"ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து -

பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு;

அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி

வேறு வேறுண்டோ எனது வாய்க்கு?

மாமனிதனின் மாதாவே! - நீ

மணமுடித்தது வேலுப்பிள்ளை

மடி சுமந்தது நாலு பிள்ளை!

நாலில் ஒன்று - உன்

சூலில் நின்று - அன்றே

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் என்றது உன் -

பன்னீர்க் குடம்

உடைத்துவந்த பிள்ளை - ஈழத்தமிழரின்

கண்ணீர்க் குடம்

உடைத்துக் காட்டுவேன் என்று...

சூளுரைத்து - சின்னஞ்சிறு

தோளுயர்த்தி நின்றது

நீல இரவில் - அது

நிலாச் சோறு தின்னாமல் -

உன் இடுப்பில்

உட்கார்ந்து உச்சி வெயிலில் -

சூடும் சொரணையும் வர

சூரியச் சோறு தின்றது

அம்மா!

அதற்கு நீயும் -

அம்புலியைக் காட்டாமல்

வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,

தினச் சோறு கூடவே

இனச் சோறும் ஊட்டினாய்;

நாட்பட -

நாட்பட - உன்

கடைக்குட்டி புலியானது

காடையர்க்கு கிலியானது!

'தம்பி!

தம்பி!" என

நானிலம் விளிக்க நின்றான் -

அந்த

நம்பி;

யாழ் வாழ் -

இனம் இருந்தது - அந்த...நம்பியை நம்பி;

அம்மா!

அத்தகு -

நம்பி குடியிருந்த கோயிலல்லவா -

உன் கும்பி!

சோழத் தமிழர்களாம்

ஈழத் தமிழர்களை...

ஓர் அடிமைக்கு

ஒப்பாக்கி; அவர்களது

உழைப்பைத் தம் உணவுக்கு

உப்பாக்கி;

செம்பொன்னாய் இருந்தோரை -

செப்பாக்கி; அவர்கள் வாழ்வை

வெட்டவெளியினில் நிறுத்தி

வெப்பாக்கி;

மான உணர்வுகளை

மப்பாக்கி;

தரும நெறிகளைத்

தப்பாக்கி -

வைத்த காடையரை

வீழ்த்த...

தாயே உன்

தனயன் தானே -

தந்தான்

துப்பாக்கி!

'இருக்கிறானா?

இல்லையா?"

எனும் அய்யத்தை

எழுப்புவது இருவர்

ஒன்று -

பரம்பொருள் ஆன பராபரன்;

இன்னொன்று

ஈழத்தமிழர்க்கு -

அரும்பொருள் ஆன

பிரபாகரன்!

அம்மா! இந்த

அவல நிலையில் - நீ...

சேயைப் பிரிந்த

தாயானாய்; அதனால் -

பாயைப் பிரியாத

நோயானாய்!

வியாதிக்கு மருந்து தேடி

விமானம் ஏறி -

வந்தாய் சென்னை; அது -

வரவேற்கவில்லை உன்னை!

வந்த

வழிபார்த்தே -

விமானம் திரும்பியது; விமானத்தின்

விழிகளிலும் நீர் அரும்பியது!

இனி

அழுது என்ன? தொழுது என்ன?

கண்ணீர்க் கலப்பைகள் - எங்கள்

கன்ன வயல்களை உழுது என்ன?

பார்வதித்தாயே! - இன்றுனைப்

புசித்துவிட்டது தீயே!

நீ -

நிரந்தரமாய்

மூடிக்கொண்டாய் விழி; உனக்குத்

தங்க இடம்தராத - எங்கள்

தமிழ்மண் -

நிரந்தரமாய்த்

தேடிக்கொண்டது பழி!

(பிரபாகரன் தாயார் மறைவின்போது கவிஞர் வாலி எழுதிய கவிதை இது)

http://tamil.oneindia.in/movies/news/2013/07/vaali-s-poetry-on-tamil-eelam-prabh-179441.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!

 

பழியையும் தூய தமிழால் பாடி மயக்கும், கரு (ணா)  நிதி மிகக்கொண்ட கயவனுக்கும் தோத்திரம் பாட இருக்கிறதே ஒரு தமிழ்க் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

'இருக்கிறானா?
இல்லையா?"
எனும் அய்யத்தை
எழுப்புவது இருவர்
ஒன்று -
பரம்பொருள் ஆன பராபரன்;
இன்னொன்று
ஈழத்தமிழர்க்கு -
அரும்பொருள் ஆன
பிரபாகரன்!....

 

நன்றி  ஐயா

நிம்மதியாக தூங்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மண் - நிரந்தரமாய்த் தேடிக்கொண்டது பழி!

