Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒலி பெருக்கி பாவனைக்கு வவுனியாவில் புதிய கட்டுப்பாடு

Featured Replies

gfgf.jpg

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மத வழிபாட்டு தலங்களில், ஒலி பெருக்கிகளின் ஓசைகள் வழிபாட்டு தலத்தின் ஆள்புல எல்லைக்குள் மாத்திரமே ஒலிக்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

வவனியா பிரதேச செலயாளர் பிரிவில் அதீத ஓசையுடன் ஒலிக்க விடப்படும் ஒலிபெருக்கிகளால் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எனவே இவ்விடயம் தொடர்பில் ஒவ்வொரு மத வழிபாட்டு தலங்களும் தத்தமது ஆள்புல எல்லைக்குள் அதாவது உட்பிரகார எல்லைக்குள் ஒலிக்க விடுவதற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

எனினும் அச் செயற்பாடு பின்பற்றப்படாத நிலை சில மதத் தலங்களில் காணப்படுகின்றன எனவே பொதுப் பரீட்சைகளான புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கூடிய கவனமெடுத்து தமது வழிபாட்டு தலங்களில் ஒலிக்க விடப்படும் ஒலிபொருக்கிகளின் ஓசையை உட் பிரகாரத்தினுள் மாத்திரம் ஒலிக்க விடுமாறு தெரிவித்துள்ளார்.

http://www.ilankainet.com/2013/08/blog-post_5317.html

  • கருத்துக்கள உறவுகள்

1990 களில் விடுதலைப் புலிகளால் அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட பல நல்ல அம்சங்களில் இதுவும் ஒன்று. பரீட்சைக்கு தயார் செய்யும் காலங்களும்.. கோவில் திருவிழாக் காலங்களும் ஊரில் ஒன்றாக அமைவதால்.. ஒலி பெருக்கி மற்றும் இசை நிகழ்ச்சிகளின் தாக்கம் மாணவர்களின் படிப்பில் குறிப்பிடத்தக்க அளவு கவனக் கலைப்பான்களாக இருந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டே புலிகளால் ஒலி பெருக்கிகளின் சத்த அளவு அவற்றை பாவிக்கும் நேரக்கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டிருந்தது.

 

எல்லாத்திலும் கை வைச்சு.. கோயிலிலும் வைச்சிட்டாங்கள் என்று பேசிய ஒரு சில வயதானவர்களைத் தவிர.. புலிகளின் அந்தக் கட்டுப்பாடு மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இந்தக் கட்டுப்பாடு மசூதிகளுக்கும்.. பன்சலவுக்கும் கொண்டு வரப்பட வேண்டும். கொழும்பில் சில பன்சலக்கள் பலத்த ஒலியில் புத்தம் சரணம் கச்சாமே பாடிக் கொண்டு திரிகின்றன. :icon_idea:

 

இதில்.. எல்லாம் புகழும் புலிகளுக்கே..! :icon_idea:

நல்ல விடயம்!


ஆனால் எல்லா மத தலங்களுக்கும் அமுல்படுத்தப்பட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.