Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு

Featured Replies

மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு

- பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 11:59

மாவிலாறு அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவோடும் வான்படை வானூர்திகளின் குண்டு வீச்சுக்களோடும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் பாரிய நகர்வை ஆரம்பித்தனர்.

இவர்களின் நகர்வு முயற்சிக்கு எதிராக போராளிகள் தீவிர தாக்குதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே உக்கிர மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா படைகளின் இந்த தாக்குதல் நடவடிக்கையை தாம் யுத்த பிரகடமாகவே கருதுவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

http://sankathi.com/content/view/4250/26/

மாவிலாறு நோக்கி சிங்களப் படைகள் பாரிய படை நகர்வு - படையினரின் தாக்குதலில் 50 மக்கள் பலி - 200பேர் படுகாயம்

- பாண்டியன் வுhரசளனயலஇ 10 யுரபரளவ 2006 11:59

மாவிலாறு அணைப்பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கல்லாறு படைத்தளத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவத்தினர் பாரிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். படையினரின் அகோர எறிகணை மற்றும் கண்மூடித்தனமான குண்டு வீச்சில் இதுவரை ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு)

ஆட்டிலறி மற்றும் பல்குழல் பீரங்களின் செறிவான சூட்டாதரவோடும் வான்படை வானு}ர்திகளின் குண்டு வீச்சுக்களோடும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் சிறீலங்கா இராணுவத்தினர் பாரிய நகர்வை ஆரம்பித்தனர். இரு முனைகளுடாக படையினர் பாரியளவில் முன்னேற ஆரம்பித்தனர்.

இவர்களின் நகர்வு முயற்சிகளிற்கு எதிராக போராளிகள் தீவிர தாக்குதலை ஆரம்பித்தனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே உக்கிர மோதல்கள் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை முதல் மக்கள் கதிரவெளி மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளை இலக்கு வைத்து சிங்களப் படைகள் மேற்கொண்டுவரும் அகோர எறிகணை வீச்சு மற்றும் கண்மூடித்தனமாக குண்டு வீச்சில் அப்பாவி மக்கள் ஐம்பதுவரையானோர் கொல்லப்ப்ட்டும் மேலும் 200ற்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துமுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலை மாவட்டத்தின் மூது}ர் மற்றும் ஈச்சிலம்பற்றைப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வாகரைப் பகுதி நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களை இலக்கு வைத்தே சிங்களப் படைகள் தமது கொலை வெறியாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

படையினரின் தொடரும் அகோர தாக்குதலுக்கு மத்தியிலும் ஈச்சிலம்பற்றை மற்றும் மூது}ர் பகுதிகளிலிருந்து மக்கள் வாகரைப் பகுதிநோக்கி இடம்பெயரந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சிறீலங்கா படைகளின் இன்றைய தாக்குதல் நடவடிக்கையை கொழும்பின் யுத்த பிரகடனமாக மாத்திரமே அர்த்தப்படுத்த முடியுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

சங்கதி

50 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலும் தலைவர் அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க மாட்டார். ஒரேயடியாக ஐம்பதிற்கும் மேற்பட்ட உறவுகள் கொன்றொழிக்கப்பட்டமையை பார்த்து தலைவர் பொறுமை காக்கமாட்டார்.

அண்ணை தன்னுடைய பொறுப்பை திறம்பட செய்வார் கவலைப்படாதேங்கோ. ஆனா எங்கடை பங்குகளை நாங்கள் செய்யிறமோ என்று கொஞ்சம் சிந்திப்பம்.

சண்டைகள் உக்கிரமா தொடங்கமுதல் எத்தின தரம் படிச்சு படிச்சு சொன்னது புலம்பெயர்ந்தவர்கள் கைகளில் பாரிய பரப்புரை பொறுப்பு இருக்கு என்று. பாலகுமார் அண்ணா புதுவை அண்ணா என்று எத்தினபேர் சொல்லீச்சினம் என்னென்ன மாதிரி எல்லாம்.

இப்ப சண்டை தொடங்கினா பிறகு எல்லாரும் என்ன செய்யிறம்? கூத்துப் பாத்துக் கொண்டு இருக்கிறம். துடுப்பாட்ட போட்டி போல அங்காலை 150 இங்காலை 32 என்று கணக்கு பாத்து திருப்த்திபடுறம், இல்லாட்டி கேவப்படுறம்.

