Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலை மாணவர் கொலையுடன் தொடர்புடைய விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் விளக்க மறியலில்

Featured Replies

trinco%20students_CI.jpg

 

திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பன்னிரெண்டு விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடாத்துமாறு திருகோணமலை நீதவான் ஏ.எல். அஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
 
சம்பவத்தில் உயிரிழந்த ஒரு மாணவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்ததுடன் ஏனைய மாணவர்கள் சில பல்கலைக்கழகங்களில் கல்வித் தொடர்வதற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் செய்தார்கள் என சிங்களவர்கள் முன்பு வாதிட்டவர்கள்.. அப்போது ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் மேற்குலக நாடுகளும் கம்மென்று இருந்துவிட்டார்கள்.. இப்ப ஓடிப்போன பொண்டாட்டியை சமாதானப்படுத்த விசாரணைக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.. பொண்டாடடியும் ஒப்புக்கு விளக்கம் குடுக்க முற்படுகிறாள்.. :rolleyes:

நவநீதம்பிள்ளை வந்து போனதும் விடுவிக்கப்பட்டு விடுவர்.

இதில் ஒரு மாணவனின் தந்தை ஐக்கிய நாடுகள் வரை நியாயம் கேட்டுசென்றார் .இன்னமும் தொடர்கின்றார் .(மனோகரன் )

ஆரம்பத்தில் மாணவர்கள்  புலி உறுப்பினர்கள் கை குண்டால் இறந்தார்கள் என அரசு சொன்னது ,ஆனால் அங்கு வேலை செய்யும் ஒரு மருத்துவரின் உதவியுடன் சுடரொளி பத்திரிகையாளர்  காவலுக்கு நின்ற போலிசுக்கு தெரியாமல் உள்ளே போய் படமெடுத்து அது அவர்கள் சூட்டுகாயங்களால் தான் இறந்தார்கள் என்று நிரூபித்தார் .அதற்கு அவர் பின்னர் கொடுத்த விலை அவரின் உயிர்.

  • கருத்துக்கள உறவுகள்
திருமலை மாணவர் படுகொலை; சர்வதேச விசாரணை அவசியம் :தந்தை வேண்டுகோள்
  • 2013-07-07 02:15:ART577550.jpg

    திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று படுகொலையான மாணவர்களில் ஒருவரான ரஜீகரின் தந்தை டாக்டர் மனோகரன் தெரிவித்தார்.

    திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    இந்நிலையில், மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டு 6 ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நீதி வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் குறித்த தந்தை தெரிவித்தார்.

    இந்த விடயம் தொடர்பில் படுகொலையான மாணவர் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரன் மேலும் தெரிவித்துள்ளதாவது,

    6 ஆண்டுகள் கடந்த நிலையில், இலங்கை அரசாங்கம் இந்த கைது நடவடிக்கையை சட்டரீதியாக மேற்கொள்ளவில்லை.

    தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாலும், உலகநாடுகளின் கடுமையான அழுத்தங்கள் காரணமாகவுமே இக் கைது நடவடிக்கை வெறும் கண்துடைப்புக்காகவே இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    படுகொலை நடந்து சில காலங்களில் அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டு, அவர்கள் படுகொலை செய்ததற்கான போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

    அத்துடன் இலங்கையில் நடைபெறும் வன்செயல்கள் தொடர்பாக எத்தனையோ ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற போதிலும் இதுவரை எந்தவொரு விசாரணைகளும் பூர்த்தியடைந்ததாக வரலாற்றில் இல்லை.

    இந்த கைது நடவடிக்கையானது சர்வதேசத்தை ஏமாற்றும் செயல் என்பதை திட்டவட்டமாகவே தெரிவிக்கின்றேன்.

    எனவே எமக்கு இலங்கை அரசாங்கம் இதற்கு நியாயமான நீதி வழங்கும் என்ற நம்பிக்கையில்லை. இந்த படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று டாக்டர் மனோகரன் மேலும் தெரிவித்துள்ளார்

- See more at: http://www.sudduviral.net/article.html?token=74fd7b4b9c93181dd7d2ac2076c25d4b&view=261#sthash.ly0telKD.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.