Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு பம்பலபிட்டியவில் குண்டுவெடிப்பு

Featured Replies

கொழும்பு பம்பலபிட்டியவில் சற்றுமுன் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.. மேலதீக விபரம் தொடர்ந்து வரும்....

மன்னா தமிழ் மக்கள் வாழும் பகுதில் இல்லையே...! :roll: :cry:

  • தொடங்கியவர்

ஆம் தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் தான் (டிக்மன் வீதி )

மேலதிக தகவல் கிடைக்கவில்லை

  • தொடங்கியவர்

இந்த குண்டு வெடிப்பில் இருவர் கொல்லப்பட்டும் நான்கு பேர் காயப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

  • தொடங்கியவர்

Bomb explosion in Colombo, EPDP paramilitary official wounded

[TamilNet, August 08, 2006 09:22 GMT]

A senior EPDP official and six others were wounded in a bomb explosion in Colombo around 2:00 p.m. Tuesday. The EPDP official, Sankarapillai Sivathasan, a long time EPDP advisor, a relative of EPDP leader Douglas Devandanda, and a former parliamentarian of the EPDP, was rushed to Colombo hospital. The explosion took place opposite a restaurant on Dickmans Road in Bambalapitya.

Further details are not available at the moment.

EPDP is a paramilitary group working with the Sri Lanka Army military intelligence in the Northeast SLA controlled territories and an ally of Sri Lankan President Mahinda Rajapakse.

2 ஆம் இணைப்பு) பம்பலப்பிட்டியில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி- ஈ.பி.டி.பி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 4 பேர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 8 ஓகஸ்ட் 2006, 15:11 ஈழம்] [கொழும்பு நிருபர்]

கொழும்பு பம்பலப்பிட்டியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சங்கரப்பிள்ளை சிவதாசன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பம்பலப்பிட்டி டிக்மன் வீதியில் அம்ரித் உணவகத்துக்கு எதிராக பிற்பகல் 2.45 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவதாசன் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது.

சம்பவ இடத்திலேயே நால்வர் கொல்லப்பட்டதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சிவதாசன் உட்பட நால்வர் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிவதாசன் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் பயணம் செய்த வாகனம் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பான முழுமையான விவரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

www.puthinam.com

யார் செய்தார்கள் என்பதில் எனக்கு அக்கறை இல்லை எண்டாலும் செய்தவர்களை பாராட்ட வேணும்...! நண்றி..!

ஈபிடிபி யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன் குண்டு வெடிப்பில் படுகாயம்.

சிறீலங்கா துணை இராணுவக் குழுவான ஈபிடிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன் கார் குண்டு வெடிப்பில் படுகாயமடைந்துள்ளார்.

பம்பலப்பிட்டிப் பகுதியில் பயணித்தபோது இன்று பிற்பகல் 2.45 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. படுகாயமடைந்த நிலையில் கொடும்பு தேசிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது உடல்நிலை மிகவும் மோசமாகவுள்ளதென கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

ஓய் வினித் உப்பிடி குமிஞ்சு போய் நிக்கிறாங்களே இன்னும் ஒரு குண்டு அதுக்கை இருந்து வெடிச்சா என்ன செய்வினம்....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

bombe.jpg

குண்டு ஒன்னு வச்சிருக்க வெடி குண்டு ஒன்னு (யாழ் களத்தினுள்ள) வச்சிருக்க!

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு குண்டுவெடிப்பு ஈ.பி.டி.பியின் உள்ளக மோதலே!

கொழும்பு பம்பலப்பிட்டியில் இன்று நடந்த குண்டுவெடிப்பு ஈ.பி.டி.பி. அமைப்பில் இடம்பெற்று வரும் உள்ளக மோதலின் உச்சக் கட்டமாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறே அதிகமுள்ளது எனத் தெரியவருகிறது. குறிப்பாக அண்மைக் காலமாக சிவதாசனில் ஏற்பட்ட மாற்றங்களே இக்குண்டு வெடிப்பிற்கான காரணமாகக் கருதப்படுகிறது.

அத்தோடு எவ்வாறு அக்குண்டுவெடிப்பு இடம்பெற்றது என்பது தற்போது தெளிவாகத் தெரியா விட்டாலும், அந்த வாகனத்திலிருந்தே அக்குண்டு வெடித்திருக்கும் சாத்தியக்கூறுகளே ஆரம்பக் கட்டத்தில் தெரியவந்துள்ளது.

அண்மைய காலங்களில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அக்குழுவின் முக்கிய உறுப்பினர்களான ஜெகன், பாஸ்கரன், நிசாந்தன், மதனராஜன் ஆகியோர் உட்பட பலர் முரண்பட்டு வெளியேறியுள்ள நிலையில் ஈ.பி.டி.பி.யின் முக்கியஸ்தரான கலாநிதி விக்னேஸ்வரனின் விலகலே ஈ.பி.டி.பி. கட்சிக்குள் அதிகளவு நெருக்கடியை அதாவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டக்ளஸ் செயற்படும் முறையுடன் தம்மால் இணைந்து செயற்பட முடியாது என்றும், ஈ.பி.டி.பியில் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகள் இல்லை என்றும் தெரிவித்து விக்னேஸ்வரன் ஈ.பி.டி.பியிலிருந்து விலகியிருந்தார்.

மேலும் டக்ளசின் தனிப்பட்ட தவறான வாழ்க்கை முறை குறித்தும், பணக் கையாடல்கள் குறித்தும், ஜனநாயக விரோத படுகொலைகள் குறித்தும் கலாநிதி. விக்னேஸ்வரன் டக்ளசுடன் கடுமையாக முரண்பட்ட நிலையிலேயே இறுதியில் கட்சியை விட்டு விலகினார்.