 

பழியையும் தூய தமிழால் பாடி மயக்கும், கரு (ணா)  நிதி மிகக்கொண்ட கயவனுக்கும் தோத்திரம் பாட இருக்கிறதே ஒரு தமிழ்க் கூட்டம்.

 

 

நீங்கள் கூறுவது, புரிகின்றது பஞ்ச்.

என்ன செய்வது.... இது, சங்க காலத்தில் இருந்தே தொடரும் கதைதான்.

சில கவிஞர் வயிற்றுக்காகவும், சிலர் தன் மொழிக்காகவும் பாடுவார்கள்.

 

http://www.youtube.com/watch?v=S5xP4UZTnTs

 

 

Edited by தமிழ் சிறி

கருணாநிதியை பற்றி வாலி .......

தமிழ் வணக்கம், தமிழின தலைவர் வணக்கம்.எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்.
வைப்பேன் என் தலைவனுக்கு மட்டும் ஒரு வணக்கம்.

எவரேனும் எண்ணுவரோ தலைவன் வேறாக,
தமிழ் வேறாக.
தலைவரல்லவா இருக்கிறார் தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே உன் வருகை,
கண்டதும் தூக்குவேன் என் இருகை.உயரிய தலைவா உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான் என் வாய்க்கும் கவிதை வாய்க்கும்.

என் பாட்டுக்கு நீதான் பிள்ளையார் சுழி.உன்னை முன் வைக்காமல் என்ன எழுதினாலும்,என் பாட்டு வாங்கும் பெரிய சுழி.அருமை
 
 
kaligar+vaali.jpgதலைவா,ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய்.
அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
 
தேர்தலுக்கு தேர்தல் விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று அயலாரை ஓட்டி,
அஞ்சு (5) 
முறை அரியணை ஏறிய அஞ்சுக செல்வா.
 
 
 
தேர்தல் வரலாற்றில் உன்னை வெகுவாக விமர்சனம்
செய்ய டில்லியில் ஒரு கோபால்சாமி,
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.நீயோ இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய  கோபாலபுரத்து சாமி
 
எனவேதான் கும்மாளமிட்டு உன்னை
கொண்டாடுகிறது இந்தபூமி.அய்யா,
50 ஆண்டு காலம் உன் சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை.
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
 
முதல் முதல் தேர்தல் குளத்தில் குளிக்க நீ தொடங்கிய ஊர்தான் குளித்தலை.குளித்தலைக்கு பிறகு இதுவரை குனியா தலை உன் தலை.
இனியும் குனியாது வெற்றியை குவிக்கும் என்பதும் உன் தலை.
 
kalainja+2.jpgசாதாரணமாய் இருந்து சரித்திரம் படைத்தாய்.
அய்யா அந்த வகையில் நீ ஒரு ஒபாமா.
சரித்திரம் படைத்த பின்பும் சாதாரணமாக இருக்கிறாய்.
அந்த வகையில் உனக்கு ஒபாமா ஒப்பாகுமா?.
 
உன்னை விட்டு வலது போனால் என்ன, இடது போனால் என்ன.
மேலே விழுந்த நரி பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
 
உன்னிடம் உள்ளது நடு நிலைமை.
நடுநிலைமை தான் நல்ல தலைமை.
 
கலைஞர்கோனே,
கருப்பு கண்ணாடி அணிந்த கவி வெண்பாவே.
நீயே உனக்கு
நிகர்.
நீ நகர்ந்தால் உன் பின்னே நகர்கிறது நகர்.
 
நிஜம் சொன்னால், ரஜினியை விட நீயொரு வசீகரமான 'பிகர்'.
நாவினிக்க நாவினிக்க உன்னை பாடியே என் உடம்பில் ஏறிபோனது சுகர்.
நீ எங்கள் கிழக்கு,
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு.
நம்மொழி செம்மொழி, அதனை அங்கீகரிக்காது நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய் உடனே குனிந்தது அதன்
சிரசு.

அதுபோல் தமிழனின் அடையாளங்களை வட்டியும்,
Vaali+2.jpgமுதலும் சேர்த்து வள்ளலே நீதான் மீட்டாய்.
தரை மீனை திரும்ப தண்ணீரில் போட்டாய்.
அதனால் தான் அய்யா உன்னை அவருக்கு நிகர் அவர்,
தமிழனை துன்பம் தீண்டாது மீட்கும் தடுப்பு சுவர்.
மையம் ஏற்கும் வண்ணம் உன்னிடம் உள்ளது பவர்.
அத்தகு பவர் உன்போல் படைத்தவர்
எவர்.

அமைச்சர் பெருந்தகை ஆற்காட்டாரிடம் உள்ள பவரால்,
வீட்டு விளக்கு எரியும், நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா உன்னிடம் உள்ள பவரால் தான் நாட்டு விளக்கு எரியும்
,
 நற்றமிழ் பாட்டு விளக்கு எரியும்.

