Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் தீர்ப்பை மீறுகிறார் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் தீர்ப்பை மீறுகிறார் டக்ளஸ்
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:12 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத – வெளியில் இருந்து ஒருவரை மாகாண முதல்வராக நியமிக்கும் வகையில், மாகாணசபைத் தேர்தல் சட்டத்தை திருத்தம் செய்ய, சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்மொழிந்துள்ள யோசனை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தயங்கும் ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றால், தாமே முதல்வராகும் வகையில், மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யும் யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

வேட்பாளர் பட்டியலில் இல்லாத ஒருவரை முதல்வராக நியமிக்க வசதியாக இந்த திருத்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வினால், வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முரணானதாகும்.

ஒரு மாவட்டத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை விடவும், மூன்று மேலதிக வேட்பாளர்களின் பெயர்களை வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாத வெளியார் ஒருவரை நியமிப்பது, கட்சியின் மேலாதிக்கத்துக்கு இடமளிக்கும் என்றும், வாக்காளர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பை அளித்துள்ளது.

நீதியரசர்கள் மார்க் பெர்னான்டோ, டி.பி.எஸ்.குணசேகர, சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வே இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.

இந்தத் தீர்ப்பை மீறும் வகையிலேயே டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சரவைப் பத்திரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20130722108714

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வக்கில்லை. பின்  கதவால் நுழையும் பழக்கம் தான் எப்பொழுதும். காடையர் கூட்டத்திற்கு மக்கள் வாக்களிப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கிட்டிவிட்டிருக்கிறாங்கள். பாவம் அந்தாள் என்ன செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.