ஏறக்குறைய டக்ளசின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த கலாநிதி. விக்கினேஸ்வரனின் விலகலையடுத்து மனக்கசப்பிற்குள்ளான சிவதாசன் மற்றும் அவரது தரப்பால் டக்ளசிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர சிவதாசன் முயற்சித்தது மட்டுமன்றி, விக்னேஸ்வரன் எழுப்பிய பிரச்சனைகள் குறித்தும், அதற்கான பதிலைக் கேட்டும் சிவதாசன் டக்ளசுடன் பலமுறை பிரச்சனைப்பட்டுள்ளார் என்பதனை அக் குழுவினர் அறிந்திருந்தனர்.

அத்தோடு, கருணாவுடன் டக்ளஸ் வைத்த தொடர்புகள், ஜே.வி.பியுடன் தொடர்புபட்டு தமிழர் பிரச்சனையை டக்ளஸ் அணுக முற்பட்ட விதம் குறித்தும் டக்ளசுடன் சிவதாசன் அண்மைக் காலங்களில் கடுமையாக முரண்பட்டிருந்தார்.

பின்னைய காலங்களில் விக்னேஸ்வரனுடன் இணைந்து, அகில இலங்கை தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அதற்கு முழுவீச்சில் செயல் வடிவம் கொடுக்கும் திட்டமும் இவருக்கு இருந்ததாக அக்குழுவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே சிவதாசன் அரசியல் வாழ்வில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பின்னர் அக்கட்சியில் இருந்து ஈரோசுக்கும் ஈரோசிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிற்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பிலிருந்து ஈ.பி.டி.பிக்கும் மாறியிருந்தமையால் இவர் விக்னேஸ்வரனது புதிய கட்சிக்கு செல்வார் என்ற கருத்து டக்ளசிற்கும் ஆதரவானவர்களிடமும் இருந்ததாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில் பம்பலப்பிட்டியில் நடந்த இக்குண்டுவெடிப்பில் இவர் படுகாயமடைந்துள்ளார். இதற்கான பழியை உடனேயே விடுதலைப் புலிகள் மீது போட்டாலும் சமீபகாலமாக சிவதாசனுக்கும் டக்ளசுக்கும் இடையே நடந்து வந்த பனிப்போரின் விளைவே இத்தாக்குதல் என்ற கருத்தே இப்போது மேலோங்கி நிற்கிறது.

முன்னரும் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்த முக்கிய செயற்பாட்டாளரும் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியருமான நடராஜா அற்புதராஜா தமிழ்த் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டு மனம்மாறி அதற்காதரவான நிலைப்பாட்டை எடுக்க முற்படுகையிலேயே இதேபோல் கொழும்பில் வைத்து ஈ.பி.டி.பி.யிரால் படுகொலை செய்யப்பட்டார்.

அற்புதராஜாவினது கொலை தொடர்பாக இன்றுவரை எந்த வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதும், அது தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

-புதினம்

கொழும்பில் குண்டு வெடிப்பு

இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரில் பம்பலப்பிட்டிப் டிக்வின் தெருவில் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென சக்திவாய்ந்த குண்டு வெடித்து மக்களை நடுநடுங்க வைத்தது.

நேற்று மதியம் 2.50 மணிக்கு சக்திவாய்ந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. கொழும்பில் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள செயிண்ட் பால்ஸ் பெண்கள் பள்ளிக்கருகே இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டுவெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டதுடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சங்கரபிள்ளை சிவதாசன் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் மூவர் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்தவர்கள். திரு சங்கரன் பிள்ளை சிவதாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறி வைத்து தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கக்கூடும் என்று காவல்துறை அதிகாரிகள் குறிப் பிட்டுள்ளனர்.

தண்ணீர் பிரச்சினையால் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் தொடங்கப்பட்டு 14வது நாளில் இந்தக் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் கடும் போர் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் கொழும்பு நகரில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்தத் தாக்குதல் தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று காவல் துறையினர் சந்தேகிக் கின்றனர்.

விடுதலைப் புலிகளால் தண்ணீர் தடுத்து வைக்கப்பட்டதையொட்டி கடந்த இரு வாரங்களாக இலங்கை ராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான போர் நடந்துகொண்டிருக்கிறது.

கடந்த இருவாரங்களில் நடை பெற்ற போரில் இதுவரையிலும் 440 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

இதற்கிடையில் மூதுìரை புலிகள் மீட்டதையொட்டி மாவிலாறு பகுதியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் பீரங்கி மற்றும் அதிநவீன ஆயுதங்களுடன் முன்னேறி வரும் இராணுவத்தினரை புலிகள் வழி மறித்து தாக்கினார்கள்.

இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இலங்கை ராணுவத்துக்கு உதவியாக விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினார்கள்.

ஈச்சிலபற்று - சம்பூர் இடையே உள்ள முக்கிய பாலத்தை இலங்கை ராணுவத்தினர் குண்டு வீசித் தகர்த்தனர். தமிழர்கள் குடியிருப்பு களையும் தாக்கினார்கள். பீரங்கி மூலமும் தமிழர் பகுதிகளில் குண்டு வீசினார்கள்.

இந்த நிலையில் திருகோணமலைப் பகுதியில் நேற்றுக் காலை ராணு வத்தினத்துக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையே பீரங்கி தாக்குதல் நடந்தது.

கடற்படை முகாம்களில் இருந்து விடுதலைப் புலிகள் முகாம்களை நோக்கி ராணுவத்தினர் நீண்ட துìரம் தாக்கும் பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினார்கள். மொராவிலா பகுதி யில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற் கொண்ட தாக்குதலில் விமானப் படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். பொது மக்களில் மூவர் காயமடைந்தனர்.

TAMILMURASU-SINGAPORE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.