குப்பன்,
சுப்பன் வாழும் குப்பங்கள் ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது, அடுப்பு விளக்கு, அன்பு விளக்கு, அமைதி விளக்கு, அறிவு விளக்கு என பல்விளக்கை இன்று, உன்னை பணித்து வாழ்த்தி சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா,
உனக்கு தருவேன் கேள் ஒரு வெண்பா.

கவிஞர்கள் கவி வடிப்பது தமது தமது இலக்கிய ஆழுமை காட்ட ,வாலி நல்ல கவிஞர் அவருக்கு அரசியல் கிடையாது .

அவர் சதாம் பற்றியும் கவிதை எழுதுவார் புஷ் பற்றியும் கவிதை எழுதுவார் .

இதுவொன்றும் விளங்காமல் சிலர் .......................................பாவங்கள் .


2011 வாலி பற்றி ஒரு கேள்வி-பதில் .

வாலியின் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு
fox1.jpg?w=640

இது வேட்டையாடி உண்கிற நரியல்ல; ‘காக்க’ பிடித்து பிழைக்கும் நரி

கருணாநிதி ஆட்சியில் ஜெயலலிதாவை கிண்டல் செய்த வாலி, இப்பொது அவரை புகழ்ந்து எழுதிய ரங்கநாயகி கவிதை வாசித்தீர்களா?

-ஏ.எல். சிவராமன், சென்னை.

ஆம்.

காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில், தன்னிடம் வேலை செய்யும் ரவிச்சந்திரைனை ‘டேய் மோகன்..’ என்று தொடங்கி மிக தரக்குறைவாக திட்டுவார் பாலையா.

பிறகு, முத்துராமன், பெரிய பணக்காரன் கெட்டப்பில் வந்து, ‘மோகன் (ரவிச்சந்திரன்) ’என்னுடைய மகன்தான்’ என்று சொன்னவுடனேயே பாலையா, “என்னங்க…, மோகர் உங்க மகருங்களா?” என்று குழைந்து பம்முவார். அதுபோன்றதுான் வாலியின் செய்கையும்.

வாலியின் அந்தக் ‘கவிதை’யால் இரண்டு பயன்கள் உண்டு.

ஒன்று வாலியின் மீது விழுந்த கருணாநிதி நிழலை ஜெயலலிதாவின் உருவத்தால் மறைத்து, இனி அவர் நிழலில் ஒதுங்கி கொள்ளலாம்.

இரண்டு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் நற்பெயர் பெற்று கனடா, பிரான்சு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அந்த மக்களிடம் வாங்கித் திங்கலாம்.

‘சினிமா பிரபலம், எம்.ஜி.ஆருக்கே பாட்டு எழுதியவர்’ என்பதினால் ஒரு ‘உருண்டை’ கூடுதலாக கிடைக்கும். அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் எம்.ஜி.ஆருக்கு கிடைச்சா மாதிரி.

மற்றப்படி ஈழத்தமிழர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. எப்போதும்போல் நஷ்டம்தான். ஏற்கனவே தமிழகத்துல பல பேர ‘மெயிண்டன்’ பண்றமாதிரி இதையும் பண்ணிட்டு போக வேண்டியதுதான்.

பாவம் புலம் பெயர்ந்த தமிழர்கள்.

*

  • கருத்துக்கள உறவுகள்

 

கவிஞர்கள் கவி வடிப்பது தமது தமது இலக்கிய ஆழுமை காட்ட ,வாலி நல்ல கவிஞர் அவருக்கு அரசியல் கிடையாது .

அவர் சதாம் பற்றியும் கவிதை எழுதுவார் புஷ் பற்றியும் கவிதை எழுதுவார் .

இதுவொன்றும் விளங்காமல் சிலர் .......................................பாவங்கள் .

 

 

முதலில் செத்தவீட்டில் புடுங்குவதை  நிறுத்துங்கள்

 

எத்தனையோ  பேர் இருக்க

அவர் எமக்காகவும் பாடினார்  என்பதே எமது  அன்புக்கு காரணம்.

எம்மைப்பாடி

பிரபாகரனைப்பாடி வயிறு வளர்க்கணும் என்ற நிலையில் அவரில்லை.

 

உங்கள் தலைவரைப்பற்றி   அவர் பாடவில்லை  என்பதற்கு  எம்மிடம்  உமிழ்ந்து பிரயோசனமில்லை

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை பற்றி வாலி .......

 
 
kaligar+vaali.jpgதலைவா,ஆண்டு 2007-ல் எமனிடம் இருந்து நீ என்னை மீட்டாய்.
அதற்கு முன் ஆண்டு 2006-ல் ஓர் 'உமனிடம்' இருந்து தமிழ் மண்ணை மீட்டாய்.
 
