Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது

20 ஜூலை 2013


பிரான்ஸில் மூன்று இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளம் பெண் ஒருவரும், அவரது கணவரும், பெண்ணின் காதலரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகாத உறவின் மூலம் பெற்ற பிள்ளை காரணமாக குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அழுத்தம் காரணமாக குறித்த பெண் குழந்தையையும் கொல்ல முயற்சித்துள்ளதுள்ளதுடன், தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

எவ்வாறெனினும் பெண்ணுக்கும் குழந்தைக்கும் உயிராபத்து ஏற்படவில்லை.

2010ம் ஆண்டு முதல் வேறும் இலங்கையர் ஒருவருடன் குறித்த பெண் தொடர்பு பேணி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரமுற்ற கணவர் பெண்ணை தாக்கியதாகவும், இந்தக் குழந்தை குறித்த காதலனுக்கு பிறந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94261/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தூ ......, இதெல்லாம் ஒரு ஜென்மம் 

எவ்வளவோ பிரச்சனையுடன் இருக்கும் மக்கள் மத்தியில் இப்படிப்பட்டவர்களும் இருக்கின்றார்களே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணையிடமிருந்து  அறிக்கையை எதிர்பாக்கின்றேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

கொலைமுயற்சி, தற்கொலைமுயற்சி, துன்புறுத்தல்,மன உளைச்சலை ஏற்படுத்தல்,

ஆகிய காரணங்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையை வணங்கி இயற்கையோடு வாழ்ந்தவன் தமிழன் என்று பல சரித்திர ஆராச்சியாளர்கள் பெருமையுடன் கட்டுரைகளும் எழுதியுள்ளார்கள். நாங்களும் ஆவலுடன் படித்துப் பெருமையும் கொண்டுள்ளோம். இயற்கையோடு வாழ்ந்த ஆதித் தமிழனிடம் இந்தப் பேதங்கள் இருந்ததில்லையாம். :wub:  ஒருவேளை இந்த மூவரும் ஆதித் தமிழரைப்போல் மறத் தமிழராக, உண்மைத் தமிழராக வாழவேண்டும் என்ற அவாவின் ஆசையில் மண் விழுந்திருக்கலாம். :o 

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ் எழுதி உள்ள அதே செய்தியை ஈழநாதம் எப்படி எழுதி இருக்கிறது என்று பாருங்கள். இதில் இருந்து குளோபல் தமிழின் உள்நோக்கத்தைப் புரிஞ்சு கொள்ளவும் முடியுது...

 

பிரான்சில் இலங்கை தாயும் மகனும் தற்கொலை முயற்சி. திங்கட்கிழமை, யூலை 22, 2013
 
Women%20rape.jpg
 
கணவராலும், தனது முன் நாள் காதலராலும் துன்புறுத்தப்பட்ட இளம் குடும்ப பெண்ணும் அவரது மகனும்  தற்கொலை செய்ய முற்பட்டபோது காப்பாற்றப்பட்டுள்ளனர். முன் நாள் காதலனுக்கு பிறந்த ஒரே ஒரு மகனுடன் பிரான்சில் திருமணம் முடித்த குறித்த பெண் இரு ஆண்களாலும் உளைச்சலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளார்.
.
இதனால் மகனையும் கொன்று தானும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்லார்.  அவரது தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அவர் தலைநகர் பாரிஸில் உள்ள புனித லூயிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப விசாரணையின் போது அவர் கணவன் மற்றும் காதலன் ஆகியோரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்ததாகவும், கணவனின் தாக்குதலுக்கு அவர் உள்ளாகியிருந்ததாகவும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.பிரான்சிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
.
எரிகாயங்கள் மற்றும் உள்ளக ஊமைக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.