Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை நம்பவில்லை - பசிலுக்குப் பதிலடி கொடுத்தார் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை நம்பவில்லை - பசிலுக்குப் பதிலடி கொடுத்தார் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 20 யூலை 2013, 00:32 GMT ] [ தா.அருணாசலம் ]

மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் முடிவு தற்கொலைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைத் தேர்தல் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒப்படைக்காமல் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை.

மாகாணங்களில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலை கொண்டுள்ள சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் அனைவரும் சிங்களவர்களே.

அங்கு, சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள் முகாமிட்டுள்ளன.

இந்த செறிவான படைக்குவிப்பு மக்களுக்குப் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள வழங்கப்பட்டால், தனியான இராணுவத்தை அமைக்க வழிவகுத்து விடும் என்றும், அது சிறிலங்கா இராணுவத்துக்கு இணையாக வலுப்பெற்று விடும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார்.

இந்தக் கருத்து தமிழர்கள் மீதான நம்பகத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற அச்சங்கள் முற்றிலுமாக நீங்க வேண்டும். இத்தகைய கருத்துகள் நீங்குவதற்கு நீண்டகாலம் பிடிக்கும்.

நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130720108702

  • கருத்துக்கள உறவுகள்

திரு.விக்னேஸ்வரனின் பேச்சை பதிவில் கேட்டேன். இன்று நமக்கு தற்காலிகமாகவேனும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெல்லக்கூடிய தலைவர்கள் தேவை. பிரிட்டிஸ் மக்கள் வரலாற்றுத் தேவைக்காக விருப்பு வெறுப்புகளுக்கு வெளியே வின்சன்ற் சேச்சிலை பிரதமராக தெரிவு செய்தது நினைவு வருகிறது.

 

2002ல் பாலா அண்ணர் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூக அரங்கில் ஆரம்பித்து 2006 தொடரமுடியாமல்போன  படிப்படியாக வெற்றியை நோக்கிசெல்லும் இராசதந்திரத்தை மீழக் கட்டி எழுப்ப வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்குள்ளது.

 

பொருத்தமான ஒருவரைத்தான் தமிழர் கூட்டமைப்பு தெரிவு செய்திருக்கிறது. திரு விக்னேஸ்வரனிடம் கோட்பாட்டு ரீதியான புரிதலும் அதை இராசதந்திர ரீதியாக வெளிப்படுத்தும் சொல்லாற்றலும் உள்ளது. ஈழ களத்தில் உள்ளவர்கள் அவருக்கு ஒரு சந்தர்பம் கொடுப்பார்கள். புலத்தில் உள்ளவர்கள் அவரது பணிகள் வெற்றிபெற உதவ வேண்டும்.. 

2002ல் பாலா அண்ணர் இந்தியா உட்பட்ட சர்வதேச சமூக அரங்கில் ஆரம்பித்து 2006 தொடரமுடியாமல்போன  படிப்படியாக வெற்றியை நோக்கிசெல்லும் இராசதந்திரத்தை மீழக் கட்டி எழுப்ப வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்குள்ளது.

 

சொல்லுக்கு சொல்லு சம்பிக்க, விமல் வீரவன்சாவின் கருத்தை பிரபலிக்கும்கதை இது. பாலா அண்ணா சென்றது ஆயுத போராட்டத்தில் பேரம். இது ராதந்திர முன்னகர்வுகள். இதில் எப்படி பாலா அண்ணாவின் பேரம் தடிகொடுப்பதாக அமைய முடியும்? இன்றயது என்ன என்பது முன் பின் விளங்காமல் ஓடி வந்து அவிழ்த்துவிடும் வயிற்றுவலிக்கதை?

 

அல்லது சம்பிக்க, வீரவன்சா எழுதிக்கொடுத்த ஸ்கிறிப்டா?

 

இந்த வசனத்தை எந்த மேடையில் தன்னும் நீதியரசர் விக்கினேஸ்வரன் ஏற்று வழி மொழிவாரா?

 

நீதியரசர் விக்கினேஸ்வரன் வந்த காரணம் அரசியல் தொடர்ச்சிகளை நிறுத்தி மேற்கு நாடுகளை இந்த விடையத்தில் ஆர்வம் காட்ட வைக்கவே. அதாவது கூட்டமைப்புக்கு புலிகள் தொடர்பு இருக்கு என்று கூறுவதை நிறுத்த. நீதியரசர் விக்கினேஸ்வரன் பாலா அண்ணையின் மறு பிறப்பும் அல்ல. அல்லது பாலா அண்ணையின் தொடர்ச்சியும் அல்ல. இதை மனோ கனேசன் தெட்டத் தெளிவாக விளங்க வைத்துவிட்டார்.

 

புலம் பெயர் தேசத்தில் உள்ளவர்களுக்கு கல்லுக்குத்துபவர்களை நன்கு விளங்கும். நேரத்திற்கு அரசு நீதியரசர் விக்கினேஸ்வரனின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட ஊக்குவிக்கும் நடிப்பு இது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125634

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=125800&hl=

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
ஜனநாயகத் தேர்தல்களில் அண்மை காலங்களில் சமூக ஊடகங்கள் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக அமேரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல தடைக்களையும் மீறி கறுப்பினத்தவரான ஒபாமா வென்றதற்கு பேஸ்புக் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களே பெரிதும் காரணம் என்று சொல்லப் பட்டது.
 
அதே வகையில் தற்போது நடை பெற இருக்கும் இலங்கை வட மாகாண சபை தேர்தலின் கூட்டமைப்பு வேட்பாளர் சி வி விக்னேஸ்வரனை ஆதரித்து ஒரு பேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் விக்கேஸ்வரனின் வேட்பு மனு பற்றி கருத்து பரிமாறப் போவதாயும் மாற்றுக் கருத்துகளை வரவேற்பதாயும் இந்தப் பக்கத்தில் சொல்லப் படுகிறது.
 
இந்தப் பக்கம் கீழ்கண்ட முகவரியில் உள்ளது.
 
www.facebook.com/cvw4cm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.