நாவில் தமிழ் ஏந்தி நீ நற்றமிழ் இட்ட சபை.
-------

 

2006, 2007 களில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, தனக்கும்... பாட்டெழுதித் தா... என்று கேட்டால், கொடுப்பார் தானே...

2006 ல், வாலி கடும் சுகவீனமுற்று இருந்ததையும், .... உமன் என்று குறிப்பிட்டது யாரென்று தெரியாது... என்றால்,

உங்களின் மண்டையில், பிரச்சினையே ஒழிய, வாலியில் பிரச்சினை இல்லை. :D

ஒரு கவிஞனை அவன் கவியின் அர்த்தத்தை ,அழகை ரசிக்க பழகுங்கள். இதே தான் நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் .அதைவிட்டு எல்லாவற்றையும் அரசியலாக்கி சுய லாபம் தேடவீண்டாம் .

 

அரசியல் குண்டாந்தடிகளால் இலக்கிய அளவுகோல்களை உருவாக்குவதை நிறுத்தாமல் நமக்கு மீட்சியில்லை-மனுஷ்யபுத்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிஞனை அவன் கவியின் அர்த்தத்தை ,அழகை ரசிக்க பழகுங்கள். இதே தான் நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் .அதைவிட்டு எல்லாவற்றையும் அரசியலாக்கி சுய லாபம் தேடவீண்டாம் .

 

 

 

இப்போ

வாலியை  நாம் போற்றுவதால்

எமக்கு என்ன  சுயலாபம் கிடைக்கிறது என்று  சொல்லுங்கள் பார்க்கலாம்??

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கவிஞனை அவன் கவியின் அர்த்தத்தை ,அழகை ரசிக்க பழகுங்கள். இதே தான் நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் .அதைவிட்டு எல்லாவற்றையும் அரசியலாக்கி சுய லாபம் தேடவீண்டாம் .

 

அரசியல் குண்டாந்தடிகளால் இலக்கிய அளவுகோல்களை உருவாக்குவதை நிறுத்தாமல் நமக்கு மீட்சியில்லை-மனுஷ்யபுத்திரன்.

 

 

இப்படி பொதுவாக விதிகள் போட முடியாது. நிறைய விதிவிலக்குகள் உண்டு. உ+ம்: மகிந்தவும் இலங்கை கிறிக்கட் குழுவும்.அத்தோடு வாலி அவர்களின் இறந்த வீட்டில் நீங்கள் கொள்ளி புடுங்க நினைப்பதேன்?? 

  • தொடங்கியவர்

ஒரு கவிஞனை அவன் கவியின் அர்த்தத்தை ,அழகை ரசிக்க பழகுங்கள். இதே தான் நடிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் .அதைவிட்டு எல்லாவற்றையும் அரசியலாக்கி சுய லாபம் தேடவீண்டாம் .

 

அரசியல் குண்டாந்தடிகளால் இலக்கிய அளவுகோல்களை உருவாக்குவதை நிறுத்தாமல் நமக்கு மீட்சியில்லை-மனுஷ்யபுத்திரன்.

நீங்கள் எவ்வளவு கொட்டி கொடுத்தாலும் அவர் ஓட்டுக்குழுக்கள் பற்றி பாட மாட்டார் அதுவரை சந்தோசமே. அதை விட அவர் தலைவரின் தாய்,பாலச்சந்திரன்,தமிழீழம் பற்றி எல்லாம் கவி  பாடி இருக்குறார். மறந்தும் துரோகக் கும்பல்கள் ஈனப் பிறவிகள் பற்றி அவர் பாடவில்லை. அதனால் தான் அவர் தெய்வீகக் கவிஞர் எனப் போற்றப்பட்டரோ தெரியவில்லை. :icon_idea: 

அவர் தமிழின் பால் ரொம்ப பற்றுள்ளவர் அதனால் தான் தமிழீழம் பற்றியும் தலைவர் பற்றியும் அவர் குடும்பம் பற்றியும் பாடினார் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ

வாலியை  நாம் போற்றுவதால்

எமக்கு என்ன  சுயலாபம் கிடைக்கிறது என்று  சொல்லுங்கள் பார்க்கலாம்??

 

அர்ஜுன்... தனது வழக்கமான, குண்டை எறிந்து விட்டு ஓடிவிட்டார். :lol: hammerwurfvk1.gif:D

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ

வாலியை  நாம் போற்றுவதால்

எமக்கு என்ன  சுயலாபம் கிடைக்கிறது என்று  சொல்லுங்கள் பார்க்கலாம்??

 

எமக்குச் சுயலாபம் கிடைத்ததோ இல்லையோ.... :o  யாழ்களத்தின் பதிவாளர்கள்மீது சாவாரிவிட்டுப் பார்க்க அர்ஜுனுக்கு ஒரு தலையங்கம் கிடைத்ததா இல்லையா. :) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.