Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவஅபிரா

30 ஜூலை 2013

“அன்னார் போனபின் இம் முன்ணாள் போராளிகள் இப்போ இன்னார் இனியார் இல்லாப் பன்னாடைகளாகி விட்டார்கள்”

 

அண்மையில் வந்த ஒரு செய்தி என்னை இப்பத்தியை எழுதுதத் தூண்டியது. இனம் தெரியாதவர்கள், விசாரணை என்ற பெயரில் முன்ணாள் போராளி ஒருவரை, அவர் அயலவர்களுடன் மேற்கொண்ட தகராறை அடுத்துகடத்திச் சென்று சூடுவைத்துத் தாக்கிச் சித்திரவதை செய்த பின் விடுவித்திருக்கின்றனர். அவர் முன்முன்னாள்  போராளி என்பதைக் கவனத்திற் கொண்டு அவர் அயலவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தகறாரைச் சாட்டாக வைத்து இந்தச் சித்திரவதை நடந்ததா என்பதை அச் செய்தியினூடாக அறிந்து கொள்ள முடியவில்லை.

அவர் முன்முன்னாள்  போராளி என்பதற்காவே இவ்வாறு நடந்திருந்தால் எவ்வளவு துயரமானது. அது மட்டுமல்ல இங்கே இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. அயலவர்களுடன் தகறாறு என்றால் பிரச்சனை காவல் துறையிடமல்லவா செல்ல வேண்டும். இந்தப்பிரச்சனை இனம் தெரியாதவர்களிடம் எப்படிச் சென்றது? அயலவர்களால் இனம் தெரியாதவர்களை எப்படி இனம் தெரிந்து முறையிட முடிந்தது. இந்த இனம் தெரியாதவர்களுக்கு ஒருவரைக் கடத்திச் செல்லவும் சித்திரவதை செய்யவுமான அதிகாரம் எப்படி வந்தது?

முறையற்ற முறையில் ஒருவரைக் கைது செய்யவும் கைது செய்த பின்னர் சித்திரவதை செய்யவும் காவற்துறைக்குக் கூட அதிகாரமில்லை (இலங்கையில் நிலவுகிற பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களில் இவற்றுக்கு இடம் இருக்கிறதோ தெரியவில்லை). இந்த இனம் தெரியாதவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்ய யாரும் துணிவதும் இல்லை அவ்வாறு செய்தாலும் அதனாற் பலன் ஏற்படப் போவதுமில்லை. ஏனேனில் இலங்கையில் இனம் தெரியாதவர்களுக்கும் காவல் துறைக்குமிடையில் உள்ள உறவு ஒன்றும் அருவமானதில்லை. இந்நிலையில் தமிழர்கள் தங்களுக்கான காவற்துறை அதிகாரத்தை கோருவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

பாவம் முன்ணாள் போராளி அதுவும் புனர்வாழ்வுக்குப் போகாதவர் பயத்தில் அமுங்கிப் போயிருப்பார். முன்னாட் போராளி இன்னாள் மக்களின் குணம் தெரியாமற் தகறாறு செய்யப் போய் சூடுபட்டிருக்கிறார். இப்படிப்பல போராளிகள் இன்னாள் மக்களின் குணம் தெரியாமல் இன்னும் சூடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அன்னார் போனபின் இம் முன்முன்னாள்  போராளிகள் இப்போ இன்னார் இனியார் இல்லாப் பன்னாடைகளாகி விட்டார்கள். முன்னாட் பெண்போராளிகள் படும் அவலம் சிலகாலங்களுக்கு முன்பு ஊடகங்களில் வந்துசென்றது. அதன்பிறகு எல்லோரும் அவர்களை மறந்துவிட்டார்கள் அவர்களைப் பயன் படுத்துபவர்களைத் தவிர. மற்றப்படி இந்த முன்னாள் சாதாரண போராளிகளை இன்னாள் மக்கள் பல் வேறு காரணங்களுக்காக தள்ளிவைத்து விட்டனர். இதனால் இவர்கள் சமூகங்களின் இடுக்குகளுக்குள் விழுந்து சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் தான் அரசும் ராணுவமும் இவர்களைக் குறிவைத்துச் சுருக்குக் கயிறுகளை வீசி இழுத்து சிவில்படை உளவுப்படை அடியாட்படை எனப் பலபடைகளை உருவாக்கி அவற்றில் இணைத்து கொண்டன. முன்ணாள் போராளிகளுக்கு வாழ்வாதரமில்லை சமூக ஆதரவில்லை ஆக அவர்களுக்குத் தெரிவுகளும் இல்லை எடுப்பார் கைப்பிள்ளைகளாவது அவர்களின் தலைவிதியாயிற்று.

