Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைப் பெரியார் அணையில் தமிழகத்திற்கு எப்படி உரிமை வந்தது?: உச்ச நீதிமன்றம் கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுடெல்லி: முல்லைப் பெரியார்  அணை நீரில்  தமிழகத்திற்கு உரிமை வந்தது எப்படி என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று சரமாரி கேள்வி விடுத்தது.

முல்லைப்பெரியாறு  அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்க மறுத்த கேரள அரசு, அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்று  சட்டசபையை கூட்டி, சட்டம் நிறைவேற்றியது

இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில்,  எச்.சி.தத்து, சந்திரமவுலி கிருஷ்ண பிரசாத், மதன் பி.லோகுர், எம்.ஒய்.இக்பால் ஆகிய 5 நீதிபதிகளை கொண்ட  அரசியல் சாசன பெஞ்ச் முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாராணை இரண்டாவது நாளாக இன்று நடைபெற்றது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையில் இருக்கும் தண்ணீரை, தமிழக அரசு எவ்வாறு உரிமை கோர முடியும் என்பது உள்ளிட்ட சரமாரி கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள்  இன்று எழுப்பினர்.

 

அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  1935-ஆம் ஆண்டு சட்டப்படி முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியும் என வாதிட்டார்.  இதையடுத்து, பழைய 1935 ஆம் ஆண்டு சட்டம் தொடர்பான  அறிக்கையை தாக்கல் செய்யுமாறு  தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முல்லைப் பெரியார் அணையினால் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 http://news.vikatan.com/article.php?module=news&aid=17570

உண்மையில் இந்திய ஒன்றியத்திற்குள் ‪#‎தமிழ்நாடு‬இருக்கிறதா?

அப்படியானால் நதி நீரைப்பங்கிடுவதில் என்ன பிரச்சினை?

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளுக்கு இடையேகூட நீரை பங்கீடு செய்து கொள்கிறார்கள்.. தமிழர் நாடு என்பதால் அவ்வளவு இளக்காரம்..

ஒரு மொழி ஒரு இனம் ஒரு நாடு என்று இருக்கும் நாடுகளே உலகில் வளர்ச்சி அடைந்த நாகரீகம் அடைந்த  மனிதாபிமானம் உள்ள நாடுகளாக உள்ளன. இந்தியா எப்போது??????

 

உலகின் நீர் ஆதாரம் வரம்புக்குட்பட்
டது கடல்நீர்போக மனிதன் பயன்படுத்த மொத்த நீர்
ஆதரத்தில் 2.5சதவீதம் தான்
ஏற்றது துருவபகுதியில்
உறைபனிகளை கழித்தால்0.3 தான் நன்னீரின்
சதவீதம் இடத்திற்கு இடம் பெய்யும்
மழைஅளவுமாறினாலு ம் மொத்தமாக
ஒரே அளவே இருந்தவருகிறது எனவே நீரின்
அளவை உயராது உயர்த்தவும் முடியாது.
அரிசி துணி இயந்திரங்கள் போல உற்பத்தியும்
செய்யவும் இயலாது தண்ணீருக்கு மாற்றும் இல்லை
நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும்
பஞ்சம் அதிகரித்து வருகிறது எனவே தண்ணீரை
விற்றால் கொள்ளைலாபம் என
பன்னாட்டு கம்பெனிகள் தண்ணீர் வியபாரத்தில்
ஈடுபட்டுள்ளார்க ள் இதன்
மதிப்பு எண்ணைவர்த்தக மதிப்பில் 50சதவீதம்
சென்ற நூற்றாண்டு இலாபவேட்டைக்காக
எண்ணை இருந்தது போல தண்ணீருக்கான
போரை நடத்த ஆயுத்தமாகிவருகி றார்கள்
ஏகாதிபத்திய நாடுகள்
தாகம் கொண்டவர்கள் கேட்பதும் கேட்டவுடன்
கொடுத்து மகிழ்வதே மக்கள் பண்பாடு ஆனால்
இப்போது நா வறண்டாலும் பாட்டில்தண்ணீர்
வைத்திருபவிருடம ் கேட்க தயங்குகிறோம்
இது தொடர்ந்து நாளாக நாளாக
நமது பண்பாட்டு ஈரம் உலர்ந்துவிடும்
மனிதாபிமான இழை அறுந்துவிடும்
ஒரு வகையான மவுன வன்முறை உருவாகிவிடும்
எனவே தண்ணிரை தனிவுடமையாகவும் இலாப
வெறிக்காக தாரைவார்ப்பதை தடுக்க
போரடவேண்டும்
#தண்ணீர் தாகத்திற்கா இலாபத்திற்கா? என்ற
நூலிலிருந்து சில துளிகள்
கீழைகாற்றுவெளிய ீடு
விலை 30ரூ

1069379_577406438978426_1440231459_n.jpg

 

 

நன்றி முகனூல் 

 

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரைப்படங்களிலும்,அரசியல் மேடைகளிலும் மேலைத்தேசங்களை முன்னுதாரணம் காட்டுவார்கள்.ஆனால் நடைமுறையில் ????????

