Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழந்த உயிர்களைத்தவிர எல்லாவற்றையும் தருவேன்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இழந்த உயிர்களைத்தவிர எல்லாவற்றையும் தருவேன் என தேவவாக்கு சொல்லும் மஹிந்த ராஜபக்ஸ, தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்க தயங்குவது ஏன்? - சண் மாஸ்டர்

[saturday, 2013-08-03 09:55:08]
Sunmaster-150.jpg

வட பகுதிக்கு விஜயம் செய்யும் போது, வடக்கு மக்களிடம் "இழந்த உயிர்களைத்தவிர மற்ற எல்லாம், எல்லாம் தருவேன்" என திருவாய் மலர்ந்தருளி தேவவாக்கு சொல்லும் ஒரு தேவமகனாக தன்னைக்காட்டிக்கொள்ள முனையும் மஹிந்த ராஜபக்ஸ தமிழர்களுக்கான தீர்வு திட்டத்தை முன்வைக்க தயங்குவது ஏன்? என மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தம் முடிந்து உடுத்த உடைகளுடன் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த தமிழ் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஸவால் சொல்லப்பட்ட முதல் செய்தி தமிழர்களுக்கான தீர்வை தருவேன் என்பது தான். ஆனால் இன்று நான்காண்டுகள் கடந்தும் தீர்வு முன்வைக்கப்படவில்லை.

  

தீர்வை முன்வைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவில்லை என்பது தான் அவரது குற்றச்சாட்டென்றால், கூட்டமைப்புக்கும் அரச தரப்பினருக்குமிடையில் நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மஹிந்த ராஜபக்ஸ எதை நிறைவேற்றியிருக்கிறார் என்பதை அவரே தன் வாய் திறந்து சொல்லட்டும்.

மாறாக, கூட்டமைப்பு எந்த கோரிக்கையை முன்வைக்கின்றதோ அதற்கு எதிர்மறையான செயல்பாடுகளிலேயே மஹிந்த ராஜபக்ஸ கவனம் செலுத்தி வந்திருக்கிறார். நில அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு கோரினால், நில அபகரிப்பை தீவிரப்படுத்துவது அவரது கொள்கையாக இருக்கின்றது.

13வது திருத்தச்சட்டத்தை மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் சென்று நடைமுறைப்படுத்துவதாக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு ஒரு வாக்குறுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னர் கொடுத்திருந்தார். ஆனால் இப்போது மாகாண சபைகளின் அத்திபாரத்தையே பெயர்த்தெடுப்பதற்கு அவரது அரசாங்கம் முனைப்பு காட்டிக்கொண்டிருக்கின்றது.

இரண்டாவது சபை ஒன்றை அமைப்பது தான் 13வது திருத்தத்துக்கு அப்பால்பட்ட தீர்வு என்றால், அந்த இரண்டாவது சபையால் தமிழர்களுக்கு என்ன அதிகாரங்கள், பாதுகாப்பு கிடைக்கப்போகிறது என்பதையும் அவரே தெளிபடுத்த வேண்டும். வட மாகாணசபைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் 13வது திருத்தச்சட்டத்தை பலவீனப்படுத்தி அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழர்களின் கைகளில் சிறுதுளி அளவுதானும் அதிகாரம் போய்விடக்கூடாது எனும் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமாகும். சிங்கள கடும் தேசியவாதம் பேசும் சக்திகளின் 13வது திருத்தச்சட்டத்தை ஒழிக்கும், பலவீனப்படுத்தும் நடவடிக்கைக்கு முற்றிலும் ஆதரவான நிலையிலேயே மஹிந்த ராஜபக்ஸ இப்போதும் இருக்கிறார்.

இந்த திருத்தச்சட்டத்தினால் தமிழ் முஸ்லிம் மக்களின் நலன்களே பெருமளவில் பாதிக்கப்படப்போகின்றன. எனவே இலங்கைத்தீவில் சிறுபான்மை சமுகத்தின் நலன்களை பாதிக்கும், உரிமைகளை பறிக்கும் செயல்கள் அரசால் ஊக்குவிக்கப்படும் போது, இலங்கை எப்படி ஒரே நாடு ஒரே தேசமாக இருக்க முடியும்? மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைக்கொண்டது.

எனவே அவர் தன்னை சூழ்ந்துள்ள இனவாத உதிரிக்கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது, தன்னிச்சையாக முடிவுகளையெடுத்து சிறுபான்மை சமுகத்தின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

 

 

நன்றி - செய்தியிணையம்

 

 

இரண்டாவது சபை வரும். சைனா கம்பனிகளிடம் கொடுத்த கொந்துறாத்துகளுக்கான காசை பெற வேண்டுமானால் பொதுநலவாய மகாநட்டை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பின்னர் இரண்டாவது சபையை கொண்டுவந்து விட்டு காணி, நீதி அதிகாரங்களை நீக்குவார்கள். சிராணி, தயான் ஜெயதிலகா, பொன்சேகா போன்ற அதிகாரம் கையில் கொடுக்க முடியாத ஆபத்தானவர்கள் வெளியே இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு கால்க் கட்டுப்போட 2வது சபைதான் நல்ல முடிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.