இப்போது வடக்கு மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் இந்த முன்னாட் போராளிகள் குறிவைக்கப்படுகின்றனர். இம் முறைமுன்னாள் ”உயர்நிலை போராளிகளும் குறிவைக்கப்பட்டுள்ளனர். தயாமாஸ்ரர் அரசதரப்பில் அல்லது தமிழ்தேசியக் கூட்டமைபின் வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழினி உட்பட இன்னும் சில உயிருடன் இருக்கிற தளபதிகளுக்கும் அரசுக்கு ஆதரவாகபிரச்சரம் செய்யும்படி அழுத்தம் வழங்கப்படுவதாகச் செய்திகள்வருகின்றன. அவர்கள் என்ன செய்வார்கள். தாங்கள் ஏந்தியது வக்கைநினைப்பார்களா? தாங்கள் சுமந்த கனவை நினைப்பார்களா? அல்லது சிலவேளைகளில் தங்களிடம் அதிகாரம் இருந்த போதுதாங்கள் செய்த அட்டகாசங்களுக்கு கடவுள் தந்ததண்டனை என்று சுயவிமர்சனம் கொள்வார்களோ எனக்குத் தெரியவில்லை. உயிர் வாழ்தல் எல்லோருக்கும் உள்ளஉரிமை. புனர்வாழ்வு அ(ளி)ழிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு அரசை ஆதரிப்பதன்றி வேறு தெரிவுகள் இலங்கைச் சனநாயகத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் உங்களுக்கு கஸ்டமான விடையமாக இருக்காதுதானே! ஆனால் தயாமாஸ்ரர் சொன்ன ஒருவிடையம் மட்டும் நெஞ்சை உறுத்திக் கொண்டிருக்கிறது

 “காணாமல் போனவர்கள் கதைமுடிந்தது... முடிந்ததே... அதைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை”

காணாமல் போனவர்களின் கதை மட்டுமல்ல மரணித்தவர்களின் கதைகள் கூட முடிவதில்லை. இலங்கையின் அரசியல் வரலாற்றில் கடந்த முப்பது வருடங்களில் ஆயிரக் கணக்கானவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். இவர்களின் கதை முடிந்தது என்று மிக இலகுவாக சொல்லி விட்டுச் செல்ல முடியாது. ஏன் அவர்கள் காணாமல் போனார்கள்? எப்படிக்காணாமல் போனார்கள்? இவற்றுக்கு யார்யா ரெல்லாம் பொறுப்பு? என்பன போன்ற விடையளிக்கப்படாத கேள்விகளை தூக்கி எறிந்துவிட்டுச் செல்ல முடியாது. ஒருவர் ஒருநாட்டில் பலவந்தமாகக் காணாமல் போகச் செய்யப்படும் போது அந்தநாட்டின் சமுக மற்றும் அரசியல் அறமே கேள்விக்குள்ளாக்கப்பட்டு விடுகிறது. சமூகத்தில் மற்றவர்களைக் காணாமல் போகச் செய்தவர்கள் இன்றைக்கும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னுமொரு சந்தர்ப்பத்திற்குக் காத்திருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் ஒரு அரசுக்கு இருக்கும் பொறுப்பு என்ன என்பது குறித்த எந்த அறிவுமில்லாமல் மொட்டையாகக் காணாமல் போனவர்கள் பற்றி மீண்டும் மீண்டும் பேசிப் பலனில்லை என்று கூறும் ஒருவர் மக்களுக்காக அரசியலில் ஈடுபடப் போகிறார் என்கிறார். 

உலகம் முழுவதும் அதிகாரங்களின் வேட்டை நாய்களால் கவ்விச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்களின் கதைகள் இன்னமும் முடியாமல் தொடர்கின்றன. உலகத்தை குறுக்காகவோ நெடுக்காகவோ கடந்து செல்ல நேர்ந்தால் காணாமல் போனவர்களை இன்னமும் தேடிக் கொண்டிருக்கிற ஒருசீவனின் மூச்சுப்படாமல் நீங்கள் போக முடியாது.

மொழி பெயர்பாளர்களில் இரண்டு வகையுண்டு ஒன்று சொல்வதை மட்டும் மொழி பெயர்ப்பவர்கள். மற்றவகை சொல்லாததையும் மொழி பெயர்ப்பவர்கள்

தேவஅபிரா

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94617/language/ta-IN/article.aspx

எதோ ஒருசம்பவம் நடந்தால் அதைவைத்து பிழைப்பு நடத்தும் கொத்துரையாளர்களும் உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.