Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்பாறை வீரமுனை நினைவு நாள்

Featured Replies

Parani Krishnarajani

 

அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று.

கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து இன அழிப்பு செய்த ஒரு தொகுதி பட்டியல் உள்ளது.

தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகiளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்கனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை.

அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்துடன் துணைக்கு நின்றதன் விளைவை இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தூர நோக்கற்ற பார்வையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறுகிய பார்வைகளுமே இதற்கு காரணம். இருபக்க பகையை மறந்து முஸ்லிம்கள் தமிழர்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் இது.

////முஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர். மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.

இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன. தமிழர்களைப் போல் முஸ்லிம்களும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. // தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முஸ்லிம் பயங்கரவதாதத்திற்கு ஒரு சாம்பிள் இது (thanks: kalachuvadu)

முகநூலில் இருந்து  == 12 August 2013 //

Parani Krishnarajani

  • கருத்துக்கள உறவுகள்
சிறிலங்கா ராணுவத்தின் , வீரமுனை மீதான படுகொலை
 
 
வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1945 ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1945ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்இ கத்தி வெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை வளதாப்பிட்டியஇ மல்லிகைத்தீவுஇ மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைபட்டனர். 1945 ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இரானுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990 ம் ஆண்டு ஆனி மாதமும் ஆடி மாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனை வளத்தாப்பிட்டிய வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்ட வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர். ஒருசில நாட்களின் முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளி கொல்லப்பட்டாரகள்;. கட்டிய மனைவிமாரும்இ பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்து கும்பிட்டார்கள். தாலிப்பிச்சைக் கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வெறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும் வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது. சம்மாநதுறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழு பேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும் வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்களுறவுகளுக்காக குரல் கொடுக்க யாரும் இருக்கவில்லை. காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப்பொசுக்கியபோதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம் கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. எச்சஞ்சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறுபேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப்பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைத்தீவி;ற்குத் தப்பியோடினார்கள். காரைத் தீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பறவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகாமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள். தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்துக் கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைத்தீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழி;த்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. “உங்கட ஆக்கள நாங்க கொண்டு வரல்ல ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க”. பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி விசேட அதிரடிப் படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவி;ட்டு எரித்தார்கள். வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர். 1990 ம் ஆண்டு ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதிமுகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப்பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இ.ராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள். 26 ம் திகதி கொண்ட வெட்டுவான் படை முகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை வீரமுனை கலைதிபுரம் புதுநகர் கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைது செய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர் கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கிய போதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது. ஆனி மாதம் ஆரம்பித்த இன அழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து. ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இனைந்து வந்த சிங்கள ஊர்காவட்படையினரும் முஸ்லீம் ஊர்காவட்படையினரும எங்களாளும் தமிழர்களை கொள்ள முடியுமென்பதை காட்டினார்கள். ஓடி ஒழிந்து வாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ வளத்தாப்பிட்டியிலோ அல்லது மல்வத்தையிலோ இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச் சென்று வாழவிரும்பி கையில்த்தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடிய மக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சலைத்தவர்களல்ல என்பதைக் காட்டினார்கள். புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்கு பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும். என அந்த போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான். அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையிஇர் விட்டு வைக்கவில்லை 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும் துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடபட்டன. சொத்துக்கள் சுறையாடப்டன எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கிசுட்டுக்;கு இலக்காகினர். இருபத்தைந்துபேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கி மடிந்தனர். காயங்களோடு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முப்பதுபேரைக் கூட இராணுவத்தினர் விடவில்லை. வைத்தியசாலையை 12ம் திகதி சுற்றிவலைத்து காயமுற்று படுக்கையிலிருந்த அத்தனை பேரையும் தூக்கி ஏற்றிச் சென்று கொன்றனர். நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தொடர்ச்சியாக நடந்துமுடிந்த வீரமுனைக் கிராமமக்களின் துயரக்கதைக்கு நீதி யார் தருவரு? ஓடி ஓடி தப்பிகொண்ட பதினைந்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் தர்மயுத்தத்திற்காய் களம்புகுந்தனர். களத்தில் போராடிக்கொண்டிருக்கும் மருத்துவப்போராளி கிருஸ்ணபிள்ளை நித்தியானந்தன் தன் மனதில் உறைந்துகிடந்த பிறந்த மண்ணின் கறைபடிந்த நாட்களை பகிர்ந்து கொண்டார். “இளம் வயதில் நாங்கள் ஏன் துப்பாக்கி ஏந்தினோம் என்பது மனித உரிமை அமைப்புகளுக்கு விளங்காது. விளக்கவும் முடியாது. அவர்களுக்கு தெரிவது சிங்களவர் உயிரே ஒழிய தமிழர் உயிர்களல்ல. இவர்கள் முதலில் இந்தக் கொலைகளை ஆராயட்டும் பதினொரு ஆண்டுகளாய் போர்க்களம் கண்டு நிற்கும் அந்த இளைஞனிடம் தனது கிராமத்தை மீற்கமுடியுமென்ற நம்பிக்கை பிரகாசமாய்த் தெரிந்தது.
 
  • கருத்துக்கள உறவுகள்

வினைவிதைத்தவரக்கள் வினையறுப்பர்! தமிழராய் பிறந்துவிட்ட ஒரே கரணியத்தால் தமது உயிர்களை முஸ்லிம் காடையர்களிடம் அனியாயமாக இழந்த எம் தமிழ் உறவுகளுக்காக சிரம் தாழ்ந்து அகவணக்கம் செலுத்துகிறேன். அவர்களது ஆத்மாவின் வேதனை இப்படுபாதகரை அழிக்கும்!என்றோ ஒருநாள் அழிக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

வினைவிதைத்தவர்கள் வினையறுப்பர்!

தமிழராய் பிறந்துவிட்ட ஒரே காரணத்தால்

தமது உயிர்களை முஸ்லிம் காடையர்களிடம் அநியாயமாக இழந்த

எம் தமிழ் உறவுகளுக்காக சிரம் தாழ்ந்து அகவணக்கம் செலுத்துகிறேன்.

அவர்களது ஆத்மாவின் வேதனை

இப்படுபாதகரை அழிக்கும்!

என்றோ ஒருநாள் அழிக்கும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.