Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்போ கிளிநொச்சியிலும் இரண்டு!

Featured Replies

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாவட்டத் தலைமைச்செயலகம் கடந்த 04.08.2013 அன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது. தலைமைச்செயலகத்தின் பெயர்ப்பலகையினை கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஸ் க.பிறேமச்சந்திரனும், கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமாகிய ஈ.சரவணபவனும் திரைநீக்கம் செய்து வைத்திருந்தனர்.

Sangary%20Boad%201.JPG

Sangary%20Boad%203.JPG

இந்த நிகழ்வு 04.08.2013 அன்று முற்பகல் 11.00 மணியளவில் பல ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களின் பிரசன்னத்தோடு, கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் மாவட்ட மக்களின் பங்களிப்போடு, கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் நடைபெற்றிருந்தது. குறித்த நிகழ்வு தொடர்பான செய்தியை அன்றே மின்னியல் ஊடகங்களும், 06.08.2013 அன்று பிராந்திய மற்றும் தேசிய அச்சு ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்திருந்தன.

TNA%20Head%201.jpg

2012இல் இருந்து கூட்டமைப்பின் மாவட்டப் பணிமனையாக செயல்பட்டு வந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகம், , 06.08.2013 அன்று இரவோடு இரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாவட்ட தலைமைச்செயலகமாக (இரண்டாவது) ஏட்டிக்குப்போட்டியாக பெயர் மாற்றம் பெற்றிருக்கிறது.

அதாவது 04.08.2013 அன்று கிளிநொச்சியில் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்ட பெயர்ப்பலகையை ஒத்த வடிவில், எத்தகைய திருத்தமும் பிழைகளுமின்றி சிறீதரனின் அலுவலகத்துக்கு முன்னால் (இரண்டாவது) புதிய பெயர்ப்பலகையை இரவு 9.00 மணிக்கு நாட்டியிருக்கிறார்கள்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடனான அரசியல் சந்திப்பு ஒன்றுக்காக கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள், அரசியல் பிரதிநிதிகள் இனி எந்த தலைமைச்செயலகத்தில் சந்திப்பை நடத்துவார்கள்? (இனி அவர்கள் பாடும் அந்தோ பரிதாபம் தான்!) ஏன் என்றால் மாவட்டத்துக்கு ஒரேயொரு தலைமைச்செயலகம் இருப்பது தானே பொது வழக்கம்! உலக வழக்கம்! ஆனால் வீரம் விளைபூமி கிளிநொச்சியிலோ இன்று சாக்கடை அரசியல் பெரும் நாற்றத்தோடு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

http://www.sankathi24.com/news/32301/64//d,fullart.aspx

ஒன்று யாழ் வீதியிலை இருக்கு. மற்றது கண்டி வீதியிலை இருக்கு.
யாழ்ப்பாணம் போபவர்களுக்கு ஒரு தலைமைச் செயலகம்!
கண்டிக்கு  போபவர்களுக்கு ஒரு தலைமைச் செயலகம்!
விபரமாத் தான் செய்துள்ளனர். :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  விடயம்

  • கருத்துக்கள உறவுகள்

அறிவகம் என்று ஒரு பலகையில் எழுதியிருக்கு.....ஆகவே வித்தியாசம் உண்டு :D.....எங்கள் வாக்கு த,தே,கூ வுக்கே

தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடனான அரசியல் சந்திப்பு ஒன்றுக்காக கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகள், அரசியல் பிரதிநிதிகள் இனி எந்த தலைமைச்செயலகத்தில் சந்திப்பை நடத்துவார்கள்? (இனி அவர்கள் பாடும் அந்தோ பரிதாபம் தான்!) 

 

 

சரியான முட்டாள்கள். :unsure:

 

பள்ளிக்குடம் போகாத ஊடகவியலார். :(

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த... பலகையிலை,
தார், கழிவு எண்ணை அடிக்க வேண்டாம் என்று...
ஒட்டுக்குழு உறுப்பினர்களை வேண்டுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.