இல்லாட்டி ஏதோ இராணுவு படைத்துறை ஆய்வாளர்கள் மாதிரி அடுத்து யார் என்ன செய்யப் போயினம் என்று புலம்பிறம்.

இந்த கண்றாவியத்தான் போன கிழமை TVI இல நடந்த வாராந்த கலந்துரையாடலிலும் செய்தவை. உந்த அரைவேக்காட்டு விளக்கெண்ணை எதிர்வு கூறலால் யாருக்கு என்ன பயன். தமிழ் கலந்துரையாடலில் வந்திருந்து கொண்டு ஆங்கிலம் கலந்து கதைக்கிற அளவிற்கு எருமைகள் ஆங்கிலத்தில் ஒன்றித்து இருக்கினம்; ஆனா ஆங்கிலத்தின் சம்பந்த பட்ட சர்வதேச பிரதிநிதகளுடன் நேர்காணல் செய்ய முடியது நாலு கேள்வி கேக்க முடியாது.

உங்களுக்கு கிடைக்கிற நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன் படுத்த வேணும். ஏதே நிகழ்ச்சி நடத்திறம் விளக்கம் குடுக்கிறம் ஆய்வு நடத்திறம் என்று பயனற்ற வகையில் வானலைகளில் குசு குசுத்து ஒரு பயனும் இல்லை.

புலம்பெயர்ந்த ஊடகங்களும் சரி தனிமனிதர்களும் சரி ஏதோ நடக்கும் சண்டைகளின் இழப்புகளை விளையாட்டுப் போட்டி போல் இப்ப என்ன score எதிர்காலத்தில் எப்படி போட்டி முடியும் என்று betting செய்யிறவை போல எதிர்வு கூறி தங்கடை அறிவை வெளிக்கிடுத்திற மனோநிலையில் தான் இருக்கிறம்.

அப்படிச் செய்திட்டா அது சர்வதேச சமூகத்தை சிந்திக்க வைச்சிடும்..அப்புறம் எப்படி நாங்கள் எங்கட கெட்டித்தனத்தை..கொட்டாவி விட்டிட்டு இருக்கும்..தமிழர்களுக்கு காட்டுறது..! :idea: :roll:

மாவிலாறை நெருங்கியது சிறீலங்காப் படை..!

Fighting rages close to Maavilaru sluice gate, 5 Tigers killed

[TamilNet, August 10, 2006 09:33 GMT]

Heavy fighting continued around 3:00 p.m. in Maavilaru . Sri Lanka Army (SLA) troopers were close to Maavilaru sluice gates. Five Tigers were killed and 12 wounded, according to LTTE sources. Heavy fighting is reported in Mahindapura and Maavilaru.

According to official military sources in Colombo, 2 SLA troopers were killed and 38 wounded rushed to Kantalai hospital.

  • தொடங்கியவர்

மாவிலாறை கைப்பற்ற முனைந்த படையினர் மீது புலிகள் பதிலடி!

திருமலை நிருபர்

Thursday, 10 August 2006

திருமலை மாவிலாறு அணைக்கட்டுப் பகுதியைக் கைப்பற்றுவதற்காக சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று காலை 6.00 மணி தொடக்கம் 7.30 மணி வரை எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதல் நடவடிக்கையினை முறியடிக்கும் முகமாக விடுதலைப்புலிகள் பதில் தாக்குதல் நடத்தியததைத் தொடர்ந்து இராணுவத்தினர் பின்வாங்கிக் சென்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் மனிதாபிமான அடிப்படையில் மாவிலாறு அணைக்கட்டு திறந்து விடப்பட்ட போதும் படைதரப்பு அணைக்கட்டு பகுதியினை ஆக்கிரமிக்க முனைவது குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

http://www.battieelanatham.com/newsite/ind...=1127&Itemid=37

மாவிலாற்றில்தானே சண்டை நடக்குது அதுக்காண்டி இண்டைக்கு திருமலை நிலாவெளி வீதியில் மோட்டசைக்கிளில் போண இரு இளைஞர்கள் இராணுவத்தால் சுடப்பட்டுள்ளார்கள் பிற்பகல் 6மணிமட்டும் உடல்கள் அவ்விடத்தை விட்டு எடுக்கப்படவில்லை.............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.