ரா. ராஜகோபாலன்: ஒரு ‪#‎குட்டி‬ ‪#‎கதை‬ --- அட படிச்சு தான் பாருங்களேன் #
ஒரு விவசாயி தன் நிலத்தை பாதுகாத்து , மிக நன்றாக பராமரித்து வந்தான் .... தன் வாழ்கை முறை க்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் அவன் தென்னை , மா , பலா , வாழை என பயரிட்டான் ...விவசாயம் உயிர் பிழைக்க தன் நிலத்தில் தக்க இடம் தேடி , ஊர் பஞ்சாயத்தார் அனுமதியுடன் பெரிய கிணறோன்றும் வெட்டினான் ... அக்கம் பக்கத்து நிலத்தோருக்கு தன்னால் இயன்றதை கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்தான் .... 
ஒரு சமயம் அந்த ஊரில் வேறு சில இடங்களில் பிரச்சனை எழுந்த காரணத்தால் , ஊர் பஞ்சாயத்து அனைவருக்கும் ஒரு கட்டளை இட்டது - அதாவது ஒவ்வொருவரும் தன் நிலம் சுற்றி வேலி கட்டாயம் போட வேண்டும் - இதனால் எதிர் காலத்து பிரச்சனைகள் சுலபமாக கையாளப் படும் என்று .. 
இதன் படியே , நம் விவசாயி தன் நிலம் சுற்றி வேலி அமைக்க ஆயத்தம் ஆனான் ... 
அப்பொழுது பக்கத்தில் உள்ள ஒரு சிறிய நிலத்தின் சொந்தக்காரன் ஒருவன் ஒரு கோரிக்கை விடுத்தான் - "அய்யா - என்னுடைய தென்னை சில வளைந்து உங்கள் நிலம் வரை வருகின்றன - இதனால் வேலி இட்டால் என்னால் அன்றாடம் அதிலிருந்து தேவையான வற்றை எடுக்க இயலாது - நானோ சிறிய நிலத்து காரன் ..என் பொழப்பு கெட்டு போயிடும் ... அதனால் உங்கள கெஞ்சி கேட்டுக்கிறேன் ...என் தென்னை மரங்கள் எதுவரை வருகின்றனவோ , அங்கு நாம் வேலி இட்டு கொள்ளலாம் -- வேலி போட்டதனால் அது என் நிலம் ஆகி விடாது - உங்களுடையது தான் - இது நம்மில் ஒரு உடன் படுக்கை...." 
நம் விவசாயி தான் இரக்க குணம் கொண்டவன் அல்லவா - சரி என்று ஒப்பு கொண்டான் ...வேலி போட ஆரம்பித்த உடன் தான் அவனுக்கு உரைத்தது , இப்பொழுது அவனுடைய வாழ்வாதாரமான கிணறு அவன் வேலிக்குள் வர வில்லை என்று ... இந்த கேள்வி எழுந்த உடன் பக்கத்து நிலத்துக்காரன் சொன்னான் - "அய்யா ...நான் தான் சொன்னேன் ல நிலம் உங்களுடையது தான் ...நீங்க வேலி ல ஒரு பாதை போட்டுகோங்க ...அது வழியா வந்து கிணத்தை உபயோக படுத்தி கோங்க .... கிணறு சற்று தூரத்துல இருந்தாலும் தண்ணி பாய்ச்சுறது உங்களுக்கு எப்பொழுதும் போல தான் - எனக்கு தான் தென்னை மரம் உள்ள இருக்கணும் "...அப்படி இப்படி னு ஏதேதோ சொன்னான் .... இதையும் ஒத்துக்கொண்ட நம்ப விவசாயி , நம்ப பக்கத்து வீட்டு காரன் தானே ...ஒன்னுக்குள்ள ஒன்னு ...போகட்டும் னு சம்மதிச்சான் ....

வேலியும் போட்டாச்சு .... கிணத்து தண்ணி நம்மாளுக்கு போயிகிட்டு இருந்தது ...இந்த உடன் படிக்கை ஊர் பஞ்சாயத்துக்கும் தெரிந்திருந்தது ...
வருடங்கள் ஓடின ...பஞ்சாயத்தாரும் மாறி விட்டன ....

ஆட்ட கடிச்சு , மாட்ட கடிச்சு , மனுஷன கடிச்ச கதையா கெஞ்சி கேட்டுகிட்ட பக்கத்து நிலத்து காரன் , இப்போ கிணறு எனக்கு தான் சொந்தம் ..அத நான் என்ன வேணும்னாலும் பண்ணலாம் ...என் குழந்தைங்க தவறி அதுல விழ வாய்பிருக்கு - அதை தடுக்க அதை மூடணும் ..பக்கத்துல வேற கிணறு எழுப்பிக்கிறேன் அப்படி இப்படி னு பிரச்சனை பண்றான் .... 
நம்மாள் சொல்றான் - "டேய் அந்த கிணறு என் வாழ்வாதாரம் டா "னு ...பக்கத்து வீட்டு புத்திசாலி சொல்றான் - "அந்த கிணறு ல என் வீட்டு குழந்தைங்க விழுந்துரும் " னு .. நம்ப இளிச்சவாயன் க்கு என்ன பண்றதுனே புரியல .... பஞ்சாயத்தாரிடம் கொண்டு போனான் .... 

பஞ்சாயத்து இழுத்து கிட்டே போனது ...அதுக்குள்ள இங்க சண்டையும் பெருசானது...

விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதை அண்ட் ராமன் கசின்ஸ் னு சொன்ன மாதிரி - ஒரு நாள் திடீரென்று பஞ்சாயத்தார் நம்பாளு கிட்ட அஸ்திவாரத்தையே அசைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டனர் --
" அந்த கிணத்தில் நீ உரிமை கோர முடியுமா ? "
========================================
# செய்தி : முல்லை பெரியாறு அணையில் தமிழகம் உரிமை கோர முடியுமா ? - சுப்ரீம் கோர்ட் கேள்வி

 

நன்றி முகனூல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.